Ad Widget

கொக்குவில் பகுதி பாடசாலையில் 10 ஆம் வகுப்பு மாணவன் 11ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தினார்!

கொக்குவிவில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இரண்டு மாணவர்களுக்கு இடையே எழுந்த முரண்பாடு கத்திக்குத்தில் முடிவுற்றது. நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ஜீ.சீ.ஈ சாதாரண தர மாணவர் ஒருவர் முகத்தில் காயமடைந்தார். நேற்று பாடசாலையில் அதிபர், உப அதிபர் இருவரும் விடுமுறையில் இருந்த சமயம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தரம் 10 இல் கல்வி கற்கும்...

பெற்றோரின் அரவணைப்பு இல்லாத இளைஞர்களே குற்றம் செய்கின்றனர் : பொலிஸ்

பிள்ளைகளுக்கு தேவையானவற்றை செய்வது பெற்றோர்களின் கடமை. பெற்றோர்கள் உரியவற்றை செய்யாமல் அரவணைப்பும் கொடுக்காமல் விடுவதால் தான் பிள்ளைகள் சமூகத்தில் குற்றச்செயல்களைச் செய்கின்றனர் என காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியம் 2க்கு பொறுப்பான பொறுப்பதிகாரி ஏ.எஸ்.பி.ஜஃவ்பர் தெரிவித்தார். பாடசாலை, தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று வரும் மாணவிகளுடன் சேஷ்டை செய்த குற்றச்சாட்டில் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 23...
Ad Widget

சமுர்த்தி கொடுப்பனவை நிறுத்தியதாக மாற்றுத்திறனாளி பெண் முறைப்பாடு

சமுர்த்தி அலுவலரின் தன்னிச்சையான முடிவு காரணமாக சமுர்த்தி கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாகக்கூறி மாற்றுத்திறனாளியான பெண்ணொருவர் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனுக்கு வியாழக்கிழமை (17) மனுவொன்றை கையளித்துள்ளார். மனுவின் பிரதிகளை முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் மற்றும் துணுக்காய் பிரதேச செயலாளர் ஆகியோரிடம் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்துள்ளார். முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பழைய...

அந்தரத்தில் குழுங்கிய ஸ்ரீ லங்கன் விமானம்; 5 ஊழியர்கள் காயம்

பிரான்ஸின் பெரிஸ் நகரிலிருந்து 193 பயணிகளுடன் கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று வளிமண்டலவியல் பாதிப்புக்கு உள்ளானதில், அதில் சேவைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஊழியர்களில் ஐவர், சிறு உபாதைகளுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களில் நால்வர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல்.564 என்ற விமானத்தில் வந்த ஊழியர்களே இவ்வாறு...

 27,420 தொன் மெகீ நூடில்ஸ் அழிப்பு

மோனோசோடியம் க்ளூட்டாமேட் எனும் எம்.எஸ்.ஜீ சுவையூட்டி, அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ள 27 ஆயிரத்து 420 தொன் நிறையுள்ள மெகீ உடனடி நூடில்ஸ்களை நெஸ்லே நிறுவனம், சீமெந்து ஆலைகளில் இட்டு அழித்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு அதிகாரசபையினால் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் போது, மெகீ நூடில்ஸ் உற்பத்தியில் எம்.எஸ்.ஜீ சுவையூட்டி,...

திருமண பதிவுக் கட்டணம் குறைப்பு

திருமண பதிவுக் கட்டணத்தை குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது திருமண பதிவு கட்டணமாக அறவிடப்படும் 5,000 ரூபாயை 1,000 ரூபாயாக குறைப்பதற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று வியாழக்கிழமை(18) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது திருமண பதிவு கட்டணம் குறைக்கப்பட்டமை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த கட்டண குறைப்பு, 2015ஆம் ஆண்டு மார்ச்...

யாழ் நகரில் அதிகரித்துச் செல்லும் பெண்கள் மீதான சேட்டை – மக்கள் விசனம்

யாழ் நகரப்பகுதிகளில் குறிப்பாக யாழ் கஸ்தூரியார் வீதி, பெருமாள் கோவில் வீதி கன்னாதிட்டி வீதி ஆகிய வீதிகளில் பயணிக்கும் பெண்களுடன் சிலர் தகாத வார்த்தைகளால் பேசி சேட்டை செய்வதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த வீதிகளால் பயணிக்கும் தனியார் கல்வி நிலைய மணவிகள், மற்றும் தொழில் புரியும் யுவதிகளளாகியோரிடம் சிலர் தகாத வார்த்தைகளால் சேட்டை...

பாடசாலையில் போதைப் பொருள் வைத்திருந்த மாணவர்கள்!

யாழ்.கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் நால்வர் மாவா என்ற போதைப் பொருளை வைத்திருந்த குற்றசாட்டில் அவர்கள் சிறுவர் நன்நடத்தை அதிகாரிகளால் மடக்கி பிடிக்கப்பட்டனர். குறித்த சம்பவம் இன்று காலை கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, மாவா என்ற போதைப்...

வேகமாக வாகனம் செலுத்துபவர்கள் இனி சிக்குவர்! வேகத்தைக் கணிக்கும் ‘ராடர்’கள் யாழ். பொலிஸாரிடம்!!

வாகனங்களின் வேகத்தைக் கணிக்கும் 'ராடர்' கருவி பொலிஸ் திணைக்களத்தால் யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யாழப்பாணத்தில் வேகமாக வாகனங்களை செலுத்துவதால் இடம்பெறும் விபத்துக்களைத் தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ராடர் கருவி இலங்கையில் பல வருடங்களுக்கு முன்னரே அறிமுகமான போதிலும் யாழ். மாவட்டத்தில் நேற்றுப் புதன்கிழமையே இது அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில்...

மாணவிகளுக்கு இடையூறு விளைவித்த 23 இளைஞர்கள் கைது

நெல்லியடி பகுதியில் வீதிகளில் நின்றுகொண்டு பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சென்றுவரும் மாணவிகளிடம் சேஷ்டை செய்த 23 இளைஞர்களைக் புதன்கிழமை (17) கைது செய்யப்பட்டதாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியம் 2க்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜஃவ்பர் தெரிவித்தார். பின்னர், கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து அவர்கள் முன்னிலையில் இளைஞர்கள்...

பிரதேச செயலக பணியாளர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்

கரவெட்டி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பணியாளர் ஒருவர், புதன்கிழமை (17) மதியம் கோவில் சந்திப் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்காகி, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த அருளானந்தம் உதயகுமார் (வயது 30) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகினார். மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவரை, நெல்லியடி...

பொலிஸ் சைக்கிள் ரோந்து சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்செயல்களை கண்டித்தும் அதனை தடுக்கும் வகையிலும் பொலிஸ் சைக்கிள் ரோந்து சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த சைக்கிள் ரோந்து சேவையை யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் ஆரம்பித்து வைத்தார். குறித்த சேவையினூடாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்செயல்களை கட்டுப்படுத்தும் முகமாகவும்,போதைப் பொருட்களை மாணவர்கள் மத்தியில் விநியோகிப்பவர்களை மறைமுகமாக கண்டுபிடிக்கவும், சட்டவிரோத மதுபான விற்பனை...

வல்லையில் விபத்து; தளத்தில் ஒருவர் சாவு

வல்லைப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் சாவடைந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழில் இருந்து வல்லை நோக்கி அதிவேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஒரத்தில் இருந்த பூச்சாடியை மோதித்...

விதிமுறைகளை மீறி இயங்கும் மதுபானசாலைகளை மூடுவதுடன், புதிய அனுமதிகளையும் நிறத்துக

வடக்கு மாகாணத்தில் விதிமுறைகளை மீறி இயங்கும் மதுபானசாலைகளை மூடுவதுடன், புதிய அனுமதிகளை வழங்குவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதானது ‘ யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள், வன்முறைச் சம்பவங்களுக்கு அதிகரித்துக் காணப்படும் மதுபான...

மாணவனின் அந்தரங்க உறுப்பில் உதைத்த ஆசிரியருக்கு பிணை

வரணி மத்திய கல்லூரியில் தரம் 10இல் கல்விகற்கும் மாணவனை காலால் உதைத்து அந்தரங்க உறுப்பை காயப்படுத்திய ஆசிரியரை 1 இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் புதன்கிழமை (17) அனுமதியளித்தார். மாணவர் பிழை செய்யும் போது அதனை பெற்றோருக்குத் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், இவ்வாறு கடுமையான தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடாது...

வீதியில் ஆயுதங்களுடன் திரிந்தவர்களுடன் பல்கலை. மாணவனுக்கு என்ன வேலை? நீதிபதி கேள்வி!

வீதியில் பெற்றோல் குண்டுகள், கோடரிப்பிடிகள், பொல்லுகள் போன்ற ஆயுதங்களுடன் திரிந்தவர்களுடன் பல்கலைக்கழக மாணவனுக்கு என்ன வேலை? இவ்வாறு கேள்வி எழுப்பிய நீதிபதி இளஞ்செழியன் கேள்வி அவருக்குப் பிணை வழங்கவும் மறுப்புத் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி பெற்றோல் குண்டுகள், கோடரி பிடிகள், பொல்லுகள் சகிதம் கைதான 10...

கல்வி விசா மூலம் ஆட்கடத்தல் மோசடி

கல்வி விசா பெற்றுத் தருவதாகக் கூறி சட்டவிரோத ஆட்கடத்தல்கள் இடம்பெறுவதாகவும் அவ்வாறான நபர்களிடம் ஏமாற வேண்டாம் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகொரல தெரிவித்துள்ளார். வெவ்வேறு ஊடகங்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். கல்வி விசாவின் மூலம் சென்று அங்கு பகுதிநேர தொழிலில் ஈடுபடலாம் எனத் தெரிவித்து இளைஞர், யுவதிகளிடம் அதிக...

பருப்பு இறக்குமதி வரி குறைப்பு எண்ணெய் இறக்குமதி வரி ஏற்றம்!

இறக்குமதி செய்யப்படும் மைசூர் பருப்பு மற்றும் மஞ்சள் பருப்பு ஆகியவற்றுக்கான இறக்குமதி விசேட விற்பனை பொருள் வரி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த பருப்பு வகைகளுக்கு அறவிடப்பட்ட வரி கிலோ ஒன்றுக்கு 5 ரூபாவில் இருந்து 25 சதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. உலக சந்தையில் பருப்பு விலை அதிகரிக்கும் போது தேசிய வியாபாரிகளுக்கு அநீதி...

பிறை தென்படவில்லை புனித நோன்பு வௌ்ளியன்று ஆரம்பம்!

புனித ரமழான் நோன்பு எதிர்வரும் 19ம் திகதி வௌ்ளிக்கிமையில் இருந்து ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது. நேற்றய தினம் நாட்டின் எந்த பகுதியிலும் பிறை தென்படாத காரணத்தால் நோன்பு வெள்ளிக்கிழமையில் இருந்து தொடங்கும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டம்: கூட்டமைப்பு கவலை

இலங்கையின் புங்குடு தீவைச் சேர்ந்த மாணவி வித்யாவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 9 பேரையும் காவல்துறையினர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விசாரித்து வருவது குறித்து சுரேஸ் பிரமச்சந்திரன் கேள்வியெழுப்பியிருக்கிறார். சாதாரண வழக்குகளுக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியிருக்கிறார். வித்யா கொலை தொடர்பான விசாரணைக்காக குற்றம் சாட்டப்பட்டவர்களை, பயங்கரவாதத்...
Loading posts...

All posts loaded

No more posts