மடிக்கணினி, ஆடு திருடியவர்கள் கைது!

ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பெறுமதியான மடிக்கணனியைத் திருடிய இருவர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more »

ஆலயத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

வல்வெட்டித்துறைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் நேற்றுக் காலை 9 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more »

தபால் மூலம் வாக்களிக்க ஒகஸ்ட் 2ம் திகதிவரை விண்ணப்பிக்கலாம்

எதிர்வரும் மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்காக தபால் மூல வாக்காளர் விண்ணப்பம் ஒகஸ்ட் 2ம் திகதிவரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. Read more »

உணவகத்திற்கு சீல் வைப்பு

சுகாதாரமற்ற நீரை உணவகத்தில் பயன்படுத்திய குற்றத்திற்காக மானிப்பாய் உடுவிலில், வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு நேற்று வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளது. Read more »

யாழ்.போதனாவைத்திய சாலையில் இராணுவத்தினர் இரத்த தானம்

512 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இன்று முற்பகல் 10 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. Read more »

மின்சாரசபையின் மின்தடை பற்றிய அறிவித்தல்

உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக 27.07.2013 சனிக்க்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை Read more »

உலக சுகாதார நிறுவனத்தால் யாழ் பொது நூலகத்திற்கு புத்தகங்கள், கணினி அன்பளிப்பு

உலக சுகாதார நிறுவனத்தால் யாழ் பொது நூலகத்திற்கு மருத்துவம் தொடர்பான புத்தகங்கள், கணினி என்பன நேற்று முன்தினம் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டன. Read more »

இலகு கடன் அடிப்படையில் தையல் இயந்திரம் வழங்கல்

நல்லூர் பிரதேச செயலர் பிரிவின் கிராம மாதர் அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் உற்பத்திதிறன் மேம்பாட்டு அமைச்சின் தொழில் வழிகாட்டல் பிரிவினால் நடத்தப்பட்ட பயிற்சி நெறிகளைப் பூர்த்திசெய்தவர்களுக்கு இலகு கடன் அடிப்படையில் தையல் இயந்திரங்கள் நேற்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. Read more »

இரா.சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோர் யாழ். விஜயம்!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சமபந்தன், வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர். Read more »

திருநெல்வேலியில் டிப்பர் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்து: மூவர் காயம்

திருநெல்வேலியில் நேற்று டிப்பர் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »

யாழில் மாணவிகள் இருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் கைது!

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் இருவரை துஸ்பிரயோகத்திறக்கு உட்படுத்தியமை தெடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read more »

கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட உள்ளூராட்சி சபைகளைப் பாராட்டிய தென்னிலங்கை குழுவிற்கு அச்சுறுத்தல்!

வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் உள்ள உள்ளூராட்சி சபைகள் சுதந்திரமாகவும், மிகவும் திறம்படவும் செயற்படுவதாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தென்னிலங்கை உள்ளூராட்சி Read more »

பருத்திதுறையில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பாரிய சுரங்கப் பாதை கண்டு பிடிப்பு

பருத்திதுறையையில் நகரையும் துறைமுகப் பகுதியையும் இணைக்கும் பாரிய சுரங்கப் பாதையென்று கண்டு பிடிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. Read more »

மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் உடனடியாக நிறுத்தி கொள்ளவும் – பொலிஸார்

யாழ் குடாநாட்டில் வரையரையின்றி நாளுக்கு நாள் மீற்றர் வட்டிக்கு கொடுப்போர் தொகை அதிகரித்துக் கொண்டு செல்வதினால் அதிகரித்த முறைப்பாடுகள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்படுகின்றது. Read more »

வலி வடக்கில் சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வேன்: சஜீவன்

வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கைக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் சன்முகலிங்கம் சஜீவன் தெரிவித்துள்ளார். Read more »

யாழ் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு 7076.47 மில்லியன் ஒதுக்கீடு

யாழ்.மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக கடந்த மூன்று வருடங்களில் 7076.47 மில்லியன் ரூபா பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. Read more »

ஜனவரி 1ம் திகதி முதல் மீனவர்களுக்கு பாதுகாப்பு அங்கி, காப்புறுதி கட்டாயம்

2014 ஜனவரி 1ம் திகதி முதல் கடலுக்கு மீன்படி தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் பாதுகாப்பு அங்கி அணிவது மற்றும் காப்புறுதி பெறுவது கட்டாயம் என மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more »

அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி!

அடுத்த வருடம் முதல் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களையும் காப்புறுதி செய்யவுள்ளதாக கல்வி சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. Read more »

யோகா, ஹிந்தி வகுப்புக்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்

யாழ். இந்திய துணைத்தூதரகம் யோகா மற்றும் ஹிந்தி, இசைக் கருவி வகுப்புக்களுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. Read more »

போலிநகைகளை அடகு வைக்க முயன்ற மூவர் கைது

வங்கியில் தங்கம் எனக் கூறி போலி நகைகளை அடகு வைக்க முயன்ற மூவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more »