ஜனாதிபதிக்கு எதிரான ஐதேகவின் ஆர்ப்பாட்டம் ஆரம்பம்!!!

அரசியலமைப்புக்கு முரணாக ஆட்சிக்கவிழ்ப்பை முன்னெடுத்து ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிய ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கும் மெரும் மக்கள் போராட்டம் கொழும்பில் ஆரம்பமாகி நடைபெற்று வருகி்றது. அலரிமாளிகைக்கு அருகாமையில் ஆரம்பமாகிய இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக் கணக்கான... Read more »

எரிபொருள் விலைச் சூத்திரம் இனிமேல் இல்லை

எரிபொருள் விலைச் சூத்திரம் புதிய அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்று பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும கூறியுள்ளார். இன்று (30) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். இதன்போது மேலும் கருத்துக் கூறிய அவர், மக்கள் இனிமேல் 10ம் திகதி வரும்... Read more »

நாடாளுமன்றை வெள்ளியன்று கூட்டுவதற்கு நடவடிக்கை!

நாடாளுமன்றத்தை வரும் வெள்ளிக்கிழமை கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூர்ய, கட்சித் தலைவர்களிடம் உறுதியளித்துள்ளார். நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை சபாநாயகர் இன்று நண்பகல் சந்தித்தார். இதன்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்... Read more »

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் தொடர்ந்து சம்பந்தன்!

எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை மாற்றுவதற்கு எவ்வித தீர்மானங்களும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். Read more »

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் இரா.சம்பந்தன்!

நாட்டின் அரசியலமைப்பை மீறி சட்டவிரோதமான முறையில் பதவியேற்றுள்ளீர்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை விஜேராம அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சந்தித்து இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.... Read more »

பெற்றோலிய ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

முன்னாள் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, கைது செய்யப்பட்டமையை தொடர்ந்து பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் அர்ஜுன் ரணதுங்கவை, கைது செய்ய... Read more »

மன்னார் சதொச வளாகத்தில் இதுவரை 207 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணியில் இதுவரை 207 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பிரதேசத்தில் நேற்று (திங்கட்கிழமை) 96 ஆவது தடவையாக மனித எலும்புக்கூடுகள் அகழும் பணிகள் இடம்பெற்றன. தற்போது வரைக்கும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என சுமார்... Read more »

புதிய அமைச்சரவை வெளியாகியது!

புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய அமைச்சரவையில் ஆனந்த அளுத்கமகே: சுற்றுலா மற்றும் வனவிலங்கு பிரதி அமைச்சர். வடிவேல் சுரேஷ் : பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் வசந்த சேனநாயக்க: சுற்றுலா மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான்: மலைநாட்டு... Read more »

மத்திய அமைச்சரானார் டக்ளஸ் தேவானந்தா!

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்துசமய விவகாரங்கள் அமைச்சராக இருந்த டி.எம்.சுவாமிநாதனின் அமைச்சுப்பதவி டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய, 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி அமைச்சரவை கலைக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.... Read more »

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு எவரும் முன்வரவில்லை – ஜனாதிபதி

வடக்கு மக்களின் பிரச்சினைகளை கடந்த மூன்றரை வருடங்களில் தீர்ப்பதற்கு, பொறுப்பு வாய்ந்த எவரும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை – திஸ்ஸமஹாராமவில் இன்றைய தினம்(திங்கட்கிழமை) இடம்பெற்ற 2018ஆம் ஆண்டுக்கான தேசிய நெல் விதைப்பு நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து... Read more »

சுமந்திரனுக்கு வாக்குறுதியை நிறைவேற்றிக்கொள்ள காலம் கனிந்துள்ளது: சிவசக்தி ஆனந்தன்

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சுமந்திரன் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிக்கொள்வதற்கு காலம் கனிந்துள்ளதென வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களினால் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வலியுறுத்தி, இன்று (திங்கட்கிழமை) வவுனியாவில்... Read more »

டெலோவின் முக்கியஸ்தருக்கு ஆவா குழு எச்சரிக்கை!!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளரான நாகராஜனுக்கு ஆவா குழுவினர் தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக வவுனியா மாவட்ட தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின்... Read more »

இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றார்!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 22ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார். பிரதமர் செயலகத்தில் சற்றுமுன் அவர் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இலங்கை ஜனாதிபதியாக இரு தடவைகள் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ, மூன்று தசாப்தகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததால்... Read more »

மாகாண சபை தேர்தலை நடத்துவதே எமது நோக்கம்: ஜனாதிபதி

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது தொடர்பிலேயே அடுத்த எமது நடவடிக்கைகள் காணப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். திஸ்ஸமகாராம, சந்தகிரிகொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “நாட்டில் தற்போது மாகாண சபை... Read more »

கிளிநொச்சியில் மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து பொங்கல்!

கிளிநொச்சியில் ஜனாதிபதியினால் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்து பொதுஜன பெரமுன கட்சியினர் பொங்கல் பரிமாறியதோடு பட்டாசுக் கொளுத்தியும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரண்டாவது பிரதமராக மகிந்த ராஜபக்ஸ பதவி பிரமாணம் செய்தது முதல் பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்தவர்கள் மாவட்டத்தின்... Read more »

சட்டவிரோத கேபிள் ரீவி இணைப்பு! மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு

வீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த கேபிள் ரீவி இணைப்பின் ஊடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நகரில் சட்டவிரோத கேபிள் இணைப்பினாலேயே இந்த விபத்து இடம்பெற்று அவர் உயிழந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் நேற்று முற்பகல் இடம்பெற்ற... Read more »

குடத்தனையில் கொலைவெறித் தாக்குதல்! ஒருவர் சாவு! மூவர் படுகாயம்!!

பருத்தித்துறை குடத்தனையில் கோடரியுடன் சென்ற நபர் வீடுகளுக்குள் கண்மூடித்தனமாக வெட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதிகாலை 3 மணியளவில் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன. முதலில் வீடொன்றுக்குள் புகுந்த நபர் தம்பதிகளை கொடூரமாகத் தாக்கியுள்ளார். அதில் கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மனைவி... Read more »

யாழ்.சிறைச்சாலையில் கைதியொருவர் தற்கொலை முயற்சி!

யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதியொருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் குறித்த கைதி சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களால் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். யாழ்.உரும்பிராய் பகுதியை சேர்ந்த 23 வயதான இராஜேஸ்வரன் கஜன் என்பவரே தற்கொலை முற்சியில் ஈடுபட்டதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »

இந்தியாவுடன் கலந்துரையாடியே இறுதி முடிவு: மாவை சேனாதிராசா

சர்வதேசத்துடனும், இந்திய நாட்டுடனும் கலந்துரையாடிய பின்னரே தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடமபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இதனை தெரிவித்துள்ளார். இது... Read more »

நாடாளுமன்றத்தை உடனே கூட்டுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா அழுத்தம்

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறும் இதன்மூலம் இலங்கை மக்களால் ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் தம்முடைய பொறுப்புக்களை நிறைவேற்ற இடமளிக்குமாறும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களும் ஜனாதிபதி சிறிசேன மற்றும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் அரசியல் நிலைமைகளை கரிசனையோடு உற்றுநோக்கிவருவதாக அமெரிக்க இராஜாங்கத்... Read more »