பெற்றோலிய ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு அர்ஜுன் ரணதுங்க வருகை தந்ததையடுத்து இடம்பெற்ற அசம்பாவித நிலைமையைத் தொடர்ந்து பெற்றோலிய ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த பணிப்புறக்கணிப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் அர்ஜுன்... Read more »

மஹிந்த தலைமையில் விசேட கூட்டம் – நாளை புதிய அமைச்சரவை

புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான விசேட கூட்டம் ஒன்று தற்போது கொழும்பில் இடம்பெறுவதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நாளைய தினம் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளதாகவும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை மறுதினம் திங்கட்கிழமை அமைச்சுக்களின் புதிய செயலாளர்கள்... Read more »

மாவை சேனாதிராஜா போட்டியிடாவிட்டால் நானே முதலமைச்சர் வேட்பாளர் – சீ.வி.கே.சிவஞானம்

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜா போட்டியிடாவிடத்து நானே முதலமைச்சர் வேட்பாளர் என வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். பேரவைச் செயலகத்தில் இன்று (27) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வடமாகாண சபையின் ஆட்சிக் காலம்... Read more »

எமது முடிவை நாம் ஆராய்ந்து எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்போம்!!- சம்பந்தன்

இரு நபர்களின் அடிப்படையில் முடிவு எடுக்க முடியாது. நாட்டின் கொள்கையின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். கட்சிகளை பற்றி நான் சிந்திக்கவில்லை. எமது முடிவை நாம் ஆராய்ந்து எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்போமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.... Read more »

மீண்டும் ஆட்சியில் பங்கெடுத்தால் முன்னரைவிடவும் மக்களுக்கு தீர்வுகளை வழங்குவோம் – டக்ளஸ்

“நாம் ஆட்சியில் பங்கெடுத்திருந்த காலத்தில் ஓய்வின்றி உழைத்து பெரும்பணியைச் செய்திருக்கின்றோம் என்பது ஊர்பார்த்த உண்மையாக உள்ளது. மீண்டும் ஆட்சியில் பங்கெடுத்தால் முன்னரைவிடவும் கூடுதலான முயற்சிகளை செய்து போரில்லாத இந்தச் சூழலில் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க உழைப்போம்” இவ்வாறு பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு... Read more »

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி! – மஹிந்த ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ செயற்படுவாரென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் நீடித்த குழப்பநிலையின் உச்சகட்டமாக,... Read more »

ஐ.நா. பிரேரணையை அமுல்படுத்த உத்தரவாதம் வழங்கினால் மஹிந்தவுக்கு ஆதரவு – கூட்டமைப்பு

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்த உத்தரவாதம் வழங்கினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார். அத்தோடு,... Read more »

முகமூடி அணிந்த குழுவினர் அட்டகாசம்: தாயும், மகளும் படுகாயம்

வவுனியாவில் முகமூடி அணிந்த இளைஞர் குழுவொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் தாயும், மகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வவுனியா, வேப்பங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு ஐந்து பேர் கொண்ட குழு உட்புகுந்து, அங்கிருந்த தாயையும், மகளையும் தாக்கியுள்ளனர்.... Read more »

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் தற்போது எரிபொருள் விலை வேகமாக குறைந்து வருகிறது. 2018 ஒக்டோபர் 05 முதல் இன்று வரையான கடந்த 21 நாட்களில் ப்ரெண்ட் Brent மசகு எண்ணெய் பெரல் ஒன்று 84.47 டொலரில் இருந்து 76.77 டொலர் வரையிலும், OPEC Basket மசகு... Read more »

ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரை!

நாட்டு மக்களுக்கு ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அலரிமாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் இந்த விசேட உரையை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்திற்குள் அண்மைய காலமாக இடம்பெற்று வந்த உட்பூசல் தீவிரமடைந்து வந்த நிலையில், நேற்றிரவு முன்னாள்... Read more »

மஹிந்த பிரதமரானாலும் பொறுப்பு கூறலில் இருந்து விடுபட முடியாது – அமெரிக்கா!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை அளித்த வாக்குறுதிகளை செயற்படுத்த இலங்கை தவற கூடாது என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளமை தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத் துறையின் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் சார்பில்... Read more »

மஹிந்தவை பிரதமராக பிரகடனப்படுத்தி வர்த்தமானி வெளியீடு

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்துள்ளதாக அரசாங்கம் வர்த்தமானி மூலம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது Read more »

அரசியல் யாப்பை மதித்து செயற்படுங்கள் – பிரித்தானியா

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளின் முன்நகர்வுகள் தொடர்பில் கூர்ந்து அவதானித்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கு பொறுப்பான அமைச்சர் மார்க் பீல்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை கூறியுள்ளார். எனவே இலங்கை அரசியல் யாப்பிற்கு மதிப்பளித்து, சகல... Read more »

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு மிக முக்கியமானது – ஐ.தே.க

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிக முக்கியமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்... Read more »

ஒரு நாடு! ஒரு ஜனாதிபதி! இரண்டு பிரதமர்கள்!!

இலங்கையின் பிரதமராக, மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதோடு, நாட்டின் பிரதமராக தானே தொடர்ந்து உள்ளதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள நிலையில், அரசியல் பிரச்சினைகள் எழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசமைப்புத் தொடர்பான சிக்கல்கள் எழவுள்ள நிலையில், டுவிட்டர் இணையத்தளத்திலும், இது தொடர்பில் குழப்பம் காணப்படுகிறது. ரணில்... Read more »

நாங்கள் நல்லது செய்வதைப் பொறுக்காத சிலர் வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்புகின்றனர்!

முதலமைச்சரினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள வாராந்த கேள்வி பதில் பகுதி… மணலாற்றுக் காணி அபகரிப்புச் சம்பந்தமான இரண்டாம் கட்டுரை தாமதமாகின்றது. அதற்குப் பதிலாகப் பின்வரும் கேள்வியும் பதிலும் தரப்பட்டுள்ளன. இதுவே எனது முதலமைச்சர் காலத்தில் வழங்கப்படும் கடைசி பதிலாகும். தொடர்ந்து நான் இவ்வாறான கேள்விகளுக்குப் பதில் தர... Read more »

அமைச்சரின் வருகைக்காக மாணவர்களை துப்பரவு பணிக்கு ஈடுபடுத்தியமையால் பொதுமக்கள் அதிருப்தி

தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சா் மனோ கணேசனின் வருகைக்காக கிளிநொச்சி- பூநகாி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், மாணவா்களை வைத்து வீதியை துப்பரவு செய்தமை தொடா்பில் பலா் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், கடுமையான விமா்சனங்களையும் முன்வைத்துள்ளனா். பூநகரி பிரதேசத்திலுள்ள ஸ்ரீ வித்தியானந்தா வித்தியாலயத்தில் தரம் 5ஆம்... Read more »

பெருந்தோட்ட தொழிலாளர்களின் போராட்டத்துக்கு கோப்பாய் கலாசாலை ஆசிரிய மாணவர்கள் ஆதரவு

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் போராட்டத்துக்கு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கமைய கலாசாலையில் முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். மலையகத் தோட்ட தொழிலாளர்கள் ஆயிரம் ரூபாய் சம்பளம் கோரி தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.... Read more »

யாழில் முதியவர்கள் மீது தாக்குதல்: நகைகள் கொள்ளை!

யாழ்ப்பாணம், அராலி பகுதியிலுள்ள வீடொன்றினுள் உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த முதியவர்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு நகைகளை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 71 வயதுடைய பெண்ணும் 80 வயதுடைய ஆணும் தாக்கப்பட்டதுடன், அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று... Read more »

யாழில் எட்டு பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம்!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய எட்டு பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற பெருங்குற்றங்கள் தொடர்பில் சரியான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும், பல விசாரணைகள் நீண்ட காலமாக முடிவின்றி இருப்பதாகவும் கூறியே இவர்கள் இடமாற்றம்... Read more »