Ad Widget

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

மேற்கு இந்தோனேசியாவில் இன்று (16.01.2023) அதிகாலை கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் பொருட்சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், அச்சே மாகாணத்தின் கடலோர மாவட்டமான சிங்கில் இருந்து தென்கிழக்கே 48 கிலோமீட்டர் ஆழத்தில் மையமாக இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. இருந்தபோதும் இந்தோனேசியாவின்...

பதவியில் இருந்து ஓய்வு பெறும் புடின்! கருங்கடலில் இரகசிய மாளிகை

உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து கடுமையான அழுத்தத்தை சந்தித்துவரும் ரஷ்ய ஜனாதிபதி புடின், அமைதியான முறையில் ஓய்வு பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பார் என அவரது முன்னாள் உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஓய்வு பெற திட்டமிட்டு வரும் புடின் புடின் ஆற்றும் உரைகளை எழுதிக்கொடுக்கும் பொறுப்பிலிருந்தவரான Abbas Gallyamov என்பவர், புடின் தனது ஜனாதிபதி பதவியிலிருந்து...
Ad Widget

கொன்று குவிக்கப்பட்டுள்ள ரஷ்ய வீரர்கள்:கீவ் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு தகவல்

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் உக்ரேனிய ஏவுகணைத் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக கீவ் ராணுவம் தெரிவித்துள்ளார். கிழக்கு உக்ரைனில் உள்ள சோலேடர் நகரில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தபோது, ரஷ்ய வீரர்கள் பலர் அங்கு இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அந்த குழுவின்...

உயிர் எப்போது போகுமென தெரியவில்லை! உக்ரைன் போரில் களமிறங்கிய தமிழ் இளைஞன் வெளியிட்ட தகவல்

உக்ரைன் - ரஷ்ய போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உக்ரைன் இராணுவத்தினருக்கு உதவியாக போரில் களமிறங்கியுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு உக்ரைனில் உள்ள கார்கிவ் நகருக்கு மருத்துவம் படிக்க சென்ற சென்னை - ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் பாலா சங்கர் (32) என்பவரே மருத்துவப் படிப்பு முடிந்த பின்னர் இவ்வாறு உக்ரைன்...

710 ரஷ்ய வீரர்களை கொன்று குவித்த உக்ரைன்! வீதிகளில் குவியும் சடலங்கள்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்ய வீரர்கள் தொடர்பில் உக்ரைன் முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. இருதரப்பும் நாளுக்கு நாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில் தங்களுக்கு எதிரான போரில் ஒரே நாளில் 710 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக பாக்முட் நகரின் வீதிகளில் ரஷ்ய...

பிரான்சை இல்லாமல் செய்துவிடுவோம்: ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை

பிரான்ஸ் நாட்டையே இல்லாமல் செய்துவிடுவோம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன், ரஷ்ய போர் தீவிரமடைந்து வரும் நிலையில் பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில், பிரான்ஸ் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவோம் என புடின் ஆதரவாளர்கள் எச்சரித்துள்ளனர்....

இந்தோனேஷியாவில் 7.6 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பம்

இந்தோனோஷியா மற்றும் கிழக்கு திமோர் அருகில் இன்று காலை 7.6 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டது. இந்தோனேஷியாவின் அம்போன் தீவிலிருந்து 427 கிலோமீற்றர் தொலைவில் கடல‍டியில் 86.9 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க பூகோளவியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்பூகம்பத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், பின்னர் அந்த எச்சரிக்கை நீக்கப்பட்டது. திமோரின்...

முக்கியமான கட்டத்தில் உக்ரைன் ரஷ்ய போர்! பைடன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை ஓர் ஆண்டை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த போரில் அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு பக்கபலமாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் உக்ரைன் போர் விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்சுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது இருநாடுகளும்...

சீனாவில் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கோவிட் உயிரிழப்புகள்! மயானங்களில் குவியும் சடலங்கள்

சீனாவில் கோவிட் பரவல் காரணமாக மருத்துவமனைகளும் தகன இல்லங்களும் ஸ்தம்பித்துப் போயுள்ள நிலையில், தகன இல்லங்களில் சடலங்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக சீன சுகாதாரத்துறை கோவிட் இறப்பு எண்ணிக்கை தொடர்பான தகவல்களை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. மக்களின் எதிர்ப்பு காரணமாக கடுமையான கோவிட் கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியுள்ள நிலையில், கோவிட் பரவல் தீவிரமடைந்துள்ளதுடன் 90 நாட்களில்...

ரஷ்ய வீரர்களின் தொலைபேசி சிக்னல் மூலம் துல்லியமாக தாக்குதல் நடத்திய உக்ரைன்

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய இராணுவ நடவடிக்கை 10 மாதங்களாக நீடித்து வருகிறது. இதற்கிடையே கிழக்கு உக்ரைனில் உள்ள டொனட்ஸ்க் பிராந்தியத்தில், ரஷ்ய படைகள் கைப்பற்றிய மகீவ்கா பகுதியில் ரஷ்ய வீரர்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் தங்கி இருந்த கட்டிடத்தின் மீது உக்ரைன் இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 89 ரஷ்ய...

உக்ரைன் படைகள் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதல்! உயிரிழப்பு எண்ணிக்கையை வெளியிட்ட ரஷ்யா

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்று 314 ஆவது நாளை எட்டியுள்ளதுடன் இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதன்போது கிழக்கு உக்ரைனில் உக்ரைன் படைகள் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. டொனட்ஸ்க் பிராந்தியத்தில், ரஷ்ய கட்டுப்பாட்டிலுள்ள மகீவ்கா நகரில் தற்காலிக இராணுவ தளத்தில் 600 வீரர்கள்...

ஒரே இரவில் உக்ரைனுக்குள் தொகையாக நுழைந்த விமானங்கள்:முற்றாக தாக்கி அழிப்பு

உக்ரைன் மீது ரஷ்யா ஒரே இரவில் பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதுமட்டுமன்றி புத்தாண்டு தினத்தன்று அண்டை நாடான உக்ரைனில் உள்ள இலக்குகளை நோக்கி ரஷ்யா 20 ஏவுகணைகளையும் வீசியதாகவும் உக்ரைன் இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், உக்ரைன் மீது ரஷ்யா ஒரே இரவில்...

ருமேனியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் கைது

ருமேனியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ருமேனிய எல்லையில் பொருட்கள் ஏற்றிய இரண்டு டிரக்களில் மறைந்திருந்த புலம்பெயர்ந்தோர் இவ்வாாறு கைது செய்யப்பட்டனர். அதில் ஒரு டிரக்கை சோதனை செய்த போது 17 எரித்திரியா மற்றும் பங்களாதேஷ் பிரஜைகள் அதில் இருந்துள்ளனர் மற்றைய டிரக்கில் 11க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மற்றும்...

ஆறு நிமிடத்தில் பிரித்தானியா அழியும்..! ஆண்டின் இறுதியில் புடின் வகுத்துள்ள பயங்கர திட்டம்

பிரித்தானியாவை 6 நிமிடங்களில் தாக்கி அழிக்கும் பயங்கரமான 'சாத்தான் அணு ஆயுத ஏவுகணையை' போர் தாக்குதலில் பயன்படுத்தபோவதாக ரஸ்ய அதிபர் புடின் உறுதியளித்துள்ளார். உக்ரைனிய அதிபர் ஜெலென்ஸ்கி போர் நடவடிக்கை தொடங்கிய பிறகு முதல் முறையாக டிசம்பர் 21ம் திகதி புதன்கிழமை வெளிநாட்டு சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை...

யுக்ரைன் ஜனாதிபதி இன்று அமெரிக்கா செல்கிறார்!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலேன்ஸ்கியும் வெள்ளை மாளிகையில் இன்று புதன்கிழமை சந்திக்கவுள்ளனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது. இரு தலைவர்களும் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், யுக்ரைனுக்கான இராணுவ உதவிகள் தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்படும் எனவும் தவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இப்பேச்சுவார்த்தை விபரங்கள் வெளியிடப்படவில்லை. ...

உக்ரைனில் பாரிய சத்தத்துடன் முக்கிய நகரங்களில் வெடித்து சிதறும் ஏவுகணை குண்டுகள்!

உக்ரைனின் தலைநகரான கீவ் நகரத்தின் மத்திய பகுதிகளில் இன்று அதிகாலை ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதன்போது உக்ரைன் மீது ஒரே நாளில் ரஷ்யா 60க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. இதனால் கீவ் நகரத்தின் உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததால், அங்கு குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதுடன்,மெட்ரோ சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய...

கிறிஸ்துமஸ் செலவுகளை குறைத்து உக்ரைன் மக்களுக்கு உதவ வேண்டும்: போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

உக்ரைன் போர் தொடங்கி பத்து மாதங்களுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போரால் இரு தரப்பிலும் ஏராளமான இராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரை உடனே நிறுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று நடந்த கூட்டத்தில் போப்...

ரஷ்யா- உக்ரைன் போர்: உலகம் முழுவதும் 67 பத்திரிகையாளர்கள் படுகொலை

ரஷ்யா- உக்ரைன் போர், மெக்சிகோ வன்முறை போன்ற பல்வேறு காரணங்களால், 2022ஆம் ஆண்டு உலகம் முழுதும், 67 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தை தலைமையிடமாக வைத்து செயல்படும் பத்திரிகையாளர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது, “இந்தாண்டு மட்டும் உலகின் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்த வன்முறைகளில், இதுவரை...

வெப் சீரிஸ் பார்த்த 2 சிறுவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

கொரியன் சீரிஸ் பார்த்ததாக இரு சிறுவர்களுக்கு வடகொரியா அரசு மரண தண்டனை நிறைவேற்றியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கிம் ஜொங்-உன் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடந்துவரும் வடகொரியாவில் இன்டர்நெட், சமூக வலைதளங்கள் என எதுவும் கிடையாது. கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய குறைவான டிவி சேனல்கள் மட்டுமே இன்றும் இயங்கி வருகின்றன. இதனால், சீனா மற்றும் தென்...

2022 ஆம் ஆண்டின் செல்வாக்கு மிக்கவராக உக்ரைன் ஜனாதிபதி தெரிவு

உக்ரைனின் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இங்கிலாந்து டைம்ஸ் செய்தித்தாளின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த மனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார். 44 வயதான உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, தனது நாட்டிலும் வெளிநாட்டிலும் பலரால் வீரர் என்று அழைக்கப்படுகின்றார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு எதிராக தேசத்தை வழிநடத்தும் அதேவேளையில் ஜனநாயகத்தின் அடையாளமாகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். பெப்ரவரி 24 அன்று ரஷ்யப்...
Loading posts...

All posts loaded

No more posts