Ad Widget

எனது அரசியல் வாழ்க்கையில் அரசிடமிருந்து ஒரு சதத்தைக்கூட பெறவில்லை: முதலமைச்சருக்கு மாவை பதில்!

தெற்கில் வைத்து எனக்கு 26 மில்லியன் தரப்பட்டதான செய்தி எனது 50 வருட அரசியல் வாழ்க்கையைக் களங்கத்துக்குள்ளாகியிருக்கிறது. நாங்கள் எந்த அரசிடமிருந்தோ, அரசு ஆட்களிடமிருந்தோ ஒரு சதத்தைக் கூடப் பெற்றிருக்கவில்லை என்பதை அறுதியிட்டுக் கூறுவேன். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா. வடக்கு மாகாண...

இலங்கையில் புது வைரஸ் பரவல் இதுவரை 9 கர்ப்பிணி தாய்மார் பலி!

இலங்கையின் பல பகுதிகளில் பரவிவரும் புதுவகையான வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த சில வாரங்களில் ஒன்பது கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பலர் மரணமடைந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இன்புளுயென்சா ´ஏ´யில் எச்1 என்1 எனப்படும் வைரஸ் காய்ச்சல் என இது அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இந்தக் காய்ச்சல் பரவியிருப்பதாக வவுனியா...
Ad Widget

வீதியில் ஆயுதங்களுடன் திரிந்தவர்களுடன் பல்கலை. மாணவனுக்கு என்ன வேலை? நீதிபதி கேள்வி!

வீதியில் பெற்றோல் குண்டுகள், கோடரிப்பிடிகள், பொல்லுகள் போன்ற ஆயுதங்களுடன் திரிந்தவர்களுடன் பல்கலைக்கழக மாணவனுக்கு என்ன வேலை? இவ்வாறு கேள்வி எழுப்பிய நீதிபதி இளஞ்செழியன் கேள்வி அவருக்குப் பிணை வழங்கவும் மறுப்புத் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி பெற்றோல் குண்டுகள், கோடரி பிடிகள், பொல்லுகள் சகிதம் கைதான 10...

சமூக விரோதக் குற்றச் செயல்களுக்கு பிணை கிடையாது – நீதிபதி இளஞ்செழியன்

சமூகவிரோதக் குற்றச் செயல்களுக்காக யாழ்ப்பாணம் பகுதியில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் பிணை கோரி செய்யப்படுகின்ற விண்ணப்பங்களுக்கு, இலகுவில் பிணை வழங்கப்படமாட்டாது என்றும், சிலவேளை, அறவே பிணை கிடைக்காது என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்றில் பகிரங்கமாக அறிவித்துள்ளார். சமூகவிரோதக் குற்றச்செயலுடன் சம்பந்தப்பட்ட வழக்கொன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான...

மாகாணங்களின் தேவைகள், அபிலாசைகளை கொண்டே மத்தியஅரசு கொள்கைகளை வகுக்க வேண்டும்! – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

மாகாண மக்களினுடைய தேவைகளையும் அபிலாசைகளையும் மனதிற்கு எடுத்து மத்திய அரசாங்கம் கொள்கைகளை வகுக்க வேண்டுமேயொழிய தான்தோன்றித்தனமாக மத்திய அரசாங்கத்தினுடைய கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது பிழையானது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள ஆளுநர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும்...

யாழ்ப்பாணத்தில் அனைத்து சட்டவிரோதச் செயற்பாடுகளும ஒரு மாதகாலத்தில் ஒழிக்கப்பட வேண்டும்

வடமாகாண - யாழ் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தல்:- யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் திடீரென அதிகரிப்பதற்குக் காரணமென்ன என கேள்வியெழுப்பியுள்ள வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்ற அனைத்து சட்டவிரோதச் செயற்பாடுகளும் ஒரு மாத காலத்தில் சட்டத்தின் துணைகொண்டு ஒழிக்கப்பட வேண்டும் என வடமாகாணம் மற்றும் யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ்...

செயற்பாட்டு திறனுடைய இலவச செயற்கைக் கை வழங்கும் செயற்றிட்டம்

யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் முழங்கைக்கு கீழ் கைகளை இழந்தவர்களுக்கு யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகம் செயற்பாட்டு திறனுடைய செயற்கைக் கை வழங்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைபொருத்தும் நடவடிக்கைகள் கல்லூரி வீதி , நீராவியடி , யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நாளை வெள்ளிக்கிழமையும் மறுநாள் சனிக்கிழமையும் காலை 9.00 மணி முதல்...

போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை விதிக்கப்படும்!

ஹெரோயின், அபின், மோபின் போன்ற போதைப் பொருட்களை உடைமையில் வைத்திருந்தார், மற்றும் அதனை விற்பனை செய்தார் என குற்றவாளியாகக் காணப்படுபவர் யாராக இருந்தாலும், அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். ஒரு கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தார் மற்றும் விற்பனை செய்தார்...

வடக்கு மாகாணத்தில் முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க ஜனாதிபதி ஒப்புதல்!

வட மாகாண சபையைப் புறக்கணித்து, வடக்கின் அபிவிருத்திக்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை தனியாக தெற்கிற்கு அழைத்து நிதி உதவி வழங்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரடியாகச் சுட்டிக்காட்டியுள்ளார். வட மாகாண முதலமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டு தனக்கு அதிர்ச்சியளிப்பதாகக் கூறிய ஜனாதிபதி,...

கொக்கிளாய் தனியார் காணியில் சட்டவிரோதமான விகாரை உருப்பெறுகிறது

முல்லைத்தீவு கொக்கிளாயில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்ட விரோதமான முறையில் விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது. பொது மக்களின் தகவலையடுத்து நேற்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதை நேரில் உறுதிப்படுத்தியுள்ளார். முல்லைத்தீவு கொக்கிளாய் வைத்தியசாலைக் காணியின் ஒரு பகுதியையும் இதமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளையும் பாதை ஒன்றையும் அபகரித்து...

கிளிநொச்சியில் கொடூரம்!! பாடசாலை சென்ற 7 வயதுச் சிறுமியை கடத்தி கூட்டுப் பாலியல் வன்முறை!

பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 7 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பொதுமலசல கூடத்துக்குள் வைத்துக் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் எனக் கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை காலை கிளிநொச்சியின் பரந்தனில் சிவபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி வீட்டிலிருந்து பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்தபோது, அவரை இடைவெளியில் மறித்த சிலர் பொதுமலசலகூடத்தில் வைத்து...

யாழில் நடந்தது சில விஷமிகளின் சேட்டையே! பொதுமக்களின் வன்முறையல்ல!-டக்ளஸ்

யாழ். புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலைச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கிலும், குற்றவாளிகள் உயர்ந்தபட்ச தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்களது உணர்வு வெளிப்பாட்டு நிகழ்வானது, ஒரு சில சமூக விரோத சக்திகளால் திசை மாற்றஞ் செய்யப்பட்டதே தவிர, இது பொதுமக்களின் வன்முறைச் செயற்பாடுகளல்ல. எனவே, இதனை வடக்கில் மீண்டும் ஆயுத...

வித்தியாவின் கொலை சந்தேகநபரான குமார் சுவிஸ் ரஞ்சன் அல்ல ; புளொட் அறிவிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியாவில் படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில்  கைது செய்யப்பட்ட சுவிஸ் குமார் என்பவர், எமது அமைப்பைச் சேர்ந்த சுவிஸ் ரஞ்சன் அல்ல என்று புளொட் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதனுடைய கொலையுடன் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தில் கைதாகியிருப்பவர்,...

யாழ் பொலிஸ் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் இருவரால் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர் எப்படித் தப்பிச் சென்றார்? தமிழ்மாறன் கேள்வி

புங்குடுதீவு சம்பவம் தொடர்பில் வி ரி தமிழ்மாறன் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கை‬ பொலிஸ் விசாரணையிலும் நீதிமன்றத்தின் முன்னால் உள்ள விடயத்திலும் எங்ஙனம் குறுக்கிடாது எனது கருத்தைத் தெரிவிக்க வேண்டுமோ அத்தகைய பொறுப்புணர்வுடனேயே பின்வரும் விடயங்களை மக்கள் முன் வைக்க விரும்புகின்றேன். என்னுடைய பொதுவாழ்வின் எதிர்காலத்தையும் தமிழ் மக்கள் மத்தியில் எனக்கு இருந்து வரும் அரசியல்...

துவாரகேஸ்வரன் மக்களை ஏமாற்றுகின்றார் – வேலைணை பிரதேச சபை தலைவர்

கடந்த வியாழக்கிழமை, 21 மே 201 லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலில் தன்னை ஜக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளா் எனக்கூறிக்கொள்ளும் வா்த்தகா் துவாரகேஸ்வரன் வழங்கிய செய்திக்கு வேலணை பிரதேச சபையின் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேலணை பிரதேச அமைப்பாளருமாகிய சின்னையா சிவராசா ( போல்) அவா்கள் தெரிவித்த...

நீதிமன்றம் தாக்குதல்; யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் இடமாற்றம்

யாழ் மற்றும்  ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பலர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   பொலிஸ் மா  அதிபர் இலங்ககோனின் பணிப்புரைக்கமைய இந்த திடீர் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.   அதன்படி யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் வீரசேகர சீதாவாக்கைபுர பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக இடமாற்றப்பட்டுள்ளார்.    அதேபோல...

புங்குடுதீவில் நடந்தது என்ன? குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார்; தமிழ்மாறன்

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் தன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடாதிபதியும் சட்டத்தரணியுமான வீ.ரி தமிழ்மாறன் மறுக்கின்றார். கைதுசெய்யப்பட்ட கைதிகளில் ஒருவர் விடுவிக்கப்பட்டமைக்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை என்றும் அவர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு மேலும்...

வன்புணர்வுக்கெதிரான போராட்டம் வன்முறையாக மாற்றம்! யாழில் பதற்றம்!

முற்றுகைக்குள் வி.ரி.தமிழ்மாறன்!

நாளை பஸ் சேவை அலுவலகங்கள் வர்த்தக நிலையங்கள் பகிஸ்கரிப்பில்

புங்குடுதீவு மாணவியின் படுகொலையை கண்டித்து தொடர் ஆர்ப்பாட்ட பேரணிகள் இடம்பெற்று வரும் நிலையில். யாழில் நாளை புதன்கிழமை ‪தனியார் பேருந்துகள்‬‎அரச பஸ்கள்‬ சேவையில் ஈடுபடாதென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரச அலுவலகங்கள் மற்றும் தனியார் வர்த்தக நிலையங்கள் என்பனவும் இயங்காதெனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் நாளை புதன்கிழமை மாவட்ட இளைஞர் கழகம் யாழ்.நூலகத்துக்கு முன்பாக காலை 10 மணிக்கு மாணவி...
Loading posts...

All posts loaded

No more posts