அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மல்லாகம் நலன்புரி நிலைய மக்கள்!

மல்லாகம் கோணப்புலம் பகுதியில் அமைந்துள்ள நலன்புரி நிலையத்தில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். Read more »

அடிப்படை வசிதியின்றி வாழும் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் மீள்குடியேறிய மக்கள்

வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் எதுவித அடிப்படை வசதிகளுமின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கவலை தெரிவித்துள்ளனர். Read more »

இந்திய வீட்டுத் திட்டத்துக்கான அடுத்த கட்ட கிராமங்கள் தெரிவு

இந்திய வீட்டுத்திட்டத்துக்கு அடுத்த கட்டத்துக்குரிய கிராம சேவையாளர்கள் பிரிவுகள் இனங்காணப்பட்டு பயனாளிகள் தெரிவுகள் இடம்பெற்று வருகின்றன என்று யாழ்.மாவட்ட செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இந்திய அரசின் நிதியுதவியில் யாழ். மாவட்டத்தில் 9 ஆயிரம் வீடுகள் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more »

யாழ்.வலிகாமம் வடக்கு இடம்பெயர் மக்களின் 23 வருடமாக தொடரும் அவல வாழ்வு!

யாழ்.வலிகாமம் வடக்கு மக்கள் தங்கியுள்ள முகாம் நிலச்சொந்தக்காரர்கள் முகாமை அங்கிருந்து அகற்றுமாறு தீவிரமான அழுத்தங்களை கொடுப்பதாக தெரிவித்துள்ள மக்கள் தாம் சொந்த இடங்களுக்கும் செல்லமுடியாமல், முகாம்களை விட்டும் வெளியேற முடியாமல் அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். Read more »

இராமாவில் இராணுவ முகாம் காணி பொதுமக்களிடம் கையளிப்பு

கொடிகாமம், அல்லாரை, இராமாவில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிரந்த காணி நேற்று அப்பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டது. யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க நேற்று மதியம் 3 மணியளவில் இந்தக் காணியை கையளித்தார். Read more »

சொந்த இடங்களை விடுவிக்காமையால் பச்சிலைப்பள்ளி மேற்கு மக்கள் சிரமத்தில்

சொந்த இடங்கள் விடுவிக்கப்படாமையால் பச்சிலைப்பள்ளி மேற்கு பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.கடந்த 2000 ஆண்டு மார்ச் 26 ஆம் திகதி இரவு பளைப் பகுதியில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து இடம்பெற்ற பச்சிலைப்பள்ளி மேற்கின் வேம்பொடுகேணி, இத்தாவில், இந்திராபுரம், முகமாலை போன்ற இடங்களைச் Read more »

வடபகுதியில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் மீள்குடியேற்றம் – அபிவிருத்திக்காக பல மில்லியன் !!

வடபகுதியில் ஒரு லட்சத்து 43 ஆயிரம் குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சகல உட்கட்டமைப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. Read more »

வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கு இறுதிப் புள்ளி முடிவாகவில்லை; பட்டியல் காட்சிப்படுத்துவதில் தாமதம்

இந்திய அரசின் வீட்டுத் திட்டத்தில் பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான இறுதி “கட்டவுட்’ புள்ளி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. இதனால் பிரதேச செயலகங்களில் வீட்டுத் திட்டத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்களை காட்சிப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. Read more »

பொன்னாலை கிராம அலுவலர் பிரிவில் மீளக்குடியமர்ந்த மக்கள் வசதிகளின்றி அந்தரிப்பு

23 வருடங்களின் பின்னர் மக்கள் மீளக்குடியமர்வதற்கு அனுமதிக்கப்பட்ட பொன்னாலை ஜே/170 கிராம சேவகர் பிரிவில் மின்சார விநியோக மார்க்கங்கள், கிராமிய வீதிகள், குடிதண்ணீர் விநியோகத் திட்டங்கள் அழிவடைந்த நிலையில் காணப்படுகின்றன. Read more »

கனடாவில் வசிக்கும் ஒருவருக்கு இந்திய வீட்டுத்திட்டத்தில் வீடு

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேசத்தில் உள்ள மாரீசன் கூடல் கிராம அலுவலர் பிரிவில் கனடாவில் வசிக்கும் ஒருவர், இந்திய வீட்டுத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இரட்டைக் குடியுரிமை உள்ள ஒருவருக்கே இவ்வாறு இந்திய வீட்டுத்திட்டத்தில் வீடு வழங்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். Read more »

பொன்னாலை பகுதியில் மக்களின் நிலத்தைக் கைப்பற்றி பாரிய படைமுகாம்

யாழ். பொன்னாலை உயர் பாதுகாப்பு வலயத்தினை நீக்குவது தொடர்பில் பொதுமக்களின் கடுமையான அழுத்தங்களின் அடிப்படையில் உயர்பாதுகாப்பு வலயத்தை அகற்றுவதென மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அப்பகுதியில் புதிய முகாம்கள் தொடர்ந்தும் அமைக்கப்பட்டு வருகின்றன. Read more »