ஊறணி மக்களை ஏமாற்றிய இராணுவம்!

அண்மையில் யாழ்ப்பாண மாவட்டம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஊறணி பிரதேசத்தின் இறங்குதுறைப் பிரதேசத்தைச் சேர்ந்த 500 மீற்றர் நிலப்பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்த போதிலும் குறித்த நிலப்பகுதியை மக்களிடம் ஒப்படைக்காது 500 மீற்றர் கடற்பகுதியை மாத்திரமே இராணுவம் மக்களிடம் ஒப்படைத்துள்ளதாக... Read more »

காணிகளை விடுவிக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வோம்: கேப்பாப்பிலவு மக்கள்

படையினர் வசமுள்ள தமது காணிகளை நாளை காலை 8 மணிக்கு முன்னதாக விடுவிக்காவிட்டால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் உறுதியாக தெரிவித்துள்ளார். தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி அம் மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம்... Read more »

முல்லைத்தீவில் தொடரும் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் தமது காணிகளிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் நடத்தி வருகின்ற போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. கடந்த 31ம் திகதி தமது காணிகள் விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, காணிகளைப் பொறுப்பேற்கச் சென்ற... Read more »

யாழ் ஊறணி கரையோரம் விடுவிப்பு

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த ஊறணியில் மேலும் 500 மீற்றர் நீளமான கரையோர பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மக்களிடம் வழங்கப்பட்ட கரையோரப்பகுதியில் மேலும் 500 மீற்றர் நீளமான கரையோரப்பகுதியே கையளிக்கப்பட்டுள்ளது. ஊறணி பகுதியில் கடந்த ஆண்டு இறுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டபோதும், மக்களுடைய... Read more »

சம்பந்தனும், சுமந்திரனும் பேப்பட்டம் கட்ட முயற்சிக்கின்றனரா?; மக்கள் கடும் விசனம்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனும் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரனும் பேப்பட்டம் கட்டுவதற்கு முயற்சிக்கின்றனரா? என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவு புலக்குடியிருப்பு பகுதியிலுள்ள காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று ஏழாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தம்மை... Read more »

கேப்பாப்பிலவு மக்களின் மண் மீட்பு போராட்டம் தொடர்கிறது

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு கிராம மக்கள் இரவு பகலாக முன்னெடுத்துவரும் சத்தியாக்கிரக போராட்டம், ஆறாவது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்கின்றது. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரும் இப்பகுதி மக்களுக்குச் சொந்தமான காணிகளை கையகப்படுத்தி... Read more »

சுதந்திரதினத்திலும் மக்கள் போராடவேண்டியுள்ளது!

நாடு சுதந்திரம் அடைந்து 69 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் இன்றும் எம் மக்கள், அவர்களது உரிமைகளுக்காகப் போராடவேண்டியுள்ளதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்தார். கேப்பாபுலவு – புலவுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு... Read more »

இராணுவம் வெளியேறாவிடின் தீக்குளிப்போம்; புதுக்குடியிருப்பு மக்கள்

இராணுவத்தினர் தமது காணிகளை விடுவிக்காவிட்டால் தீக்குளிக்கப் போவதாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்கள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டம் நேற்று... Read more »

சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ள கேப்பாப்பிலவு மக்கள்

இலங்கையின் 69ஆவது சுதந்திர தினம் நாளை (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், நாளைய தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ளதாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு கிராம மக்கள் எச்சரித்துள்ளனர். இதேவேளை, தமது காணிகளை ஆக்கிரமித்துள்ள ராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்றி தங்களின் காணிகளை விடுவிக்க... Read more »

பொதுமக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்று; மற்றுமொரு போராட்டம் ஆரம்பம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் புதுக்குடியிருப்பு பிரசெயலக நுழைவாயிலை வழிமறித்து பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more »

கொட்டும் பனியிலும் இரவோடுஇரவாக 2 ஆவது நாளாகவும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம்

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு விமானப்படைத்தளம் அமைந்துள்ள பகுதியில் இரண்டாவது பிரதான வாயில் முன்னால் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட மக்களின் போராட்டமானது நேற்று இரவும் கொட்டும் பனி இரவையும் தாண்டி இன்றும் இரண்டாவது நாளாக தொடர்ந்த வண்ணமுள்ளது. விமானப்படையினர் வசமுள்ள 30 ஏக்கர் காணியை நேற்று விடுவிப்பதாக... Read more »

நாவற்குழி வீட்டுத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிவைப்பு

நாவற்குழியில் உள்ள, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணியில், மானிய அடிப்படையில் கட்டிக் கொடுக்கப்படவுள்ள 250 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா, இன்று காலை இடம்பெற்றது. யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். பல வருடங்களாக, அடிப்படை வசதிகள்... Read more »

முகமாலை பகுதியில் 5 ஏக்கர் காணி விடுவிப்பு

கிளிநொச்சி – முகமாலை பகுதியில், இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த ஐந்து ஏக்கர் காணி நேற்று (27) விடுவிக்கப்பட்டது. கிளிநொச்சி – முகமாலையில், இராணுவத்தின் 552 ஆவது படைப்பிரிவு முகாம் அமைந்திருந்த பொதுமக்களின் காணி நேற்று விடுவிக்கப்பட்டன. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், இராணுவத்தினர் உள்ளிட்ட பலர் இந்த... Read more »

நாவற்குழியில் சிங்களவர்களுக்கு வீடமைத்து கொடுத்தால், போராட்டம் வெடிக்கும்!! சிவாஜிலிங்கம்

நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் சிங்கள மக்களுக்கு வீடமைத்து கொடுக்கும் நோக்குடன் அடிக்கல் நாட்டு வைபவம் நடைபெற்றால் , நிகழ்வு நடக்கும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்து உள்ளார். மேலும்... Read more »

கிளிநொச்சியில் காணியற்றவா்களிடமிருந்தும் பொருத்து வீட்டுக்கு விண்ணப்ங்கள்?

கிளிநொச்சி மாவட்டத்தில் காணியற்றவர்களிடமிருந்தும் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என பொது அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. பொருத்து வீடுகள் முற்றிலும் பொருத்தமற்றது என வடக்கில் எல்லோராலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் மீள்குடியேற்ற அமைச்சு மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் ஊடாக பெருத்து வீட்டுக்கு... Read more »

நந்திக்கடல் பகுதி விடுவிக்கப்படமாட்டாது! : ராணுவம்

முல்லைத்தீவு – நந்திக்கடல் பகுதி படைத் தேவைக்கு அவசியமென குறிப்பிட்டுள்ள ராணுவம் குறித்த பகுதி விடுவிக்கப்பட மாட்டாதென தெரிவித்துள்ளது. படைத் தேவைக்காக இவ்வாறு சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராமத்தின் ஒரு பகுதியை எதிர்வரும் 25ஆம் திகதி... Read more »

முகமாலை பகுதியில் ராணுவத்தின் கெடுபிடியால் மக்கள் பாதிப்பு

கிளிநொச்சி முகமாலை பகுதி கடந்த வருடம் டிசம்பர் மாதம் மீள்குடியேற்றத்திற்காக கையளிக்கப்பட்டபோதிலும், ராணுவத்தின் நடவடிக்கைகளால் அங்கு நிம்மதியாக மீள்குடியமர முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஏ – 9 வீதி கரையோரமாக உள்ள குறித்த காணியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், தமது காணிகளை உள்ளடக்கி வேலியமைத்துள்ளதால்... Read more »

பொருத்து வீட்டுத்திட்டம் தமிழ் மக்களுக்கு சாபம்! அங்கஜன்

பொருத்துவீட்டுத்திட்டம் தமிழ் மக்களுக்கு சாபம் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிகழ்வு நேற்றைய தினம் 11.30 மணியளவில் வட்டுக்கோட்டை... Read more »

ஊறணி பகுதியில் மீண்டும் மீன் பிடி நடவடிக்கை

வலிகாமம் வடக்கில் காங்கேசன்துறைக்கும் மயிலிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஊறணி பகுதியில் உள்ள 325 மீற்றர் நீளமான கடற்கரைப் பகுதியை மட்டுப்படுத்தப்பட்டளவில் மீனவர்கள் பயன்படுத்த இலாணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். ஊரணி மீன்பிடி துறைமுகதை மீண்டும் உள்ளூர் மீனவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த 14 ஆம்... Read more »

எங்கட நிலத்தில் சிங்கள மக்கள் உல்லாசம், நாங்கள் அகதி முகாம்களில், கண்ணீருடன் ஊறணி மக்கள்!

வலி வடக்கு மக்கள் தமது சொந்த வீடுகளில் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் உல்லாசம் அனுபவிப்பது கண்டு ஊறணி மக்கள் தமது ஆதங்கத்தினைக் கொட்டித் தீர்த்தவாறு கண்ணீர் மல்க வெளியேறினர். நேற்று முன்தினம் முதல் ஊறணிப் பகுதியில் ஓர் இறங்குதுறையின் ஊடாக மீனவர்கள் கடலுக்குச் சென்றுவரும்... Read more »