Ad Widget

முற்றுகைக்குள் வி.ரி.தமிழ்மாறன்!

நாளை பஸ் சேவை அலுவலகங்கள் வர்த்தக நிலையங்கள் பகிஸ்கரிப்பில்

புங்குடுதீவு மாணவியின் படுகொலையை கண்டித்து தொடர் ஆர்ப்பாட்ட பேரணிகள் இடம்பெற்று வரும் நிலையில். யாழில் நாளை புதன்கிழமை ‪தனியார் பேருந்துகள்‬‎அரச பஸ்கள்‬ சேவையில் ஈடுபடாதென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரச அலுவலகங்கள் மற்றும் தனியார் வர்த்தக நிலையங்கள் என்பனவும் இயங்காதெனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் நாளை புதன்கிழமை மாவட்ட இளைஞர் கழகம் யாழ்.நூலகத்துக்கு முன்பாக காலை 10 மணிக்கு மாணவி...
Ad Widget

மாகாண சபையின் அனுமதி இல்லாமல் மண்டைதீவில் பாரிய உல்லாச விடுதி

மண்டைதீவில் 37 மாடிகளைக் கொண்ட பாரிய உல்லாச விடுதியொன்றை நிர்மாணிப்பதற்காக நிலத்தை சமன் செய்யும் பணிகள் ஆரம்பித்திருக்கும் நிலையில், அவற்றை இடைநிறுத்தியுள்ள வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அனுமதி இல்லாமல் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க வேண்டாம் எனவும் உரிய தரப்புகளிடம் அறிவுறுத்தியிருக்கிறார்.   மண்டைதீவு எட்டாம் வட்டாரத்தில் கடற்கரைக்குச் சமீபமாக 25 ஹெக்டெயர் அரச காணியில்...

சந்தேக நபர் யாழ்.வரும்வரை சட்டத்தரணியை விடோம் : புங்குடுதீவு மக்கள்

புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு உடந்தையாக சட்டத்தரணி தமிழ்மாறன் செயற்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து மக்கள் கொந்தளித்துள்ளனர்.   இந்நிலையில் இன்று பொலிஸாருக்கும், மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது சட்டத்தரணி மக்களினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மேலும் இன்றைய தினம் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்தால் மட்டுமே  சட்டத்தரணி...

உண்மைகளை சர்வதேசத்துக்கு கொண்டு வரவே தமிழர்கள் நீதியை கோருகின்றனர்

போரின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கான நீதியைத் தமிழ்த்தரப்பு வேண்டி நிற்பதன் நோக்கம் வெறுமனே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல. இது தொடர்பில் வெளிக்கொணரப்படுகின்ற உண்மைகள், தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேச சமூகத்துக்கு தெரியப்படுத்த உதவும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவுதினம், திங்கட்கிழமை (18)...

மே18 நினைவு நிகழ்வுகள்

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட உறவுகளுக்கான கிரிகைகள்! 2009 ம் ஆண்டு மேமாதம் 18ம் திகதிமுள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட அனைத்து ஜீவஆண்மாக்களிற்காகவும் சாந்திகிரிகைகள் இன்று கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் வடமாகாண ஐக்கியதேசியகட்சியின் அமைப்பாளர் திரு.துவாரகேஸ்வரனின் ஏற்பாட்டில் மிக அமைதியானமுறையிலே நடைபெற்றது. இதில் வடமாகாண முதலமைச்சர் சீவி விக்கினேஸ்வரன் அவர்களும் வடமாகாண...

உறவுகளை அஞ்சலிக்கக் கூடிய மக்களின் கண்ணீரால் தோய்ந்தது முள்ளிவாய்க்கால்!

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு இடம்பெற்ற 6 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று திங்கட்கிழமை தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், தமிழகத்திலும், தமிழ் மக்கள் வசிக்கும் புலம்பெயர் தேசம் எங்கும் உணர்வெழுச்சியுடன் நடைபெறுகிறது. இந்நிலையில், மே 12 ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதி வரையான வாரத்தை தமிழின அழிப்பு வாரமாக - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

வன்புணர்வுகளுக்கெதிராக இளையவர்கள் போராட்டம்! நல்லுாரில் திரண்டனர்

பொது விவாதம் – கஜேந்திரகுமார் எதிர் சுமந்திரன்

காணொளி 2 காணொளி 1   நன்றி: அனலை எக்பிரஸ்

போரில் உயிர் நீத்தோருக்காக விளக்கேற்றி அஞ்சலிப்போம்! அனைத்து தமிழர்களுக்கும் கூட்டமைப்பு அழைப்பு!!

மே 18 ஆம் திகதி, போரில் உயிர் நீத்தோர் நினைவாக - அவர்களின் ஆத்ம ஈடேற்றத்திற்காக, விளக்கேற்றி பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில், "உயிர் நீத்தோருக்கு ஈமக்கடன் செய்வதும், ஆன்ம ஈடேற்றத்துக்காகப்...

ஒரே மேடையில் சுமந்திரனும் கஜேந்திரகுமாரும் !-யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு

யாழ்ப்பாணம் முகாமையாளர் மன்றம் ஏற்பாட்டில் நாளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.சுமந்திரன் அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில்  நடைபெறவுள்ளது.   15.5.2015 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ” வெளியில் தமிழர்களுக்கு...

ஜெயலலிதா அம்மையாரின் விடுதலையால் ஈழமக்கள் மகிழ்ச்சி!- பா.உறுப்பினர் சி.சிறீதரன்

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களுர் நீதிமன்றால் தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் சகல வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டதால் தமிழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அம்மையாரின் விடுதலை தொடர்பாக ஈழத்தமிழ் மக்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளதுடன் மீண்டும் பதவியேற்கவிருக்கும் மாண்புமிகு ஜெயலலிதா ஜெயராம் அவர்களிடம் தங்கள் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பம்

இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் வாரத்தை இன்று முள்ளிவாய்க்காலில் நினைவுச் சுடரேற்றி ஆரம்பித்து வைத்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினம் இன்றில் இருந்து 18ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும் என்று வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அறிவித்திருந்தார். அதன்படி இன்றைய தினம் குறித்த நினைவேந்தலை ஆரம்பிக்கும் முகமாக நினைவுச்...

சம்பூரில் 818 ஏக்கர் காணி விடுவிப்பு! வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி!!

திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் பகுதியில் முதலீட்டு வலயத்துக்காக சுவீகரிக்கப்பட்ட பொதுமக்களின் 818 ஏக்கர் காணி மீளக் கையளிக்கப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை கையெழுத்திட்டார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சம்பூர் மக்கள் தமது காணிகளை நாளை வெள்ளிக்கிழமை முதல் பார்வையிட முடியும் என்றும்...

பலாலி இராணுவமுகாம் வாசலில் வைரவருக்குக் கற்பூரமேற்றிய மக்கள்

வசாவிளான் மத்திய கல்லூரிக்கு அருகாமையில் இருக்கும் பலாலி இராணுவமுகாமின் நுழைவு வாசலுக்கு முன்பாக வசாவிளான் மக்கள்கற்பூரமேற்றி வைரவக் கடவுளை வழிபட்ட சம்பவம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (05.05.2015) நடைபெற்றுள்ளது. வசாவிளான் பலாலி இராணுவக்குடியிருப்பு என்று பொறிக்கப்பட்ட வளைவில் இருந்து உள்நோக்கி சுமார் 200 மீற்றர் தூரத்தினுள்வசாவிளான் ஞானவைரவர் ஆலயம் உள்ளது. பெரிய வைரவர் ஆலயங்களில் ஒன்று...

நாட்டில் மாற்றம் பட்டதாரிகளுக்கு ஏமாற்றம் : வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் கவனயீர்ப்பு

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினரால் விரைவில் அரச வேலைவாய்ப்பை வழங்கக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை 9.30 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது. 2012 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்து வெளியேறிய பட்டதாரிகளுக்கான அரச வேலைவாய்ப்பிற்கு உள்ளீர்ப்பது பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்ததுடன் கடந்த கால தேர்தல்களின் போது பட்டதாரிகள்...

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நிறைவேற்றம்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் அறுதிப்பெரும்பான்மை  வாக்குகளினால் நாடாளுமன்றத்தில்  28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 215 பேர் வாக்களித்தனர். எதிராக சரத் வீரசேக எம்.பி வாக்களித்தார். ஜனநாயக தேசிய முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார எம்.பி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்த சட்டமூலத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,...

19க்கு கையுயர்த்துவதை விட வேறொரு கௌரவம் இல்லை – ஜனாதிபதி

ஸ்ரீ லங்காவின் சுதந்திர ஜனநாயகத்தை மீண்டும் பாதுகாத்து அந்த வரலாற்று கௌரவம், கட்சி பேதங்கள் இன்றி சகல கட்சிகளுக்கும் கிடைப்பதற்கு இன்றிலிருந்து இன்னும் ஒன்றைநாட்கள் இருகின்றன. அந்த அதிர்ஷ்டத்தை உதயமாக்கி கொள்ளுமாறு நான் சகலரிடமும் கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு கையுயர்த்துவதை விட வெறொரு கௌரவம் இல்லை என்றும்...

சக மாணவர்கள் மீதான வாள் வெட்டு, கைதை கண்டித்து யாழ்.பல்கலை மாணவர்கள் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வாள்வெட்டுக்கு நீதி கோரியும், கடந்த வாரம் ஊடகவியலாளர் ஒருவருடன் கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் இருவரையும் விடுவிக்கக் கோரியும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று திங்கட்கிழமை காலை கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தினர். கடந்த சனிக்கிழமை இரவு மானிப்பாய் பகுதியில் இசைநிகழ்ச்சியொன்றை பார்த்துவிட்டு வீடுதிரும்பிக்கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர்மீது இனந்தெரியாத குழுவினர்...

சம்பந்தர்தான் தலைவர் அதில் மாற்றம் ஏதுமில்லை – வடமாகாண முதலமைச்சர்

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தேர்வானது முதல் சர்ச்சைகளுக்குக் குறைவில்லாதவர் நீதியரசர் ச.வி.விக்னேஸ்வரன். அண்மைக் காலமாக அவரது கருத்துக்கள் தென்னிலங்கையையும் இந்தியாவையும்கூட ஆட்டம் காண வைத்திருக்கின்றன. கூட்டமைப்பிலிருந்து ஒரு சில கட்சிகள் பிரிந்து சென்று வேறு கட்சிகள் மற்றும் உதிரிகளுடன் சேர்ந்து மாற்று அணி ஒன்றை உருவாக்கும் முயற்சிகளின் பக்கம் சாய்கிறார் என்பது அவரைச் சுற்றி...
Loading posts...

All posts loaded

No more posts