இலங்கையின் பொறுப்புக்கூறல் நகர்வுகளில் முன்னேற்றமில்லை: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்

இலங்கையின் பொறுப்புக்கூறல் நகர்வுகளில் முன்னேற்றங்கள் இல்லாத நிலையில், உலகளாவிய சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு உறுப்பு நாடுகளிடம் கோரவுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். ஆணையாளரினால் ஜெனிவாவில் நேற்று (புதன்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த... Read more »

கிளிநொச்சி பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் குவிப்பு!!!

நாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நகர்ப்பகுதியில் உள்ள நான்கு பள்ளிவாசல்களுக்கும் மற்றும் வட்டக்கச்சிப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றுக்குமாக ஐந்து பள்ளிவாசல்களுக்கு 57 ஆவது படைப்பிரிவின் இராணுவ வீரர்கள்... Read more »

புலிகளின் நகர்வுகளை முஸ்லிம்களே அரசாங்கத்திற்கு அறிவித்தனர்! : பாதுகாப்புப் படைகளின் பிரதானி

யுத்த காலத்தில் புலிகளின் பிரதேங்களுக்குச் சென்று அவர்களது நகர்வுகள் தொடர்பாக முஸ்லிம்களே அரசுக்கு தகவல்களை வழங்கியதாக பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய (புதன்கிழமை) செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-... Read more »

கண்டியில் மீண்டும் வெடித்தது வன்முறை : பற்றியயெரிந்த வாணிப நிலையங்கள்

கண்டி மாவட்டத்தில் அக்குறண, கட்டுகஸ்தோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றுபிற்பகல் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதால், பதற்றநிலை மோசமடைந்துள்ளது. கடந்த சில மணித்தியாலங்களில் பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அக்குரண, 8 ஆவது மைல் கல், கட்டுகஸ்தோட்ட பகுதிகளில் முஸ்லிம்களின் 25... Read more »

ஈபிடிபியின் அறிக்கைக்கு சட்டத்தரணி சுகாஸ் பதிலறிக்கை!!

2013ஆம் ஆண்டு வடமாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தன்னை கொலை செய்யும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட தாக்குதலை தமிழரசுக் கட்சியினரே நடத்தியாதாக வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர் மீதான அந்தத் தாக்குதலை ஈ.பி.டி.பியினரும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினருமே நடத்தியதாக தமிழ்த்... Read more »

நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம் பிரகடனம்!!

நாடு முழுவதும் அவசரகாலச் சட்டத்தை 10 நாள்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். இன வன்முறைகளைத் தடுக்கவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வௌயிடப்படும் என்றும் கூறினார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற... Read more »

என்னை அரசியலில் இணைத்த தமிரசுக் கட்சி என் மீது அடாத்தான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவது ஜனநாயகமற்றது : அனந்தி

“வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் காலத்தில் எனது வீட்டின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய எனது குற்றச்சாட்டு ஆதாரபூர்வமானது. அதில் எள்ளவும் ஐயமில்லை என்பதனை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்வதாக” வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,... Read more »

சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் கால்பந்தாட்ட வீரர்கள் மீது தாக்குதல்!!

தென்மராட்சி கல்வி வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருந்த சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவர்கள், கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். அதனால் ஏற்பட்ட பதற்றத்தால் கால்பந்தாட்டம் மற்றும் கபடிப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்தச் சம்பவம் நேற்றயதினம் மாலை 3 மணியளவில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில்... Read more »

ஊரடங்குச் சட்டம் நீக்கம்: கண்டியில் தொடர்ந்தும் STF பாதுகாப்பு

கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட, பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.00 மணியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும், குழப்பம் ஏற்பட்ட தெல்தெனிய மற்றும் திகன பகுதியில் தொடர்ந்தும் விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினமும், நேற்றும்... Read more »

கண்டி மாவட்டத்தில் பொலிஸ் ஊடரங்கு!

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் பொலிஸ் ஊடரங்கு போடப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணிவரை இந்த ஊடரங்கு நடைமுறையில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கண்டி திகன நகரில் இன்று காலை முதல் ஏற்பட்ட அசாதாரண நிலமையை... Read more »

யாழ்.கோட்டையை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தால் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும்!!

யாழ்ப்பாணம் கோட்டையை வழங்கினால் இராணுவ முகாங்களை அங்கு நகர்த்திவிட்டு மக்களின் காணிகளை விடுக்க முடியும் என்று இராணுவத்தினர் தெரிவித்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் யாழ். செயலகத்தில் இடம்பெற்றது. இராணுவம் மற்றும் பொலிஸார் வசமுள்ள மக்களின் காணிகளை... Read more »

விடுதலைப்புலிகளின் குண்டே வெடித்தது! : இராணுவ வீரரின் அதிர்ச்சித் தகவல்

தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஓய்வூதியம் மற்றும் காப்புறுதி உட்பட்ட மேலதிக கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுத்த திட்டத்தில் விளைவே பேரூந்து குண்டுவெடிப்பிற்கு காரணம் என கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் தெரிவித்துள்ளார். அண்மையில் தியத்தலாவ – கஹவெல்ல பகுதியில் பேரூந்து ஒன்றில் இடம்பெற்ற... Read more »

பொதுமக்கள் மனம் தளராமல் தமது உரிமைக்கான போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் : இரா.சம்பந்தன்

பொதுமக்கள் மனம் தளராமல் தமது உரிமைக்கான போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்களுடன், எதிர்க்கட்சி தலைவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக... Read more »

அனந்தி, ஐங்கரநேசன், அருந்தவபாலன் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைவு !!

வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் முன்னாள் அதிபரும் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளருமான க.அருந்தவபாலன் ஆகியோர் தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் பேரவையின் விசேட பொதுக்கூட்டம் நேற்று... Read more »

தமிழ் மக்கள் பேரவை ஐ.நாவுக்குச் செல்லவுள்ளது : சி.வி.விக்கினேஸ்வரன்

“ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் 37ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவதுக்காக தமிழ் மக்கள் பேரவையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி சிலர் செல்லவுள்ளதாக” வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் தமிழ் மக்கள் பேரவையின்... Read more »

சிரியா இனப்படுகொலையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்!

கிழக்கு ஹௌட்டா மீது சிரிய படைகள் நடத்திவரும், கொடூரத் தாக்குதல்கைளக் கண்டித்தும், அதனை நிறுத்துமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் நேற்று (வியாழக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு எதிரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கில் வாழும், தமிழ், முஸ்லிம் மக்கள்... Read more »

அரசாங்கத்தை எச்சரிக்கிறார் முன்னாள் இராணுவ அதிகாரி!!

இலங்கையின் மத்திய மலைநாட்டிலுள்ள தியத்தலாவ- கஹகொல்லவில் அண்மையில் படையினர் உள்ளிட்ட 19 பேர் காயமடைந்த பேருந்துக் குண்டு வெடிப்புச் சம்பவத்தை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில்... Read more »

அம்பாறை நகரில் பதற்றம் : முஸ்லிம்கள் மீது தாக்குதல்!!

அம்பாறை நகரில் இன்று (27) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இன வன்முறைகளினால் அங்கிருந்த ஒரேயொரு பள்ளிவாசலும், முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளதுடன் சில வாகனங்களும் எரிக்கப்பட்டுள்ளன. நேற்று (26) நள்ளிரவு வேளையில் அம்பாறை நகரிலுள்ள முஸ்லிம் ஹோட்டலில் உணவருந்த வந்திருந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த... Read more »

செம்மணி பிள்ளையார் ஆலயம் உடைப்பு!

யாழில் இந்து ஆலயம் ஒன்று நேற்று (வியாழக்கிழமை) இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. யாழ் – செம்மணி பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயமே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். வடக்கில் அண்மைக்காலமாக இந்து ஆலயங்கள் சேதமாக்கப்பட்டு... Read more »

இலங்கையில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை!: சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கையில் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இல்லையென சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான தாக்குதலுடன் கூடிய உணர்வுகள் இலங்கையில் கடந்த வருடத்தில் பௌத்த மக்களிடையே அதிகரித்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்னாசியாவுக்குப் பொறுப்பான பிராஜ் பட்நாயக் அந்த அறிக்கையில்... Read more »