பனை மற்றும் தென்னையிலிருந்து கள்ளை பெற்றுக்கொள்ள அனுமதிப்பத்திரம்

பனை மற்றும் தென்னையிலிருந்து கள்ளை சீவுவதற்கு அனுமதிப்பத்திரம் அவசியம் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்த மதுவரி திணைக்கள கட்டளைச்சட்டத்தின் 15 ஆவது பிரிவில் (பாகம் 52) திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதற்கமைய தென்னை, பனை மரங்களிலிருந்து கள்ளை எடுப்பதற்கு மதுவரி... Read more »

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலை, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ பீடங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விடுதியில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களும் இன்று... Read more »

சிங்கள மாணவர்களின் எதிர்ப்பினால் யாழ் பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை!!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை மூடி மாணவர்களுக்கு விடுமுறை வழங்க நிர்வாகம் முடிவு செய்தமைக்கு சிங்கள மாணவர்களின் நடவடிக்கையே காரணமென நம்பகமான தகவல் தெரிவித்தது. அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர், கடந்த செப்ரெம்பர் 25ஆம் திகதியிலிருந்து தொடர் உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.... Read more »

யாழ் பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைப்பு!

வடமாகாண சுகாதார அமைச்சரின் உத்தரவிற்கு அமைவாக யாழ் பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனின் உத்தரவிற்கு அமைவாக யாழ்ப்பாணம் சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளினால் நேற்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில்... Read more »

நண்பனின் துரோகத்தினால் ஒரு குடும்பமே தற்கொலை செய்துள்ளது!

யாழ்ப்பாணத்தில் நேற்றய தினம் கடன் தொல்லையால் ஒரு குடும்பமே மொத்தமாக தற்கொலை செய்துள்ளது. யாழ்ப்பாணத்தை உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்தின் பின்னால் மிகப்பெரிய துரோகத்தனம் உள்ளதாக அவர்களது குடும்ப உறவினர்கள் சொல்லியுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கணவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்து... Read more »

மாணவிகள் மீது பேருந்துகளில் தொடர்ந்தும் பாலியல் துன்புறுத்தல்

கிளிநொச்சியின் வட்டக்கச்சி, இராமநாதபுரம் மாணவர்கள் பேருந்துகளில் பயணிக்கின்ற போது தொடர்ந்தும் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதி மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களிற்கு மாலை நேர வகுப்புக்களுக்கு சென்று வருகின்ற நிலையில், இவ்வாறான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி... Read more »

கடற்படைக்கு சாதகமாக நில அளவீடு? : மக்கள் சந்தேகம்

கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில அளவீடு தொடர்பில் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, நில அளவீட்டின் போது, காணிகளை அடையாளப்படுத்துவதற்காக பொதுமக்கள் சிலரையும் அழைத்துச் செல்வதாக அதிகாரிகள் அறிவித்திருந்தனர். எனினும், தமக்குத் தெரியாமல் தற்போது இரணைதீவில் அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக... Read more »

திருநெல்வேலி வைத்தியசாலையில் பாதிக்கப்பட்டவர்கள் கொழும்புக்கு

யாழ். திருநெல்வேலியிலிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கண் புரை நீக்கி சத்திரசிகிச்சை மேற்கொண்டபோது, கண்ணில் கிருமித் தொற்று ஏற்பட்டமையால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேரில், ஐந்து பேரை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த தனியார் வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை... Read more »

யாழ். தனியார் வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை செய்த ஒன்பது பேருக்கு கிருமித் தொற்று!

யாழில். உள்ள பிரபல தனியார் வைத்திய சாலையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்ட ஒன்பது பேர் கண்ணில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். யாழில்.உள்ள பிரபல தனியார் வைத்திய சாலையில் கடந்த சனிக்கிழமை காலை கண்ணில் ” கற்ராக் ” சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்... Read more »

மனைவியை கிணற்றுக்குள் தள்ளி படுகொலை செய்ய முயற்சித்த கணவருக்கு விளக்கமறியல்!

யாழ்.ஊர்காவற்துறை பகுதியில் மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டு கிணற்றுக்குள் தள்ளி படுகொலை செய்ய முயற்சித்த கணவனை எதிர்வரும் 02ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்க ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். யாழ்.ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாரந்தனை பகுதியில் நேற்று முன்தினம்... Read more »

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 19 இலட்ச ரூபாய் மோசடி!! : பெண்கள் ஐவருக்கு விளக்கமறியல்!!

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி வங்கி கணக்கில் இருந்து 19 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த பெரும்பான்மையின பெண்கள் ஐவர் விளக்கமறியலில் வைக்கபட்டு உள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் வெளிநாடு செல்வதற்காக தென்னிலங்கை முகவர் நிறுவனம் ஒன்றின் ஊடாக நுழைவு விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார்.... Read more »

நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனை மீளச் செலுத்த முடியாமல் குடும்பப் பெண் தற்கொலை!

நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்ற கடன்களை மீளச் செலுத்த முடியாமல் இளம் குடும்பப் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். திங்கட்கிழமை 16.10.2017 இடம்பெற்ற இச்சம்பவத்தில் வினாசியர் வீதி, சந்திவெளியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான 26 வயதுடைய செல்வம் யோகேஸ்வரி... Read more »

மெய்ப்பாதுகாவலரிடம் தனது பாதணியை சுத்தம் செய்யக்கொடுத்த பொலிஸ் மா அதிபர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் பூஜிதஜெயசுந்தர யாழ்ப்பானம் இந்துக் கல்லூரி வீதியில் பலர் மத்தியில் தான் அணிந்திருந்த பாதணியை அவருடைய மெய்ப் பாதுகாவலர் மற்றும் அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் சுத்தம் செய்யக் கொடுத்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. யாழ்ப்பாணத்துக்கு விஜயம்... Read more »

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டவர் மரணம்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் இருந்து ஒருவர் தள்ளிவிடப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த ரயிலில் பயணித்த இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலே, இவ்வாறு கொடூரத்தில் முடிவுற்றுள்ளது. ராகம மற்றும் ஹொரப்பே ரயில் நிலையங்களுக்கு இடையே குறித்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் சடலம்... Read more »

தமிழர் தாயகத்தில் சர்ச்சைக்குரிய சுவரொட்டி! : திட்டமிட்ட சதியா?

எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு தமிழ் மக்கள் யாவரும் இந்துக்களின் கடைகளில் பொருட்களை வாங்கவேண்டுமென குறிப்பிட்டு வவுனியாவில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. குறித்த சுவரொட்டிகளில் சிவசேனா அமைப்பின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவ் அமைப்பு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. ஒரு பொருள் வணிக நிறுவனத்துக்கு... Read more »

காதலரை மந்திரத்தால் வீழ்த்தும் முயற்சி! : தமிழ் பெண் மந்திரவாதி உள்ளிட்ட மூவர் கைது!

காதலரை மந்திரத்தால் வீழ்த்தும் முயற்சிக்காக நடைபெற்ற கொள்ளைச்சம்பவம் தொடர்பில் தமிழ் பெண் மந்திரவாதி உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வீடொன்றில் 670,000 ரூபா பணம் திருடியமை தொடர்பில் அந்த வீட்டின் பணிப்பெண் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய அதனுடன் தொடர்புடைய தமிழ்... Read more »

யாழில்.வங்கிக் கடனை செலுத்த முடியாமல் கிணற்றினுள் ஒழிந்திருந்த பெண்!

வங்கிக் கடனை செலுத்த முடியாத நிலையில் வங்கி ஊழியர்களுக்கு பயந்து நான்கு மணி நேரம் பெண் ஒருவர் கிணற்றுக்குள் ஒழிந்திருந்த சம்பவம் வடமராட்சி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி பகுதியில் குடும்பநிலை காரணமாக நிதி நிறுவனத்திடம் இருந்து கடனை பெற்று வாராந்தம் அதற்குரிய பணத்தைச் செலுத்தி... Read more »

தாயை அடித்து கிணற்றுக்குள் வீசிக் கொன்ற மகன் கைது

யாழில் தாயை கட்டையால் தாக்கியதுடன், கிணற்றுக்குள் வீசி கொலை செய்த மனநிலை பாதிக்கப்பட்ட மகன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – இராசாவின் தோட்டம் பகுதியில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது. 70 வயதுடைய செ.ரத்னாம்பிகை என்ற பெண்னே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் மனநலம்... Read more »

சைவச் சிறுவர் இல்லத்தில் சிறுவர் சித்திரவதை இடம்பெறவில்லை : இல்லத் தலைவர்

கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற மகாதேவ சைவ சிறார் இல்லத்தில், சிறுவர்கள் எவரும் தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படவில்லை என கிளிநொச்சி மகாதேவ சைவச் சிறுவர் இல்லத் தலைவரும் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசு அதிபருமான தி. இராசநாயகம் தெரிவித்துள்ளார். மகாதேவ சைவச் சிறுவர் இல்லத்தில் மாணவர்கள்... Read more »

மிளகாய்த் தூள்வீசி சங்கிலி அறுப்பு!

புதுக்குடியிருப்பு 8 ஆம் வட்டாரப்பகுதியில் தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர் தினநிகழ்விற்கு சென்று வந்த மாணவி மீது மிளகாய்த் தூள்வீசிவிட்டு திருடர்கள் தங்கச்சங்கிலியினை அபகரித்துக்கொண்டு சென்றுள்ளார்கள். புதுக்குடியிருப்பு மந்துவில் 8 ஆம் வட்டாரப்பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர்தின நிகழ்வில்... Read more »