Ad Widget

அரச ஊழியர்களுக்கு தைப் பொங்கலின் பின்னர் பல சலுகைகள்!! யாழில் ஜனாதிபதி

இவ்வருடம் தைப் பொங்கலின் பின்னர் அரச ஊழியர்களுக்கு நிவாரணங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அனைத்து மக்களும் பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கியுள்ளமை தாம் நன்கு அறிவதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய...

யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரின் அநாகரிகமான செயல்

யாழ்.போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலைக்கு வருகை தந்த பார்வையாளர்களுடன் அநாகரிகமான முறையில் நடந்துள்ளதுடன் ஒருவரை தாக்கவும் முயன்றுள்ளார். குறித்த சம்பவம் நேற்று(03.01.2023) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், தனது தாயாரை கண் சத்திர சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் பாதிப்புக்குள்ளான பெண் அனுமதித்திருந்தார். இதன்போது அவர் எடுத்துவந்த உணவை தாயாருக்கு வழங்கியுள்ளார்....
Ad Widget

வட்டுக்கோட்டை இளைஞன் விவகாரம் : “மனித ஆட்கொலை” யாழ்.நீதவான் நீதிமன்றம்!!

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரணம் “மனித ஆட்கொலை” என யாழ்.நீதவான் நீதிமன்றம் நேற்று கட்டளை வழங்கியுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த நவம்பர் மாதம் 19 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான்...

கொரோனா கால நடைமுறைகளை பின்பற்றுங்கள்!! – சுகாதார அமைச்சு

இந்தியாவில் பதிவாகியுள்ள JN 1 புதிய கொவிட் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்து அதானத்துடன் இருப்பதாகவும், இதுவரை நடத்தப்பட்ட மாதிரிப் பரிசோதனைகளில் இலங்கையில் எந்த ஒரு நோயாளியும் பதிவாகவில்லை என்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார். இருப்பினும், கடந்த கொவிட் பரவலின் போது பின்பற்றிய முறையான சுகாதார நடைமுறைகளைப் மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களை...

உயர்தர பரீட்சை அட்டவணையில் சிறிய மாற்றம்!

உயர்தர அட்டவணையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர பரீட்சார்த்திகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், "இந்த முறை ஒரு புதிய பாடம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. அது கொரிய மொழி. அந்த பாடத்தை சேர்க்க, அட்டவணையில் சிறிய மாற்றங்களைச்...

உடுப்பிட்டியில் கடையடைப்பு!! – கண்டன போராட்டம்!!

மக்களின் எதிர்ப்பை மீறி மீளத் திறக்கப்பட்ட மதுபானசாலையை அகற்றுமாறு வலியுறுத்தி இன்று புதன்கிழமை உடுப்பிட்டியில் கடையடைப்பும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இமையாணன் மேற்கு விநாயகர் சனசமூக நிலையத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஒன்றுகூடிய உடுப்பிட்டியை சேர்ந்த 21 சமூகமட்ட அமைப்புகள் இந்தப் போராட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளன. இந்தத் தீர்மானத்துக்கு உடுப்பிட்டியில் இயங்கும் வர்த்தக நிலையங்கள்,...

ஜனாதிபதியின் யாழ். விஜயம்: எட்டு பேருக்கு எதிராக தடையுத்தரவு கோரியுள்ள பொலிஸார்

யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதி எட்டு பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கானது யாழ்ப்பாணம் பொலிஸாரினால் நேற்று (02) குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு கலந்துரையாடல்களில்...

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அவசியமாகும் (TIN) பதிவு இலக்கம்!!

2024 ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதிவு இலக்கமான TIN இலக்கத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் வரி செலுத்துவோருக்கான பதிவு இலக்கத்தை (TIN) பெறாத நபர்களுக்கு 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும்...

யாழில் டெங்குவை ஒழிக்க களமிறங்கும் இராணுவத்தினர்!

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர். யாழ் நகரம், நல்லூர், கோப்பாய் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளிவேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த பகுதிகளில் டெங்கு நோய்ப் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நேற்றைய தினம் வடமாகாண பிரதம செயலாளர் தலைமையில் கூட்டமொன்று நடைபெற்றது....

பொழுதுபோக்கு மையமாக மாற்றப்பட்ட யாழ். சங்கிலியன் பூங்கா!!

யாழ்ப்பாணம் முத்திரை சந்தியில் உள்ள சங்கிலியன் பூங்கா யாழ். மாநகர சபையினால் பொழுதுபோக்கு மையமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்குறிய இடமாக நேற்று (01.01.2024) திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேற்படி பூங்காவின் நீண்ட கால அபிவிருத்தி பணிகளில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக தற்காலிக பொழுது போக்கு மையமாக பயன்படுத்த கூடியவாறு மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் படிப்படியாக...

களஞ்சியசாலையொன்றில் திடீர் தீ விபத்து: இரு சகோதரர்கள் பலி

பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பருத்தித்துறை, முனைப்பகுதியில் அமைந்துள்ள கடற்றொழில் உபகரண களஞ்சியசாலை ஒன்றிலேயே இன்று(02.01.2024) அதிகாலை இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம் என்ற 46 வயதான ஒருவரும் வேலாயுதம் ரவி என்கிற 38 வயதானவருமே விபத்தில்...

ஜனாதிபதி வட மாகாணத்துக்கு விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் நாட்களில் வட மாகாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்படி, எதிர்வரும் 4, 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த விஜயத்தின் போது மாவட்டங்களில் நடைபெறும் அபிவிருத்தி குழுக்கூட்டங்களிலும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வற் வரி இன்றுமுதல் அமுல் : விலை அதிகரிக்கப்பட்டுள்ள பொருட்களின் விபரங்கள்!

வற் வரியை அதிகரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் கடந்த மாதம் 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் குறித்த வரி திருத்தம் இன்று முதல் அமுலாகின்றது. அதன்படி, இதுவரை 15% ஆக இருந்த வற் வரி இன்று முதல் 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அத்தோடு இதுவரை வரி விதிக்கப்படாத 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் வற் வரி...

யாழில் உணவகம் ஒன்றில் காத்திருந்த அதிர்ச்சி!!

யாழ்ப்பாணம் ஐந்துசந்திப் பகுதியிலுள்ள உணவகமொன்றில் உணவருந்த சென்றவர்கள் உணவுக்குள் பிளாஸ்டிக் கட்டையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்றமுன்தினம் (30) இரவு உணவருந்த சென்றவர்களுக்கே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் உணவக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோதும் பொறுப்பான பதில் எதுவும் வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். குறித்த உணவகத்தின் செயலை விமர்சித்து சமூக...

ஆண்டின் முதல் நாளிலேயே எரிபொருள் விலை அதிகரிப்பு!!

இன்று அதிகாலை 5 மணி (01.01.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. அதன்படி, 346 ரூபாவாக காணப்பட்ட ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் ரக...

புரட்சிக் கலைஞர் விஜயகாந்துக்கு யாழில் கண்ணீர் அஞ்சலி!

தேமுதிக தலைவரும், நடிகருமான ‘புரட்சி கலைஞர்’ விஜயகாந்த்‘ கொரோனாத் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில்நேற்றைய தினம் (28) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணமானது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் பிரபலங்களும், திரைப்பிரபலங்களும் தமது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினருக்குத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியிலும்...

யாழில் பரவும் டெங்கு நுளம்புகள் வீரியம் மிக்கவை!

“யாழில் தற்போது பரவி வரும் டெங்கு நுளம்புகள் வீரியம் மிக்கவை” என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் டெங்கு தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” தற்போது பரவிவரும் டெங்கு...

கில்மிஷாவை வரவேற்ற யாழ். மக்கள்!

அரியாலை பகுதியில் கில்மிஷாவை வரவேற்பதற்காக பெருமளவான மக்கள் வீதிகளில் திரண்டு ஆதரவு தெரிவித்தனர். தமிழ் கலாசார பாராம்பரிய நடனங்கள் ஆடப்பட்டு, முத்து சப்பரத்தில் கில்மிஷாவை ஏற்றி ஊர் மக்கள் தூக்கி சென்றனர். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திறந்த காரில் புறப்பட்ட கில்மிஷாவுக்கு வீதியெங்கும் மக்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர். இந்திய தொலைக்காட்சி ஜீ...

புலி சீருடை விவகாரம் தொடர்பில் பிணை கிடைத்தமைக்கு நன்றி கூறுங்கள் : டக்ளஸ்

புலி சீருடை விவகாரத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்ட இளைஞனுக்கு பிணை கிடைத்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி கூறுங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த இளைஞனின் பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (29.12.2023) இடம்பெற்ற அபிவிருத்தி கலந்துரையாடலின் பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட இளைஞன்...

யாழில் கரை ஒதுங்கிய மர்ம கப்பல்!

வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் நேற்று (27) புதன்கிழமை கப்பல் போன்ற அலங்கரிக்கப்பட்ட உருவத்துடன் இரதம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது வெளிநாட்டில் சமய சம்பிரதாய நிகழ்வுகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைப்படும் இரதம் என கூறப்படுகிறது. இருப்பினும் இது எவ்வாறு வந்தது, இது உண்மையிலேயே என்ன என்ற விடயங்கள் இதுவரை வெளியாகவில்லை.
Loading posts...

All posts loaded

No more posts