மீள்குடியேற்றம் விரைவில் இடம்பெறும் : புதிய கட்டளைத்தளபதி

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளை தளபதியாக கடமையேற்றிருக்கும் மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி நேற்று (11) மாலை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை அவருடைய இல்லத்தில் வைத்து சிநேகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மகேஸ்... Read more »

கேப்பாப்பிலவில் அமைக்கப்பட்ட அடுக்கு மாடியைத் தக்கவைக்க இராணுவம் முயற்சி!

பாதுகாப்பு அமைச்சினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் அமைக்கப்பட்ட 150 கோடி ரூபா பெறுமதியான கட்டடத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இக் கட்டடம் அமைந்துள்ள தமக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு அங்குள்ள மக்கள் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக போராடி வருகின்ற... Read more »

தகவல் வழங்கியும் பொலிஸார் வரவில்லை : மக்கள் விசனம்

நீர்வேலி, மாசியன் சந்தி பகுதியில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தும் பொலிஸார் அசட்டையுடன் நடந்து கொண்டதாக, பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நவக்கிரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (09) நிகழ்வு ஒன்றுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த குடும்பஸ்தர்... Read more »

மீள்குடியேற்றத்திற்கு இராணுவமே தடையாக உள்ளது; வட மாகாண முதலமைச்சர்

வடக்கில் தொடர்ந்தும் பெருமளவில் நிலைகொண்டுள்ள இராணுவம் உட்பட அரச படையினரே யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்சி... Read more »

வலி. வடக்கில் 28.8 ஏக்கர் காணி விடுவிப்பு

வலிகாமம் வடக்கில், இரண்டு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய சுமார் 28.8 ஏக்கர் நிலப்பரப்பு, நேற்று வெள்ளிக்கிழமை (07) இராணுவத்தினரால், பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஊறணி மற்றும் மயிலிட்டிதுறை ஆகிய பகுதிகளே மக்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டில், இராணுவ நடவடிக்கை மூலம் இந்தப் பகுதி,... Read more »

மக்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் நோக்கிலேயே காணிகள் வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது

சிறுபான்மை மக்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் நோக்கிலேயே வடமாகாணத்தின் எல்லைப் பகுதியிலுள்ள காணிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது என வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுமாறு கோரி வடமாகாண சபையில் நேற்று (வியாழக்கிழமை)... Read more »

முள்ளிக்குளத்தை யுத்தம் இடம்பெற்ற பிரதேசமாக மாற்றியது கடற்படை!

யுத்தம் இடம்பெறாத மன்னார் – முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து ஸ்ரீலங்கா கடற்படையினரால் தாம் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக அந்த கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மூன்று நாட்களில் முள்ளிக்குளத்தில் இருந்து வெளியேறுவோம் என வாக்குறுதி வழங்கிய ஸ்ரீலங்கா கடற்படை இன்று பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், வாழங்கிய... Read more »

இராணுவம் காணிகளை விடுவித்தால்தான் பொலிஸாராலும் விடுவிக்க முடியுமாம்!

உயர் பாதுகாப்பு வலயத்தில் பொலிஸ் நிலையங்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினர் பிடித்து வைத்துள்ளார்கள். அந்த காணிகளை விடுவித்தால் தான் பொலிஸாரால் பயன்படுத்தப்படும் மக்களுடைய காணிகளை தம்மால் விடுவிக்கமுடியும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான சிவில் பாதுகாப்பு கூட்டம் நேற்றைய தினம் யாழ்.மாவட்ட... Read more »

முல்லைத்தீவில் சர்வதேச மன்னிப்புச் சபையின் உறுப்பினர்கள்

முல்லைத்தீவு கேப்பாபுலவில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஷெலீல் ஷெட்டி தலைமையிலான குழுவினர் நேற்று நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த குழுவினர் மக்களின் பிரச்சனைகளை நேரடியாக கேட்டறிந்ததுடன் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகளையும் பார்வையிட்டனர். முல்லைத்தீவில் –... Read more »

கேப்பாபுலவில் 394 ஏக்கர் விடுவிக்கப்படும்

முல்லைத்தீவு, கேப்பாபுலவு பகுதியில் 394 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், நாடாளுமன்றத்தில் நேற்று(04) தெரிவித்தார். ஈ.பி.டி.பி.யின் யாழ். மாவட்ட எம்.பி.யான டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர்... Read more »

விடுவிக்கப்படும் காணிகள் எம்முடையதல்ல; கேப்பாபுலவு மக்கள் ஆதங்கம்

முல்லைத்தீவு பிரதேசத்தில் விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பில் அரசாங்கத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மக்களுடைய காணிகள் உள்வாங்கப்படவில்லை என நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள தமது நிலங்களை... Read more »

கேப்பாபுலவு காணிகள், மே 15க்கு முன் விடுவிப்பு

கேப்பாபுலவில் அமைந்துள்ள 279 ஏக்கர் காணிகள், எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி விடுவிக்கப்படுமென, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். கடந்த வாரம், அமைச்சருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாகவே, கேப்பாபுலவில்... Read more »

4000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்பு படைத் தலைமைகத்தினால் 20,000 ஏக்கர்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றில் 2000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இதில் மேலும் 4000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஐர் ஜென்ரல் மகேஸ் சேனாநாயக்கா தெரிவித்தார்.... Read more »

பன்னங்கண்டி போராட்டம் நிறைவு

கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணி பொதுமக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியில் தங்கியுள்ள தமக்கு, காணி மற்றும் வீட்டுத்திட்டங்களை பெற்றுத்தரக்கோரி, கடந்த 15 நாட்களாக மேற்கொள்ளுப்பட்டுவந்த கவனயீர்ப்புப் போராட்டம், முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. காணி உரிமையாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க... Read more »

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள்

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் கேப்பாபுலவில் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிற்கு ஆதரவு வழங்கவேண்டும் என யாழப்பல்கலைக்கழக முகாமைத்து பீட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேப்பாபுலவு மக்களின் சொந்த நிலத்தை மீட்பதற்கான தொடர் போராட்டம் நேற்று பதினேழாவது நாளாக நடைபெற்றது. 138 குடும்பங்களுக்கு சொந்தமான... Read more »

இனியும் உழைத்து வாழ உடம்பில் தெம்பில்லை: கேப்பாப்பிலவு மக்கள்

இனியும் உழைத்து சீவிப்பதற்கான தெம்பு எமக்கில்லை. எமக்கான வாழ்வாதாரம் கேப்பாப்பிலவில் எமது காலடிக்குள் காணப்படுகிறது. எனவே நாம் நிம்மதியாக வாழ்வதற்கு எமது பூர்வீக காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தமது பூர்வீகக் காணிகளை மீளக் கையளிக்குமாறு... Read more »

கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்களின் உணவுத் தவிர்ப்பு போராட்டம் முடிவு

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் தமது பூர்வீக காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை காணி உரிமையாளர்கள் இருவரினால் ஆரம்பிக்கப்பட்ட நீராகாரமின்றிய சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. எனினும் கவனயீர்ப்பு போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்... Read more »

ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த காணியில் கால்பதித்தனர் உரிமையாளர்கள்

கடந்த 20 வருடங்களாக வடக்கிற்கும் தெற்கிற்கும் செல்லும் பயணிகள் மற்றும் வாகனங்களை சோதனையிடும் பலமான சோதனைச்சாவடியாக காணப்பட்ட வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடி அமைந்திருந்த காணியை, அதன் உரிமையாளர்கள் இன்று (திங்கட்கிழமை) அடையாளப்படுத்தினர். 18 குடும்பங்களுக்குரிய 41 ஏக்கர் காணியை அபகரித்து இச் சோதனைச்சாவடி... Read more »

பலாலி விமானநிலையத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களை பதியுமாறு அழைப்பு!

பலாலி விமான நிலையத்திற்காக அரசினால் 1952 மற்றும் 1983 ஆகிய காலப்பகுதிகளில் அரசினால் சுவீகரிக்கப்பட்டிருந்த 956 ஏக்கர் நிலத்தின் உரிமையாளர்களையும் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவகர்களிடம் பதியுமாறும் கோரப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையம் மற்றும் இராணுவ முகாமிற்காக 1952 மற்றும் 1983ம்... Read more »

விரைவில் தீர்வை தாருங்கள்; கேப்பாபுலவு மக்கள் கோரிக்கை

கேப்பாபுலவு சொந்த நிலத்தை பெற்றுக்கொள்வற்காக மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று பதின்மூன்றாவது நாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை சாகும் வரையான உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமது சொந்த நிலத்தை விடுவிக்குமாறு புலவுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்த போராட்டம் கடந்த முதலாம்... Read more »