அரசகரும மொழிக் கொள்கையை மீறினால் வழக்கு-அரசகரும மொழிகள் ஆணைக்குழு அறிவிப்பு

அரசகரும மொழிக் கொள்கையை உரியமுறையில் கடைப்பிடிக்காத அரச நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அரசகரும மொழிகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அரசகரும மொழிக்கொள்கையை மீறியுள்ள 75 அரச நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், ஏனைய அரச நிறுவனங்கள் பற்றிய தகவல்களை திரட்டிவருவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்... Read more »

சுயதொழில் ஓய்வூதிய திட்டத்திற்கு 1500 பயனாளிகள் தெரிவு

சுயதொழில் ஓய்வூதிய திட்டத்திற்கு 1500 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் யாழ். மாவட்ட இணைப்பாளர் பாக்கியராஜா பிரதீபன் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். Read more »

யாழ். ஆஸ்பத்திரிக்கு முன்பாக பயணிகளை ஏற்ற, இறக்கத் தடை

யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள வீதியில் தனியார் மற்றும் அரச பஸ்களில் பயணிகளை ஏற்றுவதோ இறக்குவதோ தடைசெய்யப்பட்டுள்ளது. இதனை மீறும் சாரதிகள், நடத்துநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார் யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா. Read more »

வருமானவரி விவரத்திரட்டுக்களை இந்தமாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்து

வருமானவரி செலுத்துவோர் வரிமதிப்பாண்டான 2011/2012 ஆம் ஆண்டுக்கான வருமானவரி விவரத்திரட்டுக்களை இந்தமாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் உரிய வரிக் கொடுப்பனவுக்கான பணம் செலுத்தும் படிவத்துடன் உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென உள்நாட்டு இறைவரித் திணைக்கள யாழ்.பிராந்திய பிரதி ஆணையாளர் பா.சிவாஜி தெரிவித்துள்ளார். Read more »

அரசால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், இராணுவம் பல வழிகளிலும் பாடுபடுகிறது.யாழ்.தளபதி

அரசால் யாழ். மாவட் டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு இராணுவம் உதவிகளைச் செய்து வருகின்றது. அத்துடன் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பல வழிகளிலும் பாடுபடுகிறது என்று யாழ். மாவட்டப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். Read more »

வடபகுதி கடற்பரப்பில் கடல் அட்டை பிடிப்பற்கு அனுமதி

வடபகுதி கடற்பரப்பில் கடல் அட்டை பிடிப்பற்கு கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. நீண்டகாலமாக இத்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் மட்டும் கடலட்டை பிடிக்கலாம் என்று அத்திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ந.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். Read more »

யாழ் போதானா வைத்திசாலையில் இராசாயனப்பொருட்களுக்கு பற்றக்குறை ஆய்வுக்கூடப் பரிசோதனைகள் பாதிக்கப்படும் அபாயம்?

யாழ் போதானா வைத்திசாலையின் ஆய்வுகூடத்திற்குத் தேவையான இராசாயனப் பொருட்கள் பற்றக்குறையாகக் காணப்படுவதால் ஆய்வுக்கூடப் பரிசோதனைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக யாழ் போதானா வைத்திசாலையின் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தாரஜா தெரிவித்துள்ளார். Read more »

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக ஒன்றிணைவோம்: மக்கள் இயக்கம் அறைகூவல்

கூடங்குளம் அணு உலை பாடங்களை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதால் அதற்கு எதிராக பேதமின்றி ஒன்றிணைவோம் என கூடங்குளத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. Read more »

பரு. பிரதேச சபையின் உபஅலுவலகம் அம்பனில் செயற்பட ஆரம்பித்தது

பருத்தித்துறை பிரதேசசபை குடத்தனை உப அலுவலகம் 13 வருட கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் அம்பனில் கடந்த வாரம் முதல் செயற்பட ஆரம்பித்துள்ளது. Read more »

இடியுடன் கூடிய கனமழை வடக்கு, கிழக்கில் தொடரும்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை சில தினங்களுக்கு தொடரும் என்று வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இதன் போது கடல் கொந்தளிப்பாக காணப்படும். Read more »

காங்கேசன்துறையில் அணுக்கதிர்வீச்சு பாதுகாப்பு கட்டமைப்பு

வட மாகாணத்தில் அணுக்கதிர்வீச்சு பாதுகாப்பு கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அணு உலைகளின் கதிர் வீச்சுக்களினால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய சுற்றாடல் அனர்த்தங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் நோக்கில் வட மாகாணத்தின் நான்கு இடங்களில் இந்த கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட உள்ளன. Read more »

சுப்பர்மடம் அனர்த்த எச்சரிக்கை கோபுரம் மக்கள் பாவனைக்கு

யாழ். பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் கடந்த 2 வருடங்களாக முற்றாக சேதமடைந்து காணப்பட்ட அனர்த்த எச்சரிக்கை கோபுரம் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு இன்று சனிக்கிழமை விடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ். மாவட்ட அதிகாரி சங்கரப்பிள்ளை ரவி தெரிவித்தார். Read more »

யாழில் மாவீரர் தின துண்டுப்பிரசுரங்கள்

யாழ். கோண்டாவில் கிழக்கு பகுதியிலும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் மாவீரர் தின துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. மாவீரர் தினம் 2012 என்று எழுதப்பட்டு, மாவீரர் புகைப்படங்களுடன் கூடிய துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். Read more »

தமிழ்ப் பெண்கள் புனர்வாழ்வு தொடர்பில் ஐ.தே.க. அதிருப்தி

போரில் தமது கணவரையும், பிள்ளைகளையும் இழந்து ஆதரவற்றிருக்கும் வடக்குத் தமிழ்ப் பெண்களுக்குப் புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்த அரசு மேற்கொண்டுவரும் வேலைத்திட்டங்கள் மகிழ்ச்சிக்குரியவையல்ல என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. Read more »

ஊழியர் சேம இலாப நிதிக்கான கைவிரல் அடையாளம் பெறும் பணி இனி யாழ்ப்பாணத்தில்

ஊழியர் சேம இலாப நிதிக்கு விண்ணப்பிப்பவர்களின் கைவிரல் அடையாளம் பெறும் பணிகளை இனிமேல் நிரந்தரமாக யாழ்.மாவட்ட தொழில் திணைக்களத்தில் ஆரம்பிப்பித்து வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. Read more »

பட்டாசுகள் வெடித்ததில் இரு இளைஞர்கள் காயம்

கையில் வைத்திருந்த பட்டாசுப் பெட்டிக்குள் தீப்பொறி விழுந்து தீப்பற்றிக் கொண்டதால் அதற்குள் இருந்த பட்டாசுகள் படபடவென வெடித்துச் சிதறின. இதனால் இரண்டு இளைஞர்கள் கைகளிலும் உடலிலும் கடும் காயங்களுக்கு உள்ளானார்கள். Read more »

படகுகளை நகர்த்துவதில் பெரும்பாடு வடமராட்சி மீனவர்கள் கடும் விசனம்

வடமராட்சி கடற்பிரதேசத்தில் தொண்டமானாறு தொடக்கம் முனை வரையும் உள்ள 33 வான்களும் மூடப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடற்றொழிலுக்கு வள்ளங்கள், கட்டுமரங்களை கடலுக்குள் கொண்டு செல்லவும், மீளக் கொண்டுவரவும் முடியாது பெரிதும் சிரமப்படுகின்றனர். Read more »

ஈமெயில், எஸ்.எம்.எஸ்.மூலம் பணமோசடி யாழில் அதிகம்; எச்சரிக்கிறார் மத்திய வங்கி அதிகாரி

மின்னஞ்சல் (ஈமெயில்) மூலமாகவும், குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலமாகவும் பணம் மோசடி செய்யப்படும் சம்பவங்கள் யாழ்.மாவட்டத்தில் அதிகரித்து வருவதால் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் பா.சிவதீபன் முன்னெச்சரிக்கை செய்துள்ளார். Read more »

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் 125 பேர் கைது

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் சிறுகுற்றம் புரிந்த 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.இ.எரிக்பெரேரா தெரிவித்தார். Read more »

யாழில் காணி கோரும் இராணுவம்

யாழ். மாவட்டத்தில் இராணுவ படை முகாம் அமைப்பதற்காக அரச காணியொன்றைம் தருமாறு இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட அதிகாரி விமல்ராஜ் தெரிவித்தார். Read more »