விடுதலைப் புலிகளின் பெயரில் வீதிகள்? –ராஜித

வடக்கில் நிர்மாணிக்கப்படும் புதிய வீதிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்தவர்களின் பெயர்கள் சூட்டப்படுவதாக தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையுமில்லையென அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே... Read more »

மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிவந்தவர்கள் கைது!

ண்டபம் அகதிகள் முகாமில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு வந்த நான்கு இலங்கை அகதிகள், கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அகதிகளுடன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு படகோட்டிகளும் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடற்படையினர், சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணியில்... Read more »

ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் கொலை: சகோதரர்கள் இருவரும் பிணையில் விடுவிப்பு!!

ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் கொலை வழக்கில் சுமார் 17 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டடிருந்த சந்தேகநபர்கள் இருவரையும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது. ஊர்காவற்துறை பகுதியில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஒரு பிள்ளையின் தாயும்... Read more »

முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி மோட்டார் சைக்கிள் பேரணி – பல்கலை. மாணவர்கள் அழைப்பு

மே -18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை உந்துருளி (மோட்டார் சைக்கிள்) பேரணியை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நடத்துகின்றனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும் மோட்டார் சைக்கிள்... Read more »

யாழில்.மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான இரு பெண்கள்!!

யாழில்.மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான இரு பெண்களை காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். யாழ்.இருபாலை சந்தி பகுதியில் இருந்து யாழ் நகர் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் மது போதையில் பயணித்த இரு பெண்கள் கட்டைப்பிராய் சந்திக்கு... Read more »

குழந்தையின் கழுத்தில் வாள் வைத்து அச்சுறுத்திக் கொள்ளை!

யாழ்.தென்மராட்சி பகுதியில் குழந்தையின் கழுத்தில் வாள் வைத்து குடும்பத்தாரை அச்சுறுத்தி, நகை பணம் என்பவற்றைக் கொள்ளையடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தென்மராட்சி, அறுகுவெளி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நள்ளிரவு உட்புகுந்த நான்கு கொள்ளையர்கள் வீட்டில் உறங்கி கொண்டிருந்த குழந்தையின் கழுத்தில்... Read more »

இனத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நாளாக மே 18ஆம் திகதி : முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு

எதிர்காலத்தில் தமிழ் இனத்தை ஒன்றிணைக்கும் ஒரு நாளாக மே 18ஆம் திகதி விளங்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்... Read more »

நான்காம் நாள் நிகழ்வு தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவுத்தூபியில்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் மாநகரில் அமைந்துள்ள தமிழர் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவுத்தூபியில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில் பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.... Read more »

18ஆம் திகதி முதல் மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணம்!

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் நிவாரணம் வழங்கப்படும் என்று கடற்றொழில் மற்றும் நீரியில் வள அமைச்சர் விஜித்தமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார். இதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்படும். எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் மற்றும் டிசல் நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம்... Read more »

காணாமல்போனோர் விவகாரத்திற்கு சர்வதேச வழக்கின் மூலம் தீர்வு – ஜஸ்மின் சூக்கா

காணாமல்போனோர் விடயத்தை இலங்கை தொடர்ந்தும் அலட்சியம் செய்தால் இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்வதன் மூலம் உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனது... Read more »

முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த பேரவலத்தின் நினைவாக புத்தக வெளியீடு

முள்ளிவாய்க்கால் நினைவாக, “முள்ளிவாய்க்கால் பதிவுகள்” எனும் நூல் யாழில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில், கொள்கை ஆய்வுக்கான நிலையமான “அடையாளம்” அமைப்பினது ஏற்பாட்டிலேயே நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இவ்வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புக்களின்... Read more »

இரணைதீவு மக்களுக்கு வெற்றி!!! : மீள்குடியேற்றத்திற்கு அனுமதி!

கிளிநொச்சி – இரணைதீவில் தங்கியிருந்து தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள 190 குடும்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சின் தீர்மானத்தின் பிரகாரம், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இம்மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், படிப்படியாக சகல... Read more »

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் நாளை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்!!

அமைச்சரவை அனுமதித்துள்ள 6.5 வீத கட்டண அதிகரிப்பை நிராகரித்துள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர், நாளை (புதன்கிழமை) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதற்காக சகல பேருந்து தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். 20 சதவீத கட்டண அதிகரிப்பை கோரியிருந்த நிலையில், அமைச்சரவையின் தீர்மானம்... Read more »

தமிழினப் படுகொலையில் உயிர்நீத்தோரை அஞ்சலிக்க வடக்கில் “தீபமேந்திய ஊர்தி”

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் “தீபமேந்திய ஊர்தி பவனி” வல்வெட்டித்துறையில் மண்ணிலிருந்து இன்று (15) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது. இளைஞர்களால் ஆரம்பிக்கப்படும் தீப ஊர்திப் பவனி வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு மே 18... Read more »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு பொலிஸாரின் லீவுகள் இடைநிறுத்தம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் வடக்கு மாகாண பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் சகல தர நிலை பொலிஸ் உத்தியோகத்தர்களினும் விடுப்புகள் இன்று நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரால் இன்று... Read more »

பேருந்து கட்டண அதிகரிப்பிற்கு அனுமதி! நாளை முதல் அதிகரிப்பு!!

தனியார் பேருந்து கட்டணத்தை 6.5 வீதத்தால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாளை முதல் இக்கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வரவுள்ளது. இதன் பிரகாரம் தற்போது நடைமுறையிலுள்ள ஆகக்குறைந்த பேருந்து கட்டணமான 10 ரூபாவில் எவ்வித மாற்றமும் ஏற்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்... Read more »

‘முன்னோக்கி நகர்வோம்’ வேலைத்திட்டம் யாழில் ஆரம்பித்து வைப்பு!

மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த வட.மாகாணத்தினை மையப்படுத்தி ‘முன்னோக்கி நகர்வோம்’ எனும் தொனிப்பொருளிலான வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்.கைலாசபிள்ளையார் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே மேற்படி வேலைத்திட்டம் வட.மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர்... Read more »

இன்று குமுதினிப்படுகொலை 33ஆவது வருட நினைவுநாள்

1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 33 வருடங்கள் ஆகும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள்... Read more »

இ.போ.ச. பஸ் கட்டணமும் அதிகரிக்கும் அபயாம் !

இலங்கை போக்குவரத்து சபையினரும் பஸ் கட்டணங்களை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளது. பஸ் கட்டணங்களை அதிகரிக்காவிடத்து போக்குவரத்து சபை மீண்டும் நட்டமீட்டும் நிறுவனமாக மாறும் ஆபத்துள்ளதாக அச் சபையின் பிரதானி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் இலங்கை போக்குவரத்து சபை 12 மில்லியன் ரூபா... Read more »

அரசாங்கம் ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதியை கடைப்பிடிக்கவில்லை: முதலமைச்சர்

சொந்த காணிகளில் மக்கள் குடியமர்த்தப்படுவார்கள் என அரசாங்கம் அன்று ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதியை முறையாக கடைப்பிடிக்கவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி காணி அதிகாரங்களும் முழுமையாக மத்திய அரசிடம் காணப்படுவதால் எம்மால் ஒரு காணிகளைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை... Read more »