போதைமருந்துக்கு அடிமையான 3மில்லியன்பேரைக் கொல்வதற்குத் திட்டம்!

எதிர்கால தலைமுறைகளை பாதுகாப்பதற்காக போதை மருந்துக்கு அடிமையான 3 மில்லியன் பேரை கொன்றுவிட தயார் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டோ தெரிவித்திருக்கிறார். ஈவிரக்கமில்லாத பிலிப்பைன்ஸ் அதிபரின் இந்தக் கருத்துக்கு பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இவர் பதவியேற்ற பின்னர் காவல்துறையினராலும், கண்காணிப்பாளர்களாலும்... Read more »

சார்க் மாநாடு திகதி அறிவிப்பின்றி பிற்போடப்பட்டது

எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தானின் இஸ்லாமபாத்தில் இடம்பெற இருந்த 19வது சார்க் மாநாட்டை பிற்போடுவதாக பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அந்த மாநாடு இடம்பெறும் புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான நிலை... Read more »

தென் அவுஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்து நிகழ்வு

தென் அவுஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கத்தின் 33 ஆவது வருடாந்த இரவு விருந்து நிகழ்வு கடந்த சனிக்கிழமை (24.09.2016) குட்வூட் சமுக மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் திரு. ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மதிப்புக்குரிய பல்லின கலாச்சார அமைச்சர், சோய் பெட்டிசன்,... Read more »

இந்தியாவை அணுகுண்டு போட்டு அழிப்போம்: பாகிஸ்தான்

காஷ்மீரில் உரி ராணுவ முகாமில் வீரர்கள் அதிகாலை நேரத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேர் புகுந்து கோழைத்தனமான தாக்குதல்கள் நடத்தினர். இதில் 18 வீரர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய சதிகாரர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். உரி ராணுவ முகாமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்... Read more »

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 5 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. Read more »

சிங்கப்பூரில் அடுத்த பிரதமராக ஈழத் தமிழருக்கு வாய்ப்பு?

சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ஈழத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட தமிழர் ஒருவருக்கு அதிகம் இருப்பதாக இணையத் தேடுதளமான யாகூ சிங்கப்பூர் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் துணைப் பிரதமரான தர்மன் சண்முகரத்னம் அடுத்த பிரதமராக தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதை கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில்... Read more »

குவைத் பெண்ணிடம் கைகுலுக்கிய இலங்கை பிரஜை கைது

குவைத் நாட்டில் சாரதியாக பணியாற்றுகின்ற இலங்கை பிரஜை ஒருவர், அந்நாட்டு பெண் ஒருவருக்கு கை குலுக்குவது போல் அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது பக்கத்து வீட்டுக்காரரான குறித்த இலங்கை பிரஜை, கை குலுக்குவது போல் தன்னிடம் தகாத... Read more »

விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு பரிந்துரை

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் சட்ட மா அதிபர் Eleanor Sharpston பரிந்துரை செய்துள்ளார். பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டமைக்கான உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால், அவ்வமைப்பினை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஆலோசகரின் இந்த... Read more »

எகிப்து படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கி பலி

புதன்கிழமை அன்று, எகிப்து கடற்பகுதிக்கு அப்பால் ஒரு படகு மூழ்கியதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் நீரில் மூழ்கியுள்ளதாக நம்பப்படுகிறது. படகில் சுமார் 550 பேர் இருந்ததாகவும், இத்தாலிக்கு செல்ல ரோஸெட்டா துறைமுகத்திலிருந்து வெளியேற காத்திருந்த போது மேலும் பலர் படகிற்குள் திணிக்கப்பட்டதாகவும் தப்பிப்பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். அதில்... Read more »

இலங்கையின் எதிர்காலப் பயணத்துக்கு உதவ தயார் :ஒபாமா

இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் உலகுக்கு ஒரு முன்மாதிரியாகும் எனக் குறிப்பிட்டுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கையின் எதிர்காலப் பயணத்துக்குத் தேவையான முழுமையான உதவிகளை வழங்க, தாம் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் 71ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றும் அரச தலைவர்களுக்காக ஐக்கிய... Read more »

நியுயோர்க்கில் பாரிய வெடிப்பு: 29 பேர் காயம்

ஐக்கிய அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தில் இடம்பெற்ற வெடிப்பில், குறைந்தது 29 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செல்சியா மாவட்டத்தின் மன்ஹற்றன் பகுதியிலேயே, இலங்கை நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கே பாரிய சத்தத்துடன் வெடிப்பு நிகழ்ந்துள்ளது. நியூஜெர்சியில் குழாய் குண்டு வெடித்து சில... Read more »

இலங்கையர்களுக்கான ஒன் எரைவல் வீசா நிறுத்தம்: பங்களாதேஷ் பதிலடி

பங்களாதேஷ் பிரஜைகளுக்கான ஒன் எரைவல் வீசா முறையை இலங்கை அரசாங்கம், அந்த நாட்டுக்கு அறிவிக்காமலேயே நிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பங்களாதேஷூம் இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்கி வந்த ஒன் எரைவல் வீசா முறையை நிறுத்தியுள்ளதாக, வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது. மேலும், இலங்கை... Read more »

புகழிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான கொள்ளையில் உறுதியாகவுள்ள ஆஸி

சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் தொடர்ந்தும் இலங்கை, இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் இயங்கி வருவதால், புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான கொள்கையில் எந்த வித மென்மையான போக்கையும் கடைப்பிடிக்கப் போவதில்லை என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பீட்டர் டொட்டன் (Peter Dutton) பாராளுமன்றத்தில்... Read more »

மலேஷிய தாக்குதல் விவகாரம்: புதிய தகவல்கள் கசிந்துள்ளன

மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் சகீப் அன்சாரி மற்றும் அந்நாட்டிலுள்ள பௌத்த விகாரையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடனோ, அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அந்நாட்டில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு சம்பவத்துடனோ, இலங்கையர்கள் எவரும் தொடர்புப்படவில்லை என்று, தகவல்கள் வெளியாகியுள்ளன. மலேஷியப் புலனாய்வுப் பிரிவினருக்குக்... Read more »

வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை நீக்கிய பேஸ்புக் தற்போது பதிவு செய்ய அனுமதி

பேஸ்புக் நிறுவனமானது வியட்நாம் போரின் உக்கிரத்தை எடுத்துச் சொல்லும் பிரபல புகைப்படம் ஒன்றை தொடர்ந்து நீக்கி அதன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது. அந்த புகைப்படத்தில், கொத்துக்குண்டு வீச்சிலிருந்து தப்பிக்க நேபாள சிறுமி ஒருவர் ஆடைகளின்றி ஓடி வரும் காட்சி உள்ளது.... Read more »

பெண்ணை அடிமையாக வைத்திருந்த இலங்கைத் தமிழ்த் தம்பதிகள் மீது வழக்கு!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் கடந்த எட்டு வருடங்களாக ஒரு பெண்ணை அடிமை போல நடத்தி வந்ததாக இலங்கை தம்பதியினருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 48 வயதான குமுதினி கண்ணன், 52 வயதான கந்தசாமி கண்ணன் இருவருமே இந்த... Read more »

திடீரென ரத்த சிவப்பாக நிறம் மாறிய ஆறு!! பீதியில் பொது மக்கள்!

ரஷ்யாவின் சைபீரியாவில் அமைந்துள்ள நோரில்ஸ்க் பகுதியில் செல்லும் டால்டிகான் ஆறு திடீரென ரத்த சிவப்பு நிறத்தில் மாறியதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இதுதொடர்பாக சுற்று சூழல் துறை அதிகாரிகள் அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரஷ்யாவின் முக்கிய தொழில்மயமான மாசுபட்ட நகரங்களில் ஒன்று நோரில்ஸ்க்... Read more »

ஆறு அங்குலத்திற்கு தாடி வளர்த்து இங்கிலாந்த பெண் கின்னஸ் சாதனை

இங்கிலாந்தின் பேர்க்ஷையர் பிராந்தியத்தின் ஸ்லவ்(Slough) பகுதியைச் சேர்ந்த மொடல் அழகி ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர் தனது முகத்தில் ஆறு அங்குலத்திற்கு தாடி வளர்த்து சாதனை சொந்தமாக்கியுள்ளார். ஹார்னாம் கௌர் என்ற 24 வயதான இளம் மொடல் அழகியே இந்த சாதனையை தனதாக்கியுள்ளார்.... Read more »

ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் அளித்த இலங்கை அகதிகள்

அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை வௌியிட்ட விசில்ப்ளோவர் எனப்படும் தகவல் கூறுனர், எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு, ஹொங்கொங்கில் உள்ள இலங்கை அகதிகள் அடைக்கலம் வழங்கியதாக, ஜேர்மன் பத்திரிகையொன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வௌியாகியுள்ளன. அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான அவர், அமெரிக்க தேசிய பாதுகாப்பு குறித்த தகவல்களை வெளியிட்டமைக்காக... Read more »

புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவோர் மீது கடும் நடவடிக்கை!

மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய ஐந்து சந்தேகநபர்கள் மலேசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. கோலாலம்பூர் விமான நிலையத்தில் நடந்த இந்தத் தாக்குதல் குறித்து கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருக்கும் இலங்கை அரசாங்கம், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது... Read more »