வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தொடர்ச்சியாக அதிகார துஸ்பிரயோகம் – இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தொடர்ச்சியாக அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுவருவதாக குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் அதுதொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றினையும் அனுப்பியுள்ளது. இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கை வருமாறு, இலங்கை ஆசிரியர் சங்கம், ஊடக... Read more »

17 ஆம் திகதி நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம்

எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி அன்று நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அலுவலர்கள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA), இந்தியாவுடனான எட்கா (ETCA)... Read more »

இலங்கையில் விரைவில் இராணுவ ஆட்சி?

கூடிய விரைவில் இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படுவதற்கான தோற்றப்பாடுகள் காணப்படுவதாக வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) எமது தனியார் செய்திப்பிரிவிற்கு வழங்கிய விசேட பேட்டியொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘இனப்படுகொலையைப் புரிந்த இராணுவத்தினது... Read more »

மீள் திருத்தப்பட்ட பரிட்சை முடிவுகள் வெளியாகியது

மீள் திருத்தம் செய்யப்பட்ட 2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் பரீட்சாத்திகள் பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற முகவரியில் பார்வையிடலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more »

எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி: பேருந்து கட்டணங்களும் அதிகரித்தது

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பில் டீசல் விலை அதிகரிப்பு காரணமாக, தனியார் பேருந்து கட்டங்களை அடுத்த வாரத்தில் இருந்து, 10 விகிதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கம் முடிவு செய்துள்ளது. குறித்த விடையம் தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற... Read more »

இரணைதீவு மக்களுக்கு உதவி: சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கை கடற்படையினரால் 1992 ஆம் ஆண்டு விரட்டியடிக்கப்பட்ட கிளிநொச்சி இரணைதீவு மக்கள் தமது சொந்த இடங்களுக்கு தாமாகவே திரும்பியுள்ள போதிலும் அவர்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், அம் மக்களுக்கு தேவையான தற்காலிக கூடார கொட்டகைகளை... Read more »

சிங்கள மக்கள் தமிழ் மக்கள் மீது நல்ல அபிப்பிராயம் கொண்டவர்கள்: இராணுவ கட்டளைதளபதி

தெற்கு சிங்கள மக்கள், வடக்கு தமிழ் மக்கள் மீது நல்ல அபிப்பிராயம் கொண்டவர்கள் என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராட்சி தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது அவர்... Read more »

மீனவ, சமுர்த்தி குடும்­பங்­க­ளுக்கு மண்­ணெண்ணெய் 44 ரூபா­வுக்கு!!

மண்­ணெண்ணெய் விலை அதி­க­ரித்­தா­லும் சமுர்த்­திக் குடும்­பங்­க­ளுக்­கும், மீன­வர்­க­ளுக்­கும் பழைய விலை­யான 44 ரூபா­வுக்கே மண்­ணெண் ணெய் வழங்­கப்­ப­டும் என்று அமைச்­சர் ராஜித சேனா ­ரத்ன தெரி­வித்­தார். மண்­ணெண்ணெய்யின் விலை 57 ரூபா­வால் அதி­க­ரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »

தந்தையின் வாகனத்தில் மோதி 5 வயது மகள் பலி

வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை பகுதியில் தந்தையின் வாகனத்தில் மோதி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது, வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை பகுதியில் உள்ள சுதர்ஷன் என்பவர் நேற்று முன்தினம்(09.05.2018) காலை தனது ஐந்து வயது மகளான ருஷா... Read more »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை புறக்கணிப்போம்: யாழ். மாணவர் ஒன்றியம்

வட. மாகாண சபை தமது கோரிக்கையை ஏற்காத பட்சத்தில், முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வை புறக்கணிப்போம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கிருஷ்ணமீனன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்த... Read more »

இராணுவத்தினரின் கண்டுப்பிடிப்புக்கள் வடக்கில் அறிமுகம்!

‘பனங்காட்டில் புத்திக்கூர்மை’ எனும் புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சி யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமானது. இராணுவத்தினரின் கண்டுபிடிப்புக்களை வடக்கு மக்களுக்கு பயன்பெற வைக்கும் நோக்கில் யாழ்ப்பாணப் படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் குறித்த கண்காட்சி நேற்றும் இன்றும் இடம்பெறுகின்றது யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல்... Read more »

இன அழிப்பு நாளாக மே 18 பிரகடனம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18ஆம் திகதியை இன அழிப்பு நாளாகவும், தமிழ் தேசியத்தின் துக்க நாளாகவும் வடக்கு மாகாணசபை பிரகடனப்படுத்தியுள்ளது. வடக்கு மாகாண சபையின் 122வது அமர்வு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றிருந்தது. இதன்போது மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மேற்படி... Read more »

இரு மாதங்களுக்கு ஒருமுறை எரிபொருள் விலை மாற்றமடையும்: மங்கள

அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள புதிய எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய, எரிபொருளின் விலையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றம் நிகழும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அதன்படி எரிபொருள் விலை இரண்டு... Read more »

தமிழர்களின் உரிமைகளை எவராலும் புதைத்துவிட முடியாது: சம்பந்தன்

தமிழர்களுக்குரிய அரசியல், பொருளாதார, கலாசார உரிமைகளை எவராலும் புதைத்துவிட முடியாது என எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம் பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைமீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய... Read more »

முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிக்கப்படும்: முச்சக்கரவண்டி சங்கம் எச்சரிக்கை

அரசாங்கம் முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருள் மானியம் வழங்க வேண்டும். இல்லாவிடின் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்படுமென இலங்கை சுயதொழில் முச்சக்கரவண்டி சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் எரிபொருள் விலையேற்றம் பாரிய சுமையாக உள்ளது. இதனால் அரசாங்கம் எரிபொருள் மானியம்... Read more »

வித்தியா படுகொலை வழக்கின் நீதிபதிகளுக்கு திடீர் இடமாற்றம்!

மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய மூவருக்கும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வருடாந்த இடமாற்றத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாணத்தில் மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும் மேல்... Read more »

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள்களின் விலை அதிகரிப்பு!!

கனியவள கூட்டுத்தாபன எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த கூட்டுத்தாபனத்தில் நிலவும் நிதிநெருக்கடியை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய… 92... Read more »

வாள்வெட்டு தாக்குதல் நடத்தியவர்களுக்கு விளக்கமறியல்

நீர்வேலியில் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது. நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் கடந்த திங்கட்கிழமை இளைஞர்கள் இருவர்... Read more »

இரணைதீவில் மக்களுடன் மக்களாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புனரமைப்புப் பணிகளில்!!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் நேற்று (09.05.2018) இரணைதீவு மக்களைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கியதுடன் அம்மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தேவாலயத்திலிருந்து மக்கள் குடியிருப்புப் பகுதிக்குச் செல்லும் பாதையும் துப்பரவு செய்து கொடுக்கப்பட்டள்ளது. இரணைதீவு மக்கள் தங்கள் சொந்த நிலங்களில் குடியேறியதையடுத்து தமிழ்த்... Read more »

பருப்பிற்கு வரி அதிகரிப்பு

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பருப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரையும் பிரிக்கப்பட்ட ஒரு கிலோ கிராம் பருப்பிற்கு 3 ரூபாவாக காணப்பட்டது. அது 12 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பிரிக்கப்படாத ஒரு கிலோ கிராம் பருப்பிற்கான வரி 7 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த புதிய... Read more »