விபத்தில் தந்தையும் மகளும் படுகாயம்

யாழ். வேம்படி சந்தியில் தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தந்தையும் மகளும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more »

காணாமல் போனவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

காணாமல் போன வயோதிபர் ஒருவர், கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. Read more »

பொலிஸாரிடம் மேலும் இரு மாணவர்கள் ஒப்படைப்பு

யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு மாணவர்கள் பொலிஸாரிடம் நேற்றய தினம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். Read more »

வடக்கிலிருந்து படையினரை விலக்கிக் கொள்ளுமாறு கோரவில்லை! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஓர் பயங்கரவாத இயக்கம்: பாராளுமன்றில் சம்பந்தன்

வடக்கிலிருந்து படையினரை விலக்கிக் கொள்ளுமாறு தாம் கோரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஓர் பயங்கரவாத இயக்கம், அந்த இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கைளினால் அழிவைத் தேடிக்கொண்டது.மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பில் தமிழீழ விடுதலைப்... Read more »

யாழ் பல்கலைக்கழக சம்பவம் எனக்கு எதுவும் தெரியாது; யாழ் புதிய பொலீஸ் அத்தியட்சகர்

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக தமக்கு ஒன்றும் தெரியாது என யாழ் பொலீஸ் நிலையத்தின் புதிய சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். எம் ஜிவ்ரி தெரிவித்தார். Read more »

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்குமாறு கோரி யாழ். பல்கலைக்கழகத்தில் அமைதிப் போராட்டம்

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தியும், அண்மைக்காலமாக பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைக் கண்டித்தும் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அமைதிப் போராட்டமொன்று இன்று நடாத்தப்பட்டுள்ளது. Read more »

யாழ் பல்கலை மாணவர் பிரச்சனைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும்; ஐ.தே.க கோரிக்கை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. Read more »

நல்லூரில் தியாகி திலீபனின் நினைவுத் தூபி உடைப்பு

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயச் சூழலில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.இந்திய அரசாங்கத்திற்கு எதிராக 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட திலீபன் நினைவாக நல்லூர் ஆலயச் சூழலில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி... Read more »

யாழில் கைதுகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன!!, இதுவரையில்25 பேர் கைது செய்துள்ளோம்; ரி.ஐ.டி தகவல்

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் இதுவரை யாழ்பபாணத்தில் 25 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சந்திரா வாகிஸ்த பி.பி.சிக்கு தெரிவித்துள்ளார். Read more »

காந்தி சிலை உடைப்பு வழக்கு தள்ளுபடி

யாழ். அரியாலை காந்தி சிலை உடைப்பு சம்பவத்துடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களின் வழக்கு விசாரணைகளை யாழ். நீதிவான் நீதிமன்றம் நேற்றயதினம் தள்ளுபடி செய்தது.கடந்த யூலை மாதம் 27ஆம் திகதி அரியாலை பகுதியில் உள்ள காந்தி சனசமூக நிலையத்தின் முன்பாக இருந்த சிலை உடைக்கப்பட்டது. Read more »

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதானவர் விடுவிப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை மூன்று வருடங்களுக்கு பின்னர் யாழ். மேல் நீதிமன்றம் வியாழக்கிழமை விடுதலை செய்துள்ளது. தொல்புரம் கிழக்கு பகுதியைச் சேர்ந்த செல்வரட்ணம் சசிகரன் (வயது 29) என்பவரே மூன்று வருடங்களுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். Read more »

ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் சுகயீன லீவு போராட்டம்

யாழ்.போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் வியாழக்கிழமை 4 மணிநேர சுகயீன லீவு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். Read more »

டிசெம்பர் 10 முதல் 17 வரை சுகாதார வாரம்

இம்மாதம் 10ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை தேசிய சுகாதார வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளன நிலையில் இந்த தேசிய வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Read more »

யாழில் கைது செய்யப்பட்ட 10 பேரும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பாம்! இன்றும் சிலர் கைது

யாழில் நேற்று கைதுசெய்யப்பட்ட 10 பேரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்புபட்டவர்கள் என்றும், இவர்கள் 10 பேரும் யாழ். குடாநாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். Read more »

9 மாணவர் பயங்கரவாத தடுப்பு பொலிசாரிடம் ஒப்படைப்பு

பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் கோரப்பட்ட 9 மாணவர்களை விசாரணைக்கு பயங்கரவாத தடுப்பு பொலிசாரிடம் சற்றுமுன்னர் பெற்றோரால் பல்கலைக்கழக பீடாதிபதிகள் மற்றும் துறைத்தலைவர்கள் முன்னிலையில் ஒப்படைத்தனர்.துணை வேந்தர் விடுமுறையில் உள்ளதால் பதில் துணைவேந்தராக கடமையாற்றுகின்ற பேராசிரியர் சத்தியசீலன் தலைமையிலான குழுவினர் மாணவர்களை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.. Read more »

குடியிருந்த மக்கள் விரட்டியடிக்கப்பட்டு சுற்றுலா விடுதி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

பொதுமக்கள் விரட்டியடிக்கப்பட்ட யாழ். கொட்டடிப் பகுதியில் சுற்றுலா விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.1983 மே தொடக்கம் இங்கு குடியிருந்த 28 குடும்பங்கள் வலுக் கட்டாமயமாக இங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.அந்த இடத்தில் இன்று 250 மில்லியன் ரூபாவில் சுற்றுலா விடுதி அமைப்தற்கு இன்று... Read more »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளின் கொள்கைகளையே பின்பற்றுகின்றனர்: வட மாகாண ஆளுனர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகளே பின்பற்றி வருவதாக வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். Read more »

மேலும் 10 மாணவர்களை விசாரணைக்கு ஒப்படைக்கவும் – பயங்கரவாத தடுப்பு பொலிசார் கோரிக்கை! தொடரும் அச்சுறுத்தல்!

பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் மேலும் 10 மாணவர்களை விசாரணைக்கு ஒப்படைக்குமாறு பயங்கரவாத தடுப்பு பொலிசார் பல்கலைக்கழகத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரியவருகின்றது.இவர்களது பெயர்ப்பட்டியலை துணைவேந்தருக்கு அனுப்பியிரு்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more »

யாழ். மாணவர் கைது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் உடன் தேவை – சர்வதேச மன்னிப்புச் சபை

கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு உள்நாட்டில் மாத்திரமன்றி வெளி நாடுகளிலிருந்தும் இலங்கை அரசுக்கு அழுத்தங்கள் குவிந்து வருகின்றன. Read more »

தனியார் பேரூந்து சேவை புல்லுக்குளத்திற்கு மாற்றம்

யாழ். மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்து சேவைகள் யாவும் புதன்கிழமை முதல் புல்லுக்குளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார். Read more »