Ad Widget

கச்சத்தீவு திருவிழாவில் தமிழர்கள் பங்கேற்க வழி செய்ய வேண்டும்!

கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் ஆலயம் புனரமைக்கப்பட்டு நடைபெறவுள்ள திருவிழாவில், தமிழர்கள் பங்கேற்க வழி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயகுமார் உறுதியளித்துள்ளார். தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமாரை மீனவ பிரதிநிதிகள், சென்னை தலைமைச்...

பலாலி இராஜராஜேஸ்வரி அம்மனை வழிபட இராணுவத்தினர் அனுமதி!!

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 1ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை காலை 9.00 மணியிலிருந்து மாலை 3.00 மணிவரை மக்கள் வழிபாடுகளில் ஈடுபடலாம் என இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நவராத்திரி பூஜைகளை மேற்கொள்வதற்காக இராணுவத்தினரிடம்...
Ad Widget

நல்லைக் கந்தன் ஆலயத்தில் உங்கள் பொருட்களை தவறவிட்டுள்ளீர்களா?

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ காலத்தில் பக்தர்களால் தவறவிடப்பட்டு மீட்கப்பட்ட பொருட்களை மாநகர சபையில் பெற்றுக்கொள்ள முடியும் என, யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார். நல்லைக் கந்தனின் வருடாந்த மஹோற்சவத்திற்கு வருகைதந்திருந்த பக்தர்களால் தவறவிடப்பட்ட பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், உடமைகளை தவறவிட்ட பக்தர்கள் மாநகர சபையின் மக்கள் தொடர்பு அதிகாரியிடம்...

பக்தர் வெள்ளத்தில் நல்லூரானிற்கு தேர்த் திருவிழா

வரவாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் தேர்த் திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக இடம்பெற்றது. ஆலங்காரக் கந்தன் தேரில் பவனிவர இலட்சோப இலட்சம் பக்தர்கள் புடைசூழ்ந்து வடமிளுத்தனர். இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கிய தேர்த் திருவிழாவில் பக்தர் வெள்ளம் எழுப்பிய “அரோகார” சத்தம் வானைப் பிளந்தது. இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்த பக்தர்கள்...

கோயிலில் பிரச்சனையை தீர்த்தகாலம் போய் , கோயிலுக்காக பிரச்சனைப் படுகின்றோம்

ஊரில் ஒரு பிரச்சனை எனில் அக் காலத்தில் கோயிலில் ஊரவர் கூடி அந்த பிரச்சனையை தீர்ப்பார்கள். ஆனால் தற்காலத்தில் கோயிலை மையப்படுத்தி ஊரில் பிரச்சினையை ஏற்படுத்து கின்றார்கள் என ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் தெரிவித்துள்ளார். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நேற்றய தினம் கோயில் வழக்கொன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போதே நீதவான்...

பலாலி புனித ஆரோக்கிய மாதா ஆயல வருடாந்த பெருநாளைக் கொண்டாட அனுமதி

பலாலியில் மீள்குடியேற்றம் செய்யப்படாத பகுதியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆயல வருடாந்த பெருநாளைக் கொண்டாட பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகம் அனுமதி வழங்கியுள்ளது. பலாலி வடக்கு ஜே. 254 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 1500 குடும்பங்கள் புனித ஆரோக்கிய மாதா ஆலய வருடாந்த திருநாள் திருப்பலி ஆவணி மாதம் 29 ஆம் திகதி கொடியேற்றத்துடன்...

நல்லூர் உற்சவ நாளை விடுமுறை நாளாக பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை!

சிங்கள மக்கள் தமது பெரகராவை தேசிய நாளாகப் போற்றுகின்றார்களோ அதேபோலத்தான் தமிழ் மக்களும் நல்லூர் கந்தசுவாமிகோவிலின் உற்சவ நாளை தேசிய நாளாகப் போற்றுகின்றனர். இந்தப் புனித நாளில் ஏனைய மக்கள் அணிதிரள்வதோடு, யாழ்ப்பாண மக்களும் முழுமையாக அணிதிரண்டு முருகப்பெருமானை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்நாளில் அரச மற்றும அரச சார்பற்ற நிறுவனங்களை மூடி விடுமுறை நாளாக...

நல்லூர் ஆலய சூழலில் காலணிகளுடன் நடமாடியவர்கள் கைது

நல்லூர் ஆலய சூழலில் காலணிகளுடன் நடமாடினார்கள் எனும் குற்றச்சாட்டில் இரு இளைஞர்களைக் கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்துத் தெரியவருவதாவது, நல்லூர் ஆலய மகோற்சவ திருவிழா, கடந்த 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அதனையொட்டி ஆலய சூழலில் காலணிகளுடன் நடமாட வேண்டாம் என ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்துக்கு வருகை தருவோரிடம் கோரிக்கை...

நல்லூரில் விமானத்தில் ஐஸ்கிறீம்!

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த உற்சவம் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நல்லூர் உற்சவத்தில் கலந்துகொள்ள உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் படையெடுத்துவருகின்றனர். இந்நிலையில், ஐஸ்கிறீம் விற்பனை நிலையம் ஒன்று தனது வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக விமானம் வடிவிலான விற்பனை நிலையம் ஒன்றை அமைத்துள்ளது. நல்லூருக்கு வருகை தரும் மக்கள் குறித்த...

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் : தங்க நகைகள் அணிவதை குறைத்துக்கொள்ளுங்கள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்துக்கு வருகை தரும் பக்தர்கள், தங்க நகைகள் அணிந்து வருவதை குறைத்துக்கொள்ளுமாறு யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண தெரிவித்தார். நல்லூர் ஆலய மகோற்சவம் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...

நல்லூர் ஆலயச் சூழலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு, ஆலயச் சூழலில் 500 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் 25 பாதுகாப்பு கண்காணிப்பு கமெராக்களும் பொருத்தப்பட்டுள்ளதாக யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ், தெரிவித்தார். நல்லூர் ஆலய மஹோற்சவம் கடந்த 8ம் திகதி ஆரம்பமாகி...

மடுஅன்னையின் ஆவணித் திருவிழாவில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

மன்னார் மடு மாதா தேவாலயத்தின் ஆவணி மாதத் திருவிழா நேற்று கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை ஆண்டகை உட்பட கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணாண்டோ ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட...

நல்லூரில் பிளாஸ்டிக் அர்ச்சனை தட்டுகள்!!

யாழ் நல்லூர் கந்தனின் மகோற்சவம் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆலயச் சுழலில் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக்கிலாலான அர்ச்சனை தட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்ககூடியதாக இருக்கின்றது. நல்லூர் மகோற்சவம் அரம்பிப்பதற்கு முன்னரே யாழ் மாநகரசபை ஆணையாளர் பிளாஸ்டிக் அர்ச்சனை தட்டுகளை விற்பனை செய்ய வேண்டாம் எனவும் அதற்குப் பதிலாக பனை ஓலையால் பின்னப்பட்ட அர்ச்சனை தட்டுகளை பாவிக்குமாறு கேட்டுகொள்ளபட்டமை...

பொன்னாலை வரதராஜப் பெருமாள் பெருந்திருவிழா 9 ஆம் திகதி ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பகல் 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறவுள்ள இப் பெருந்திருவிழாவில் 13 ஆம் திகதி சனிக்கிழமை மாலை சப்பறத் திருவிழாவும், 24 ஆம் திகதி புதன்கிழமை மாலை வேட்டைத் திருவிழாவும், 25 ஆம்...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பிளாஸ்டிக் அர்ச்சனைத் தட்டுக்கு தடை

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தில், அர்ச்சனைத் தட்டுக்கள் விற்பனை செய்யும் கடைகளில் பிளாஸ்டிக் அர்ச்சனைத் தட்டுகள் விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளதாக யாழ். மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார். பிளாஸ்டிக் அர்ச்சனைத் தட்டுக்களுக்குப் பதிலாக, பனையோலையில் தயாரிக்கப்பட்ட அர்ச்சனைத் தட்டுக்களே விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் அவற்றை, மாவட்ட மகளிர் அமைப்புக்கள் ஊடாகவும் பனைசார் உற்பத்தியாளர்களிடமிருந்தும்,...

நல்லூரில் கண்காணிப்புக் கமரா!

யாழ்ப்பாண மாவட்டம், வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலில் எதிர்வரும் 8ஆம் திகதி கோயிலின் மகோற்சவம் நடைபெறவுள்ளதால், அங்கு வருகைதரும் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி அங்கே கண்காணிப்புக் கமரா அமைக்கப்போவதாக யாழ்ப்பாண மாநகர சபை அறிவித்துள்ளது. இம்முறை நல்லூர் திருவிழாவிற்கு, புலம்பெயர் தமிழர்களும், தெற்கிலிருந்து சிங்கள மக்களும் பெருமளவில் வருகைதருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், நல்லூரில் பாதுகாப்பும்...

கீரிமலையில் பிதிர்க் கடனைச் செலுத்த திரண்ட மக்கள்

கீரிமலை புனித தீர்த்தக் கரையில் புனித ஆடி அமாவாசை விரத நாளான இன்று செவ்வாய்க்கிழமை காலை ஏராளமான மக்கள் பிதிர்க் கடனைச் செலுத்தினார்கள். முன்னோர்களின் ஆன்மீக ஈடேற்றத்துக்காக பிதிர்க்கடன் செலுத்தி பக்திபூர்வமாக கடைப்பிடிக்கும் விரதமான ஆடி அமாவாசை விரதத்தை பக்தியுணர்வுடன் அனுட்டித்தனர். இன்று விரதமிருந்து கீரிமலை தீர்த்தக்கரையில் தமது முன்னோர்க்கு சிரார்த்த கடனை செய்து அருகில்...

யாழில் தேர் இழுத்த இராணுவத்தினர் (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு வருகை தந்த நூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் , தேர் இழுக்க தொடங்கியதும் தமது மேலாடைகளை கலைந்து விட்டு , தமது காலணிகளை கழட்டி விட்டு தாமும் பக்கதர்களுடன் இணைந்து தேரினை இழுத்தனர்.

மிருக பலிக்கு எதிரான நீதிமன்றத் தடை நீடிப்பு!

உயிர் காப்பது தர்மம். உயிர் எடுப்பது கர்மம். தர்மம் தலைகாக்கும் என்பார்கள் நீதிமன்ற தர்மம் ஆடுகளின் தலைகளைக் காக்கட்டும் என தெரிவித்துள்ள யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், ஆலயங்களின் வேள்விகளில் மிருகபலி கொடுப்பதைத் தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வரை நீடித்துள்ளார். ஆலயங்ளில் மிருகபலி கொடுப்பதைத் நிறுத்துவதற்குத்...

கனகாம்பிகைக்கு 600லட்சத்தில் 99 அடி உயர இராஜகோபுரம்

வடக்கு மாகாணத்தின் நுழைவாயிலாக உள்ள கிளிநொச்சி மண்ணின் அடையாளங்களுள் ஒன்றாக இரணைமடு குளத்தின் கரையில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் ஆலய இராஜ கோபுர அடிக்கல் நாட்டு விழா நேற்று வியாழ்கிழமை 14-07-2016 நடைபெற்றது. காலை விசேட வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இவ் அடிக்கல் நாட்டு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர்...
Loading posts...

All posts loaded

No more posts