Ad Widget

திருநெல்வேலியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

தமிழ்நாடு - திருநெல்வேலி அருகே நேற்று (22) புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். அம்புலன்ஸ் வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கங்கைகொண்டான் கலைஞர் காலனியைச் சேர்ந்த இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் தியாகராஜன் (42வயது), சசிகுமார் (38 வயது)...

உண்மையில் மஹிந்தவுக்கு நடந்தது என்ன?

மாத்தறை - அகுரஸ்ஸ பிரதேசத்தில் பேரணி ஒன்றின் போது, முன்னாள் ஜனாதிபதி மக்களிடையே சென்று கொண்டிருந்த வேளை, அவரைப் பிடித்து இழுத்த சம்பவத்தை பயன்படுத்தி அரசாங்கம் அரசியல் இலாபம் தேட முற்படுவதாக, மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக இணைப்பாளர் ரோஹான் வெலிவிட தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தவறான விளக்கம் வழங்கப்படுவதால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக...
Ad Widget

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் யாழ் விஜயம்

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ் அரச அதிபர், உதவித் தேர்தல் ஆணையாளர், பிரதி வடமாகாண முதலமைச்சர் குருகுலராஜா உள்ளிட்ட பலரையும் சந்தித்திருக்கின்றனர். அத்துடன் சிவில் சமூசத்தின் பலதரப்பட்டவர்களையும் அவர்கள் சந்திக்கவுள்ளனர். இந்த தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைவருடன் இரண்டு முக்கிய உறுப்பினர்களும் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச்...

கொள்கைகளை ஏற்று இயக்கமாக செயற்பட அணிதிரளுங்கள் -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் மக்களின் உரிமைகளையும், தேவைகளையும் போராடி பெற்றுக் கொண்டதாக வரலாறு எமக்கு கற்பிக்கின்றது. தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சிந்தனையும் அதுவே மக்கள் மயப்படுத்தப்பட்ட இயக்கமாக நாம் உரிமைகளையும், எங்கள் தேவைகளையும் பெற்றுக் கொள்வோம் என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்கிழமை மாலை யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பின்போதே...

கிடைக்கப்பெற்ற பல வாய்ப்புகளை தவறவிட்டு வரலாற்றுத் துரோகமிழைத்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் – டக்ளஸ் தேவானந்தா

கிடைக்கப்பெற்ற பல வாய்ப்புகளை தவறவிட்டு வரலாற்றுத் துரோகமிழைத்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணம், பாசையூரில் நேற்றய தினம் (21) இடம்பெற்ற மக்கள் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் ஜனநாயக...

அக்குரஸ்ஸவில் வெளிப்பட்டது மஹிந்தவின் உண்மை முகம்

மாத்தறை அக்குரஸ்ஸ பகுதியில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றின் போது முன்னாள் ஜனாபதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர் ஒருவரைத் தாக்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் அகுரஸ்ஸ பகுதியில் நேற்று செவ்வாயக்கிழமை இடம்பெற்றது. இதன்போது ஆதரவாளர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதியின் கையினைப் பிடிக்க முற்பட்ட போது,...

தேர்தல் காலத்தில் பிணை வழங்குவது வன்முறைக்குத் தூண்டுகோலாக அமைந்துவிடும்!

கொலைக் குற்றச்சாட்டு சந்தேக நபர்களுக்கு தேர்தல் காலத்தில் பிணை வழங்குவது வன்முறைக்குத் தூண்டுகோலாக அமைந்துவிடும் எனக் கூறி, பருத்தித்துறை நீதிமன்றத்தின் கட்டளைப்படி விளக்கமறியலில் இருந்து வரும் இரண்டு சந்தேக நபர்களுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பிணை வழங்க மறுத்து கட்டளை பிறப்பித்துள்ளார். சின்னத்தம்பி திருச்செல்வம் என்ற நபரைக் கொலை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில்...

சட்டவிரோத கருக்கலைப்பால் இளம் குடும்ப பெண் மரணம்!

வவுனியாவில் சட்டவிரோத கருக்கலைப்பு காரணமாக குடும்ப பெண் ஒருவர் மரணமடைந்தமை தொடர்பில் வவுனியா வைத்தியசாலை சிற்றூழியரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது - சட்டவிரோதக் கருக்கலைப்புச் செய்தபோது ஏற்பட்ட அதிகரித்த இரத்த போக்கு காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண் ஒருவர் கடந்த சனிக்கிழமை மரணமடைந்தார்....

யாழில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞரைக் காணவில்லை!

மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞரை‍க் காணவில்லை என பெற்றோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக, யாழ். பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். யாழ். நாவற்குழி 300 வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் யூட் றொசான் (வயது 18) என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கடந்த மாதம் 15ம் திகதி தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு ஊசி போடுவதற்காக பெற்றோருடன் சென்ற நபர்,...

அந்த வௌ்ளை வேன் விடுதலைப் புலிகளுடையதே – கோட்டாபய ராஜபக்ஷ

மிரிஹான பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வௌ்ளை வேன் விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட வாகனம் என்று தகவல்கள் கிடைத்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த வேனின் இலக்கம் போலியானது எனவும் அவர் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர்...

தொழில் பேட்டைகள் அமைத்து இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு – ரணில்

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் சுதந்திர வர்த்த வலையங்கள் அமைத்து நகரங்களில் தொழில்பேட்டை அமைத்து இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். - இவ்வாறு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும் பிரசாரக் கூட்டமும் நேற்று செவ்வாய்க்கிழமை நகர பஸ்நிலையம் முன்பாக நடைபெற்றது....

வெள்ளைவானில் பிடிபட்ட மேஜர் ஜெனரலின் பாதுகாவலர்களுக்கு பிணை! – பின்னணி குறித்து சந்தேகம்.

மீரிஹானவில் வெள்ளை வான் ஒன்றில் துப்பாக்கியுடன் சிவிலுடையில் சென்று கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த படையினர் மூவரும் நீதிமன்றினால் நேற்றுமாலை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு 7.30 மணியளவில் மீரிஹான பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். சிவில் உடையில் இருந்த இவர்களிடம் இருந்து ஒரு...

கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் 25ஆம் திகதி வெளியிடப்படும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்றிரவு இறுதி செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 25ஆம் திகதி மருதனார் மடத்தில் இடம்பெறும் பரப்புரைக் கூட்டத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிக்கும்...

மஹிந்தவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கக்கூடாது! – இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

இந்த நாட்டை ஆள மீண்டும் மஹிந்தவுக்கு வாய்ப்பளிக்கக்கூடாது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்:- நாங்கள் இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளை வெற்றிகொள்வதற்காகவே ஒன்றிணைந்துள்ளோம். கடந்த ஜனவரி 8ஆம் திகதி வெற்றிகொண்ட ஜனநாயகத்தைத் தொடர்ந்து கொண்டுசெல்லவேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

வடக்கு, கிழக்கு மக்களை வாக்களிக்காமல் தடுத்திருந்தால் இன்றும் மஹிந்தவே ஜனாதிபதி! – கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்களது வாக்குகளை அளிக்க இடமளித்திருக்காவிட்டால் இன்றும் அவரே ஜனாதிபதியாக இருந்திருப்பார் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். எனினும், ஜனநாயகத்தை சிறப்பாக ஏற்படுத்தியதனாலேயே மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மஹிந்த ராஜபக்‌ஷ அவ்வாறு செய்திருக்காமல் சர்வாதிகாரியாக இருந்திருந்தால்...

வலி வடக்கு பாதுகாப்பு வலயத்தில் சிறிய பகுதியை விடுவிக்க இணக்கம்

வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் சொந்த இடங்களில் ஒரு சிறிய தொகுதியை விடுவிக்க படைத்தரப்பு இணங்கியுள்ளது. கீரிமாலை நகுலேஸ்வரம் பகுதியில் உள்ள மக்களுடைய சில வீடுகள் உள்ளடங்கிய வசாவிளானில் இருந்து வளலாய் வரைச் செல்லும் செமன்றி வீதி, சாந்தைச் சந்தியுடன் தொடுகையுறும் வீதிகள் மற்றும் அதனை அண்மித்த 27...

மஹிந்த எனக்கு பணம் தந்தார் என டக்ளஸ் கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அன்றைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவேண்டும் என்று கூறியே நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டேன். இத்தகைய நிலையில் எனக்கு மஹிந்த ராஜபக்‌ஷவினால் பணம் தரப்பட்டதாக டக்ளஸ் தேவானந்தாவால் கூறப்படுவதில் எந்தளவுக்கு உணமை உள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் இவ்வாறு...

17ஆவது சர்வதேச புகைப்பட கண்காட்சி மற்றும் போட்டிக்கான புகைப்படங்கள் கோரல்

17ஆவது சர்வதேச புகைப்பட கண்காட்சி மற்றும் போட்டிக்கான புகைப்படங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதியுடன் ஏற்றுக்கொள்ளும் திகதி நிறைவடையவுள்ளமையினால் உடனடியாக புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறு இலங்கை தேசிய புகைப்படச்சங்கம் வேண்டுகோள் விடுத்துளள்து. ஓகஸ்ட் 19ஆம் திகதி தேசிய மற்றும் சர்வதேச தெரிவுக்குழுவினர் அடங்கிய குழுவினால் படங்கள் தெரிவு செய்யப்படவுள்ளன. கண்காட்சி எதிர்வரும்...

துப்பாக்கி சகிதம் வெள்ளை வேனில் பயணித்த 3 இராணுவ வீரர்கள் கைது

மேஜர் ஜெனரல் ஒருவரின் பாதுகாப்புப் பிரிவில் உள்ளவர்கள் எனக் கூறப்படும் இராணுவ வீரர்கள் மூவர் மிரிஹான பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மிரிஹான பகுதியில் பயணித்த வேன் ஒன்றில் சந்தேகத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாணைகளை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 07.30 அளவில் குறித்த வேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப்...

வௌ்ளை வேன் விவகாரம் – மஹிந்த, கோட்டாபயவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் தங்கியிருக்கும் மிரிஹான பகுதியில், வௌ்ளை வேன் ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றியதாக தகவல் கிடைத்துள்ளது என, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். போலி இலக்கத் தகடு பதிக்கப்பட்ட குறித்த வேனை நேற்று முன்தினம் இரவு கைப்பற்றியுள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் சந்தேகத்திற்கிடமான முறையில் ஆயுதங்களுடன்...
Loading posts...

All posts loaded

No more posts