இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் மரணம்

உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங், 76-வது வயதில் இன்று காலமானார். அவரின் இறப்புச் செய்தியை அவரின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். ஸ்டீபனின் பிள்ளைகளான லூசி, ராபர்ட், டிம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘எங்கள் அன்புமிகு தந்தை இன்று காலமானார். அவர், பெரிய விஞ்ஞானி... Read more »

பூமியின் மீது மோதவுள்ள “டியாங்கோங்- 1”

சீனாவின் முதலாவது விண்வெளி ஆராய்ச்சி நிலையமான “டியாங்கோங் – 1” பூமியின் மீது இன்னும் இரண்டு வாரங்களில் மோதவுள்ளதாக அந்நாட்டு விண்வெளித் துறை தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு போட்டியாக 2011ஆம் ஆண்டு மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தினை சீனா விண்வெளியில் வெற்றிகரமாக கட்டி... Read more »

நவுரூ தீவில் இருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்

அவுஸ்ரேலியாவின் நவுரூ தீவில் குடிவரவுத் தடுப்பு முகாமில் இருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவில் குடியேற்றப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 29 பேர் கொண்ட இந்தக் குழுவில் மூன்று குழந்தைகளை உள்ளடக்கிய இலங்கையைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கங்களுடன் ரோஹிங்யா மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இரு... Read more »

நாடு கடத்தப்பட இருக்கும் முன்னாள் போராளி!

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியொருவர் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளார். முன்னாள் போராளியான சாந்தரூபன் தங்கலிங்கம் (வயது-46) என்பவரே இன்று (வியாழக்கிழமை) நாடு கடத்தப்பட இருக்கின்றார் என அவுஸ்ரேலிய அரசாங்கம் கூறியுள்ளது. மேலும், சாந்தரூபனின் பின்னணி தொடர்பாக சந்தேகம் கொண்டுள்ளதாகவும் அவர் விடுதலைப்... Read more »

லண்டனுக்கான இலங்கை தூதரகத்தின் இணையத்தளம் முடக்கம்!

லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புலம்பெயர் தமிழர்களால் குறித்த இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் உள்ள உலக இலங்கை பேரவை சந்தேகம் வெளியிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்னால் புலம்பெயர் தமிழர்கள்... Read more »

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிப் பிரயோகம் : 17 பேர் பலி! டொனால்ட் ட்ரம்ப் இரங்கல்!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், பார்க் லேண்டில் உள்ள மர்ஜோரி ஸ்டோன்மேன் டக்லஸ் உயர்நிலை கல்லூரியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றபோது கல்லூரியில் ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் இருந்துள்ளனர். துப்பாக்கிச் சுட்டுச் சத்தம் கேட்டதும்... Read more »

மன்னார் இளைஞன் சுவிட்சர்லாந்தில் அடித்துக் கொலை

மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த றெபின்சன் றொட்ரிகோ துஸான் றொன்சின்ரன்(வயது 20) என தெரியவருகின்றது.... Read more »

யுத்த பாதிப்பிற்குள்ளானோர் நிலை கண்டு உருகிய ஹொலிவூட் நடிகை!

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை, அவர்களுடைய இடத்தில் இருந்து தன்னால் உணரக்கூடியதாக இருந்ததென விருதுவென்ற பிரபல ஹொலிவூட் நடிகையும் ஐ.நா.வின் நல்லெண்ணத் தூதுவருமாகிய ஆஷ்லி ஜூட் தெரிவித்துள்ளார். அம்மக்களின் நிலையறிந்து தான் மிகவும் வேதனையடைவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பாலின... Read more »

ஐ.நா.வில் இலங்கை மீது அதிருப்தி வெளியிடவுள்ள ஹுசைன்?

ஐக்கிய நாடுகள் சபையின் 37ஆவது கூட்டத்தொடரின்போது தாமதமாகிவரும் இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் அதிருப்தியை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா. சபையின் 37ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி முதல் மார்ச்... Read more »

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் இன்று அதிகாலை (உள்நாட்டு நேரம்) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது ரிக்டர் அளவில் 6.5ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. ஜாவா... Read more »

அளவெட்டியைச் சேர்ந்த பெண் கனடாவில் கொலை

யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த ஜெயந்தி சீவரத்தினம் (வயது 46) என்ற குடும்பப் பெண் கனடாவில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார் என ரொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். “கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மல வேர்ன்... Read more »

7.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்!!: 135 பேர் பலி!

ஈரான் – ஈராக் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 135 பேர் பலியாகி உள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஈராக்கில் இன்று அதிகாலை ஹலாப்ஜா நகரம் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் பாக்தாத்தில் இருந்து 350 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம்... Read more »

அணுகுண்டுச் சோதனையால் வடகொரியாவில் 200 பேர் பலி?

வடகொரியாவால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அணுகுண்டுச் சோதனையைத் தொடர்ந்து, 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என, ஜப்பானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அணுகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்ட சுரங்கம் இடிந்து வீழ்ந்ததிலேயே, இவ்வுயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என அறிவிக்கப்படுகிறது. ஜப்பானின் 6ஆவது அணுகுண்டுச் சோதனை, செப்டெம்பர் 3ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.... Read more »

கிறீன் கார்ட் லாட்டரியை அகற்ற வேண்டும் என ட்ரம்ப் யோசனை

கிறீன் கார்ட் லாட்டரியை அகற்ற வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளார். இந்த லாட்டரி நியூயார்க்கில் ஒரு டிரக் தாக்குதல் சந்தேகநபருக்கு அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் குடிவரவு திட்டத்திற்கு பதிலாக ஒரு தகுதி அடிப்படையிலான... Read more »

அமெரிக்காவில் தமிழர் பாரம்பரிய உடையுடன் விமானம் ஓட்டிய ஈழத் தமிழன்

தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டியை அணிந்தே விமானம் ஓட்டுவேன் என வாதிட்டு, ஈழத் தமிழர் ஒருவர் அமெரிக்காவில் வேட்டி கட்டி விமானம் ஓட்டி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார். ‘அகரன்’ என்ற ஏவுகணையை உருவாக்கியவரான, இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ரவிகரன் ரணேந்திரன் என்பவரே இவ்வாறு... Read more »

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு: 59 பேர் சாவு, 500 பேர் காயம்

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் உள்ள மாண்டலே பே ஹோட்டல் அருகே பலத்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 59 பேர் கொல்லப்பட்டனர். 515 பேர் காயமடைந்தனர். Read more »

“இலங்கை ஒரு குற்றவாளி” : ஐ.நா.வில் ஆர்ப்பாட்டம்

யுத்தக் குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை ராணுவத்தை அந்நாட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காப்பற்ற முயல்வதாக தெரிவித்து, ஐ.நா. பொதுச்சபை கட்டத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஒரு குற்றவாளி எனும் தொனிப்பொருளில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (புதன்கிழமை) இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.... Read more »

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்; நூற்றுக் கணக்கானோர் உயிரிழப்பு

மெக்சிகோ நாட்டில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 119 பேர் வரை பலியாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று நள்ளிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ப்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில்... Read more »

மெக்ஸிகோவில் பாரிய நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!!!

மெக்ஸிகோவின் தெற்கு கடற்கரை அருகாமையில்  இன்று,  8 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஓன்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து 8 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த நாடுகள் மெக்ஸிகோ, கொத்மாலாவ, பனாமா, ஏல் செல்வோதொரய, கொஸ்டரிகா, நிகாரகுவா,... Read more »

தமிழ் பெண்மணிக்கு கிடைத்த ஆசியாவின் உயரிய கௌரவம்!

இலங்கை தமிழ் பெண்மணி கெத்சி சண்முகத்திற்கு ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படும் மகசேசே விருது வழங்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் கலாச்சார நிலையத்தில் இந்த விழா இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் உளவள ஆலோசகர் கெத்சி சண்முகம் தமக்கான விருதை பெற்றுக்கொண்டார். பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற அதிபரான ரமோன்... Read more »