Ad Widget

வாள்வெட்டில் குடும்பஸ்தர் மரணம்; சந்தேக நபர் பொலிஸில் சரண்

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (22) மாலை இடம்பெற்ற வாள்வெட்டில் அல்லைப்பிட்டி ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த பொன்னையா சிவலிங்கம் (வயது 55) என்பவர் உயிரிழந்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, வாள்வெட்டை மேற்கொண்ட சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். வாள்வெட்டை மேற்கொண்ட சந்தேக நபரின் வீட்டில் இருவரும் மதுபானம் அருந்திக்கொண்டிருந்தனர். இதன்போது, இருவருக்கும்...

மகிந்தவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க ஆலோசனை – இ.போ.ச

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையொன்றை மேற்கொள்வதற்கு இலங்கை போக்குவரத்து சபை ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை அவரது தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தினார். இலங்கை போக்குவரத்து சபைக்கு 140 மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் இதனையடுத்தே முன்னாள் ஜனாதிபதிக்கு...
Ad Widget

போரின்போது விஸ்வமடு அருகே 30,000 சடலங்கள் – மன்னார் ஆயர்

இலங்கையின் உள்நாட்டுப்போரின் இறுதியில், நாட்டின் வடக்கே விஸ்வமடு அருகில் 30,000 முதல் 35,000த்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக அந்த சடலங்களுக்கு பிரேதபரிசோதனை செய்யச் சென்ற அதிகாரிகள் மூலம் அறிந்ததாக மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்திருக்கிறார். இரண்டு கிழமைகளுக்கு முன்னரே தமக்கு இந்த தகவல் தெரியவந்ததாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த ராயப்பு ஜோசப், இலங்கை போரின்...

‘இனச்சுத்திகரிப்பு’: தீர்மானம் கோரும் வடக்கு முஸ்லிம் அமைப்பு

இலங்கையில் வடக்கிலிருந்து 1990-ம் ஆண்டில் முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட சம்பவம் இனச்சுத்திகரிப்பு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு கோரியுள்ளது. இலங்கையில் இடம்பெற்றது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையே என்று சர்வதேசத்தின் ஆதரவுடன் போர்க்குற்ற விசாரணைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிவருகின்ற பின்னணியிலேயே இந்தக் கோரிக்கை வெளியாகியுள்ளது....

யாழ். பல்கலை மாணவன் விபத்தில் பலி ; மூவர் காயம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று காலை 10.30 மணியளவில் நாச்சிக்குடாவில் இடம்பெற்றது. காயமடைந்த மூவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது யாழ்....

கைகள் கட்டப்பட்ட நிலையில் தீவகத்தில் யுவதியின் சடலம் மீட்பு

ஊர்காவற்றுறை நாரந்தனைப் வடக்குப் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலம் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் விபூசனா (வயது 19) யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் கல்வி கற்று வருகின்றார். நேற்று முற்பகல் 11மணியளவில் கல்வி நிலையத்திற்குச் செல்வதாக கூறி வீட்டில்...

பல்கலையின் பேரணிக்கு முழு ஆதரவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஏற்கனவே திட்டமிட்டபடி ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசாரணை அறிக்கையை மார்ச் மாதம் வெளியிட வேண்டும் எனக்கோரி யாழ்.பல்கலைக் கழகச் சமூகம் நடத்தும் பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவு வழங்கவுள்ளது என்று கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை. சேனாதிராசா அறிவித்துள்ளார். இந்தப் பேரணியில் அனைவரையும் அணி திரண்டு ஐ.நா. அறிக்கை மார்ச்சில் சமர்ப்பிக்கப்பட...

நீதி கேட்டு அணி திரள்க – மாணவர் ஒன்றியம்

ஐ.நா விசாரணை அறிக்கையை விரைவாக வெளியிடுமாறு வலியுறுத்தி நாளைமறுதினம் இடம்பெறும் பேரணியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பில் மாணவர் ஒன்றியம் விடுத்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இறுதிப் போரிலே எம் இனத்தின் மீது இலங்கை அரசு அதன் இராணுவ இயந்திரத்தைக் கொண்டு ஈவிரக்கமின்றி நிகழ்த்தப்பட்ட மனிதப் பேரவலங்களுக்கு ஆறு...

காணாமல் போனோரை கண்டு பிடிக்கக் கோரி உறவினர்கள் கண்ணீருடன் யாழ் நகரில் ஆர்ப்பாட்டம்

காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழு விசாரணைகள் குறித்த இடைக்கால அறிக்கை ஒன்றினை மிகவிரைவில் வெளியிட வேண்டும் - TNA காணாமற் போனவர்களை மீட்டுத் தரக்கோரி நேற்று காலை 10 மணிமுதல் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய உறவுகள் காணாமற்போக தமிழர் ஜடப்பொருளா? உலகே உனக்கு...

 த.தே.கூட்டமைப்பை நேசம் கரம் நீட்டி வரவேற்கின்றோம் – பசுபதி சீவரத்தினம்

எமது மக்களுக்காக அரசியல் துணிச்சலோடு எமது இணக்க அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தோம். நாம் நீண்ட காலமாகவே வலியுறுத்தி வந்த எமது அரசியல் வழிமுறை நோக்கி காலம் கடந்தாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் வந்திருப்பதை நாம் நேசம் கரம் நீட்டி வரவேற்கின்றோம் என ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார். அவர்...

செயற்றிட்டங்களுக்கான விண்ணப்பங்கள் வடமாகாண சபை உறுப்பினர்கள் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

செயற்றிட்டங்களுக்கு வடமாகாண சபையிடம் நிதியுதவி கோருவோர் வடமாகாண சபை உறுப்பினர்களை தொடர்பு கொண்டு தமது கோரிக்கைகளை அவர்கள் ஊடாக சமர்ப்பிக்குமாறு வடமாகாண சபை உதவிச் செயலாளர் பா.ஜெயகரன் சனிக்கிழமை (21) அறிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், செயற்றிட்டங்களுக்கு வடமாகாண சபையிடம் நிதியுதவி கோரும் விண்ணப்பங்கள் பல பேரவைச் செயலகத்துக்கும் அவைத்தலைவருக்கும் அனுப்பப்படுகின்றன. எனினும் பிரமாண அடிப்படையிலான...

காணாமல் போனவர்களைக் கண்டறியும் ஆணைக்குழு இடைக்கால அறிக்கையை வெளியிட வேண்டும் – த.தே.கூ

காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழு மேலும் 6 மாதங்களுக்கு கால நீடிப்புச் செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த விசாரணைகள் குறித்த இடைக்கால அறிக்கை ஒன்றினை மிகவிரைவில் வெளியிட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பில் பதிலளிக்க வேண்டும் என்றும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் இராணுவம் வெளியேற வேண்டும்,...

விபூசிகா ஜனாதிபதிக்கு கடிதம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது தாயான ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு அவரின் மகள் விபூசிகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் எழுதியுள்ளார். தற்போது மகாதேவா ஆச்சிரமத்தில் பராமரிக்கப்பட்டுவரும் சிறுமி விபூசிக்கா, தனது தாய் கைது செய்யப்பட்டமைக்கான விபரம் முழுவதையும் அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.

இலங்கை பற்றிய பிரதிபலிப்புக்களை மேம்படுத்த வழங்கப்பட்ட பணம் நிறுத்தம்

இலங்கை பற்றிய பிரதிபலிப்புக்களை மேம்படுத்தும் நோக்கில் கடந்த அரசாங்கத்தால் அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட பணத்தை நிறுத்த தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் வௌிநாட்டு ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தால், குறிப்பாக கடந்த ஆட்சிக்காலத்தின் கடைசி சில மாதங்களில் பெருந்தொகை பணம் இவ்வாறு செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது....

சுமந்திரனின் கொடும்பாவி எரிப்பு

காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படுத்தக் கோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை குறித்த போர்க்குற்ற விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கக் கோரியும் யாழ். நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. தொடர்ந்து பேரணியாகச் சென்றவர்கள் ஆஸ்பத்திரி வீதியூடாக காங்கேசன்துறை...

தவறு செய்தவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் – டக்ளஸ்

தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது பாரபட்சமின்றி விசாரணைகள் நடாத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். ஐ.நாவில் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை பின்போடுவது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....

பாலச்சந்திரனின் மரணம்: தமக்கு எதுவும் தெரியாதாம்! புலிகளே கொன்றிருக்கலாமாம்!! – பொன்சேகா

சர்வதேச ரீதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பில் தமக்கு எதுவுமே தெரியாது என்றும் புலிகளே அவரைக் கொன்றிருக்கலாம் என மறைமுகமாகவும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பிரபாகரனின் இளைய மகன் தொடர்பில், இராணுவத் தளபதி என்ற வகையில் தனக்கு எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை என்றும்...

 விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டமை கவலையளிக்கிறது

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கையை வெளியிடும் திகதி ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள தீர்மானம் எம்மை ஆழ்ந்த கவலைக்கு உட்படுத்தியுள்ளது என தமிழ் சிவில் சமூகம் வெள்ளிக்கிழமை (20) ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையயில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இத்தீர்மானம்,...

சமூக சுகாதாரத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் பணியாற்றும் சமூக சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி வெள்ளிக்கிழமை (20) ஆளுநர் செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த தொண்டர்கள் கடந்த 4 தினங்களாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வரும் நிலையில் வெள்ளிக்கிழமை (20) ஆளுநர் செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஆளுநருக்கு...

சர்வதேச கவனத்தை ஈர்க்கும் அமைதிப்பேரணியில் கலந்து கொள்ள அழைப்பு

சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைதியான முறையில் பேரணியில் ஒன்று திரளுமாறு இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியின் யாழ். மாவட்ட தலைவரும் வடமாகாணசபை உறுப்பினருமான சந்திரலிங்கம் சுகிர்தன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் வெள்ளிக்கிழமை (20) ஊடகங்களுக்கு அவர் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அவருடைய அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) காலை...
Loading posts...

All posts loaded

No more posts