கிளிநொச்சியில் மது வெறியரின் அட்டகாசம்! பொலிசார் கட்டுப்படுத்தினர்!

கிளிநொச்சி 55ஆம் கட்டைக்கு ஏ9 பாதையில்   இன்று மாலை  ஒரு சிலர் குடித்துவிட்டு போதையில் வீதியால் போகிற வாகனங்களை மறித்து தவறான வார்த்தைப் பிரயோகங்களால் வசைபாடிய வண்ணம் இருந்துள்ளனர். ரிப்பர் வாகனம் ஒன்று வந்தபோது அதை மறித்து அதன் கண்ணாடியை உடைத்துள்ளார்கள். கர்த்தாலை... Read more »

ஒரே வீதியை இரண்டு பக்கத்தில் இருவேறு விதமாக திறந்து வைத்த அமைச்சர்கள்

ஹபராதுவ, லியனகொட, லுனுமோதல வீதியை இரண்டு அமைச்சர்கள் திறந்து வைத்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த வீதியின் ஒரு பகுதியை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவும், மற்றைய பகுதியை நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேராவும் திறந்து வைத்துள்ளனர். ஹபராதுவ ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர்... Read more »

சாவகச்சேரியில் சடலங்களை விடுவிக்கவும் இலஞ்சம்! தென்மராட்சி பொது அமைப்புக்கள் வைத்திய அதிகாரிக்கு எதிராக புகார்!!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி சடலங்களை ஒப்படைக்க இலஞ்சம் கோருவதாக மத்திய சுகாதார அமைச்சரிற்கு புகார் செய்யப்பட்டுள்ளது.தென்மராட்சியை சேர்ந்த பொது அமைப்புக்கள் இணைந்து இலங்கை சுகாதார அமைச்சரிற்கு கையளித்துள்ள புகாரின் பிரதிகள் இலங்கை ஜனாதிபதி முதல் பிரதமர்,வடமாகாண முதலமைச்சர் ஈறாக அனுப்பி... Read more »

மாணவர்களின் காலணிகளை நடுவீதியில் குவித்த அதிபரினால் குழப்பம்

கிளிநொச்சி பாரதிபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களின் காலணிகளை பாடசாலைக்கு வெளியே பிரதான வீதியின் நடுவில் குவித்த அதிபரின் செயற்பாட்டினால் பாடசாலையில் நேற்று திங்கள் கிழமை அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. பாடசாலையின் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து அதிபரின் செயற்பாட்டுக்கு தங்களின் கடும் எதிர்ப்பினை வெளியிட்ட... Read more »

சட்டத்தரணியின்றி வழக்கில் வாதாடி விடுதலையான தமிழ் ஆசிரியர்!

காவல்துறையினரால் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கொன்றில் தமிழாசிரியர் ஒருவர் சட்டத்தரணியை அமர்த்தாது தானே மன்றில் முன்னிலையாகி வாதாடி விடுதலையாகியுள்ளார். இந்தச் சம்பவம் புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் போக்குவரத்துச் சட்டமீறல் தொடர்பான வழக்கொன்றில் தாமாகவே வழக்கில் முன்னிலையாகி விடுதலையாகியுள்ளார். மோட்டார் போக்குவரத்து ஆணையாளரின் அனுமதியின்றி சிறிய... Read more »

இரு யுவதிகளுக்கு ஒரே அடையாள அட்டை இலக்கம்

ஆட்பதிவுத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட ஒரே இலக்கங்களைக் கொண்ட இரு அடையாள அட்டைகளினால் இரண்டு யுவதிகளுக்கிடையில் குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் திகதி வழங்கப்பட்ட, 877033473V என்ற இலக்கம் கொண்ட அடையாள அட்டையாலேயே இந்த சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விருவரும்... Read more »

யாழ்.நகர பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் மாணவன் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்!! மாணவன் வைத்தியசாலையில்!!

யாழ்.நகரப் பகுதியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளதாகவும் இதனால் காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இப் பாடசாலையில் தரம் 8... Read more »

கால்நடை தீவனத்தின் நிறையில் மோசடி!! பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின்எச்சரிக்கை!!

கால்நடைகளுக்கான தீவனங்களை சந்தையில் கொள்வனவு செய்பவர்கள் அதன் நிறையினை சரிபார்த்து வாங்கி கொள்ளுமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் புதன்கிழமை (05) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில், ‘தென்னிலங்கையை மையமாகக் கொண்டு இயங்கும் கம்பனியொன்றின்... Read more »

இராணுவத்தினரின் சிகை அலங்கரிப்பு நிலையத்தால் சிகையலங்கரிப்பாளர்கள் பாதிப்பு

வவுனியா உட்பட வடக்கு மாகாணத்தில் அனைத்துப் பகுதிகளிலும் இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு நிலையம் நடாத்திவருவதால் தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிகையலங்கரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிகையலங்கரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஸ்ரீபன் கருத்துத் தெரிவிக்கையில், வவுனியாவில், பம்பைமடு மற்றும் நாம்பன்குளம் ஆகிய பிரதேசங்களில்... Read more »

கிளிநொச்சியில் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனம்!

ஏ-9 வீதியில் உழவியந்திரத்தை ஓட்டிச்சென்ற இளைஞன் ஒருவருக்கும், இன்னுமொரு வாகனச் சாரதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தினை விலக்குத் தீர்ப்பதற்காக அவிடத்திற்குச் சென்ற காவல்துறையினர் இரும்புச் சங்கிலியால் அந்த இளைஞனை மோசமாகத் தாக்கியுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞனே தம்மை இரும்புச்... Read more »

வடமாகாண சபையில் சம்பளம்: புத்தளத்தில் கடமை

வடமாகாண சபையின் நிதியிலிருந்து சம்பளம் பெற்றுக்கொண்டு, புத்தளத்திலுள்ள 5 வைத்தியசாலைகளில் கடமையாற்றும் 21 சுகாதார ஊழியர்கள் தொடர்பில், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், நேற்று வியாழக்கிழமை (22) விளக்கமளித்தார். வடமாகாண சுகாதார ஊழியர்கள் எவரேனும் வெளி மாகாணங்களில் பணியாற்றுகின்றனரா? என உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன்... Read more »

பேரத்துள் சிக்கினாரா யாழ் வணிகர் கழக தலைவர் ! பேரணிக்கு ஆதரவா? எதிர்ப்பா?

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு யாழ்மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச வணிகர் கழகங்களும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் பேரணிக்கு ஆதரவு வழங்குவதா வேண்டாமா என முடிவெடுக்கமுடியாமல் யாழ்.நகர் வணிகர் கழகத் தலைவர் திணறிவருவதாக தெரியவருகின்றது. கடந்த... Read more »

தியாக தீபம் திலீபனை மறக்கச் செய்யும் கம்பன் விழா!

செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம் புகட்டிய அறத்தின் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பைத் தொடங்கிய நாள். நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வடக்கு வீதியில், பட்டினிப்போர் தொடுத்த பார்த்தீபன்,... Read more »

யாழ் பல்கலைக்கழக ராக்கிங் கொடுமையால் கல்வியை இடைநிறுத்திய மாணவன்!!

யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெறும் பகிடி வதைக் கொடுமையினால் தனது பல்கலைக் கழக கல்வியினை இடை நிறுத்தி தினக் கூலிவேலைக்காக மாணவன் செல்லும் அவலம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பகுதியினைச் சேர்ந்த மாணவன் இந்த ஆண்டு முதலாம் ஆண்டில் ஆண்டில் இணைந்து கொண்டார் . இணைந்த... Read more »

யாழ்ப்பாணத்தில் நியாயம் கேட்டவர்களை துப்பாக்கியால் மிரட்டிய காவல்துறையினர்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல திரையரங்கொன்றில் பின் கதவால் ரிக்கற் விற்றவர்களிடம் நியாயம் கேட்ட சில இளைஞர்களை அங்கிருந்த காவல்துறை பரிசோதகர் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல திரையரங்கொன்றில் புதிதாக வந்த படமொன்று காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது. சனிக்கிழமை... Read more »

வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்

வடக்கு மாகாணத்தில் கடந்த பல வருடங்களாக பணியாற்றிய போலி ஆசிரியர்கள் 20 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போலிக் கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து ஆசிரியர்களாக இணைந்துகொண்டுள்ளமை கண்டறியப்பட்டதாலேயே அவர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக வடக்கு மாகாணக்கல்வி அமைச்சின் செயலர் இ.இரவீந்திரன் தெரிவித்தார். மேற்படி ஆசிரியர்களின் சேவையை... Read more »

பிச்சைக்காரர் மீது காறித்துப்பிய யுவதி மீது சரமாரியான தாக்குதல்

குருநாகல், மாளிகாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் வைத்து, யாசகர் ஒருவர் மீது காறித் துப்பிய யுவதி ஒருவரை, அங்கிருந்த இளைஞர்கள் சிலர், சரமாரியாகத் தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவொன்று, சமூக வலைத்தளங்களில்... Read more »

பொலிஸாரை விட பாடசாலைகளே இலஞ்சம் வாங்குவதில் முன்னிலையில்!

நாட்டில் இலஞ்சம் வாங்குவதில் பொலிஸாரை விட கல்வித்துறை முன்னிலை வகிப்பதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு குற்றஞ்சுமத்தியுள்ளது. கடந்த காலங்களில் பொலிஸ்துறை மீதே இலஞ்சம் தொடர்பில் அதிக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதும் அது தற்போது குறைவடைந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த இலஞ்சம்... Read more »

யாழில் சாராயக்கடைக்குள் புகுந்த பெண் : மகன் மீது கடும் தாக்குதல்

யாழ் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள சாராயக்கடையில் 18 வயது மாணவனான தனது மகன் நண்பர்களுடன் இணைந்து பதுபானம் அருந்திக்கொண்டிருப்பதை அறிந்த அரச ஊழியரான பெண் ஒருவர் சாராயக் கடைக்குள் அதிரடியாகப் புகுந்து மகனை நையப்புடைத்துள்ளார். தந்தை இல்லாத குறையை தன் மகனிற்குக் காட்டாது அவன்... Read more »

உப பொலிஸ் உத்தியோகத்தர் மதுபோதையில் அட்டகாசம்

பருத்தித்துறை நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாகக் கூறி, நேற்று சனிக்கிழமை (03) அதிகாலை 4 மணியளவில் வல்வெட்டித்துறை ஆதிகோயிலடிப் பகுதியிலுள்ள வீடு ஒன்றின் முன் கதவினை உடைத்து அத்துமீறி நுழைந்த பருத்தித்துறைப் பொலிஸார் வீட்டிலுள்ள அனைவரையும் துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தியுள்ளனர். தமிழ் உப பொலிஸ் பரிசோதகர் தலைமையில்... Read more »