ஊர்காவற்துறையில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை அச்சுறுத்திய கடற்படையினர்

பொது மக்களின் காணிகளை கடற்படையினர் சுவீகரிப்பதற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களை கடற்படையினரும், புலனாய்வாளர்களும் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவகத்தின் ஊர்காவற்துறை பருத்தியடைப்பில் பொது மக்களின் காணிகளை ஆக்கிரமித்து கடற்படையினர் முகாம் அமைத்துள்ளனர். இதனால் முகாம் அமைந்துள்ள காணி உள்ளிட்ட அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த... Read more »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு எதிராக அமைச்சர் அனந்தி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு எதிராக வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை 4ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு எதிராகவே நேற்று முன்தினம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வேட்பாளர் முகநூலில் தன்னை... Read more »

கடற்படையின் வாகனம் மோதியதில் பாடசாலை சிறுமி பலி!!!

புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலைக்கு அருகில் கடற்படையின் பவல் வாகனம் மோதியதில் பாடசாலை சிறுமி சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் இன்று(24) காலை 7:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஊர்காவற்துறை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி புங்குடுதீவு பகுதியினை சேர்ந்த திருவானந்தன் கேசனா... Read more »

ஒரு வருடமாக வீதியில் தவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்!

வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், நேற்றயதினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுழற்சி முறையிலான இந்த உண்ணாவிரதப்போராட்டம் 334 ஆவது நாளாக தொடரும்நிலையில், சாகும்வரையிலான உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தாயகத்தில் கையளிக்கப்பட்டு... Read more »

தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு: 10 தொடரூந்து சேவைகள் இரத்து

தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கத்தினர் 4 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதனால், 10 தொடரூந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றும் தொடரூந்து இயந்திர சாரதிகளின் சேவை காலம் நீடிக்கப்படாமை மற்றும் புதிய தொடரூந்து இயந்திர சாரதிகள் இணைத்து கொள்ளப்படாமை உள்ளிட்ட... Read more »

வடக்கில் இனப்பரம்பலை மாற்றியமைக்க திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் : வடக்கு முதல்வர் குற்றச்சாட்டு

இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடன் வடக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். முதலமைச்சர் வாரந்தோறும் வழங்கிவரும் கேள்வி பதில் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாராந்த கேள்வி பதில் அறிக்கை வருமாறு, வாரத்திற்கொரு கேள்வி இவ்வாரம் கொழும்பில்... Read more »

தேர்தல் வன்முறைகளில் ஈடுபடும் வேட்பாளர்களை கைதுசெய்யுமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு

தேர்தல் காலத்தில் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கான பிணை விண்ணப்பங்கள் நிராகரிப்பட்டதுடன் தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால், அவர்களையும் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள ஒருவரின்... Read more »

கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டதா? : மாவை விளக்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்கென சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டதே தவிர, தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டை போல சொந்தத் தேவைக்கு அந்த நிதி ஒதுக்கப்படவில்லையென தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கடந்த... Read more »

உங்களால் முடியாவிட்டால் போங்கள்’: கஜேந்திரகுமார் கூட்டமைப்பின் மீது காட்டம்!

கூட்டமைப்பின் தலைமையை ‘உங்களால் முடியாவிட்டால் அரசியலை விட்டுப் போங்கள்’ என அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆவேசமாக உரையாற்றியுள்ளார். வவுனியா, பாவற்குளம் ஆறாம் வட்டாரத்தில் இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரசின் செட்டிக்குளம் பிரதேச சபைக்கான பிரசார கூட்டத்தில் கலந்து... Read more »

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை : வடக்கு முதல்வர்

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாட்டில் ஜனநாயக சூழ்நிலை... Read more »

யாழில் கோடுரம்!!! : 3வயது குழந்தை வெட்டிப் படுகொலை!!!

வண்ணார்பண்ணை வட மேற்கு பத்திரகாளி அம்மன் கோயிலடியில் 3 வயது பச்சிளம் பெண் குழந்தை வெட்டிக் கொலை செய்யப்பட்டாள். அவளது பேத்தியான குடும்பப் பெண் வெட்டுக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது…. மன நோயாளி எனத் தெரிவிக்கப்பட்டவரே தனது இளைய... Read more »

மின்சார சபை ஊழியர்கள் நாடு பூராகவும் பணி நிறுத்தம்

ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாடுதழுவிய ரீதியில் உடனடி பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நேற்று மாலை ஊழியர்கள் சிலர் மின்சார சபையின் தலைவரைத் தடுத்து வைத்து, தலைமையக வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பொலிஸார்... Read more »

யாழ். தனியார் வைத்தியசாலையில் நோய்த்தொற்று அபாயம்: குணசீலன்

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சைக் கூடத்தில் தொடர்ந்தும் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளுவது மேலும் கிருமித்தொற்றுகையை ஏற்படுத்த சந்தர்ப்பம் உள்ளது என வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார். தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்கு படுத்தும் சபை அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக... Read more »

தமிழ்த்தேசிய பேரவையின் உள்ளூராட்சிமன்ற தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது

தமிழ்த்தேசிய பேரவையின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (17.01.2018) புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் வெளியிட்டுவைக்கப்பட்டது. தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு உரைகளையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகரசபை முதன்மை வேட்பாளளுமான சட்டத்தரணி... Read more »

அரசாங்கம் தருவதை ஏற்றுக்கொள்ளும் அவசியம் எமக்கில்லை: வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்

”தமிழ் மக்களுக்கு தேவையான விடயங்களை கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அரசாங்கம் தருவதனை பெற்றுக்கொள்ள முடியாது. எமக்கு விருப்பமில்லாத தீர்வினை எம்மீது திணிக்க முடியாது. அவ்வாறு நடந்தால் இன்னும் 20 வருடங்களின் பின்னர் வடக்கு கிழக்கை சேராதவர்கள் வடக்கு கிழக்கை ஆட்சிசெய்ய, அவர்களின் கீழ்... Read more »

இடைக்கால அறிக்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில் பொய்ப்பிரசாரம்: கஜேந்திரகுமார்

அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில், இடைக்கால அறிக்கையில் இல்லாத விடயங்கள் கூட மக்களிடம் எடுத்துச் செல்லப்படுகின்றன. மக்கள் இடைக்கால அறிக்கையினை முழுமையாக வாசிக்க மாட்டார்கள் என்ற நிலையில், இவ்வாறு பொய்ப்பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்... Read more »

யாழில் இருவேறு இடங்களில் வாள்வெட்டு: இருவர் படுகாயம்

யாழில் நேற்று (திங்கட்கிழமை) இரவு வெவ்வேறு பகுதிகளில் இரு வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.ஆனைக்கோட்டை வராகி அம்மன் கோவில் அருகிலும், பூநாரி மடம் பகுதியிலும் இந்த வாள்வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இனந்தெரியாத... Read more »

“சுமந்திரன் ஒரு தேசத்துரோகி“ : மண் தூவி சாபமிட்டு ஒப்பாரி வைத்து அழுத காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு தேசத் துரோகி எனத் தெரிவித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உருவப்படங்களுக்கு மண்ணை அள்ளித் தூற்றியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கதறி அழுது ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இறுதி யுத்தத்தின்போது படையினரிடம் கையளித்தும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட... Read more »

ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள்: உச்ச நீதிமன்றம் தெரிவிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே என்று ஜனாதிபதி செயலகத்திற்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2015 ஜனவரி 9ஆம் திகதி முதல் ஆறு வருட காலத்திற்கு ஜனாதிபதி பதவி வகிக்க முடியும் என சட்டமா அதிபர் திணைக்களம் உச்ச நீதிமன்றத்திற்கு கடந்த... Read more »

யாழ்ப்பாணம் கல்லூண்டாய் குப்பை மேட்டு பிரச்சினை தொடர்பாக முக்கிய உத்தரவு!

யாழ்ப்பாணம் கல்லூண்டாய் குப்பை மேட்டு பிரச்சினை தொடர்பாக யாழ்.மாநகர சபைக்கு, மல்லாகம் நீதிமன்றமானது மூன்று முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. நேற்றயதினம் (வெள்ளிக்கிழமை) மல்லாகம் நீதிமன்றில் குறித்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மல்லாகம் நீதிவான் ஏ.யூட்சன் குறித்த உத்தரவிரனை பிறப்பித்தார். இதன்படி எதிர்வரும்... Read more »