வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் பிணையில் விடுதலை

முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று (10) மாலை அவர் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார். இதன்போது ஒரு இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் அவரை விடுதலை... Read more »

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் கடத்தல்!! – இளம் கணவன் மனைவி கைது!!

பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யும் நோக்குடன் கடல் வழியாகக் கடத்தப்பட்ட 21 மில்லியன் ரூபா பெறுமதியான 70 ஆயிரம் போதை மாத்திரைகளைப் பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றினர். இவற்றைக் கடத்திய குற்றச்சாட்டில் கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னாரிலிருந்து காரில் கொழும்பு செட்டித் தெரு... Read more »

விபத்துக்கள் அற்ற மாகாணத்தை உருவாக்கும் திட்டம் – பா.டெனீஸ்வரன் சூளுரை

எமது மாகாணத்தை வீதி விபத்துக்கள் அற்ற ஒரு மாகாணமாக மாற்றவேண்டும் என வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் எமது போக்குவரத்துச் சேவையினை பார்த்து ஏனைய மாகாணங்களும் பின்பற்ற வேண்டும் என்பது தனது இலட்சியங்களில் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார். தனது அமைச்சினூடாக... Read more »

வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளில் ஈடுபடத்தடை: ஆனந்தன் எம். பி எதிர்ப்பு!

தமிழரின் பூர்விக பிரதேசமான வெடுக்குநாரி மலையிலுள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பொதுமக்கள் சென்று பூசை வழிபாடுகளில் ஈடுபட தொல்பொருள் திணைக்களத்தால் விதிக்கப்பட்டுள்ள தடைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில்... Read more »

எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிப்பு!

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக நேற்று தொடக்கம் இரண்டு வகை எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் நிதி அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்தார். அதன்படி, ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றரின்... Read more »

தமிழக மீனவர்கள் 27 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 27 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவின் தென்கிழக்கு கடற்பகுதியில் வைத்து நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது இராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களே... Read more »

நாளையதினம் வடக்கில் வைத்திய சேவைகள் முடக்கம்?

யாழ். போதனா வைத்தியசாலை நீங்கலாக யாழ்.மாவட்ட சுகாதார சேவைகள் பிராந்தியத்திற்குட்பட்ட அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக வட மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெல்லிப்பளை வைத்தியசாலையின் புற்றுநோய்ப்பிரிவு சேவையாற்றி வருகின்றது. குறித்த வைத்தியசாலையில்... Read more »

கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி!

முத்தமிழ் பேரறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 129ஆவது அமர்வு இன்று காலை ஆரம்பமானது. இதில் அறிஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாணசபை இரங்கல் தெரிவித்து, 2 நிமிட மெளன அஞ்சலியினை செலுத்துமாறு அவைத் தலைவர்... Read more »

கடும் மழை பெய்வதற்கான சாத்தியம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேநேரம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது குறிப்பிட்ட மட்டத்துக்கு அதிகரிக்கும் சாத்தியம்... Read more »

முகமாலையில் வெடிப்புச் சம்பவம்! : மாணவனின் கை துண்டிப்பு!!!

முகமாலை தெற்கு கோவானம் காட்டுப்பகுதியில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததில் மாணவன் ஒருவன் கையை இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. காட்டுப்பகுதிக்குள் வேலி அமைப்பதற்காக கட்டை தறிக்கச் சென்ற எழுதுமட்டுவாளை சேர்ந்த ஜெயபாலன் நிதர்சன் 18 வயது மாணவனே இதன்போது படுகாயமடைந்துள்ளதாக... Read more »

வித்தியா படுகொலை வழக்கு: குற்றவாளிகளின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு குற்றவாளிகளினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பிலான மனு ஈவா வனசுந்தர, நலின் பெரேரா,... Read more »

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அழைப்பாணை!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்தமை தொடர்பான வழக்கு தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7... Read more »

தப்பிச்சென்ற நான்கு கைதிகளில் இருவர் கைது!

முல்லைத்தீவில் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, தப்பிச்சென்ற நான்கு கைதிகளில் இருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த நால்வர் நேற்று முன்தினம்(செவ்வாய்கிழமை) மாலை 3 மணியளவில் நீதிமன்ற மலசலகூடத்தை உடைத்து தப்பிச்சென்றிருந்தனர். இந்தநிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,... Read more »

யாழ் குருநகர் கொலை வழக்கில் இரண்டு இராணுவத்தினருக்கு நீதிபதி இளஞ்செழியன் மரண தண்டனை!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் விசாரணை என்ற பெயரில் ஒருவரை அழைத்துச்சென்று, கொலை செய்த குற்றத்திற்காக இரண்டு இராணுவத்தினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று(புதன்கிழமை) திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த இந்த தீர்ப்பு... Read more »

கலைஞர் மறைவுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் அஞ்சலி!!

தமிழகத்தின் முன்னாள் தலைவரும் தி.மு.க. தலைவருமான கலைஞர் மறைவுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அஞ்சலி செலுத்தினார். “தமது வாழ்வை தமிழர் வரலாற்றின் அத்தியங்களாக பதிவு செய்தவர் கலைஞர். இலங்கை தமிழர்களுக்காக எத்தனையோ போராட்டங்களை கலைஞர் நடத்தியுள்ளார்” என அவர் தனது இரங்கல் செய்தியில்... Read more »

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம்!!! : பிரதமர்

எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) பிரதமர் மீதான கேள்வி நேரத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.... Read more »

பொதுப் போக்குவரத்தில் இராணுவ பேருந்துகள்!

ரயில் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தின் பேருந்துகள் இன்று (வியாழக்கிழமை) சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, அவசர சேவையாக இச்சேவை இடம்பெறுமென அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ரயில்வே பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை... Read more »

குள்ள மனிதர்களின் கொட்டத்தை அடக்க இரவு நேர ரோந்து!

யாழ்ப்பாணத்தில் அண்மைய காலமாக அதிகரித்து வரும் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் வகையில், இளைஞர்கள் பத்து பேர் வீதம் உள்ளடக்கி அவர்களோடு மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் இணைத்து குழுக்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுக்கள் இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக யாழ்.பிராந்திய உதவி... Read more »

20,000 பட்டதாரிகளுக்கு 2018இற்குள் அரச நியமனம்!!

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்குள் 20 ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை 2018ஆம் ஆண்டுக்குள் முன்னெடுக்க தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி முதல் மே மாதம் 5ஆம் திகதி வரை 25 மாவட்டங்களை... Read more »

கேக் விற்பனை நிலையத்தில் 3 கிலோ கிராம் மாவா போதைப்பொருள் மீட்பு!!

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிய கேக் விற்பனை நிலையம் நேற்று (7) செவ்வாய்க்கிழமை முற்றுகையிடப்பட்டது. அங்கு முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் 3 கிலோ கிராம் மாவா போதைப்பொருள் மீட்கப்பட்டது. அதனை விற்பனைக்காக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்” இவ்வாறு யாழ்ப்பாணம் பொலிஸார்... Read more »