யாழில் புனித ரமழானை முன்னிட்டு சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற முஸ்லிம்கள்

புனித நோன்புப் பெருநாள் நாடெங்கும் முஸ்லிம் பெருமக்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இவ் வேளையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒஸ்மானியாக் கல்லூரி வளாகத்தில் இன்று காலை 7 மணியளவில் சிறப்பு தொழுகை நிகழ்வில் பங்கேற்ற முகமதியா ஜும்மா பள்ளிவாசல் பிரதான இமாம் எம்.ஐ மஹமூட் பலாஹி... Read more »

வேள்வியை நிறுத்த 90 வீதமான ஆலயங்கள் சம்மதம்!!

மிருக பலியிடலை நிறுத்துவதற்கு 90 வீதமான ஆலயங்கள் சம்மதம் தெரிவித்திருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். மிருக பலியிடல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் 25க்கும் மேற்பட்ட ஆலயங்களை சேர்ந்த நிர்வாகிகள்... Read more »

நாளை முதல் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய திருவிழா ஆரம்பம்

ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா நாளைய 17.06.2015 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகின்றது. 29.06.2015 திங்கட்கிழமை சப்பறம் 30.06.2015 செவ்வாய்க்கிழமை தேர் திருவிழா 01.07.2015 புதன்கிழமை தீா்த்தத் திருவிழா 02.07.2015 வியாழக்கிழமை கொடி இறக்கம் மற்றும் தெப்பத் திருவிழாவுடன் நிறைவு பெறுகின்றது.... Read more »

கடாக்கள், சேவல்கள் வெட்டப்பட்டு துர்க்காபுரம் பேரம்பல வைரவருக்கு வேள்வி!

தெல்லிப்பழை துர்க்காபுரம் பேரம்பல வைரவர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவும் வேள்வியும் இன்று மிகவும் பக்திப் பரவசமாக இடம்பெற்றது. அதிகாலையில் இடம்பெற்ற பொங்கல்கள் படையல்கள் மற்றும் விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து வேள்விக்கு கடாக்கள் பலியிடும் நிகழ்வுகள் இடம்பெற்றன. தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி எஸ்.நந்தகுமார்... Read more »

வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தில் இன்று வழிபாடு!

உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலய வைகாசி விசாக மடை வழிப்பாட்டுக்கு செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருந்தனர். நீண்ட காலத்துக்கு பின்னர் இராணுவ அனுமதி கிடைத்தமையால் பெருமளவான மக்கள் ஆலயத்துக்கு செல்வதற்காக வயாவிளான் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக கூடினர். இதன்போது... Read more »

கடல் தீர்த்தத்தில் எரியும் விளக்கு: காண காட்டா விநாயகர் ஆலயத்தில் பக்தர் கூட்டம்!

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த விசாகப் பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை சிலாவத்தை, தீர்த்தக்கரைக் கடலில் கடல் நீரில் தீர்த்தம் எடுத்துவரப்பட்டு முள்ளியவளை, காட்டா விநாயகர் ஆலயத்தில் அம்மன் மண்டபத்தில் விளக்கேற்றப்பட்டுள்ளது. இந்த அற்புத நிகழ்வை பெருமளவான பக்தர்கள் பக்திப்... Read more »

பிரான் பற்று காளி அம்மன் கோவிலில் வருடாந்த வேள்வி

வலி.மேற்கு பிரதேசத்திலுள்ள பிரான்பற்று, காளிஅம்மன் ஆலய வருடாந்த வேள்வி இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதன்போது சுகாதார விதிமுறைகள், சட்டதிட்டங்களுக்கு அமைவாக சம்பந்தப்பட்டோர் முன்னிலையில் ஆலய வீதியில் இதற்கென அமைக்கப்பட்ட கொல்களத்தில் 113 ஆடுகள் பலியிடப்பட்டன. சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக கடாக்களை... Read more »

இன்று பெரிய வியாழன்

யாழ்.புனித மரியன்னை பேராலயத்தில் கல்வாரித் திருவிழா புனித வார நிகழ்வுகளாகப் பெரிய வியாழன்,பெரிய வெள்ளி, பெரிய சனி,உயிர்ப்பு ஞாயிறு,தியான திருச்சிலுவை வழிபாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இன்று பெரிய வியாழக்கிழமை மாலை 5மணிக்கு திருப்பலி, பாதம் கழுவுதல்,தேவ நற்கருணைப் பவனி, எழுந்தேற்றம் என்பன நிகழவுள்ளன.... Read more »

கச்சதீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதுடன், இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து ஆலயத்துக்கு வருவதற்காக இதுவரையில் 6,200 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாகவும் யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். கச்சதீவு திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்.... Read more »

நகுலேஸ்வர ஆலய தேர்த்திருவிழா!

நகுலேஸ்வர ஆலயத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. கடந்த 04 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான உற்சவத்தின் சப்பறத் திருவிழா எதிர்வரும் 16 ஆம் திகதியும் தேர்த்திருவிழா 17 ஆம் திகதியும் அன்றைய தினமே மகா சிவராத்திரி நிகழ்வும் இடம்பெறவுள்ளது. அன்றைய... Read more »

வழிபாடுகளில் கலந்துகொள்ள இராணுவம் அனுமதி

இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள பலாலி இராஜஇராஜேஸ்வரி ஆலயத்தில் தைப்பூச திருநாளான செவ்வாய்க்கிழமை (03) பொதுமக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட இராணுவத்தினர் அனுமதியளித்தனர். இராணுவ சோதனை சாவடியில் இருந்து இராணுவத்தினரின் பஸ்கள் மூலம் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆலயத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். பொதுமக்களுடன் இணைந்து... Read more »

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று (02) காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு கோபுரங்களுக்கு அபிஷேகம் நடைபெற்று 9.30 மணிக்கு மூல மூர்த்திக்கும் அதனை தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடைபெற்றது. மருதடி விநாயகர் ஆலயம் கடந்த... Read more »

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பொங்கல்

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்றய தினம் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் வெகுவிமர்ச்சியாக கொண்டாடபட்டது. நேற்று காலை பல்கலைக்கழக பிரதான வாயிலில் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, மாணவர்கள் பாரம்பரிய முறைப்படி வெடிகள் கொழுத்தி கொண்டாடினர். கலைப்பீட மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மாணவர்கள்... Read more »

விஷ்ணு கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட பொதுபலசேனாவினர்!

பொதுபலசேனாவின் பௌத்த குருமார் தீபாவளித்தினமான நேற்று புதன்கிழமை காலை தெஹிவளை விஷ்ணு கோவிலுக்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர். Read more »

மல்லாகத்தில் நடைபெறவிருந்த மிருகபலி தடுத்து நிறுத்தப்பட்டது!

தீபத்திருநாளான நேற்று புதன்கிழமை மல்லாகம் நரியிட்டான் வைரவர் ஆலயத்தில் இடம்பெறவிருந்த மிருக பலி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. Read more »

ஆழ்வாருக்கு இன்று தேர்

இலங்கை சரித்திர பிரசித்தி பெற்ற வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் இன்று காலை 9.15 மணியளவில் தேரில் எழுந்தருளவுள்ளார். Read more »

கொக்கட்டிச்சோலை தேரில் சிக்கி ஒருவர் பலி : நால்வர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்தமான சிவன் ஆலயங்களில் ஒன்றான தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேரோட்ட உற்சவத்தின் போது தேர் சில்லில் அகப்பட்டு ஒருவர் பலியானதாக கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர். Read more »

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ்!

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலில் நடைபெற்ற பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பங்கேற்றார். Read more »

யாழில் முதன்முறையாக விநாயகர் சிலை கடலில் கரைப்பு

ஆவணிச் சதுர்த்தியைக் கொண்டாடும் முகமாக கோண்டாவில் கிழக்கு சபரிமலை ஐயப்பன் ஆலயத்திலிருந்து விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கீரிமலைக் கடலில் கரைக்கப்பட்டது. Read more »

நல்லூரில் காவடி ஆடிய இராணுவம்!

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று புதன்கிழமை காலை இடம் பெற்ற பூசை வழிபாடுகளில் யாழ். மாவட்டப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா தலைமையில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் கலந்து கொண்டனர். Read more »