Ad Widget

யாழ். யுவதியுடன் தங்கியிருந்த நபர் தொடர்பில் தகவல் தரவும்

கடந்த 29ஆம் திகதி புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்தில் பயணபொதியில் இருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பகின்றன. இது தொடர்பில் பொதுமக்களுக்கு தகவல்கள் தெரிந்தால் தம்மிடம் தெரிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். பொலிஸ் ஊடக பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர கூறுகையில், "கடந்த...

பொலிஸாரின் வற்புறுத்தலால் பெறப்பட்ட வாக்குமூலத்தை ஏற்க முடியாது! நீதிபதி இளஞ்செழியன்!!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதி ஒருவருக்குப் பொலிஸார் சொல்லச் சொல்ல அவர், தனது கைப்பட எழுதினார் எனக் கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஒரு சான்றாக ஏற்க முடியாது என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்து அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரித்துள்ளார். கடந்த 1995 ஆம் ஆண்டு அரச...
Ad Widget

சுகபோகமாக வாழ்ந்த வலி.வடக்கு மண்ணை விட்டு வெளியேற இராணுவத்தினர் விரும்பவில்லை!

இராணுவத்தினர் வலி.வடக்கு மண்ணில் நீண்டகாலம் உண்டு, உறங்கி வாழ்ந்து விட்டனர். தாங்கள் சுகபோகமாக வாழ்ந்த அந்த மண்ணை விட்டு வெளியேற இராணுவத்தினர் விரும்பவில்லை. - இப்படித் தெரிவித்திருக்கிறார் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன். நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் - நல்லூர் சங்கிலியன் தோப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்து கொணடு...

சர்வதேச சரித்திர வல்லுநர்களின் உதவியுடன் எமது அரசியலை ஆராய வேண்டும்! காலம் இதுவே என்கிறார் முதலமைச்சர்!!

அரசியல் ரீதியாகப் எம்மைப் பற்றி நாம் ஆராய வேண்டிய காலத்தை எட்டியுள்ளோம் என்றே கூறவேண்டும். அதாவது இதுவரை காலமும் எமது நாட்டின் சரித்திரம் தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காகத் தொடர்ந்து வந்த அரசாங்கங்களினால் பிறழ்வாகவும் - தவறாகவும் எழுதப்பட்டு உண்மைக்குப் புறம்பான சரித்தர செய்திகள் எமது மாணவ சமுதாயத்திற்குக் கூறப்பட்டு வந்துள்ளன. உண்மை என்ன என்பதை ஆராய்ந்து...

முன்னாள் போராளிகளை கொச்சைப்படுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பு – வித்தியாதரன் ஆவேசம்

முன்னாள் தமிழீழ விடுதலை புலிகளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புறந்தள்ளி சர்வதேச நிகழ்சி நிரலுக்கு அமைய செயற்படுகின்றது என ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வித்தியாதரன் தெரிவித்தார். எதிர்காலத்தில் தமிழ் கட்சிகளுடனோ அன்றேல் அரசுடன் இணைந்து ஜனநாயக போராளிகள் கட்சி செயற்படவிருக்கிறதா என வினவியமைக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்பது தமிழீழ விடுதலைப்புலிகளால்...

சாவகச்சேரியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் கைது ! நடந்ததென்ன?

1981 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் சட்டம் வீட்டிற்கு வீடு சென்று வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வதை தடுக்கின்றது (ஆதரவாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய தடை இல்லை). அத்தோடு பொது இடங்களிலும் பிரச்சாரம் செய்வதை தடுக்கின்றது. ஆனால் அண்மையில் கட்சிகள் யாவற்றினதும் சம்மதத்துடன் மக்களுக்கு இடையூறு இல்லாமல் பொது இடங்களில் பிரச்சாரம் செய்வதை அனுமதிக்கும் அறிவித்தலை தேர்தல் ஆணையாளர்...

ரவியின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி; 11 பேர் காயம்

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு ப்ளூமணெ்டல் வீதியில் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இரண்டு வேன்களில் வந்த சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த 12 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனையடுத்து காயமடைந்த...

சாவகச்சேரியில் மக்களை சந்திக்க சென்ற த.தே.ம முன்னணி ஆதரவாளர்கள் நால்வர் கைது செய்யப்பட்டு விடுதலை மேலும் பலர் பொலிஸ் காவலில்!

31.07.2015 இன்று காலை சாவகச்சேரி மக்களை சந்தித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர்களும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த சட்டத்தரணி மணிவண்ணன் ஆதரவாளர்களும் அங்குள்ள மக்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த பொலிசார் தேர்தல் பிரச்சாரங்களை உடனடியாக நிறுத்தி சாவகச்சேரியிலிருந்து வெளியேறுமாறு பணித்தனர். சட்டத்துக்கு புறம்பான முறையில் பொலிசார் அராஜகம் செய்ய முடியாது என...

ஒரு நாடு இருதேசம் -அர்த்தமற்ற கொள்கை! – சிவிகே காட்டம்

இருதேசம் ஒரு நாடு என்பது ஒரு அர்த்தமில்லாத கோசம் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து நவாலியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் 2015ம் ஆண்டின் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி இருதேசம்...

போதைப்பொருளை ஒழிப்பதற்கான யாழ்.மாவட்ட நீதிபதிகளின் நடவடிக்கைகளில் மேல்நீதிமன்றம் தலையீடு செய்யாது

சமூக நலன்களுக்கு விரோதமாக கலாசார சீரழிவை ஏற்படுத்தும் வகையில் அதிகரித்துள்ள போதைப்பொருளை அடியோடு இல்லாமல் ஒழிப்பதற்காக யாழ்.குடாநாட்டு மாவட்ட நீதிபதிகள் எடுக்கும் நடவடிக்கைகளில் அநாவசியமாக மேல் நீதிமன்றம் தலையீடு செய்யமாட்டாது என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவித்துள்ளார். 26 கிலோ மற்றும் 141 கிலோ அளவிலான கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தமைக்காக, இரண்டு வெவ்வேறு...

மக்கள் முழுமையமான அரசியல் பலத்தை தரும் பட்சத்தில் மேலும் பல மக்கள் நலன்சார்ந்த பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க நாம் தயாராக இருக்கின்றோம் – டக்ளஸ் தேவானந்தா

மக்களை ஒருங்கிணைத்து கிராமங்களை மட்டுமல்லாது பிரதேசம், மாவட்டம் என மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதே எமது நோக்கமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். நாவற்குழி அற்புத அன்னை சனசமூக நிலையத்தில் இன்றைய தினம் (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...

கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட பெண் யாழ்.வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர்

கொழும்பு புறக்கோட்டை பஸ்ரியன் வீதியில் பயணப்பொதி ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணுடைய சடலம் எனத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதான கார்த்திகா என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஊடகங்களில் வெளியான புகைப்படங்களை பார்வையிட்ட குறித்த பெண்ணின் கணவர்,...

உள்ளகப் பொறிமுறையில் தீர்வுகாண தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தயாரில்லை – சுமந்திரன்

தமிழர் பிரச்சினைக்கு உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலம் தீர்வு காண தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணங்கியுள்ளதாகப் பொய்யான பிரச்சாரம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன். யாழ்ப்பாணம் - உசன் ஸ்ரீமுருகன் விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்றிரவு (வியாழக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்...

யாழ்ப்பாணத்தில் இறப்பர் பாதணிகள் உற்பத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆரம்பித்து வைத்தார்

யாழ்ப்பாணத்தில் இறப்பர் பாதணிகளின் உற்பத்தியை வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று வியாழக்கிழமை (30.07.2015) ஆரம்பித்து வைத்துள்ளார். வட்டு கிழக்கு சித்தங்கேணியில் இயங்கும் அந்திரான் ஜனசக்தி தோற்பொருள் உற்பத்தியாளர் விற்பனைக் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் பெண்களுக்கான ஒரு தொழில் முயற்சியாகவே இந்த இறப்பர் பாதணிகள் உற்பத்தி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கூட்டுறவு...

ஆட்சிமாற்றத்திற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி நிபந்தனையுடன் ஆதரவு கொடுக்க தயாராக இருந்தனர் இதை நிராகரித்தமையால் பகிஸ்கரித்தனர் – கஜேந்திரகுமார்

ஆட்சிமாற்றத்திற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி நிபந்தனையுடன் ஆதரவு கொடுக்க தயாராக இருந்தனர் இதை நிராகரித்தமையால் பகிஸ்கரித்தனர் ஆனால் கூட்டமைப்பு நிபந்தனையற்று ஆதரவு கொடுத்தனர் இதன் மூலம் ஏதோ ஒரு வகையில் வெளிநாடுகளால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிமாற்றதில் தமிழ் மக்கள் தீர்வு குறித்து ஏற்பட்டிருக்கக்கூடிய நன்மையினை இழந்தனர்.எதிர்காலத்தில் இலங்கை அரசு மட்டுமல்ல கூட்டமைப்பும் தமிழ் மக்களிற்கு இழைத்த துரோகத்திற்கு பதிலளிக்க...

விவாகரத்தின் பின்னர் தாலி யாருக்கு சொந்தம்?விசித்திர வழக்கில் விநோத தீர்ப்பு !

யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒன்றுக்கு எதிராக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, அம்மி மிதித்து, அருந்ததி காட்டி, மந்திரம் ஓதி பெரியோர் முன்னிலையில் கட்டப்பட்ட தாலி, விவாகரத்தின் பின்னர் யாருக்கு சொந்தம்? – என்ற கேள்வி எழுந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு...

பேஸ்புக் குழுவுடன் ஜனாதிபதி மைத்திரி சந்திப்பு

முகநூல் (Facebook) சமூக வலைதளத்தின் தெற்காசியாவவுக்கான பொதுக்கொள்கைப் பணிப்பாளர் அன்கி தாஸ் தலைமையிலான ஒரு முகநூல் குழுவினர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து, நாட்டின் முன்னேற்றத்திற்கான ஜனாதிபதியின் முயற்சிகளை முன்னெடுப்பதில் முகநூலை வினைத்திறன்மிக்க வகையில் பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடினர்.

புறக்கோட்டையில் பயணப் பொதியில் தமிழ் பெண்ணின் சடலம் – அடையாளம் காண பொது மக்களிடம் உதவி கோரல்

கொழும்பு - புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் ஒரு தமிழ் பெண் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் குறித்த சடலம் பயணப் பொதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் அனுராதபுரம் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் இருந்து இந்த சடலம் மீட்கப்பட்டது. எனினும் சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை....

பெரும்பான்மை சமூகத்தின் தேவையை நிறைவேற்றும் அதிகாரம் எமது கைக்கு வரும் – சம்பந்தன்

எதிர்காலத்தில் பெரும்பான்மை சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அதிகாரம், எமது கைக்கு வருமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மூதூரில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதற்கான முதல் அடியை அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென அவர் குறிப்பிட்டார்....

பிள்ளைகளின் செயற்பாடுகளை உன்னிப்பாக கவனியுங்கள் , பெற்றோர்களுக்கு பொலிஸாரின் ஆலோசனை

யாழ்.குடாநாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாராகிய நாம் என்றும் தயாராக இருக்கின்றோம் என யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யு.கே.வூட்லர் தெரிவித்தார். சிறுவர் துஸ்பிரயோகத்திலிருந்து பிள்ளைகளை பாதுகாப்பது தொடர்பில் விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் இடம்பெற்றது. அதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர்...
Loading posts...

All posts loaded

No more posts