வாழ்வாதார உதவியில் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட பெண் அதிகாரி!!

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கான வாழ்வாதார உதவியில் கிணறு அமைக்க வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் விநியோகத்தின்போது லஞ்சம் பெற்ற பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவின் பெண் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய தினம் கையும்களவுமாக கைது செய்யப்பட்டார். பூநகரிப் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தான... Read more »

மதுபான நிலையம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை – பாடசாலை அதிபர் கடிதம்

வவுனியா – ஓமந்தையில் மதுபான நிலையம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை என ஓமந்தை மத்திய கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அதிபர் கெ.தனபாலசிங்கம், கொழும்பிலுள்ள மதுவரி ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். குறித்த கடிதத்தில், ‘வேலாயுதம் சுரேந்திரனால் எமக்கு வழங்கப்பட்டுள்ள கடிதத்தின்படி,... Read more »

பொலிஸில் தஞ்சமடைந்த மாமனை அங்கு புகுந்து தாக்கிய மருமகன்!!

கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குள் தஞ்சமடைந்த மனைவியின் தந்தை மீது அங்கு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட இளம் குடும்பத்தலைவரை பாதுகாக்கும் வகையில் அவரைத் தப்பிக்கவிட்ட பொலிஸாரின் நடவடிக்கை இடம்பெற்றது. எனினும் அது தொடர்பில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு முறைப்பாட்டாளரின் உறவினர்கள் கொண்டு சென்றதை அடுத்து... Read more »

யாழ் மாநகரசபைக்கு கிடைத்த 12 மில்லியன் ரூபா செலவிடப்படாமல் திரும்பியது!

கடந்த வருடம் கிடைத்த 12 மில்லியன் ரூபா பணத்தை, செலவிடாமல், பத்திரமாக பாதுகாத்து திருப்பி அனுப்பியுள்ளது யாழ்ப்பாணம் மாநகரசபை. யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் 2014ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முத்திரைவரிப்பணம் கிடைக்காத காரணத்தால், அதற்கு பதிலாக மாகாண ஒதுக்கீட்டின ஊடாக 65 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது.... Read more »

மது போதையில் பெனாயிலை குடித்த பொலிஸ் உத்தியோகத்தர் பலி

மது போதையில் பெனாயில் குடித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ரத்னாயக்க (வயது 45) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடந்த சனிக்கிழமை இரவு... Read more »

விடுதலைப்புலிகளின் தலைவரின் படத்துடன் பொருத்தமற்ற தலைப்புடன் வெளியான பத்திரிகை எரிப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்துடன் பொருத்தமற்ற தலைப்புடன் வார பத்திரிக்கையில் வெளியான செய்தியால் குறித்த பத்திரிகையை பருத்தித்துறை இளைஞர்கள் எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். யாழில் இருந்து வெளியாகும் வார பத்திரிகை ஒன்றின் முகப்பு பக்கத்தில் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் மத்தியில் தலைவர் வே.பிரபாகரன்... Read more »

சினிமா பாணியில் இளம் பெண் கடத்தல்!!! காவல்துறையினர் அசமந்தம்!!

சினிமா பாணியில் பெற்றோரை வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காண்பித்து மிரட்டி இளம் பெண் ஒருவரைக் கடத்திய சம்பவம் மிருசுவில் படித்த மகளிர் திட்டம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வட்டுக்கோட்டை வடக்கிலிருந்து சென்ற கும்பல் ஒன்றே இந்தக் கடத்தலை மேற்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை சுமார் 17 மணிநேரம்... Read more »

ஊடகவியலாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள யாழ்.மாநகர சபை

யாழ்.மாநகரசபையின் மாதாந்த மற்றும் விசேட அமர்வுகளில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு முதல்வரினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. யாழ் மாநகரசபையின் மாதந்த மற்றும் விசேட அமர்வுகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதாயின் குறித்த ஒவ்வொரு அமர்வின்போதும் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டிடம் எழுத்துமூல அனுமதி பெறவேண்டும்... Read more »

இரணைமடு குளம் புனரமைப்பு – பாரிய ஊழல்கள் மோசடிகள் நடைபெற்று உள்ளது!

இரணைமடு குளம் புனரமைப்பு செய்யப்பட்டதில் பாரிய ஊழல்கள் மோசடிகள் நடைபெற்று உள்ளது எனவும் , அதனால் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஈ. பி.டி.பி கோாியுள்ளது. இது குறித்து இன்று ஈ.பி.டி.பி கட்சியின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பின்போது, அக்கட்சியின் செயலாளா் நாயகமும்,... Read more »

யாழில் கையூட்டல் பெற்ற கிராம சேவகர் இடைநீக்கம்!

யாழ்.மாவட்டத்தில் கையூட்டு பெற்ற கிராம சேவகரை உடன் அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்துள்ளார். யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பணியாற்றும் கிராம சேவகர் ஒருவரே அவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறித்த கிராம... Read more »

யாழ் நோக்கி போதை கலந்த இனிப்புகள் பண்டங்களை கொண்டுவந்தவர் கைது!

யாழ் நோக்கி கொண்டு வரப்பட்ட போதை கலந்த இனிப்பு பண்டங்கள் ஒரு தொகுதியை வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் நேற்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனை கொண்டு வந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நடத்திய வாகன சோதனையின்போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு... Read more »

முதியோர் இல்லத்தில் இணைத்துக் கொள்ளும்படி வாசலில் நின்று வீறிட்டு அழுத முதியவர்!!

உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர் ஒருவர், தன்னையும் முதியோர் இல்லத்தில் இணைத்துக்கொள்ளுமாறு கைதடி முதியோர் இல்லத்தின் வெளிவாயிலில் நின்று வீறிட்டு அழுது குழறிய நெஞ்சைப் பிசையும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் காலையில் இந்த சம்பவம் இடம்பெற்றது. அவரது துயரநிலையை கவனத்தில் கொண்ட இல்ல நிர்வாகம்,... Read more »

தெற்­கைச் சேர்ந்த 46 பேருக்கு வடக்­கில் ரக­சிய நிய­ம­னங்­கள்!!

கடந்த ஒக்­ரோ­பர் மாதத்­துக்­குப் பின்­னர் வடக்கு மாகா­ணத்­தில் பெரும்­பான்­மை­ இனத்­தைச் சேர்ந்த 46 பேருக்கு இலங்கை மின்­சார சபை­யில் நிய­ம­னங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. கடந்த ஒக்­ரோ­பர் மாதம் 26ஆம் திகதி நாட்­டில் ஏற்­பட்ட அர­சி­யல் குழப்­பத்­தின் பின்­னர் மகிந்த தலை­மை­யில் அமைச்­ச­ரவை ஒன்று அமைக்­கப்­பட்­டது. அதில்... Read more »

வட்டுக்கோட்டையில் சொந்த வீட்டிலேயே நகைகளை சூறையாடிய யுவதி சிக்கினார்!

வட்டுக்கோட்டை கிழக்கில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகள் திருட்டு என்று வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் முறைப்பாட்டாளரின் மகள்தான் நகைகளைத் திருடினார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வட்டுக்கோட்டை கிழக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகள் திருட்டு என வீட்டின் குடும்பத்தலைவரால்... Read more »

யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களிடம் பெருமளவு பணம் கறந்து சத்திரசிகிச்சை செய்த தென்னிலங்கை மருத்துவர்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், நோயாளர்களிடம் பணம் பெற்று சத்திரச்சிகிச்சைகளை முன்னெடுத்த விவகாரம் வைத்தியசாலை நிர்வாகத்துக்குள் பூதாகரமாகியுள்ளது. அதுதொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, பணம் வழங்கி சிகிச்சை பெற்றுக்கொண்ட நோயாளர்களுடன்... Read more »

போர்க்காயங்களின் வலியால் கிழக்கில் முன்னாள் போராளி தற்கொலை!

போரினால் உடலில் ஏற்பட்ட காயங்களின் வலி தாங்க இயலாத நிலையில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மட்டக்களப்பு தேற்றாத்தீவு களுதாவளை தெற்கு எல்லை வீதியில் வசித்து வந்த வைரமுத்து திசவீரசிங்கம் என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே... Read more »

யாழ்.வைத்திய சாலையில் வைத்தியர்களாக நடித்து திருட்டில் ஈடுபட்ட பெண்கள்!

வைத்தியர்கள் போன்று ஆடை அணிந்து திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த இரு பெண்களை அடையாளம் கண்டு உள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , யாழ்.போதனா வைத்திய சாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் போன்று ஆடை அணிந்து... Read more »

டிப்பரால் பறிக்கப்பட்ட மண்ணுக்குள் சிக்குண்டு குடும்பத்தலைவர் பரிதாபச் சாவு

மண் அகழ்வில் ஈடுபட்ட குடும்பத்தலைவர் ஒருவர் மண்ணுக்குள் சிக்குண்டு உயிரிழந்தார். மன்னார் சிலாபத்துறைப் பகுதியில் திங்கட்கிழமை(3) இரவு இந்தப் பரிதாபச் சம்பவம் இடம்பெற்றது. மன்னார் தம்பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார். மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில்... Read more »

புலிகளின் பாடல்களை அங்கஜன் ஒலிபரப்பியபோது என்ன செய்தீர்கள்?: பொலிசாரை தொண்டைப்பிடி பிடித்த நீதிவான்!

சாட்டி துயிலுமில்லத்தில் விடுதலைப்புலிகளின் கொடி, இலட்சினை, சீருடைகளை பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்த ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலை புலிகளின் கொடி, இலட்சினை,மற்றும் புலிகளின் சீருடையுடனான உருவப்படங்களை பயன்படுத்துவதை தடை செய்வதாகவும் பாடல்கள் ஒலிபரப்பவும் இறந்தவர்களை நினைவுகூர... Read more »

நாடாளுமன்றில் பொலிஸார் மீதும் கடும் தாக்குதல்!

நேற்றையதினம் நாடாளுமன்றம் கூட்டப்பட்டபோது மகிந்த ராஜபக்ச தரப்பினர் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தினர். குறிப்பாக பொலிஸார் மீதான தாக்குதலில் தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோர் ஈடுபட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த... Read more »