நல்லூர் ஆலயச் சூழலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு, ஆலயச் சூழலில் 500 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் 25 பாதுகாப்பு கண்காணிப்பு கமெராக்களும் பொருத்தப்பட்டுள்ளதாக யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ்,... Read more »

மடுஅன்னையின் ஆவணித் திருவிழாவில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

மன்னார் மடு மாதா தேவாலயத்தின் ஆவணி மாதத் திருவிழா நேற்று கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை ஆண்டகை உட்பட கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணாண்டோ ஆண்டகை,... Read more »

நல்லூரில் பிளாஸ்டிக் அர்ச்சனை தட்டுகள்!!

யாழ் நல்லூர் கந்தனின் மகோற்சவம் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆலயச் சுழலில் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக்கிலாலான அர்ச்சனை தட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்ககூடியதாக இருக்கின்றது. நல்லூர் மகோற்சவம் அரம்பிப்பதற்கு முன்னரே யாழ் மாநகரசபை ஆணையாளர் பிளாஸ்டிக் அர்ச்சனை தட்டுகளை விற்பனை செய்ய வேண்டாம் எனவும் அதற்குப்... Read more »

பொன்னாலை வரதராஜப் பெருமாள் பெருந்திருவிழா 9 ஆம் திகதி ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பகல் 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறவுள்ள இப் பெருந்திருவிழாவில் 13 ஆம் திகதி சனிக்கிழமை மாலை சப்பறத் திருவிழாவும், 24... Read more »

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பிளாஸ்டிக் அர்ச்சனைத் தட்டுக்கு தடை

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தில், அர்ச்சனைத் தட்டுக்கள் விற்பனை செய்யும் கடைகளில் பிளாஸ்டிக் அர்ச்சனைத் தட்டுகள் விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளதாக யாழ். மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார். பிளாஸ்டிக் அர்ச்சனைத் தட்டுக்களுக்குப் பதிலாக, பனையோலையில் தயாரிக்கப்பட்ட அர்ச்சனைத் தட்டுக்களே விற்பனை செய்யப்பட வேண்டும்... Read more »

நல்லூரில் கண்காணிப்புக் கமரா!

யாழ்ப்பாண மாவட்டம், வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலில் எதிர்வரும் 8ஆம் திகதி கோயிலின் மகோற்சவம் நடைபெறவுள்ளதால், அங்கு வருகைதரும் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி அங்கே கண்காணிப்புக் கமரா அமைக்கப்போவதாக யாழ்ப்பாண மாநகர சபை அறிவித்துள்ளது. இம்முறை நல்லூர் திருவிழாவிற்கு, புலம்பெயர் தமிழர்களும், தெற்கிலிருந்து... Read more »

கீரிமலையில் பிதிர்க் கடனைச் செலுத்த திரண்ட மக்கள்

கீரிமலை புனித தீர்த்தக் கரையில் புனித ஆடி அமாவாசை விரத நாளான இன்று செவ்வாய்க்கிழமை காலை ஏராளமான மக்கள் பிதிர்க் கடனைச் செலுத்தினார்கள். முன்னோர்களின் ஆன்மீக ஈடேற்றத்துக்காக பிதிர்க்கடன் செலுத்தி பக்திபூர்வமாக கடைப்பிடிக்கும் விரதமான ஆடி அமாவாசை விரதத்தை பக்தியுணர்வுடன் அனுட்டித்தனர். இன்று விரதமிருந்து... Read more »

யாழில் தேர் இழுத்த இராணுவத்தினர் (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு வருகை தந்த நூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் , தேர் இழுக்க தொடங்கியதும் தமது மேலாடைகளை கலைந்து விட்டு , தமது காலணிகளை கழட்டி விட்டு தாமும் பக்கதர்களுடன் இணைந்து தேரினை இழுத்தனர். Read more »

மிருக பலிக்கு எதிரான நீதிமன்றத் தடை நீடிப்பு!

உயிர் காப்பது தர்மம். உயிர் எடுப்பது கர்மம். தர்மம் தலைகாக்கும் என்பார்கள் நீதிமன்ற தர்மம் ஆடுகளின் தலைகளைக் காக்கட்டும் என தெரிவித்துள்ள யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், ஆலயங்களின் வேள்விகளில் மிருகபலி கொடுப்பதைத் தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11... Read more »

கனகாம்பிகைக்கு 600லட்சத்தில் 99 அடி உயர இராஜகோபுரம்

வடக்கு மாகாணத்தின் நுழைவாயிலாக உள்ள கிளிநொச்சி மண்ணின் அடையாளங்களுள் ஒன்றாக இரணைமடு குளத்தின் கரையில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் ஆலய இராஜ கோபுர அடிக்கல் நாட்டு விழா நேற்று வியாழ்கிழமை 14-07-2016 நடைபெற்றது. காலை விசேட... Read more »

மக்கள் பார்வைக்காக பிரதிஷ்டை செய்யப்படவுள்ள சிவலிங்கம்

இணுவிலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நாளை செந்தமிழால் திருக்குடமுழுக்கு நடைபெற்று பிரதிஷ்டை செய்யப்படவுள்ள சிவலிங்கத்தை படத்தில் காணலாம். இராவணேஸ்வரன் தாங்கியுள்ள இச்சிவலிங்கத்தை அடியவர்கள் நேரில் தரிசித்து மலர் தூவி வழிபட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய செய்தி யாழில் இராவணனுக்கு ஆலயம்!! செந்தமிழில் பூஜை... Read more »

யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில், பெருநாள் தொழுகை (படங்கள்)

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நாடெங்கும் முஸ்லிம் பெருமக்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இவ் வேளையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒஸ்மானியாக் கல்லூரி அருகே உள்ள ஜின்னா மைதானத்தில் இன்று காலை 7 மணியளவில் சிறப்பு தொழுகை ஒன்று இடம்பெற்றது. இதன் போது பொம்மைவெளி... Read more »

யாழில் இராவணனுக்கு ஆலயம்!! செந்தமிழில் பூஜை வழிபாடுகள்!!

சிவபூமியான ஈழமணித் திருநாட்டின் யாழ்ப்பாண இராசதானியின் இணுவையம்பதியில் சிவஞான சித்தர் பீடத்தின் அருளாசியுடன், சைவ மகா சபையின் ஆதரவுடன் சைவநெறிக் கூடத்தினரால் ஞானலிங்கேசுவரர் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஐந்து தளக் கோபுரத்துடன் இராவணேசுவரன் தாங்குகின்ற உள்ளங்கவர் ஞான லிங்கத்தைக் கொண்ட வகையில் அமைக்கப்பட்டுள்ள இவ்வாலயத்தின் கருவறையில்... Read more »

கதிர்காமம் உற்சவ கொடியேற்றம் இன்று

மூவின மக்களும் பக்தியுடன் தரிசிக்கும் புனித பூமியான கதிர்காமக் கந்தனின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் இன்று 05 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 21 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது. கதிர்காமம் உற்சவத்தினை ஒட்டியதாக யால காட்டினூடாக சராசரி 50 ஆயிரம் முதல் 90... Read more »

திருநெல்வேலி அருள்மிகு தலங்காவற் பிள்ளையார் கோவில் பரிசளிப்பு விழா

திருநெல்வேலி அருள்மிகு தலங்காவற் பிள்ளையார் கோவில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சமய அறிவுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா தீர்த்தத் திருவிழாவின்போது நடைபெற்றது. விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேகன் தலைமையில் நடைபெற்ற இப்பரிசளிப்பு நிகழ்ச்சியில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் உப அதிபர் ச.லலீசன், யாழ்... Read more »

யாழ் பாசையூர் புனித அந்தோனியார் திருவிழா

யாழ் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று(13) வெகு சிறப்பாக நடைபெற்றது. கோடி அற்புதராம் பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவநாள் திருப்பலிகள் இடம்பெற்று நேற்று திருவிழா சிறப்பாக இடம்பெற்றது. நேற்று(13)... Read more »

புனித ரமழான் நோன்பு இன்று ஆரம்பம்

ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று(06) மாலை தென்பட்டதனால் இன்று(07) ரமழான் புனித நோன்பு ஆரம்பமாவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று மாலை கூடிய தலைப்பிறையை தீர்மானிக்கும் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிருவாகம், அகில இலங்கை ஜம்இய்யத்துல்... Read more »

நயினை நாகபூஷணி அம்மன் மகோற்சவம் எதிர்வரும் 06 திகதி ஆரம்பம்

சரித்திர பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத்தினது வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து பதினாறு தினங்கள் உற்சவங்கள் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது. 14 ஆம் திகதி செய்வாய்க்கிழமை... Read more »

மிருகபலிக்கான தடை நீடிக்கும்

மிருகபலிக்கு தடை விதித்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவை இரத்துச் செய்ய முடியாது என மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன், நேற்று செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயங்களில் இடம்பெறும் மிருகபலியை தடுத்து நிறுத்துமாறு கோரி, இலங்கை சைவ மகா... Read more »

இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் பாமாலை வெளியீட்டு நிகழ்வு

தென்னிந்திய கலைஞர்கள் பாடிய யாழ்ப்பாணத்தின் இணுவிலில் அமைந்துள்ள சரித்திரப் பிரசித்தி பெற்ற ஶ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயத்தின் திருவருளை எடுத்துரைக்கும் ஶ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் பாமாலை – 2 இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழா தொடங்கும்... Read more »