சாகும் வரையான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த மக்கள்

கேப்பாபுலவு நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இருவர் சாகும் வரையான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று காலை குறித்த இருவரும் இராணுவ முகாமிற்கு முன்பாக சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தமது சொந்த காணிகளில் மீள்குடியேற்றுமாறு தெரிவித்த மக்கள் கெடந்த முதலாம்... Read more »

மக்கள் போராடும் முன் ; வலி வடக்கு காணிகளை விடுவியுங்கள்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களின் காணிகளை ஒரு மாதகாலத்திற்குள் விடுவிக்குமாறு காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையின் தொழிற்சங்க தலைவரும் யாழ்பாண பிரஜைகள் குழுவின் தலைவருமான விஜயரட்ணம் ரெட்ணராஜா கேட்டுக்கொண்டுள்ளார். வலிகாமம் வடக்கு பகுதி மக்கள் காணிகளை விடுவிக்குமாறு கோரி சத்தியாக்கிர... Read more »

சீ.சீ.ரி.வி பொருத்தி கேப்பாப்பிலவு மக்களை கண்காணிக்கும் ராணுவம்

தமது பூர்வீக நிலத்தை கையளிக்குமாறு கோரி கடந்த 8 நாட்களாக இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்களை 24 மணிநேரமும் ராணுவம் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தலைமையகத்துக்கு முன்னால் இம் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து... Read more »

இரணைத்தீவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு மக்கள் நேற்று புதன் கிழமை கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். தங்களின் பூர்வீக நிலமான இரணைத்தீவில் மீள்குடியமர்த்துமாறு தெரிவித்து இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரணைத்தீவு எமது பூர்வீக நிலம். எமது நிலத்தில் குடியிருக்க அனுமதி... Read more »

காங்கேசன்துறையில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை: அரச அதிபர்

காங்கேசன்துறை பகுதியில் படையினர் வசம் உள்ள 29 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான கடிதம், பாதுகாப்பு அமைச்சின் பதில் செயலாளரிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். குறித்த காணிகள்... Read more »

கேப்பாப்பிலவு மக்களின் தொடரும் மண்மீட்பு போராட்டம்

கேப்பாப்பிலவு பூர்வீக கிராமத்தை விடுவிக்க கோரி ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (சனிக்கிழமை) நான்காவது நாளாகவும் தொடர்கிறது. தமது பூர்வீக கிராமத்தில் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள 150இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் காணிகளை விடுவிக்க கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கேப்பாப்பிலவு பூர்வீக... Read more »

ராணுவ பிடியிலிருந்த புதுக்குடியிருப்பு மக்களின் பகுதியளவு காணி விடுவிப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காணிகள் மூன்று கட்டங்களாக விடுவிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்ததற்கு அமைய, தற்போது முதல் கட்டமாக ஏழரை ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி மக்கள் தங்கள் சொந்த காணிகளுக்குள் செல்ல இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பில் 19 குடும்பங்களுக்கு... Read more »

இராணுவத்தின் காவலரணை அகற்றுக ; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

வலி. விடக்கு அச்சுவேலியினூடாக தெல்லிப்பளைக்குச் செல்லும் பிரதான வீதியான வயாவிளான் – தோலகட்டி வீதியை விடுவிக்குமாறு வலியுறுத்தி பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வயாவிளான் – தோலகட்டி பிரதான வீதியில் அமைந்துள்ள இராணுவத்தின் காவலரணை அகற்றி, வீதியை திறந்துவிட வேண்டும் எனக் கோரியே இன்று காலை... Read more »

சொந்தக் காணிக்குள் நுழைந்த மக்களுடன் ராணுவம் முரண்பாடு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பில் விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் சென்ற மக்களுடன் ராணுவம் முரண்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 84 குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 40 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை இன்றைய தினம் விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டது. எனினும்,... Read more »

காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை: போராட்டம் தொடர்கிறது

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பைச் சேர்ந்த 84 குடும்பங்களுக்குச் சொந்தமான 54 ஏக்கர் காணிகளில், 42 ஏக்கர் காணிகள், இன்று விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும், 42 ஏக்கர் காணியும் தற்போது முழுமையாக விடுவிக்கப்பட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி... Read more »

பிலவுக்குடியிருப்பு காணிக்குள் மக்கள் கால்பதித்துள்ளனர்

கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் சுமார் ஒரு மாத கால தொடர் போராட்டத்தின் பிரதிபலனாக சொந்தக் காணிகள், இன்றைய தினம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமது சொந்தக் காணிகளை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர் விமானப்படையினர் வசமிருந்த பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகளுக்குச் செல்லும் பிரதான... Read more »

பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் நாளை கையளிப்பு

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு காணிகள் நாளை காலை 11.00 மணிக்கு கையளிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன் தெரிவித்தார். Read more »

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கேப்பாபிலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணயிளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டமானது, சுமார் 1 மணித்தியாலயங்களுக்கு மேலாக நீடித்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கடந்த... Read more »

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்று! கண்டனப் பேரணி!

யாழ்ப்பாண மாவட்டம், வலிகாமம் வடக்கு மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இவர்கள் மல்லாகம் பழம்பெரும் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டமானது கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வலிகாமம் வடக்கில் தமது காணிகளை விட்டு இராணுவத்தினரை வெளியேறுமாறும் கோரி ஆர்ப்பாட்டத்தில்... Read more »

சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கின்றது

புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்கு முன்னாள் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று இருபத்துமூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது. கடந்த 9 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலர் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்திருந்தனர்.... Read more »

தமிழக திரைப்பட இயக்குனரும் ஈழ உணர்வாளருமான புகழேந்தி தங்கராஜ் கேப்பாபுலவில்

தமிழக திரைப்பட இயக்குனரும் ஈழ உணர்வாளரும், எழுத்தாளருமான புகழேந்தி தங்கராஜ் அவர்கள் நேற்றையதினம் இரவு கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பில் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர், அதனை விடுவிக்கவேண்டும் என கோரி போராட்டம் நடாத்திவரும் இடத்துக்கு சென்று மக்களை சந்தித்து தனது ஆதரவினை வெளியிட்டார். கேப்பாபுலவு... Read more »

காணிகளிலிருந்து இராணுவம் வெளியேறுகிறது; சுத்தம் செய்யும் பணியில் பரவிப்பாஞ்சான் மக்கள்

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் மக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தினர் தற்போது வெளியேறி வருகின்ற நிலையில், காணிகளை துப்பரவு செய்யும் நோக்கில் முகாம் அமைந்திருந்த பகுதிகளுக்குள் மக்கள் சென்று கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 9 ஏக்கர்... Read more »

பரவிப்பாஞ்சான் காணிகளை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்

பரவிப்பாஞ்சானில் மக்களின் காணியில் முகாம் அமைத்துள்ள இராணுவத்தினர், பிரதேச செயலரால் காணிகள் அடையாளம் காட்டப்படுமிடத்து, அக்காணிகளில் இருந்து தாம் வெளியேற தயாராக இருப்பதாக, தெரிவித்ததாக பரவிப்பாஞ்சான் மக்கள் கூறினர். கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் மக்கள் காணிகளை விடுவிக்குமாறு தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், வியாழக்கிழமை... Read more »

வடக்கு, கிழக்கு காணிகள் விடுவிப்பையும், தேசிய பாதுகாப்பையும் இணைத்து முடிச்சுப் போட வேண்டாம்!

காணி எடுத்தல், காணி கொடுத்தல் பற்றி நாம் இங்கு சிந்தித்துக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருக்கின்றோம். ஆனால், எமது மக்களின் சொந்த காணி, நிலங்களை விடுவித்தல் குறித்து இந்த அரசு என்ன தீர்மானத்தை எடுத்திருக்கின்றது என்று இந்தச் சந்தர்ப்பத்திலே நான் கேட்க விரும்புகின்றேன் என... Read more »

கிளிநொச்சியில் வர்த்தகர்கள் கதவடைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் பரவிப்பாஞ்சான் மக்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, கிளிநொச்சியில் கதவடைப்புடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்களது போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் ஆதரவுப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும்... Read more »