மகனைக் கற்க வைப்பதற்காக பரிதாபமாக உயிர் விட்ட தாய்

மகன் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்லாததால் அவனை மிரட்ட முற்பட்ட தாய் ஒருவர் பரிதாபகரமாக தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் சுன்னாகம், சூராவத்தையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த ந.சிவசோதி என்பவரே உயிரிழந்தவராவார். சிவசோதி மகனை தனியார் கல்வி நிலையத்துக்குச்... Read more »

அரசியல் – முரண்பாடுகளுக்காக பாடசாலை தண்ணீர்த்தாங்கியில் விசக்கலப்பு

யாழ்.ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய தண்ணீர் தாங்கியில் விஷமிகள் விஷத்தினை கலந்ததால் அதனை பருகிய 27 மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஷம் கலந்த நீரினை பருகிய மாணவர்கள் உடனடியாக தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லபட்ட மாணவர்களில் 26 பேர் மேலதிக... Read more »

இலங்கை அணி தோல்வி : வாள்வெட்டில் இருவர் படுகாயம்!

இலங்கை அணியின் தோல்வியை அடுத்து கிளிநொச்சியின் முழங்காவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்தனர். நேற்றுப் புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்க்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- உலகக்கிண்ண காலிறுதிப்... Read more »

வெதுப்பகத்தை யார் நடத்துவது? கேள்வியால் திறந்த தினமே மூடப்பட்டது!

வவுனியா, பிரமனாலங்குளம் பகுதியில் வடமாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சினால் திறக்கப்பட்ட பேக்கரி அன்றைய தினமே மூடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின், வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் 1.5 மில்லியன்... Read more »

மகனைக் கொன்ற யானைகளுக்கே விளைச்சலை தானம் செய்த விவசாயி

கிராமங்களில் மண்ணையும் மரங்களையும் நேசித்து இயற்கையோடு ஒட்டி வாழ்பவர்கள் விவசாயிகள். விவசாயிகளுக்கும் இறுதி ஆசைகள் உண்டு. ஆனால் அந்த ஆசைகளும் இயற்கையோடு ஒட்டியே பெரும்பாலும் அமைந்துவிடுகின்றன. இலங்கையில் மத்திய மாகாணம், தம்புள்ளை நகருக்கு அருகே இருக்கின்ற சீகிரிய பிரதேசத்திலிருந்து சற்றுத் தொலைவில் இருக்கின்றது உடவலயாகம... Read more »

நிறப்புதிருக்கு விடை என்ன ?

சிலருக்கு இது நீலம் மற்றும் கறுப்பாகத் தெரியும். – அதுதான் உண்மையான நிறம். – ஆனால், சிலருக்கு இது பொன் நிறம் மற்றும் வெள்ளையாகத் தெரியும். ஒளியை நாம் பார்க்கும் விதம் குறித்த எமக்குள் இருக்கும் முரண்பாடே இதற்கு காரணம். இந்தப் படத்தில் இருக்கும்... Read more »

நகைக்கடை உரிமையாளரை அச்சுறுத்தி பணத்தைப் பெற பொலிஸார் முயற்சி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழ்ப்பாணத்திலுள்ள நகைக் கடை உரிமையாளர் ஒருவரை அச்சுறுத்தி பெருந் தொகைப் பணத்தை பெற்றுக் கொள்ள பொலிஸார் முயற்சித்த சம்பவமொன்று யாழ் நகரில் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் யாழ் நகரின் கஸ் தூரியார் வீதியிலுள்ள நகைக் கடையொன்றின் உரிமையாளருக்கு... Read more »

கோப்பாய் பொலிஸ் மீது தாக்குதல்!!

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய மூன்று சந்தேகநபர்களை வியாழக்கிழமை (22) மாலையில் கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், கோண்டாவில் பகுதியை சேர்ந்த மருத்துவமாதுவுக்கு மதுபோதையில் வீதியில் நின்றிருந்த மூன்று பேர்... Read more »

இலங்கையில் தொடர்வண்டிகளில் தமிழ் படும் பாடு

Read more »

உள்ளூராட்சி மன்ற நியமனங்களில் முறைகேடு

உள்ளுராட்சி மன்ற நியமனங்களில் இடம்பெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் வடமாகாண சபையில் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் திங்கட்கிழமை (19) நடைபெற்றபோதே, சுகிர்தன் இதனை தெரிவித்தார்.... Read more »

பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட மகிந்த பெறுமதியற்றவர்- பொன்சேகா

மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட பெறுமதியற்றவர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது சரத் பொன்சேகா இந்த கருத்தினை தெரிவித்திருந்தாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின்... Read more »

தொலைபேசி மூலம் வந்த திருடன் !

யாழில் எட்டு லட்சம் ரூபாய் பணத்திற்கு ஆசைப்பட்டு ஒருவர் 35 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார். இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, யாழ். ஊரெழுவை சேர்ந்த ஒருவருக்கு நேற்று திங்கள்கிழமை காலை தொலைபேசி அழைபொன்று வந்துள்ளது. தாம் குறித்த ஒரு தொலைபேசி நிறுவனம் ஒன்றில் இருந்து... Read more »

கட்சி தாவிய த.தே.கூ எம் பி பியசேன சந்திரகாந்தனிடம் அடைக்கலம் கோரினார்!

சுதந்திரக்கட்சிக்கு கட்சி தாவிய அம்பாறை மாவட்ட த.தே.கூ எம்பி பியசேன சனாதிபதித்தேர்தலுக்கு முதல் நாள்  முன்னால் த.தே.கூ எம்பி சந்திரகாந்தனிடம் அடைக்கலம் கோரியதாக சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். தனது வீட்டில் கூடியிருந்த இளைஞர்களும், ஆதரவாளர்களும் முன்னிலையில் மன்னிப்பும், அடைக்கலமும் கோரி தனது ஆதரவாளர்களிடமிருந்து தேர்தல் முடிவுகளின் பின் தன்னை... Read more »

ரயில் வந்தபோதும் மூடப்படாத புகையிரத கடவை

ரயில் வந்த போதும் புகையிரதக் கடவை மூடப்பட்டாது இருந்த சம்பவம் யாழ். மீசாலை ஜயா கடையடி புகையிரதக் கடவையில் செவ்வாய்க்கிழமை (06) பிற்பகலில் இடம்பெற்றுள்ளது. குடியிருப்பு வீதியிலிருந்து ஏ – 9 வீதிக்கு நுழையும் மேற்படி புகையிரதக் கடவை ரயில் வந்த போதும், மூடப்படாமல்... Read more »

வீதியால் சென்றவருக்கு கடி : காப்பாற்றச் சென்றவருக்கு அடி

யாழ்.மட்டுவில் பகுதியில் வீதியில் நின்றிருந்த ஒருவர், அவ்வீதியால் சென்றவரை மறித்து தொண்டையில் கடித்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகலின் போது இடம்பெற்றுள்ளதாக, சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். மட்டுவில் வடக்கைச் சேர்ந்த கார்த்திகேசு மகாதேவன் (வயது 55) என்பவரே தொண்டையில் கடி வாங்கியுள்ளார். வீதியால் சென்ற... Read more »

துருவங்கள் சந்தித்தபோது!!!

வடக்கிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் சபை ஒன்றுகூடலின் போது ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கைகலப்பில் முடிவுற்றது. இதில் இரு தரப்பு உறுப்பினர்களும் காயம் அடைந்து இரத்த காயத்துடன் பத்திரிகைகளுக்கு போஸ் கொடுத்தனர். இச்சம்பவம் இடம்பெற்று சில வாரங்களின் பின் இடம்பெற்ற பொது நிகழ்ச்சி... Read more »

திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பட்டதாரி கைது

உரிய வேலை வாய்ப்பு கிடைக்காமையால் திருட்டில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் 25 வயதுடைய விஞ்ஞானமானி பட்டம் பெற்ற ஒருவரை கைது செய்துள்ளதாக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் சனிக்கிழமை (13) தெரிவித்தனர். யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல்... Read more »

வீதியில் உணவு சமைத்து போராட்டம்

யாழ்ப்பாணம், பொம்மாவெளி, முதலாம் குறுக்குதெரு ஜே – 87 கிராமஅலுவலர் எல்லைக்குட்பட்ட முஸ்லிம் மக்கள், வீதியில் உணவு சமைத்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று செவ்வாய்க்கிழமை (02) முன்னெடுத்தனர். கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் மழை வெள்ளம்... Read more »

ஆலயத்துக்குள் நஞ்சருந்திய இருவரில் இளம் யுவதி சாவு!

சாவகச்சேரி, கச்சாய் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றுக்குள் நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்ட 23 வயது யுவதியும், 45 வயது ஆண் ஒருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் யுவதி சிகிச்சை பயனின்றி சாவகச்சேரி மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்றையவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.... Read more »

விசா மோசடி கும்பலுக்கு சமூகவலைத்தள எதிர்ப்பும் வேடிக்கையான எதிரொலியும்!

மோசடி நிறுவனத்துக்கு எதிராக முகப்புத்தகத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரால் பரவிய செய்தி இதுதான் (அவருடைய பேச்சு மொழி திருத்தப்பட்டுள்ளது) திசைகாட்டுகின்றோம் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் விசா பெற்றுத்தருகிறோம் என்று ஒரு நிறுவனம் புறப்பட்டுள்ளது அது தொடர்பான எச்சரிக்கைதான் அது… விண்ணப்பம் மட்டும் நிரப்புவதற்கு ஒருவரிடம் 70,000 ரூபா வசூலிக்கப்பட்டிருக்கிறது.... Read more »