Ad Widget

அமைச்சரின் வருகைக்காக மாணவர்களை துப்பரவு பணிக்கு ஈடுபடுத்தியமையால் பொதுமக்கள் அதிருப்தி

தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சா் மனோ கணேசனின் வருகைக்காக கிளிநொச்சி- பூநகாி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், மாணவா்களை வைத்து வீதியை துப்பரவு செய்தமை தொடா்பில் பலா் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், கடுமையான விமா்சனங்களையும் முன்வைத்துள்ளனா். பூநகரி பிரதேசத்திலுள்ள ஸ்ரீ வித்தியானந்தா வித்தியாலயத்தில் தரம் 5ஆம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவா்களை கௌரவிக்கும் நிகழ்வுக்காக, நேற்றைய தினம்...

வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வில் ஆட்டுக்கறி சாப்பாடு

வடக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சியின் இறுதி அமர்வு இன்று(23) நடைபெறவுள்ளது. இதையொட்டி உறுப்பினர்கள், விருந்தினர்களுக்கு மதியபோசனத்துக்கு சிறப்பாக பாரம்பரிய முறைப்படி ஆட்டுக்கறி சாப்பாடு வழங்குவதற்கு பேரவைச்செயலகம் ஏற்பாடு செய்துள்ளது. சபை அமர்வுகளின் போது வழமையாக கோழி இறைச்சி, மீன் கறியே வழங்கப்பட்டு வந்தது. கடந்த 5 வருடங்களில் இரு தடவையே ஆட்டுக்கறி வழங்கப்பட்டது. இதேவேளை...
Ad Widget

மாற்றுத் திறனாளியை யாழ் பஸ்நிலையம் சென்று பிச்சை எடுக்குமாறு கூறிய வட்டுக்கோட்டை பெண் கிராமசேவகர்!!

வழங்கப்பட்ட உறுதி மொழிக்கேற்ப அகற்றப்பட்ட தனது தொழிலிடத்தை மீண்டும் அமைத்து தாருங்கள் என கேட்ட மாற்றுத் திறனாளியை யாழ் பஸ்நிலையம் சென்று பிச்சை எடு என்று வட்டுக்கோட்டையின் வடக்கு அராலி பகுதி ஜே/164 பெண் கிராமசேவகர் ஒருவர் அடாவடித்தனமாக நடத்திய சம்பவம் ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது. யாழ் மாவட்டத்தின் அநேக பகுதிகளில் நீர் வழங்கலை மேற்கொள்வதற்காக...

அபிவிருத்தித் திட்டங்களுக்கு வட.மாகாண அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை: மனோ

வட.மாகாணத்தில் முன்னெடுக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களிற்கு வடக்கிலுள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்பு போதவில்லை என அமைச்சர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை வடக்கில் முன்னெடுக்க முயற்சித்தபோதும் வடமாகாண சபையினரும் தகுந்த ஒத்துழைப்பை தமக்கு வழங்கவில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டினார். வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று...

குணசீலனின் நிதி ஒதுக்கீட்டில் இடம்பெற்ற மூக்கு கண்ணாடி விநியோகத்தில் முறைகேடுகள்!

வடமாகாணசபை உறுப்பினர் ஞா.குணசீலனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற மூக்கு கண்ணாடி விநியோகத்தில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக மாகாண பிரதி கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த முறைகேடுகள் தொடர்பாக மேல் விசாரணைகளை நடாத்துவதற்கும் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் கணக்காய்வாளர் நாயகத்தின் கவனத்திற்கு இந்த விடயத்தினை அனுப்பிவைக்கவுள்ளதாக அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார். வடமாகாணசபையின்...

வைத்தியசாலையில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசியீனால் நோயாளர்களுக்கு பார்வைக்குறைபாடு?

நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை பிரிவில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசியில் எவ்வித பிரச்சினைகளும் இல்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 23 நோயாளர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இதில் 17 நோயாளர்கள் பார்வைக் குறைபாடுக்கு உள்ளாகியுள்ளதாக குற்றம்...

யாழ் செயலகம் முன் நஞ்சருத்தி தற்கொலை செய்துகொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்!

மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி சொந்த மாவட்டத்துக்கு இடமாற்றம் கிடைக்காத விரக்தியில் யாழ்ப்பாணச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் நஞ்சருந்தி உயிரை மாய்த்த சம்பவம் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்குச் சென்று மேலதிக மாவட்டச் செயலரைச் சந்தித்து வெளியில் வந்து அவர் தனது உயிரை மாய்த்துள்ளார். புதிய...

மதுபோதையில் மோட்டார் சைக்கிளினை செலுத்தி வந்தவர் மோதியதில் இளம் குடும்பத்தலைவர் பலி!

புத்தூர் மீசாலை பிரதான வீதியில் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் குடும்பத்தலைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புத்தூர் மீசாலை வீதியில் நடந்து சென்ற இளம் குடும்பத்தலைவர் மீது, மதுபோதையில் மோட்டார் சைக்கிளினை செலுத்தி வந்தவர் பின்பக்கமாக மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். புத்தூர் ஊறனி பகுதியைச்...

யாழில். கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்த அந்தனர்கள் கைது!!

யாழில். கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்தார்கள் எனும் குற்றசாட்டில் அந்தணர்கள் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். கோப்பாய் பகுதியில் கடந்த திங்கட்கிழமை வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த காவற்துறையினர் குறித்த இரு அந்தணர்களையும் மறித்து சோதனையிட்ட போது இருவரின் உடமையில் இருந்து சிறியளவிலான கஞ்சா பொதிகளை...

யாழில் பொலிஸாரை தாக்கிவிட்டு ஆயுதங்களுடன் பொலிஸாரின் வாகனம் கடத்தல்!!

கொடிகாமம் பொலிஸாரின் வாகனமொன்றை இனந்தெரியாதோர் கடத்திச் சென்றதால் அப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில் நீண்ட நேரத் தேடுதலின் பின்னர் வாகனத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் கொடிகாமம் பாலாவிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பாலாவிப் பகுதியில் தொடர்ச்சியாக மணல் கடத்தல் இடம்பெற்று வருவதாகவும் அதனைத் தடுப்பதற்கு அங்கு பொலிஸார் ரோந்து...

யாழில்.நடைபெற்ற திருமண நிகழ்வில் பழுதடைந்த உணவு பரிமாறப்பட்டதால் மூவர் வைத்தியசாலையில்!!

யாழில்.நடைபெற்ற திருமண நிகழ்வில் பரிமாறப்பட்ட உணவு பழுதடைந்ததில் அதனை உட்கொண்ட மூவர் பாதிப்படைந்துள்ளனர். யாழ்.உரும்பிராய் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திலையே இச் சம்பவம் நடைபெற்று உள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த திருமணத்திற்கான மண்டப ஏற்பாடுகள் மற்றும் உணவு ஏற்பாடுகள் என்பவற்றை மணமக்கள் வீட்டார் மண்டப உரிமையாளர்களிடமே ஒப்படைத்துள்ளனர். அந்நிலையில் இன்றைய தினம்...

பொலிஸ் அதிகாரியின் காட்டுமிரண்டித்தனமான தாக்குதல்!! சிறுமி உட்பட மூவர் வைத்தியசாலையில்!!

வவுனியா – கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிவில் உடையில் தம்மை தாக்கியதாக தெரிவித்து 14 வயது மாணவி உள்பட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் குடும்பம், தமக்குச் சொந்தமான காணியின் ஒரு துண்டை, ஹோட்டல் அமைத்து...

யாழில், பிரதேச சபை தவிசாளரின் வாகனம் விபத்தில், மதுவில் சாரதி, காப்பாறியது காவற்துறை!!

வலி.தெற்கு பிரதேச சபை தவிசாளரின் வாகனம் சுன்னாகம் பகுதியில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்காது சுன்னாக காவற்துறையினர் செயற்பட்டதாக அப்பகுதியில் நின்றவர்கள் தெரிவித்தனர். சுன்னாகம் சந்தியில் நேற்று வியாழக்கிழமை (30.08.18) குறித்த விபத்து சம்பவம் ஏற்பட்டு உள்ளது. அது குறித்து விபத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கையில் , தவிசாளரின்...

குற்றவாளிக்கு தண்டப்பணம் 5 ரூபா!! பொலிஸார் மீது மக்களுக்க சந்தேகம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், மதுபோதையில் பொது இடத்தில் வைத்து குழப்பம் விளைவித்த மூவருக்கு தலா 5 ரூபா மாத்திரம் தண்டப்பணம் விதித்து யாழ். நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மதுபோதையில் பொது இடத்தில் குழப்பம் விளைவித்தவர்களுக்கு மதுவரிச் சட்டத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால் 2 ஆயிரம் ரூபா வரை தண்டம் அறவிடப்படும். எனினும், யாழ்ப்பாண பொலிஸாரால் 1866ஆம்...

ஒரே புதைகுழியில் புதைக்கப்பட்ட தமிழ், சிங்கள நண்பர்கள்!!!

வாகன விபத்தில் உயிரிழந்த தமிழ் - சிங்கள நண்பர்கள் இருவர் ஒரே புதைகுழியில் புதைக்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அம்பாந்தோட்டையில் இடம்பெற்றுள்ளது. இருவரது உடலும் அங்குணுகொலபெலெஸ்ஸ பொது மயானத்தில் ஒரே குழியில் புதைக்கப்பட்டுள்ளது. அசாரிகம பிரதேசத்தை சேர்ந்த நாலக இரோஷன்( (Nalaka Roshan) (31 வயது) மற்றும் காலி நெழுவ பிரதேசத்தை சேர்ந்த இராஜேந்திர சிவகுமார் (Rajendra...

யாழ் மாவட்ட பாதிக்கப்பட்ட பட்டதாரிகளை மிரட்டும் அரச அதிகாரிகள்!!

மாவட்ட செயலகங்களில் கடந்த பட்டதாரி பயிலுனர் நேர்முகத்தேர்வில் தகவலறியும் சட்டமூலத்தின் ஊடாக தாம் பெற்ற புள்ளி பட்டியலை தத்தமது மாவட்ட செயலகத்தில் பாதிக்கப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் குறித்த சட்டமூலத்தின் ஊடாக தத்தமது பெறுபேறுகளை அறிய முடியாது இருப்பதாகவும் அதற்கான பொறுப்பு வாய்ந்த அதிகாரி தமது விண்ணப்பத்தை ஏற்கமறுப்பதாகவும்...

முல்லைத்தீவில் மாணவியை துஷ்பிரயோகம் செய்த பாராளுமன்ற உறுப்பினருக்கு விளக்கமறியல்!!

உடையார் கட்டில் பாடசாலை மாணவியை கடத்தி சென்று விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிளிநொச்சி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைத்தீவு உடையார் கட்டு மகா வித்தியாலத்தில் உயர்தர பரீட்சை எழுதி வரும் லூத்மாத...

போதனா வைத்தியசாலையின் ஆபத்தான கழிவுகள் குடாக் கடலில் கொட்டப்படுவதை உறுதி செய்தார் பணிப்பாளர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆபத்தான கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக குடாக்கடலுக்குள் கொட்டப்படும் விவகாரம் யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் வெளிச்சத்துக்கு வந்தது. அதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி நேற்று நேரில் ஆராய்ந்தார். ஆபத்தான கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக குடாக்கடலுக்குள் கொட்டப்படுவதை அவர் உறுதி செய்தார். யாழ் மாநகரசபையின் அமர்வு நேற்றுமுன்தினம் மாநகர...

யாழ். பல்கலைக்கழக மாணவனின் உன்னத பணி

மன்னார் கீரி கடற்கரையில் கரையொதுங்கிய கழிவுப்பொருட்களை, யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவர் சேமித்து அப்புறப்படுத்தியுள்ளார். குறித்த கடற்கரையில் பிளாஸ்ரிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் கரையொதுங்குவதால் மீனவர்களும் சுற்றுலாப் பிரயாணிகளும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர். அத்தோடு, கடற்கரையில் துர்நாற்றம் வீசி, சூழல் பாதிப்பும் ஏற்பட்டது. இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக புவியியல் துறையின் 4ஆம் ஆண்டு மாணவனான ஆர்.றொக்சன் என்பவர்...

ஆவா குழுவில் இணைந்து செயற்படும் மகனை காப்பாற்றுங்கள்!! :பொலிஸாரிடம் தாய் கதறல்

ஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை காப்பாற்றித்தருமாறு இளைஞன் ஒருவரின் தாயார் வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுள்ளார். இந்தத் தகவலை வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். வாள்வெட்டு வன்முறை உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில்...
Loading posts...

All posts loaded

No more posts