Ad Widget

புகைத்தலுக்கு அடிமையானவர்களை மீட்க புதிய வசதி

புகைத்தலுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கும் விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 1948 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக ஆலோசனை சேவைகள் வழங்கப்படவுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானத்தை ஒழிப்பதற்கான தேசிய அதிகார சபையின் தலைவர் டொக்டர் பாலித்த அபேகோன் தெரிவித்துள்ளார். வார நாட்களில் அலுவலக நேரங்களில் இந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி...

பாதுகாப்பற்ற புகையிர கடவையால் உயிர் ஆபத்து: மக்கள் விசனம்

கிளிநொச்சி பகுதியில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள புகையிரத பாதையை குறுக்கறுத்துச் செல்லும் வீதிகளுக்கு பாதுகாப்புக் கடவை அமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமுறிகண்டி முதல் ஆனையிறவு வரைக்குமான பகுதிகளில் ஏ-9 வீதியில் இருந்து புகையிரத வீதியை குறுக்கறுத்துச் செல்லும் குறிப்பிட்ட சில பாதைகள் தவிர சுமார் 23 பாதைகள் புகையிரத...
Ad Widget

யாழ். குடாநாட்டு வாகனங்கள் மீது எந்நேரத்திலும் திடீர் சோதனை மேற்கொள்ளப்படும்

யாழ். மாவட்டத்தில் வாகனங்கள் மீது எந்த நேரத்திலும் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்வர் என்று யாழ். மாவட்ட உதவி போக்குவரத்து ஆணையாளர் கே.மதிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் வாகனங்களை கடுமையாகக் கண்காணிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்...

வலி.வடக்கு, கிழக்கில் குடியமர 1087 குடும்பங்கள் பதிவு!

உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட வலி.வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மீளக்குடியமர ஆயிரத்து 87 குடும்பங்கள் கிராம சேவையாளர்களிடம் பதிவு செய்துள்ளனர். வலி.வடக்குப் பிரதேசத்தில் மீளக்குடியமர 795 குடும்பங்களும், வலி.கிழக்குப் பிரதேசத்தில் மீளக்குடியமர 292 குடும்பங்களும் இவ்வாறு பதிவு செய்துள்ளன என தெல்லிப்பழை, கோப்பாய் பிரதேச செயலக தகவல்கள் தெரிவித்தன. தற்போது இப்பிரதேசங்களில் குடியேறிய 170...

கடும் நிபந்தனைகளுடன் இரு மாணவர்களுக்கு பிணை! யாழ். மேல் நீதிமன்றம் வழங்கியது!!

பிரபல கல்லூரி மாணவர்கள் இருவருக்குக் கடும் நிபந்தனையில் பிணை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்கள் மீண்டும் குற்றம் செய்தால் மேல் நீதிமன்றத்தைக் கேட்காமலேயே பிணையை ரத்துச் செய்ய மல்லாகம் நீதிமன்றத்திற்கு விசேட அனுமதி அளித்துள்ளார். தெருவில் ரவுடித் தனத்தில் ஈடுபட்டு, மாணவிகளுக்குத் தொல்லைகொடுத்தனர், தனியார் கல்வி நிலையத்தை சேதப்படுத்தினர், என்ற குற்றச்சாட்டுக்களில் கைதானோருள்...

மிருசுவில் படுகொலை வழக்கு: இராணுவச் சிப்பாய்க்கு மரணதண்டனை!

2000ஆம் ஆண்டு மிருசுவில் பகுதியில் 8 பேர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று வியாழக்கிழமை மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் நான்கு பேர் அந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2000ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி மிருசுவில்...

வடக்கு முதல்வர் அமெரிக்கா விஜயம்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் அவர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் விக்கினேஸ்வரன் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தார். அமெரிக்காவில் நடைபெறவுள்ள கலாச்சார நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சர் விக்னேஸ்வரன் சில அமெரிக்கா உயர்...

கண்ணீரில் நிறைந்த ஐ.நா.சபை! நேரடிச் சாட்சிகளாக நடேசனின் மகனும், புலித்தேவனின் மனைவியும்!

தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி இலங்கை அரசாங்கம் செய்த தமிழின அழிப்பின் சாட்சியங்கள் பல வெளிவந்திருந்தாலும் இப்பொழுது அதன் நேரடித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சில நேரடிச் சாட்சியங்கள் வெளிவந்துள்ளன. இந் நேரடிச் சாட்சியங்களின் வாக்குமூலங்களினால் இலங்கை அரசாங்கம் பல்வேறு நெருக்குதல்களுக்கு உள்ளாகவுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளார்கள். இலங்கையின் வடக்கில் 2009ம் ஆண்டு நந்திக்கடலில் வைத்து விடுதலைப்புலிகள்...

 4 ஆவது நாளாகவும் சிறுமி தொடர்பில் தகவல் இல்லை

கிளிநொச்சியிலிருந்து கடந்த 21ஆம் திகதி காணாமல் போன 3வயது சிறுமி தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என கிளிநொச்சி பொலிஸார் நேற்று (24) நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். அத்துடன், சிறுமி காணமல் போன விவகாரம் தொடர்பில் கண்டறிவதற்காக நீதிமன்ற அனுமதிகள் சில பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். உருத்திரபுரம், எள்ளுக்காடு, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த...

தேசிய கொடியை ஏற்ற மறுத்த ஆனந்தசங்கரி

பளைப் பொது விளையாட்டு மைதான திறப்பு விழாவின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்தார். கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச சபைக்குட்பட்ட பொது விளையாட்டு மைதானம், 10 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு இன்று புதன்கிழமை (24) திறந்து வைக்கப்பட்டது. தமிழர் விடுதலைக்...

யாழ் மாவட்ட கிராம அபிவிருத்திக்கென வீடமைப்பு அமைச்சினால் 435 மில்லியன் நிதி ஒதுக்கீடு

யாழ் மாவட்டத்திலுள்ள 435 கிராம அலுவலர் பிரிவுகளிலும் 662 திட்டங்கள் அமுல்படுத்துவதற்கென வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சினால் 435 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் கிராமங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் 15,000 கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுவருகின்றது. இதனடிப்படையில் இத்திட்டமானது பயனாளிகளின் 25 விகித பங்களிப்புடன் சகல பிரதேசங்களிலும்...

இன்புளுவன்சா A 1H N1 தொற்றினால் 40 பேர் மரணம்!

நாடு முழுவதும் இன்புளுவன்சா A 1H N1 தொற்றினால் பாதிக்கப்பட்ட 40 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 10 பேர் கர்ப்பிணித் தாய்மார்கள். காய்ச்சல்- தடிமனுக்கான அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவ உதவியை நாடினால் உயிர் இழப்பை தவிர்க்கலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலத்த மஹிபால தெரிவித்தார். சுகாதார அமைச்சில் நேற்று (24)...

நாட்டுக்கு போதபை் பொருள் கொண்டு வருவதில் அரச அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு!

இலங்கைக்கு போதைப் பொருள் கொண்டுவரும் நபர்களில் பிரதானமாக அரச நிறுவனங்கள் இரண்டின் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த வாரம் தகவல் கிடைத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வர்த்தக சபை அதிகாரிகளை சந்தித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். வர்த்தகர்களுக்கு இடையூறு இன்றி தமது வர்த்தகத்தை செய்துகொண்டுச் செல்ல ஏதுவான சூழ்நிலை ஏற்படுத்துவது அரசின்...

முறையான அறிவிப்பு இன்றி வவுனியா மாவட்ட செயலாளர் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது?

வவுனியா மாவட்ட செயலாளரை இடமாற்றம் செய்யுமாறு உத்தியோகபூர்வ கோரிக்கை தனக்கு கிடைக்கவில்லை என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலாளருடன் இணங்கி செயற்பட முடியாது என்று அவரை இடமாற்றம் செய்யுமாறு கோரி வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தனக்கு அறியக்கிடைப்பதாக அவர் கூறினார். மாகாண சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானம்...

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து அரசும் கூட்டமைப்பும் மீண்டும் பேச்சுவார்த்தை!

இலங்கையில் நீண்டகாலமாக நிலவும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளது. இதன்போது அரசியல் பிரச்சினைக்கான தீர்வு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை,...

மீள்குடியேற்ற அமைச்சருடன் கூட்டமைப்பு பேச்சு

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தால் விடுவிக்கப்படாத மக்களின் காணிகளை விடுவித்து, மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பாக, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவொன்று கொழும்பில் புதன்கிழமை (24) பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், இரா.செல்வராசா, சீ.யோகேஸ்வரன்,...

சித்தன்கேணி ஆயலத்தில் தங்கச் சங்கிலியினை அபகரிக்க முற்பட்ட தென் பகுதி யுவதிகள் மடக்கிப்பிடிப்பு

ஆலயத்திற்கு வருகை தந்த அடியார்களின் தங்க நகைகளை அபகரிக்க முற்பட்ட இரு யுவதிகளை வட்டுக்கோட்டை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சித்தன்கேணி ஸ்ரீ சிவசிதம்பரேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் இறுதி நாளான இன்று (24) மதியம் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. பூஜை வழிபாட்டின் போது, தென் பகுதியில் இருந்து வந்ததாக கூறப்படும் இரு இளம் யுவதிகள்...

தரம் பிரிக்காத குப்பைகளை மாநகர சபை இனி அகற்றாது : மக்களை விழிப்பூட்டல் இன்று முதல் ஆரம்பம்

தரம் பிரிக்கப்படாத குப்பைகளை மாநகர சபைப் பணியாளர்கள் அகற்ற மாட்டார்கள். யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட அனைத்து வரியிறுப்பாளர்களும் தமது இடங்களில் உள்ள கழிவுகளைத் தரம் பிரித்தே இனி மாநாகர சபைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். என்று யாழ்.மாநகர சபை ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார். குருநகர் வட்டாரப் பகுதிகளில் திண்மக் கழிவுகளைத் தரம் பிரித்தல் தொடர்பான...

வடக்கு – தெற்கு முதியோர் நட்புறவு

சமூக சேவைகள் அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு, தெற்கிலுள்ள முதியோர்களுக்கிடையில் நட்புறவை ஏற்படுத்தும் இணைப்புத்திட்ட நிகழ்ச்சியொன்று, கைதடி முதியோர் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (23) இரவு நடைபெற்றது. தெற்கிலிருந்து அழைத்து வரப்பட்ட 125 முதியவர்கள், கைதடி முதியோர் இல்ல முதியவர்களுடன் இணைந்து கலை நிகழ்வுகளை நடத்தினர். கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முதியோர் சங்க உறுப்பினர்களே...

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளம் பெண் சாவு!

கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் இன்று புதன்கிழமை 9.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம்பெண் ஒருவர் பலியானார். முல்லைத்தீவிலிருந்து வவுனியாநோக்கி சென்ற தனியார் பஸ், இ.போ.ச. பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டபோது கிளிநொச்சியில் இருந்து பரந்தன் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த இந்தப் பெண்ணை தனியார் பஸ் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி...
Loading posts...

All posts loaded

No more posts