சிங்கள தேசம் புரிந்துகொள்ளாததால் சம்பந்தனின் எதிர்க்கட்சி தலைவர் பதவியால் பயனில்லை!!

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் எதிர்கட்சி தலைவர் பதவி பற்றி மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. அவர் முழு நாட்டுக்கும் பணி செய்கிறார் இல்லை என்று சொல்லி அதை பறித்து தமக்கு தர சொல்லி பொது எதிரணி கூறுகின்றது. ஆனால் அதைவிட முக்கியமாக “சம்பந்தன்,... Read more »

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தரப்பு எமது கட்சியுடன் பேசியமைக்கான ஆதாரம் உண்டு – ஈ.பி.டி.பி

சபைகளை அமைப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பலர் எமது கட்சியுடன் பேசி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் தாம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் பேச்சுக்கள் எதுவும் நடத்தவில்லை என்று கூறுவதானது “ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி கடந்த பின்னர் நீயாரோ... Read more »

எமது தாயாரின் தியாகத்தை அரசியல்வாதிகள் மதிக்கவேண்டும் : அன்னை பூபதியின் பிள்ளைகள்

“நாங்கள் எவரின் பின்புலனில் செயற்படவில்லை, தேசத்துக்காக உயிர் நீத்த எங்களது தாயாரையும் எம்மையும் அவமானப்படுத்துவதை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என அன்னைபூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார். அன்னை பூபதியின் நினைவு தின நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ள சர்ச்சைகள் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு... Read more »

முள்ளிவாய்கால் பேரவலத்தினை நினைவுகூர அழைப்பு!

இறுதிக்கட்டப்போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்காக எதிர்வரும் மே- 18 ஆம் திகதி அனைவரையும் ஒன்று திரளுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் நேற்று (புதன்கிழமை) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உலக சமூகங்களின் மனச்சாட்சிக் கதவுகளை... Read more »

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தயார்! – சம்பந்தன்

ஒரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நினைப்பது அநாகரிகமான செயலென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அதனை எதிர்கொள்ள தயாராகவே இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.... Read more »

வடக்கு ஆக்கிரமிப்பு தெற்கில் நடந்தால் ஏற்றுக்கொள்ள முடியுமா? – ராஜிதவின் காரசாரமான கேள்வி

வடக்கில் இராணுவத்தினர் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டு வருவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் வடக்கு மக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை)... Read more »

ரணிலுக்கு ஆதரவு வழங்குமாறு டக்ளஸ் தேவானந்தாவிற்கு மிரட்டல்? : வெளிவரும் பரபரப்புத் தகவல்கள்

இலங்கை அரசியலில் பல்வேறுபட்ட சர்ச்சைகளை ஏற்படுத்திய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மிரட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயம் தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.... Read more »

530 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம், 880 மில்லியன் ரூபாய் கோரியுள்ளது

வடக்கில் இராணுவத்தினரின் வசமுள்ள 530 ஏக்கர் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறுவதுக்கு 880 மில்லியன் ரூபாய் கோரியுள்ள நிலையில், அதனைக் கொடுத்து அக் காணிகளை மீட்பதுக்கு அமைச்சரவைப் பத்திரங்களை தமது அமைச்சு தயாரித்து வருவதாக மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ் தெரிவித்துள்ளார்.... Read more »

சுமந்திரனின் விசேட நிதி ஒதுக்கீட்டில் உருவாக்கப்பட்ட ஆய்வுகூடம், பேருந்து தரிப்பிடம் என்பன அடித்து நொறுக்கப்பட்டுள்ளது!!

யாழ்.சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடம் மற்றும் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பேருந்து தரிப்பிடம் என்பன கடந்த புதன்கிழமை(04) இரவு விஷமிகளால் தாக்கிச் சேதப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் விசேட நிதி ஒதுக்கீட்டில் கல்லூரி மாணவர்களின் சாதனைகளைப்... Read more »

வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களின் 700 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்படவுள்ளது.

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களின் 700 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் அங்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலிகள் முகாம்கள் அங்கிருந்து அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். பலாலி விமான நிலையத்திற்கு அண்மைய காணிகள், வறுத்தலைவிளான், கட்டுவன் சந்தி அச்சுவேலி... Read more »

‘கொடுத்தது போல் மீண்டும் பறிக்க முடியும்’ – இராணுவத் தளபதி எச்சரிக்கை!!

“இந்த வீடுகள் மற்றும் வசதிகளை உங்களுக்கு வழங்குவதை போன்று மீண்டும் எங்களால் அவற்றைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்” என இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க எச்சரிக்கை தொனியில் தெரிவித்துள்ளார். தெல்லிப்பளையில், ‘நல்லிணக்கபுரம்’ என பெயர் சூட்டப்பட்ட கிராமத்தில் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகளை மக்களுக்கு கையளிக்கும்... Read more »

நம்பிக்கையில்லா பிரேரணை – பிரதமர் ரணில் அமோக வெற்றி

மகிந்த அணியினரால் கொண்டுவரப்பட்ட அவநம்பிக்கைப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டதன் ஊடாக, நாடாளுமன்றம் பிரதமரது அதிகாரத்தை மீள ஸ்தாபித்துள்ளது. நேற்றையதினம் இந்த பிரேரணை மீதான விவாதம் 12 மணி நேரமாக இடம்பெற்றிருந்தது. இதனை அடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில், 46 மேலதிக வாக்குகளை அவநம்பிக்கை பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. பிரேரணைக்கு... Read more »

ரணிலுக்கு கூட்டமைப்பு ஆதரவு!! : நாடாளுமன்றில் சம்பந்தன்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரவளிக்கப்போவதில்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் இதனை அறிவித்தார். “தேசிய அரசுக்கு தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆணையை மக்கள் வழங்கினர். ஆகவே தமிழ்... Read more »

ரிஷாட்டின் பொறுப்பில் வடக்கின் புனர்வாழ்வு!

வடக்கின் புனர்வாழ்வு மற்றும் வன்னி மாவட்ட அபிவிருத்தி ஆகிய பொறுப்புகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வணிக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு வழங்கப்பட்டுள்ளன. புதிய அமைச்சரவை மாற்றம் குறித்து வெளியாகிய வர்த்தமானி அறிவித்தலிலேயே மேற்படி விடயம் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில் வடக்கு... Read more »

புலிகளின் முக்கிய தளபதிகள் உயிரிழக்க ஸ்ரீதரனே காரணம்!!

“தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள்” என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் எம்.ரெமிடியஸ் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற... Read more »

கூட்டமைப்பு குற்றச்சாட்டுகளிலிருந்து எம்மை விடுவித்துள்ளது : ஈ.பி.டி.பி

“ஈ.பி.டி.பி கட்சி ஒட்டுக்குழு என்றும், தமிழ் உறவுகளை காணாமல் ஆக்கியவர்கள் என்றும் எம்மீது பொய் குற்றச்சாட்டுக்களை கூறி வீண்பழி சுமத்தி வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க எங்களின் ஆதரவை பெற்றுள்ள நிலையில் அப் பொய் குற்றச்சாட்டுக்களில் இருந்து எங்களை விடுவித்துள்ளது”... Read more »

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றன!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பக்க அமர்வொன்றில் இலங்கை கடற்படை அதிகாரிகளின் குற்றச்சாட்டை மறுதலித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் கொடுக்கப்பட்ட விளக்கத்தைத் திரிவுபடுத்தி செய்திகளை வெளியிட்டு சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றன என... Read more »

ஆனந்தசுதாகருக்கு பொது மன்னிப்பளிப்பது தொடர்பில் உரிய நடவடிக்கை!! பிள்ளைகளிடம் ஜனாதிபதி உறுதி!!!

அரசியல் தண்டனைக் கைதி சச்சிதானந்தன் ஆனந்தசுதாகருக்கு பொது மன்னிப்பளிப்பது தொடர்பில் உரிய நடவடிக்கையை முன்னெடுப்பதாக அவரது இரண்டு பிள்ளைகளிடமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று காலை ஆனந்தசுதாகரின் புதல்வனும் புதல்வியும் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இந்த உறுதிமொழியை... Read more »

கோட்டாபய கொலைகளைச் செய்தார் என்பது உறுதி! – விரைவில் உண்மைகள் வெளிவரும்

குற்றம் செய்தவர் எவராக இருந்தாலும் ரணில் விக்ரமசிங்க பாரபட்சம் வழங்கவோ அல்லது காப்பாற்றவோ மாட்டார் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்... Read more »

சுதாகரனின் விடுதலைக்காக தலைநகரில் திரண்ட மக்கள்!

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுவிக்குமாறு வலியுறுத்தி, தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டமும் கையெழுத்து வேட்டையும் இடம்பெற்றது. நேற்று (புதன்கிழமை) நவோதயா அமைப்பின் ஏற்பாட்டில் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால், இனம், மதம், மொழிகளை கடந்து திரண்ட மக்கள் ஆனந்த சுதாகரனை விடுவிக்குமாறு கோரிய... Read more »