சாவகச்சேரி பொலிஸூக்கும் மக்களின் காணிகள் பறிப்பு !

காணி சுவீகரிப்பு ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு தனியார் காணி சுவீகரிக்கப்படவுள்ளது. இது தொடர்பான மும்மொழிகளில் வெளியிடப்பட்ட அறிவித்தல்கள் நேற்று வியாழக்கிழமை காணியின் முன்னால் ஒட்டப்பட்டுள்ளது. Read more »

இலங்கை அரசு கொள்ளைக்கார அரசு: மாவை

இலங்கை அரசைப் போல் கொள்ளைக்கார அரசு உலகத்தில் எங்கும் இருப்பதாக தெரியவில்லை என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். Read more »

60 அலகுகளுக்கு குறைவாக மின் பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு எதுவித கட்டண அதிகரிப்பும் இல்லை

மாதம் ஒன்றிற்கு 61 தொடக்கம் 180 அலகுகள் வரை மின்சாரத்தை உபயோகிக்கும் மின் பாவனையாளர்களுக்கு 25% எரிபொருள் கட்டண கழிவு நிவாரணமாக வழங்கப்படும் என மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. Read more »

த.தே.கூட்டமைப்பினால் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சம்பளம் விலைவாசியேற்றத்திற்கு ஏற்ப உயர்த்தப்படவேண்டும், மக்களுடைய காணிகள் மக்களுக்கு வழங்கப்படல் வேண்டும் தமிழர் தாயகப் பிரதேசத்தில் தனியார், பொது நிலங்களை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தும் அரச படைகள் வெளியேற்றப்படவேண்டும் உட்பட 12 தீர்மானங்கள் Read more »

கொள்கை ரீதியில் இணக்கம் ஏற்பட்டால் த.தே.கூ.வுடன் இணைவோம்: த.தே.ம.மு

‘கொள்கை ரீதியில் ஒற்றுமை ஏற்படும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைவது பற்றி பரிசீலிக்கப்படும்’ என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். Read more »

பலாலி விமானநிலைய விஸ்தரிப்புக்கு காணிகள் பெறப்படும்- ஹத்துருசிங்க

பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்காக பலாலி விமானத்தள சுற்றியுள்ள 2 ஆயிரம் ஏக்கர் காணியை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவ்வாறு பெற்றுக் கொள்ளப்படும் காணிகளுக்கு உரிய மதிப்புத் தொகையை நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் Read more »

ஆனைக்கோட்டையிலும் பொதுமக்களின் காணி இராணுவத் தேவைகளுக்கென சுவீகரிப்பு

யாழ். ஆனைக்கோட்டை கூழாவடி இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 1ஏக்கர் 31பேர்ச் அளவுள்ள நிலம் இராணுவத் தேவைக்கென சுவீகரிக்கப்படவுள்ளதாக மாவட்ட காணி சுவீகரிப்பு அலுவலகம் அறிவுறுத்தல் பிரசுரங்களை வெளியிட்டுள்ளது. Read more »

“கஜேந்திரகுமார் எங்கே?”- மூகமூடி அணிந்த மர்மநபர்கள் அவரது வீட்டிற்குச் சென்று அச்சுறுத்தல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டிற்குள் நேற்று மலை 4 மணியளவில் நுழைந்த முகமூடியணிந்த மர்ம நபர்கள் நால்வர் கஜேந்திரகுமார் எங்கே எனக் கேட்டு அவரது உதவியாளரை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »

கிளி. மே தின கூட்டத்தில் மயக்கமடைந்த மாவை சேனாதிராசா!

“எமது உரிமைக்காகக் குரல் கொடுக்கும் நாளாக இந்த மே நாள் அமைந்துள்ளது. இன்று சர்வதேச தினமானது ஒடுக்கப்படும் தொழிலாளர்கள் வர்க்கத்தினருடைய உரிமைகளை வென்றெடுக்கும் நாளாக இத் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது. Read more »

கடுமையான எதிர்ப்புக்களையும் தாண்டி வலி.வடக்கு மக்களின் போராட்டம்

கடுமையான எதிர்ப்புக்களையும் தாண்டி வலி. வடக்கு மக்களின் போராட்டம் வெற்றிகரமாகவும் அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் முகத்தில் உமிழ்ந்து விடும் வகையில் இன்று நடைபெற்றுள்ளது அச்சுறுத்தல்களையும் கடுமையான எதிர்ப்புக்களையும் தாண்டி வலி. வடக்கு மக்களின் போராட்டம்  வெற்றிகரமாகவும் அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் முகத்தில் உமிழ்ந்து விடும் வகையில் இன்று... Read more »

எமது காணிகளை மீட்டுத் தாருங்கள்; மக்கள் போராட்டத்தில் குதிப்பு

வலி.வடக்கு மற்றும் வலி. கிழக்கு பகுதிகளில் பொது மக்களுக்குச் சொந்தமான 6 ஆயிரத்து 381 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக தெல்லிப்பழை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்று காலை8 மணி முதல் மறியல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற... Read more »

‘உதயன்’க்கு எதிராக டக்ளஸ் மற்றுமொரு வழக்குத் தாக்கல்!

“உதயன்” பத்திரிகைக்கு எதிராக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நான்காவதாக மற்றுமொரு வழக்கை தாக்கல் செய்துள்ளார். தன்னை அவமானப்படுத்தும் நோக்கிலும், அவதூறுக்கு உள்ளாக்கும் நோக்கிலும்  ”உதயன்” பத்திரிகை பல தவறான செய்தி அறிக்கைகளை பிரசுரம் செய்துள்ளதென்றும்,  அத்தகைய... Read more »

ஏனைய கட்சிகள் இணைந்து ‘த.தே.கூ’வை பதிவுசெய்ய தீர்மானம்!

தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட் மற்றும் டெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு’ என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் ஒரு முன்னணிக் கட்சியாக பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெலோ மாநாட்டில்... Read more »

த.தே.கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஐ.தே.கவில் இணைவு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை தலைவர் விஜயரட்ணம் எட்வின் டானியல் ஐ.தேக. உறுப்பினராக நியமனம் பெற்றுக் கொண்டார்.யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் நேற்று(26) மாலை 5.30 மணியளவில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »

வடக்கில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டத்துக்கு அழைப்பு

வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு போன்ற பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் காணி சுவீகரிப்பை உடன் தடுத்து நிறுத்துவதற்கான போராட்டத்துக்கு அணிதிரளுமாறு பொதுமக்கள், பொது அமைப்புக்களுக்கு போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. Read more »

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் யாழ்ப்பாணத்தில் !

வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று மதியம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரணில்... Read more »

எமது நிலம் எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு யாழில் உரிமை முழக்கம்!

எமது நிலம் எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு என்ற உரிமை முழக்கத்துடன் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னால் நில சுவிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடைபெற்றுள்ளது Read more »

வலி.வடக்கில் காணி சுவீகரிப்பு; உரிமை கோருவோருக்கு இழப்பீடு!

யாழ். வலிகாமம் வடக்கு, கிழக்கு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள உரிமை கோரப்படாத காணிகளின் ஒருபகுதி யாழ். பாதுகாப்பு படைத்தலைமையகம் அமைத்தல் மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு சுவீகரிக்கப்படுவதுடன் சுவீகரிக்கப்படும் Read more »

யாழ்.வந்துள்ள அமெரிக்க குழு இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து பேசவுள்ளது!

இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான குழுவினர் இன்று புதன்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேசவுள்ளனர். Read more »

டக்ளஸ், ஹத்துருசிங்க ஆகியோரால் முகாம்களில் வாழ முடியுமா?: வலி.வடக்கு மக்கள்

வலி வடக்கில் இருந்து நாங்கள் இடம்பெயர்ந்து 23 வருடங்காக பல்வேறு நெருக்கடிகளில் முகாம்களில் வாழ்ந்து வருகின்றறோம் இந்த முகாம்களில் கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா மற்றும் யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோரால் வாழ முடியுமா’ Read more »