ஆதன விவரம் திரட்டுகிறது வேலணைப் பிரதேச சபை

முப்பத்தைந்து வருடங்களின் பின்னர் வேலணை பிரதேசசபை வட்டார ரீதியாக ஆதனங்கள் தொடர்பான விவரங்களைத் திரட்டி வருகின்றது.வேலணை 4, 5, 6ஆம் வட்டாரங்களைச் சேர்ந்த மக்கள் தமது ஆதனங்களின் விவரங்களான உறுதி, காணி வரைபடம், குடும்ப அட்டை மற்றும் இவற்றின் பிரதிகளை வேலணை பிரதேசசபைத் தலைமை... Read more »

அமைச்சர் எஸ்.பி. திசநாயக்க யாழ் பல்கலைக்கழகத்திற்கு விஜயம்

நேற்று யாழ் பல்கலைக்கழகத்திற்க்கு விஜயம் செய்த உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசநாயக்க அவர்கள், யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடம் அவர்களது குறைகள் பற்றி கேட்டறிந்ததோடு பல்கலைக்கழக நிர்வாகத்தினரிடமும் எதிர்காலத்தில் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் பற்றியும் ஆலோசனை செய்தார். மேலும் யாழ் பல்கலைக்கழகத்தினை உலகில்... Read more »

ஒட்டகப்புலம் காணி தனியாருடையது; – யாழ். அரச அதிபர்

ஒட்டகப்புலம் பிரதேசத்தில் பாதுகாப்பு அமைச்சு கையகப்படுத்தியுள்ள காணி தனியாருக்குச் சொந்தமானது என்பதைத் தெளிவுபடுத்திப் பாதுகாப்பு அமைச்சுக்கு பதில் அனுப்பப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: Read more »

இரண்டு இணையத்தளங்களுக்கு எதிராக அரசாங்க அதிபர் நீதிமன்றில் வழக்கு

இரண்டு இணையத்தளங்களுக்கு எதிராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் சார்பில் யாழ்.பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.நேற்று(09.01.2012) திங்கட்கிழமை இந்த வழக்கு யாழ்.நீதிமன்ற நீதவான் மா.கணேசராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, அரச அதிபர்மீது குறித்த இணையத்தளங்கள் எவ்வகையான அவதூறுகளை மேற்கொண்டுள்ளன என்பன... Read more »

யாழில் வேகமாகப் பரவும் ‘தைபஸ்’ உண்ணிக் காய்ச்சல்

யாழ். குடாநாட்டில் ‘தைபஸ்’ என்னும் உண்ணிக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு அறிவித்துள்ளது.கடந்த டிசெம்பர் மாதத்தில் மாத்திரம் 57 பேருக்கு இந்த நோய்த்தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், 101 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் கிடைத்திருப்பதாகவும்... Read more »

யாழில் முச்சக்கரவண்டிகளை பதிவுசெய்ய ஏற்பாடு

யாழ். மாவட்டத்தில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் அனைத்து முச்சக்கரவண்டிகளும் உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டுமென யாழ். பொலிஸ் நிலையம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் குற்றச்செயல்களின் மத்தியில் முச்சக்கரவண்டிகள் சில இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் குடாநாட்டில் சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து முச்சக்கரவண்டிகளையும் பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்... Read more »

யாழ் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டோரில் 28,000 பேர் மீண்டும் இணைப்பு

யாழ். மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தோரில் 28,000 பேரை மீண்டும் அப்பட்டியலில் இணைத்துக்கொள்வதற்கு தேர்தல் அதிகாரிகள் தீர்மானித்தள்ளனர்.யாழ் மாவட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து 41,000 பேரை நீக்குவதற்கு ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் எனினும் மக்களின் முறைப்பாட்டையடுத்து 28,000 பேரை மீண்டும் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாகவும் யாழ்... Read more »

ஊடகங்கள் மக்களுக்கு உணர்ச்சியினைத் தூண்டி படுகுழிக்குள் தள்ளிவிட முயற்சிக்கின்றன: அமைச்சர் டக்ளஸ்

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின், தமிழ் மக்களை மீண்டும் பாதுகாப்பற்ற அச்ச உணர்வை தோற்றுவித்து வாழ்வை வெறுமையாகவும், வேதனையோடும் சிந்திக்கின்ற ஒரு நிலைமையை ஊடகங்கள் ஏற்படுத்த முனைவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, Read more »

புலம்பெயர் தமிழர்களை மீண்டும் தாய் நாட்டுக்கு அனுப்புவதை பிரித்தானியா மீள் பரிசீலனை செய்யவேண்டும்: யாழ்.ஆயர்

‘புலம்பெயர்ந்த தமிழர்களை திருப்பி அனுப்புவதை பிரித்தானியா மீள் பரிசீலனை செய்யவேண்டும்’ என யாழ். ஆயர் அதிவணக்கத்துக்குரிய தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.யாழ்.ஆயர் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை காலை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோட்டன் தலைமையிலான குழுவினர்... Read more »

பிரதேச செயலர்களின் 6 பேரின் இடமாற்றம் இன்று முதல்

யாழ். மாவட்டத்தின் 6 பிரதேச செயலர்களது இடமாற்றத்தை உடனடியாக இன்று முதல் அமுல்படுத்த வேண்டும் என்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நேற்று மாலை அறிவித்துள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் யாழ். மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலர்கள் இடமாற்றம்... Read more »

இலவச உதவிகள் எவற்றையும் பாடசாலைகள் பெறத் தடை!; ஆளுநர் கடும் உத்தரவு

பாடசாலைகளிலுள்ள பதிவு செய்யப்படாத அபிவிருத்திச் சங்கங்கள் யாவும் உடனடியாகப் பதிவு செய்யப்பட வேண்டும். பாடசாலைகளுக்கு கிடைக்கும் இலவச உதவிகள், அன்பளிப்புகள் எதுவாக இருந்தாலும் அதிகாரிகளின் அனுமதியின்றி அதிபர்கள் எவரும் அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது.இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி... Read more »

முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் ஜனவரி 20 ஆம் திகதி இலங்கை வருகிறார்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை வரவுள்ளார்.தேசிய மும்மொழி கொள்கை அங்குரார்ப்பண நிகழ்வில் இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்துகொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், அவர் எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம்  திகதி... Read more »

யாழில் வீதி அகலிப்பு பணிகளுக்காக மின்விநியோகம் தடைப்படும்

யாழில் வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியிருப்பதால் சில பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ்.பிராந்திய நிலையம் அறிவித்துள்ளதுஇதனடிப்படையில், 2,4,6,8 ஆகிய தினங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை புன்னாலைக்கட்டுவன், அச்சசெழு, புத்தூர்,... Read more »

காணாமற் போனோர் விவரங்களை பதிவுசெய்யக் கோருகிறது கூட்டமைப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டோர் மற்றும் காணாமற் போனோரின் பெயர் விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளது.கொக்குவிலிலுள்ள தனது இல்லத்தில் இதற்கான பதிவினை மேற்கொள்ளுமாறு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை... Read more »

குளிரான காலநிலை நீடிக்கும்

‘குளிர்கால பருவக்காற்று’ என அறியப்படும் வடகிழக்கு பருவக்காற்று காரணமாக பல பகுதிகளில் வெப்பநிலை குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பிலும் அநுராதபுரத்திலும் வெப்பநிலை 18 பாகையாகவும் யாழ்ப்பாணத்தில் 19 பாகையாகவும்  நுவரெலியாவில் 7.7 பாகையாகவும்  குறைவடைந்துள்ளதாகவும் வளிமண்டவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜி.பி.சமரசிங்க தெரிவித்துள்ளார்.  Read more »

பெற்றோல் தாங்கி வெடித்ததில் இரண்டு மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம்

பருத்தித்துறை வீதி கல்வியங்காட்டில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு எரிபொருள் நிரப்பப் பட்டுக்கொண்டிருந்தது.அதே சமயம் எரிபொருள் நிரப்புவதற்காக மற்றொரு மோட்டார் சைக்கிள் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் பெற்றோல் தாங்கி வெடித்துச் சிதறியது. இதில் குறித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் எரிந்து... Read more »

வடமாகாண தேசியப் பாடசாலைகளிலுள்ள மேலதிக ஆசிரியர்களுக்கு இடமாற்றம்; வடமாகாணக் கல்வித் திணைக்களம்

வடமாகாணத்திலுள்ள தேசியப் பாடசாலைகளில் மேலதிகமாக கடமையாற்றிவரும் ஆசிரியர்கள் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மாகாணப் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.வடமாகாணத்திலுள்ள தேசியப் பாடசாலைகளில் மேலதிகமாக கடமையாற்றிவரும் ஆசிரியர்களுடனான சந்திப்பின்போதே வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார். Read more »

யாழ்.உடுப்பிட்டி மாணவன் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம்

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் க.பொ.த உயர்தரப் பரீட்சையில், கணிதப் பிரிவில் தோற்றி  அகில இலங்கை  ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.நேற்றுக் காலை 10 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்ட ஜி.சீ.ஈ உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று இரவு... Read more »

யாழ்.கிழக்கு கடலில் சூறாவளி: வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை

யாழ். குடாநாட்டின் கிழக்கு கடல் பகுதியில் ஏற்படக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக  இலங்கை வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தின் கிழக்கு கடலில் இருந்து 750 கிலோ மீற்றர் தூரத்திலே சூறாவளி மையம் கொண்டுள்ளதாகவும் இதனையடுத்து,  வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்... Read more »

உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று 25.12.2011 வெளியாகும்

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று வெளிவரவுள்ளன என பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் அனுர எதிரிசிங்க அறிவித்துள்ளார்.கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பரீட்சை முடிவுகள் இன்று வெளியிடப்படுவதுடன் நாளை நண்பகல் முதல் கொழும்பு மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் பரீட்சை முடிவுகளை பரீட்சைத் திணைக்களத்தில் சென்று... Read more »