வயிற்றில் பஞ்சுப் பொதியை வைத்து தைத்த டாக்டருக்கு எதிராக நஷ்டஈட்டு மனு

கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கும், அதன் வைத்தியர்கள் சிலருக்கும் எதிரான 100 மில்லியன் ரூபா அபராதம் கேட்டு களனிப் பிரதேச இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்று (14) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். தனது இரண்டாவது பிள்ளையின் பிரசவத்தின் பின்னர்... Read more »

எட்டி உதைத்த பிள்ளையை செருப்பால் அடித்த வைத்தியர்!

தனது தாயின் மடியிலிருந்த பிள்ளையொன்று, வைத்தியரை, இரண்டு முறை உதைத்ததால் ஆத்திரமடைந்த வைத்தியர், அக்குழந்தையை எட்டி உதைத்ததுடன், செருப்பில் அடித்த சம்பவமொன்று மொறட்டுவை பகுதியில் இடம்பெற்றுள்ளது. மொறட்டுவை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்திய நிலையமொன்றை நடத்திச் செல்கின்ற வைத்தியரே இவ்வாறு மிகமோசமான முறையில் நடந்துகொண்டுள்ளார்... Read more »

தீர்வையற்ற வாகனங்களை வேறு நபர்களுக்கு விற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவர்கள் தான்!!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரிச்சலுகையைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வேறு நபர்களுக்கு கைமாற்றம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. சிறீலங்காவில் கடந்த 3ஆம் நாள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திடமிருந்து,... Read more »

மனைவியை கத்தியால் வெட்டிய கணவன்!

குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி மீது கணவன் கத்தி வெட்டு தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் சாவகச்சேரியில் பதிவாகியுள்ளது. உதயசூரியன், கச்சாய் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், இராகுலன் சுகந்தி (வயது 30) என்ற பெண்ணே, தலையில் வெட்டுக்காயங்களுக்கு இலக்கான நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.... Read more »

நன்னீர் கிணறு கழிவுநீர் தொட்டியாக மாற்றம்! பொலிஸார் மீது குற்றச்சாட்டு!

வல்வெட்டித்துறை காவல் நிலையதிற்கு பின்னால் உள்ள தனியார் காணியில் உள்ள நன் நீர் கிணறினை காவல் நிலைய கழிவு நீர் தேக்கி வைக்கும் குழியாக மாற்றி வைத்திருப்பதால் கிணறு மாசடைந்து காணப்படுவதாக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். நேற்றய தினம் யாழ் மாவட்ட... Read more »

யாசகத்திற்கும் 5000 ரூபா அபராதம்?

நாட்டில் தற்போது யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்தே செல்கின்றது எனலாம், அத்துடன் இவர்கள் தற்போது வீடுகளுக்கு சென்றும் பேருந்துகளிளும் ஏறி யாசகம் செய்து வருகின்றனர். இவ்வாறு பேருந்துகளில் ஏறி யாசகம் செய்பவர்களின் எண்ணிக்கை சுமார் 10 ஆயிரம் பேர் ஆக இருக்கக்கூடும் என அகில இலங்கை... Read more »

தரம் 6 மாணவியின் பாடசாலை அனுமதிவிடயத்துக்கு சுமூகமான தீர்வு

கிளிநொச்சி – உதயபுரத்தை சேர்ந்த தரம் 06 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் நீண்ட நாட்களாக பாடசாலை அனுமதியின்றி அலைந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. குறித்த குடும்பத்தாருடன் இது தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் அம்மாணவியை கிளிநொச்சி மகா... Read more »

அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்

கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்தவர் நாகராஜன் கனுசியா. இவர் தரம் ஜந்து வரை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஜந்து வரைக்குமே வகுப்புகள் உள்ளன. அதுவொரு ஆரம்ப பாடசாலை. 2016 இல் கிளிநொச்சி மத்திய... Read more »

சிரேஸ்ட வைத்திய அதிகாரிகளின் அடாவடி! பெண் வைத்தியர் தற்கொலை முயற்சி!!

வவுனியா வைத்தியசாலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் புதிதாக நியமனம் கிடைக்கப்பெற்று பணிபுரியும் பெண் வைத்தியர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வெளிநாட்டில் படித்துவிட்டு பெண் நோயியல் பிரிவில் புதிதாக நியமனம் கிடைக்கப்பெற்று வவுனியா... Read more »

வவுனியாவில் புதிதாக திறக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையத்தில் எழுத்துப்பிழை

வவுனியாவில் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் மத்திய போக்குவரத்து அமைச்சரினால் உத்தியோக பூர்வமாகத்திறந்து வைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் தமிழ் எழுத்துப்பிழை காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பெருமளவில் தமிழர்கள் வாழ்ந்துவரும் வவுனியா மாவட்டத்தில் மத்திய அரசாங்கத்தினால் இவ்வாறான தமிழ் பிழைகள் இடம்பெற்றுள்ளமையானது வருந்தத்தக்கதென... Read more »

வவுனியாவில் காணாமல்போன கிணறு கண்டுபிடிப்பு

வவுனியா நகரின் பிரதான வீதியிலிருந்த குளாய்க்கிணறு இன்று வவுனியா நகரசபையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வவுனியா நகரசபையின் செயலாளர் ஆர். தயாபரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, கடந்த வாரம் வவுனியா நகரின் பிரதான வீதியின் அருகே காணப்பட்ட பொதுக் கிணறு ஒன்று காணாமல் போயுள்ளதாக... Read more »

யாழ் வந்த புகையிரதத்தில் கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டகாசம்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதமொன்றில் மிதி பாலகையில் பயணித்த இளைஞர்கள் சிலர் பகிரங்கமாக சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளார்கள். புகையிரதத்தில் பயணிக்கும் இவர்கள் கஞ்சாவினை பயன்படுத்தியுள்ளனர். மேலும் புகையிரதம் நிறுத்தப்படும் இடங்களில் வெளியில் செல்லும் பெண்களிடம் முறையற்ற விதத்தில்... Read more »

கிணற்றை காணவில்லை என முறைப்பாடு

வவுனியா நகரின் மத்தியிலுள்ள இராணுவத் தளபதி கொப்பாகடுவவின் சிலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த குழாய்கிணறு ஒன்றை சில வருடங்களாக காணவில்லையென வவுனியா நகரசபை செயலாளரான ஆர்.தயாபரனிடம் சமூக நலன்விரும்பி ஒருவரால் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பாக தெரியவருவதாவது, கடந்த பல வருடங்களுக்கு முன்பு வவுனியா... Read more »

வித்தியாவின் கொலைச் சந்தேக நபர்கள் ஏனைய கைதிகளுக்கு அச்சுறுத்தல்!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள், அங்கிருக்கும் ஏனைய கைதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவி வித்தியாவின் படுகொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட சுவிஸ்குமார் உள்ளிட்ட சந்தேக நபர்கள் வவுனியா... Read more »

யாழில் பெண்களிடம் சில்மிஷம் செய்த பொலிஸ் புலனாய்வாளருக்கு எதிராக முறைப்பாடு

யாழில் பல பெண்களிடம் தகாத முறையில் நடப்பதற்கு முயற்சித்த பொலிஸ் புலனாய்வாளர் ஒருவருக்கு எதிராக யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ். நகர் முனியப்பர் வீதியிலுள்ள விற்பனை நிலையமொன்றில் பணியாற்றும் இளைஞன் ஒருவரை நேற்று கைதுசெய்து அழைத்துச் சென்ற 45 வயது மதிக்கத்தக்க... Read more »

ஒரே இனம், ஒரே நாடு, ஒரே கொடியின்கீழ் பணியாற்றுவேன், புதிதாகப் பணியேற்பவர்களிடம் கையொப்பம்!

இலங்கையில் ஆட்சிசெய்யும் நல்லாட்சி எனப்படும் சிங்கள அரசினால் புதிதாக அரச கடமைகளைப் பொறுப்பேற்கும் அரச உத்தியோகத்தர்களுக்கான சுற்றுநிருபம் தமிழ் மொழியில் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அதில் அனைவரையும் கையெழுத்திட்டு அவர்களது பணியை ஆரம்பிக்குமாறும் பணிக்கப்பட்டிருந்தது. குறித்த அந்த ஆவணத்தில் இன்று ஆரம்பிக்கும் புத்தாண்டில், ஒரே நாட்டின், ஒரே... Read more »

நுண் கடன் செலுத்த முடியாது மூன்று பிள்ளைகளின் தாய் தற்கொலை

நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட நுண் கடனை திருப்பிச் செலுத்த முடியாது மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவா் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் நேற்று மாலை முல்லைத்தீவு விசுவமடு இளங்கோபுரம் மூன்றாம் திட்டம் தேராவில் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்கொலை செய்யும் முன் அவா்... Read more »

நத்தார் தினத்தில் வறுமையில் வாழும் முதியவர்களுக்கு, பெண்களின் உள்ளாடைகளை வழங்கிய கொடை வள்ளல்கள்!

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் நேற்று 25-12-2016 நத்தார் தினத்தில் முதியவர்களுக்கு பொதிகள் வழங்ப்படுவதாக அறிவித்து அந்த கிராமத்தில் வாழ்கின்ற 136 முதியவர்களை அங்கு பொதுநோக்கு மண்டபத்திற்கு அழைத்துள்ளனர். காலை பத்து மணிக்கு குறித்த கிராமத்தில் வாழ்கின்ற நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்கள் இயலாத நிலையிலும் பொது... Read more »

பிள்ளைகளுக்கு கொப்பி வாங்க முடியவில்லை : தாய் தற்கொலை முயற்சி!!

தனது பிள்ளைகளுக்கு பாடசாலைக் கொப்பிகளை வாங்கொடுக்க முடியவில்லை என்று கூறி, நில்வலா ஆற்றின் நடுவில் நடந்துச் சென்ற பெண்ணை, பொலிஸார் காப்பாற்றியுள்ளர். மாத்தறை, கன்தர, நாவோதுன்ன பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணே, இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு புதிய வகுப்புச் செல்லவுள்ள தன்னுடைய... Read more »

வடக்கு மக்களுக்கான நவீன சத்திரசிகிச்சை பிரிவிற்கு சில வைத்தியர்கள் எதிர்ப்பு

வெளிநாடுகளில் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள அதிநவீன சத்திரசிகிச்சை கூடத்திற்கு யாழ்ப்பாணத்திலுள்ள சில வைத்திய நிபுணர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதனால் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்திற்கு கிடைக்கவுள்ள மிகச் சிறந்த வைத்திய கூடம் திரும்பிச்செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. குறித்த வைத்தியசாலை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படுமாக... Read more »