Ad Widget

கனடாவில் இலங்கையர்களின் குடியுரிமை பறிபோகுமா?

கனடாவின் புதிய குடிவரவு, குடியகல்வு சட்டத்தினால் பல இலங்கையர்கள் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர். இதன்படி ஒரு இலட்சத்து 40,000 இலங்கையர்கள் கனேடிய குடியுரிமையை இழக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சட்டத்தின் பிரகாரம் கனடாவில் பிறந்தவர்கள் தவிர, ஏனையவர்களுக்கான குடியுரிமை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவர்கள் இரண்டாம் நிலை பிரஜைகளாக நடத்தப்படுவர். கனேடிய மக்களை பாதுகாப்பதே இந்த புதிய சட்டத்தின் நோக்கம்...

த.தே.கூ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் 20வது திருத்தச் சட்டம் குறித்து ஆராய்வு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று மாலை வவுனியாவில் அமைந்துள்ள சொர்க்கா விடுதியில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராஜாவும், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், என். சிறீகாந்தா, ஹென்றி மகேந்திரன், கருணாகரன்-ஜனா ஆகியோரும் ஈழ மக்கள் புரட்சிகர...
Ad Widget

யாழில் சர்வதேச யோகாதினம்!

யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகாதினம் இன்று(21) யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுமுகமாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதரகமானது மாபெரும் யோகாபயிற்சி நிகழ்வொன்றினை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இதனடிப்படையில் இன்று காலை யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இந்திய துணைதூதுவர் ஏ.நடராஜா தலைமையில் நடைபெற்ற இந்த யோகா தின நிகழ்வில் கல்வி...

பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக அச்சுவேலி வடக்கு மடத்தடி பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த வாரம் முறைப்பாடு செய்துள்ளார். தனது 14 வயது மகளை அயல்வீட்டுக்காரர் பாலியல் துஸ்பிரயோகம் செய்தர் என்ற பொய்யான வதந்தியை நம்பி யாருடைய முறைப்பாடும் இல்லாமல் பொலிஸார், மகளை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்றமை மற்றும் நீதிமன்ற...

திருமணம் நடைபெறவிருந்த யுவதி கடத்தல்

திருமணம் நடைபெறவிருந்த யுவதியொருரை இனந்தெரியாதவர்கள் முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்ற சம்பவம் சனிக்கிழமை (20) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. மூளாயைச் சேர்ந்த யுவதிக்கும் கனடாவைச் சேர்ந்த ஒருவருக்கும் ஞாயிற்றுக்கிழமை (21) பதிவுத் திருமணம் நடைபெறவிருந்த நிலையிலேயே குறித்த யுவதி கடத்தப்பட்டுள்ளதாக யுவதியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மாப்பிள்ளை வீட்டாரின்...

புனர்வாழ்வு காலத்தை குறைக்குமாறு முன்னாள் போராளிகள் கோரிக்கை

நீண்டகாலமாக தடுப்பு முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டு இருந்து, புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படும் தங்களின் புனர்வாழ்வுக் காலத்தை குறைக்குமாறு மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம், புனர்வாழ்வு பெற்றுவரம் முன்னாள் போராளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வவுனியா பூந்தோட்ட புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகள் 52பேரை, மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்...

வடக்கு விவசாய விரிவாக்கத்துக்கு தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமனம்

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் விரிவாக்கல் சேவைகளுக்கென தொழில்நுட்ப உதவியாளர்கள் 14 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி நியமனக் கடிதங்களை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவரது அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (20.06.2015) வழங்கி வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உரையாற்றும்போது, விவசாயப் போதனாசிரியர் பதவி நியமனம் பெறுவதற்கு விண்ணப்பதாரி க.பொ.த. உயர்தரத்தில் உயிரியல்...

குற்றச்செயல்கள் தொடர்பில் அறிவிக்க தனி தொலைபேசி இலக்கம்

குற்றச்செயல்கள் தொடர்பில் அறிவிக்க யாழ் மாவட்ட செயலகத்திற்கு என தனி தொலைபேசி இலக்கம் வழங்கப்படவள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை (19) மாலை இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் கல்வி அமைச்சின்...

வித்தியா வழக்கு குற்றவாளிகளை தப்பிக்க வைக்க தவராஜா முயற்சி – துவாரகேஸ்வரன்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை குற்றவாளிகளை தப்பிக்கச் செய்யும் வகையில் சட்டத்தரணி கே.ரி.தவராஜா வழக்கில் ஆஜராகியிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட இணைப்பாளர் தியாகராஜா துவாரகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில், வித்தியாவின் கொலையுடன் தொடர்புபட்ட...

மஹிந்தவுக்கு ஹெலிக்கொப்டர் வழங்கப்படவில்லையாம்!

தனது பயண வசதிகளுக்காக ஹெலிக்கொப்டர் வழங்கப்பட்டதாக வௌியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரது ஊடக இணைப்புச் செயலாளர் ரோஹான் வெலிவிட வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனவரி 9ம் திகதி கொழும்பில் இருந்து தங்காலை நோக்கி முன்னாள் ஜனாதிபதி என்ற...

குறிகட்டுவான் பொலிஸ் கண்காணிப்பகம் 24 மணிததியாலங்கள் விரைவில் இயங்கும்

தற்போது காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இயங்கி வரும் குறிகட்டுவான் பொலிஸ் கண்காணிப்பகத்தை 24 மணிநேரமும் மீண்டும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என வடபிராந்திய பொலிஸ் மா அதிபர் ஈ.கே.பெரேரா தெரிவித்தார். யாழ். சிவில் பாதுகாப்பு கலந்துரையாடலொன்று வெள்ளிக்கிழமை (19) யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போது, ஐக்கிய தேசியக்...

புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்குவதாக அறிக்கை!

2009ஆம் ஆண்டில் இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், அவர்களின் சர்வதேச வலையமைப்பு மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. உலக நாடுகளின் பயங்கரவாதம் குறித்த 2014ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. போர் முடிவடைந்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில்...

மாதகல் பகுதி மக்களுக்கு மலேரியா தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை!

வலிகாமம் தென்மேற்குப் பிரதேசத்தில் மாதகல் பகுதியில் உள்ள மக்களுக்கு மலேரியா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இப்பகுதியிலிருந்து மலேரியா நோயாளி ஒருவர் இரத்தப்பரிசோதனை மூலம் இனங்காணப்படதை தொடர்ந்தே அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மலேரியா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்து வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் வசித்து வந்த மாதகலைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண் ஒருவர்...

வீடுகளில் வைத்து மதுபானம் அருந்தினால் பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்பில்லை – பொலிஸ்

யாழ்ப்பாணத்திற்கு என்று ஓர் கலாசாரம் நீண்டகாலமாக பேணப்பட்டு வருகின்றது.அதாவது, வீடுகளில் மதுபானங்களை அருந்துவது முற்றாக தடைசெய்யப்பட்டிருக்கிறது.அதனாலேயே சந்திகளிலும், வீதிகளிலும் இளைஞர்கள் கூடி மதுபானங்கள் அருந்துகின்றனர் என்று கொடிகாம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்திக்க பண்டார தெரிவித்தார். நேற்றயதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டம் இன்று யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது இதன்போது...

சுகாதார வைத்திய அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க வல்லைச் சந்தியில் பொலிஸ் சாவடி!!

வல்லைச் சந்தியில் பொலிஸ் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனை செய்யப்பட வேண்டும் என்று பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி செந்தூரன் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்,வல்லைச் சந்தியில் உடனடியாக வல்லைச் சந்தியில் சோதனைச் சாவடி அமைக்கப்படும் என்று தெரிவித்தார். நேற்று சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு...

தனியார் பஸ்- வான் விபத்தில் 4 பேர் படுகாயம்

யாழ்ப்பாணம் மூளாய்ப் பகுதியில் தனியார் பஸ் ஒன்று முன்னால் சென்ற கயஸ் ரக வானுடன் மோதி குடைசாய்ந்ததில் 4 பேர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (19) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை (19) மாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து மூளாய்க்கு சென்ற தனியார் பஸ்ஸும் கயஸ் ரக வானுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன....

பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லாவிட்டால் பெற்றோர்கள் பாடசாலைக்கு அறிவிக்க வேண்டும்

பிள்ளைகள் பாடசாலைக்குச் சமூகமளிக்கவில்லையென்றால் அது தொடர்பில் 1 மணித்தியாலத்துக்கு முன்னர் பெற்றோர்கள் பாடசாலைக்கு அறிவிக்க வேண்டும் எனவும் இதனை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் பொ.அருணகிரிநாதர் தெரிவித்தார் தமிழ் சிவில் சமூகத்தின் கலந்துரையாடல் ஒன்று வெள்ளிக்கிழமை (19) யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு...

பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாது – அமைச்சர் ரஞ்சித்

வருடாந்த பஸ் கட்டண திருத்தம் ஒவ்வொரு ஜூலை மாதமும் மேற்கொள்ளப்படும். இந்நிலையில், எதிர்வரும் ஜூலை மாதம் பஸ் கட்டணங்களை அதிகரிக்காமல் இருப்பதற்கு பஸ் உரிமையாளர்கள் ஒத்துழைத்துள்ளதாக உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார, தெரிவித்தார். கடந்த வருடத்தை விட இவ்வருடம் பஸ் சேவையை நடத்துவதற்கான செலவு 0.03 சதவீதத்தின் அடிப்படையில் குறைந்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...

தமிழ் கலைஞர்கள் மனு: ஊடக அமைச்சுக்கு கட்டளை

சினிமா படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் வழியாக புறக் கலாசாரங்கள் பரவுவதை எதிர்த்து தமிழ் கலைஞர்கள் சங்கம் தாக்கல் செய்த உரிமைகள் மனு தொடர்பில் ஜூலை 11ஆம் திகதி, நீதிமன்றில் ஆஜராகுமாறு வெகுஜன ஊடக அமைச்சுக்கு உயர்நீதிமன்றம், நேற்று வெள்ளிக்கிழமை கட்டளை அனுப்பியுள்ளது. இந்த வழக்கை, மேலும் நியாயப்படுத்துவதற்கான திகதியாக ஜூலை 11ஆம் திகதியை உயர்நீதிமன்றம்...

வடமாகாணத்தில் அதிகரிக்கும் மதுப்பழக்கம்: ஜனாதிபதி கவலை

இலங்கையில் வடமாகாணத்திலேயே அதிக அளவில் மது அருந்தப்படுவதாகவும் இதனால், மதுபான விற்பனையின் மூலம் அங்கிருந்து அதிக அளவிலான வரிப்பணம் அரசாங்கத்திற்கு செலுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார். தென் மாகாணத்தில் பாடசாலை வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியிருக்கின்றார். "எமது நாட்டில் நிலவுகின்ற மதுபான பிரச்சினையில் வடமாகாணத்தின் நிலைமையானது மிகவும் மோசமானதாக...
Loading posts...

All posts loaded

No more posts