திருநெல்வேலி வைத்தியசாலையில் பாதிக்கப்பட்டவர்கள் கொழும்புக்கு

யாழ். திருநெல்வேலியிலிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கண் புரை நீக்கி சத்திரசிகிச்சை மேற்கொண்டபோது, கண்ணில் கிருமித் தொற்று ஏற்பட்டமையால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேரில், ஐந்து பேரை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த தனியார் வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை... Read more »

யாழ். தனியார் வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை செய்த ஒன்பது பேருக்கு கிருமித் தொற்று!

யாழில். உள்ள பிரபல தனியார் வைத்திய சாலையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்ட ஒன்பது பேர் கண்ணில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். யாழில்.உள்ள பிரபல தனியார் வைத்திய சாலையில் கடந்த சனிக்கிழமை காலை கண்ணில் ” கற்ராக் ” சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்... Read more »

மனைவியை கிணற்றுக்குள் தள்ளி படுகொலை செய்ய முயற்சித்த கணவருக்கு விளக்கமறியல்!

யாழ்.ஊர்காவற்துறை பகுதியில் மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டு கிணற்றுக்குள் தள்ளி படுகொலை செய்ய முயற்சித்த கணவனை எதிர்வரும் 02ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்க ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். யாழ்.ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாரந்தனை பகுதியில் நேற்று முன்தினம்... Read more »

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 19 இலட்ச ரூபாய் மோசடி!! : பெண்கள் ஐவருக்கு விளக்கமறியல்!!

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி வங்கி கணக்கில் இருந்து 19 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த பெரும்பான்மையின பெண்கள் ஐவர் விளக்கமறியலில் வைக்கபட்டு உள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் வெளிநாடு செல்வதற்காக தென்னிலங்கை முகவர் நிறுவனம் ஒன்றின் ஊடாக நுழைவு விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார்.... Read more »

நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனை மீளச் செலுத்த முடியாமல் குடும்பப் பெண் தற்கொலை!

நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்ற கடன்களை மீளச் செலுத்த முடியாமல் இளம் குடும்பப் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். திங்கட்கிழமை 16.10.2017 இடம்பெற்ற இச்சம்பவத்தில் வினாசியர் வீதி, சந்திவெளியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான 26 வயதுடைய செல்வம் யோகேஸ்வரி... Read more »

மெய்ப்பாதுகாவலரிடம் தனது பாதணியை சுத்தம் செய்யக்கொடுத்த பொலிஸ் மா அதிபர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் பூஜிதஜெயசுந்தர யாழ்ப்பானம் இந்துக் கல்லூரி வீதியில் பலர் மத்தியில் தான் அணிந்திருந்த பாதணியை அவருடைய மெய்ப் பாதுகாவலர் மற்றும் அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் சுத்தம் செய்யக் கொடுத்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. யாழ்ப்பாணத்துக்கு விஜயம்... Read more »

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டவர் மரணம்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் இருந்து ஒருவர் தள்ளிவிடப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த ரயிலில் பயணித்த இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலே, இவ்வாறு கொடூரத்தில் முடிவுற்றுள்ளது. ராகம மற்றும் ஹொரப்பே ரயில் நிலையங்களுக்கு இடையே குறித்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் சடலம்... Read more »

தமிழர் தாயகத்தில் சர்ச்சைக்குரிய சுவரொட்டி! : திட்டமிட்ட சதியா?

எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு தமிழ் மக்கள் யாவரும் இந்துக்களின் கடைகளில் பொருட்களை வாங்கவேண்டுமென குறிப்பிட்டு வவுனியாவில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. குறித்த சுவரொட்டிகளில் சிவசேனா அமைப்பின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவ் அமைப்பு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. ஒரு பொருள் வணிக நிறுவனத்துக்கு... Read more »

காதலரை மந்திரத்தால் வீழ்த்தும் முயற்சி! : தமிழ் பெண் மந்திரவாதி உள்ளிட்ட மூவர் கைது!

காதலரை மந்திரத்தால் வீழ்த்தும் முயற்சிக்காக நடைபெற்ற கொள்ளைச்சம்பவம் தொடர்பில் தமிழ் பெண் மந்திரவாதி உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வீடொன்றில் 670,000 ரூபா பணம் திருடியமை தொடர்பில் அந்த வீட்டின் பணிப்பெண் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய அதனுடன் தொடர்புடைய தமிழ்... Read more »

யாழில்.வங்கிக் கடனை செலுத்த முடியாமல் கிணற்றினுள் ஒழிந்திருந்த பெண்!

வங்கிக் கடனை செலுத்த முடியாத நிலையில் வங்கி ஊழியர்களுக்கு பயந்து நான்கு மணி நேரம் பெண் ஒருவர் கிணற்றுக்குள் ஒழிந்திருந்த சம்பவம் வடமராட்சி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி பகுதியில் குடும்பநிலை காரணமாக நிதி நிறுவனத்திடம் இருந்து கடனை பெற்று வாராந்தம் அதற்குரிய பணத்தைச் செலுத்தி... Read more »

தாயை அடித்து கிணற்றுக்குள் வீசிக் கொன்ற மகன் கைது

யாழில் தாயை கட்டையால் தாக்கியதுடன், கிணற்றுக்குள் வீசி கொலை செய்த மனநிலை பாதிக்கப்பட்ட மகன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – இராசாவின் தோட்டம் பகுதியில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது. 70 வயதுடைய செ.ரத்னாம்பிகை என்ற பெண்னே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் மனநலம்... Read more »

சைவச் சிறுவர் இல்லத்தில் சிறுவர் சித்திரவதை இடம்பெறவில்லை : இல்லத் தலைவர்

கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற மகாதேவ சைவ சிறார் இல்லத்தில், சிறுவர்கள் எவரும் தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படவில்லை என கிளிநொச்சி மகாதேவ சைவச் சிறுவர் இல்லத் தலைவரும் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசு அதிபருமான தி. இராசநாயகம் தெரிவித்துள்ளார். மகாதேவ சைவச் சிறுவர் இல்லத்தில் மாணவர்கள்... Read more »

மிளகாய்த் தூள்வீசி சங்கிலி அறுப்பு!

புதுக்குடியிருப்பு 8 ஆம் வட்டாரப்பகுதியில் தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர் தினநிகழ்விற்கு சென்று வந்த மாணவி மீது மிளகாய்த் தூள்வீசிவிட்டு திருடர்கள் தங்கச்சங்கிலியினை அபகரித்துக்கொண்டு சென்றுள்ளார்கள். புதுக்குடியிருப்பு மந்துவில் 8 ஆம் வட்டாரப்பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர்தின நிகழ்வில்... Read more »

கிளிநொச்சி சிறுவா் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள் வைத்தியசாலையில்!!!

கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற மகாதேவ சைவ சிறார் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள் சிறுவா் நன்நடத்தை மற்றும் சிறுவா் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் குறித்த ஜந்து சிறுவா்களும் மின்சார வயர் மற்றும் ஹொக்கி பட் போன்றவற்றால் தாக்கப்பட்டுள்ளனா்... Read more »

தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளுக்­கான நிரந்­தர நிய­ம­னத்தை இடைநிறுத்தியது வடக்குமாகாணசபை!

வடக்கு மாகா­ணத்­தில் 182 தொண்­டர் ஆசி­ரி­யர்­களை மட்­டும் ஆசி­ரி­யர் சேவைக்­குள் உள்­ளீர்ப்­ப­தற்கு கொழும்பு கல்வி அமைச்­சால் வழங்­கப்­பட்ட அனு­மதி தொடர்­பில் வடக்கு மாகாண சபை சீராய்வு செய்த பின்­னரே அவர்­க­ளுக்கு நிய­ம­னம் வழங்­கப்­ப­டும் என்று அறி­விக்­கப்­பட்­டது. வடக்கு மாகாண சபை­யின் 107ஆவது அமர்வு அவைத்­த­லை­வர்... Read more »

முகநூலால் முகமுடைந்த அரச ஊழியர்

கிளிநொச்சி நகரில் உள்ள உள்ளுராட்சி அலுவலகம் ஒன்றுக்குள் நுழைந்த பெண் ஒருவர் அங்கிருந்த ஆண் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். குறித்த பெண் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் இராணுவத்திற்கும் இடையில் தகவல்களை பரிமாறுவதாக தெரிவித்து போலி முகநூல் ஒன்றில் ஆண் உத்தியோக்தர் தகவல்களை பதிவேற்றியுள்ளார்.... Read more »

கின்னஸ் சாதனை படைத்த மணமகளுக்கு வந்த சோதனை!

உலகின் நீளமான திருமணச்சேலை எனும் கின்னஸ் சாதனைப் புரிவதற்காக 250 பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. கண்டி, கண்ணொருவ பிரதேசத்தில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) குறித்த திருமண வைபவம், மத்திய மாகாண முதலமைச்சர்... Read more »

கண்டியில் நடந்த உலக சாதனை திருமணம்!

கண்டியில் நேற்று நடைபெற்ற திருமணம்ஒன்றில் மணப்பெண் உலக சாதனைபடைத்துள்ளார்.மணமகள் 3,200 மீற்றர் நீளமான ஒசரிபுடவையை அணிந்து சாதனையை பதிவுசெய்துள்ளார்.. நேற்று முற்பகல் இந்த தம்பதியினர்கன்னொருவ சந்திக்கு வந்த பின்னர்,கின்னஸ் சாதனையை கண்காணிக்கும் குழுமுன்னிலையில் , ஒசரி புடவையின் நீளம்அளவிடப்பட்டுள்ளது. குறித்த புடவை கண்டி கெடம்பே... Read more »

பிட்டுக்குள் கஞ்சா!! கோழிக் குழம்பில் ஹெரோயின்!

யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் சம்பவங்கள் அண்மைய காலமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக, யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது சகோதரனுக்கு போதைப்பொருளை எடுத்துச் சென்ற ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைதுசெய்த பொலிஸார், நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான்... Read more »

யாழ் போதனா வைத்திய சாலையில் 10 குட்டிகளைப்போட்ட பாம்பினால் பரபரப்பு!

பாம்புக் கடிக்கு இலக்காகிய ஒருவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தன்னைத் தீண்டிய பாம்பை போத்தலில் அடைத்து வைத்தியசாலைக்கு எடுத்துவந்த சில நிமிடத்தில் அந்தப் பாம்பு போத்தலுக்குள் 10 குட்டிகளைப் போட்டதால் வைத்தியசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யாழ்ப்பாணம் காரைநகரில் நேற்று... Read more »