Ad Widget

முன்னாள் போராளிகளின் விபரங்கள் திரட்டப்படுகின்றன

வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால், யுத்தத்தின் போது உயிரிழந்த போராளிகளின் குடும்ப விபரங்கள், தடுப்புக் காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு குடும்பங்களுடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் விபரங்கள் என்பன தற்போது திரட்டப்பட்டுகின்றன. இதற்கான படிவங்களை ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலுமுள்ள கிராம அபிவிருத்தி அலுவலர்களிடம் பெற்றுக் கொள்ள முடியும்....

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

இந்து பௌத்த கலாசார பேரவையின் இரண்டாம் மொழி கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, சனிக்கிழமை (14) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் 580 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 2010ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்து பௌத்த கலாசார பேரவையில் இதுவரை 6,000 பேர் கற்கை நெறியை பூர்த்தி செய்துள்ளனர்....
Ad Widget

பஷிலிடம் விசாரிக்க இன்டர்போல் உதவி

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நாட்டைவிட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர்களில் ஒருவரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்துவதற்கு சர்வதேச பொலிஸாரின் (இன்டர்போல்) உதவியை அரசாங்கம் நாடியுள்ளது. அமெரிக்க பிரஜையான பஷில் ராஜபக்ஷ, கடந்த 11ஆம் திகதி தன்னுடைய மனைவியான புஸ்பா ராஜபக்ஷவுடன் நாட்டைவிட்டு வெளியேறினார். அவர், அமெரிக்க...

இருவேறு விபத்துக்களில் ஒருவர் பலி இருவர் காயம்

ஓட்டோவும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்தனர். இவர்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை பகல் காங்கேசன்துறை வீதி, சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றது. எதிரே வந்த ஓட்டோவை கருத்தில் கொள்ளாது மோட்டார் சைக்கிளைத் திருப்ப முற்பட்டவேளை இந்த விபத்து இடம்பெற்றது என்று தெரிவிக்கப்பட்டது. விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார்...

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் தொழிற்சாலை அமைக்க 12 நிறுவனங்கள் கோரிக்கை

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் 3 தொழிற்சாலைகள் தற்போது இயங்கி வருவதாக யாழ். மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பிரதிப்பணிப்பாளர் எஸ்.சிவகங்காதரன் வெள்ளிக்கிழமை(13) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தரையில் பதிக்கும் சீமெந்து கல் தயாரிக்கும் தொழிற்சாலை, ஆணி, பிணைச்சல் உள்ளிட்ட மென் இயந்திரவியல் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, பிளாஸ்டிக் குழாய் தயாரிக்கும் தொழிற்சாலை...

முல்லைத்தீவு இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச்சேர்ந்த 22 வயதான இளைஞனை குற்றப்புலனாய்வு பிரிவினர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர் போலி விசாவை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து டுபாய் ஊடாக இத்தாலிக்கு செல்வதற்கு முயன்றபோதே டுபாயில் வைத்து அந்த இளைஞன் கைதுசெய்யப்பட்டள்ளார். அவ்விளைஞனை டுபாயிலிருந்து நாடு கடத்தியபோதே குற்றப்புலனாய்வு பிரிவினர்...

வலி.வடக்கு காணி விடுவிப்பு; திட்டத்தில் மாற்றம்

வளலாயில் மாதிரிக் கிராமம் அமைக்கப்பட்டு அதில் மீள்குடியேற்றத்தினை மேற்கொள்ளும் அரசின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு உருவாகியதை அடுத்து குறித்த திட்டம் மீளாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். வலி.வடக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் காணிகளில் 1000 ஏக்கர் விடுவிப்பதற்கு புதிய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் வளலாயில் மாதிரிக்கிராமம் ஒன்றும் அமைக்கப்பட்டு மக்களை...

மஹிந்தவின் போர் வெற்றி இனி இராணுவத்துககான பாராட்டு விழா!

தமிழீழ விடுதலைப்டிபுலிகளுக்கு எதிரான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட மே 18 ஆம் திகதியில் நிகழ்வுகளை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான புதிய கூட்டணியரசு தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் மஹிந்த ஆட்சியில் பெரும் எடுப்பில் கொண்டாடப்பட்ட 'போர் வெற்றி விழா'வானது பெயர் மாற்றத்துடன் 'இராணுவ பாராட்டு விழா'வாக புதிய...

ஆசிரியரை தாக்கிய யாழ் இந்து கல்லூரி மாணவர்களுக்கு விளக்கமறியல்

ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் இருவரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் வியாழக்கிழமை (12) உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் இந்து கல்லூரி ஆசிரியரை கடந்த 9ஆம் திகதி தாக்கிய அதே பாடசாலையை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவரையும் யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினார்கள். இது தொடர்பான...

ரவிகரனை ரி.ஐ.டி விசாரணைக்கு அழைப்பு

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை விசாரணைக்கு வருமாறு கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர். முல்லைத்தீவு பொலிசார் ஊடாக இந்த அழைப்பாணையை கடந்த புதன்கிழமை பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் விடுத்துள்ளனர் என மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார். அந்த அழைப்பாணையில் எதிர்வரும் 18 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாத...

கோட்டாபய ராஜபக்ஷவிடம் சிஐடி விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு பொலிஸாரால் (சிஐடி) விசாரிக்கப்பட்டுள்ளார். யுத்த காலத்தில் சட்டவிரோதமாக ஆயுதக் கிடங்குகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழேயே அவர் விசாரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காலி துறைமுகத்தில் தடுத்து சோதனையிடப்பட்ட மிதக்கும் ஆயுதக்கிடங்கு மற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இருந்த...

‘நம்பகமான விசாரணை வேண்டும்’: போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள்

இலங்கையில் கடந்த காலங்களில் நடந்துள்ள வன்முறைகளுக்கு நிவாரணம் அளிப்பதற்கும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை புரிந்தவர்களுக்கு எதிராக சுதந்திரமானதும் நம்பகத்தன்மை உள்ளதுமான விசாரணைகளை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போரினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் அமைப்புகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களும் 20 பொது அமைப்புக்களும் இணைந்து கையெழுத்திட்டு...

வடமாகாணத்தினை அடுக்கடுக்கடுக்கான தீர்மானத்தினால் நிரப்புவதை விடுத்து ஆளுக்கொரு பிரதேசங்களை தத்தெடுங்கள்! -சிறிரெலோ

முப்பது வருட ஆயுத போராட்டத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட வடக்கின் அபிவிருத்திக்கும் தமிழர்களின் ஆளுமைக்கும் கிடைத்த நிர்வாக மையத்தை சிலர் தங்களின் சொந்த இலாபங்களுக்கும் அடைய முடியாத அரசியல் அபிலாசைகளுக்குமாக உருட்டி விளையாடுவது கவலையளிக்கிறது என சிறிரெலோகட்சியின் செயலாளர் ப.உதயராசா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடமாகாணத்தின் மகத்துவத்தையும் மக்களின் சனநாயகத்தையும் மதிக்கும்...

நொதேர்ன் பவர் நிறுவனத்துக்கு மேல்நீதிமன்றும் தடை உத்தரவு!

மல்லாகம் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை ஆட்சேபித்து நொதேர்ன் பவர் நிறுவனத்தினரால் யாழ்.மேல் நீதிமன்றில் செய்யப்பட்ட முறையீட்டை விசாரித்த நீதிமன்று அந்த தடையை தொடர்ந்து அமுல்படுத்த உத்தரவிட்டது. சுன்னாகம், தெல்லிப்பழை பகுதிகளில் கிணறுகளில் கழிவு ஒயில் கலந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களால் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் நொதேர்ன் பவர் நிறுவனத்தை தற்காலிகமாக மூட மல்லாகம் நீதிமன்று...

காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட்டார் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க!

யாழ்ப்பாணம் வந்துள்ள கப்பல் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க, இன்று வெள்ளிக்கிழமை மதியம் காங்கேசன்துறை துறைமுகத்தை நேரில் பார்வையிட்டார். இவருடன் கப்பல் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர். துறைமுகத்தை நேரில் அவதானித்த இந்தக் குழுவினர் அதன் அபிவிருத்தி சம்பந்தமாகவும் கலந்துரையாடினர். காங்கேசன்துறை துறைமுகத்தை...

இலங்கை குறித்த விசாரணையில் மாற்றமில்லை!

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளில் மாற்றம் இல்லை என்பதே, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிலைப்பாடு என, அவரது பேச்சாளர், ஸ்டீவன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கைக்குள்...

கையெழுத்து போராட்டம்

முன்னிலை சோஷலிச கட்சியின் ஏற்பாட்டில் 3 கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து போராட்டமொன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (13) முன்னெடுக்கப்படுகின்றது. 'குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமையை பறிக்காதே!', 'காணாமற்போனோர், கடத்தப்பட்டோரின் விபரங்களை வெளிப்படுத்து!' மற்றும் 'அரசியல் கைதிகளை விடுதலை செய்!' ஆகிய 3 கோரிக்கைகளை முன்வைத்து இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. நாடளவிய...

போலி ஆவணங்களுடன் காணிகள் வழங்கிய டக்ளஸ், விமல் – விஜயகலா

யாழ்ப்பாணம், நாவற்குழியில் வழங்கப்பட்ட காணிகள், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரினால் சட்டவிரோதமான முறையில் வழங்கப்பட்டுள்ளன என்று மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் குற்றஞ்சாட்டினார். நாவற்குழி மேற்கு புதிய குடியிருப்பு மக்களை வியாழக்கிழமை (12) சந்தித்து கலந்துரையாடினார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு...

உள்ளக விசாரணையே அரசாங்கத்தின் நோக்கம்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றம் சம்பந்தமாக சர்வதேச விசாரணை மேற்கொள்வதை எமது அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. உள்ளக விசாரணையை செய்வதையே எதிர்பார்க்கிறது என பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (12) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை தெரிவுக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...

இன்று உலக வானொலி தினம்!

உலகளாவிய ரீதியில் உலக வானொலி தினம் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி அனைத்து உலக மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அனைத்து உலகத்திலும் அனைத்து வகுப்பு ரீதியான மக்களும் அதிகமாக விரும்பிக் கேட்பது வானொலி ஆகும். உலக வானொலி நாள் என்பது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்கவே 2010...
Loading posts...

All posts loaded

No more posts