Ad Widget

 ரணிலுக்காக மஹிந்த பாடிய பாடல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், கொழும்பு ஹென்ரி பேதிரிஸ் விளையாட்டரங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இந்த விஞ்ஞாபன வெளியிடும் நிகழ்வில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பற்றி பாடல் ஒன்றை சிங்களத்தில்...

இபோச சொத்துக்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தத் தடை

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் ஊழியர்களை எந்தவொரு காரணத்திற்காகவும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என, உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தனவுக்கே அமைச்சர் இவ்வாறு அறிவுரை வழங்கியுள்ளார். இதன்படி இபோச பஸ்களில் வேட்பாளர்களின்...
Ad Widget

வடக்கு – கிழக்கு இணைப்பு கோரிக்கைக்கு எதிர்ப்பு

இலங்கையில் தீர்வாக வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பை வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு முன் வைத்துள்ள தேர்தல் அறிக்கைக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் பரவலாக எதிர்ப்பு தோன்றியுள்ளது. மூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணம் தொடர்ந்தும் தனி மாகாணமாகவே இருக்க வேண்டும் என்ற கருத்துகள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன. இனப் பிரச்சினைக்கு அதிகார...

உலகெங்கும் இணையம் -கூகிளின் பலூன் தொழில்நுட்பம்

இன்டர்நெட் இணைப்பினை பூமியின் மூலை முடுக்கெல்லாம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், சென்ற 2014 சூன் 15 அன்று, ஒவ்வொன்றும் 20 பவுண்ட் எடையுள்ள, 30 இணைய பலூன்களை பறக்க விட்டு சோதனை செய்துள்ளது கூகுள் நிறுவனம். இந்த இணைய பலூன்களில், சூரிய கல தகடுகளுடன், அன்ரெனாக்கள், கணினிகள், இலத்திரனியல் சாதனங்கள், ஜி.பி.எஸ். சாதனங்கள், மின்கலங்கள்...

யாழ்.வந்தார் ஜனாதிபதி மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இன்று பி.ப 1.30 மணியளவில் கைலாசபிள்ளையார் கோயிலுக்குச் சென்று அங்கு சிறப்பு வழிபாடுகளையும் மேற்கொண்டிருந்தார். மேலும் இன்றைய தினம் மாலை கிளிநொச்சியில் சதொச விற்பனை நிலையம் ஒன்றினையும் திறந்து வைக்கவுள்ளார். இதேவேளை தேர்தல் காலத்தில் ஜனாதிபதியின் வருகை அனைவரினதும் கவனத்தினை ஈர்ப்பதாகவும் அமைந்துள்ளது.

கூகுள் – இலங்கை அரசு ஒப்பந்தம்

நாடளாவிய ரீதியில் இணையத்தள வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு, இலங்கை அரசாங்கத்துடன் இணைய ஜாம்பவான கூகுள், ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தம் செயற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், அதி உயரத்தில் அமைக்கக்கூடிய 13 பலூன்களை கூகுள், இலங்கைக்கு வழங்கவுள்ளது. அதன்பின்னர், உலகிலகளாவிய ரீதியில் wifi இணைப்பைக் கொண்ட முதலாவது...

ராஜித, அர்ஜுன, ஹிருணிகா உள்ளிட்ட ஐவர் சுதந்திர கட்சியில் இருந்து நீக்கம்!

நல்லாட்சிக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். அதன்படி, இம்முறை தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து போட்டியிடும் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, எஸ்.பி.நாவின்ன, எம்.கெ.டி.எஸ்.குணவர்த்தன...

மஹிந்தவின் புதிய தேர்தல் வாக்குறுதி!

ஆறு மாத காலத்தினுள் புதிய அரசியலமைப்பு முறையொன்றை அறிமுகம் செய்வதோடு தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையை மாற்றியமைத்து புதிய தேர்தல் முறை ஒன்றையும் அறிமுகம் செய்து வைப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் "எதிர்காலத்திற்கான உத்தரவாதம்" என்ற தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (28)...

யாழ்.தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில் அநாமதேய வார்த்தைகள்

யாழ்.தொழில் நுட்பக் கல்லூரியில் நீண்ட காலமாக நிலவும் பல்வேறு குறைபாடுகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி மூன்றாவது வாரமாக மாணவர்களின் வகுப்புப் பகிஸ்கரிப்புப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஊடகங்களில் தொடர்ந்தும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் நேற்றய தினம் மதிய வேளையில் கல்லூரியின் வளாகத்தில் அநாமதேய சுவரொட்டியோன்று ஒட்டப்பட்டிருந்தது. சுவரொட்டியில் ‘புறா எச்சமும்...

எம்மிடம் வாக்குப் பிச்சை கேட்பவர்களே எமது கண்ணீர் உங்களுக்கு தெரியவில்லையா; காணாமல் போனவர்களது உறவுகள் நல்லூர் ஆலய முன்றலில் போராட்டம்

காணாமல் போனவர்களது உறவுகள் ஒன்று கூடி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நல்லூர் ஆலய முன்றலில் மேற்கொண்டு வருகின்றனர். தங்கள் பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரி இன்று காலை முதல் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை இப்போதாவது நிமிர்ந்து பார் அரசே, நல்லூர் கந்தனே எனது அப்பாவை மீட்டுத்தருவாயா? ,...

மஹிந்த பங்கேற்கவிருந்த கூட்டத்தில் சிறுபான்மையின நிறங்கள் அற்ற கொடி பறந்தது

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில், தேசியக்கொடியில் சிறுபான்மை இனங்களை பிரதிபலிக்கும் நிறங்கள் நீக்கப்பட்ட கொடிகள் பறக்கவிட்டிருந்த சம்பவமொன்று யட்டிநுவர பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (27) இடம்பெற்றிருந்தது. நடுவில் சிங்கமும் நான்கு மூலைகளில் அரச இலைகளும் மாத்திரம் உள்ளடக்கப்பட்டிருந்த மேற்படி கொடியை புகைப்படம் எடுத்த...

புலிகள் வீசிய குண்டு, கட்டுநாயக்கவில் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் உள்ள விமானப்படைத் தளத்தில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த குண்டு, கடந்த 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளினால் வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

தமிழர் உரிமைப் பிரச்சினைக்கு ஜனநாயகப் போராளிகள் முன் வைக்கப்போகும் தீர்வு என்ன?

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் முதலாம் திகதி சுதுமலையில் வெளியிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழர்களின் அரசியல் மாற்றத்துக்கு வித்திட்ட இடமான சுதுமலையில் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படும் என ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியினர் தெரிவித்தனர். தனி நாட்டுக் கோரிக்கையுடன் ஆயுதவழியில் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தத் தேர்தலில் ஜனநாயகப் போராளிகள்...

இந்தியாவில் இலங்கை மாணவியை காணவில்லை!

இந்தியாவின் கர்நாடக பிராந்தியத்தில் ஹோட்டல் முகாமைத்துவ பாடநெறியை மேற்கொண்டுவந்த இலங்கை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார். குறித்த மாணவி தங்கும் விடுதியில் வைத்து காணமால் போயுள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன. 26 வயதுடைய குறித்த மாணவி கடந்த 25ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக விடுதியின் முகாமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அன்றைய தினம் குறித்த...

த.தே.கூ.வின் ஆதரவாளர்கள் மீது பாடசாலை மாணவர்கள் தாக்குதல்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சி.சிவமோகனின் ஆதரவாளர்கள் மீது மாணவர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்துக்கு அண்மித்ததாக கண்டி வீதி வழியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சிவமோகனின் ஆதரவாளர்களான இளைஞர்கள் சிலர் நடந்து வந்துள்ளனர். இதன் போது...

என்றுமில்லாதவாறு இம்முறை பலப்படுத்திக் காட்டுங்கள் – எம்.ஏ.சுமந்திரன்

“2016ஆம் ஆண்டு அரசியல் தீர்வைப் பெறுவதற்கான ஆண்டாக இருக்க வேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை என்றுமில்லாதவாறு பலப்படுத்திக்காட்டுங்கள் வென்று தருவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். திருகோணமலையில் நடைபெற்ற த.தே. கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த 2010ஆம் ஆண்டு தேர்தலில்...

தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும்போக்கு விஞ்ஞாபனத்தை முன்வைத்திருக்கிறது – விஜயகலா குற்றச்சாட்டு

தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும்போக்கு ரீதியான தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்திருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் வேட்பு மனுவில் கடும்போக்கு ரீதியான கொள்கைகளே காணப்படுகின்றன. இது எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளுக்கு...

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தமிழரசுக் கட்சியின் எதேச்சாதிகாரம் பிரதிபலிப்பு – வித்தியாதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமே அக்கட்சிக்குள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எதேச்சாதிகாரத்தை வெளிக்காட்டப் போதுமானது. - இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் முன்னாள் விடுதலைப் புலிகள் போராளிகள் ஒன்றிணைந்து அமைத்திருக்கும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ந.வித்தியாதரன். யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் சுயேச்சைக் குழு 4 இல் சிலந்திச் சின்னத்தில் களமிறங்கியிருக்கும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைமை...

சுமந்திரனை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவது தமிழர்களின் கடமை – சம்பந்தன்

யாழ். மாவட்ட வேட்பாளர் சுமந்திரனை நாடாளுமன்றம் அனுப்புவது தமிழர்களின் கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பருத்தித்துறை நகரசபைத் தலைவர் சபா ரவீந்திரன் தலைமையில் பருத்தித்துறை நடராஜா கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து...

சிறுமி கொலை: சிறுவனை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி

கிளிநொச்சி உருத்திரபுரம், எள்ளுக்காடு, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரகுமார் ஜெரோசா (வயது 03) என்ற சிறுமியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சிறுமியின் ஒன்றுவிட்ட சகோதரனான 14 வயதுச் சிறுவனை 14 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், கிளிநொச்சி பொலிஸாருக்கு அனுமதி வழங்கினார். சிறுவனை பொலிஸார் நீதிமன்றத்தில்...
Loading posts...

All posts loaded

No more posts