Ad Widget

வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

வட மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர்கள் தங்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை (10) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, துணுக்காய், வவுனியா, மடு ஆகிய கல்வி வலயங்களில் சுமார் 10 வருடங்களாக கடமையாற்றுகின்ற தொண்டர் ஆசிரியர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சரவை பத்திரம்...

காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் விடுதலைப் புலிகள்! – கோத்தபாய

காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளேயாவர். ஆகவே அவர்கள் அப்போதைய போர்க்களத்திலேயே இறந்து விட்டனர் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். யுத்தத்தின் பின்னர் எவரும் காணாமல் போகவில்லை. வடக்கில் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தெரியும். விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டத்தில்...
Ad Widget

இலங்கை நீதித்துறை அரசியல் மயமானதால்தான் சர்வதேச வல்லுநர்கள் பங்குபெறுவதை ஐ.நா. வலியுறுத்தியது!

இலங்கையின் நீதித்துறை கடந்த சில காலமாகவே அதிக அளவில் அரசியல் மயமாக்கப்பட்டு, சமநிலையை இழந்து, நம்ப முடியாத நிலையை எட்டியதால்தான், இலங்கையில் நடந்து முடிந்த போரில் இருதரப்புகளாலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற உருவக்கப்பட வேண்டிய பொறிமுறைகளில் சர்வதேச வல்லுநர்கள் பங்கு பெறுவதை ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் பிரேரித்ததாக ஐ.நா. மனித...

சபை அமர்வைக் குழப்பும் மஹிந்த அணியின் வியூகத்தை முறியடித்தார் ரணில்! – சட்டமூலத்தை நிறைவேற்றி அரசு அதிரடி

செங்கோலை தூக்கிச்சென்று சபை நடவடிக்கைகளைக் குழப்பியடிப்பதற்கு மஹிந்த அணியினர் வகுத்த திட்டத்தை முறியடித்து சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொண்டது நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசு. இதனால் சபைக்கு நடுவில் கூட்டாக களமிறங்கி சபா பீடத்தை சூழ்ந்துகொண்டு கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டு ஊளையிட்ட மஹிந்த அணிக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. பொது எதிரணி என்ற அந்தஸ்துடன் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச்...

பரந்தன் – முல்லை பிரதான வீதியில் 35 ஏக்கர் காணி இராணுவத்தால் சுவீகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் தர்மபுரம் நெத்தலியாற்றுப்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 35 ஏக்கர் காணியை இராணுவம் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றியுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்வைத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். பரந்தன்...

மனித உரிமைகள் ஆணையாளர் – த.தே.கூட்டமைப்பினர் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராத் அல் ஹுசைன் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றதாக கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் போது , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

வடமாகாண சபை கலைக்கப்படவுள்ளது?

மத்திய அரசாங்கத்தால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்படவுள்ளதாக எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்போது வடமாகாண சபையும் கலைக்கப்படுமா என்பது தொடர்பில் தெரியவில்லையென வட மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, வட மாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றபோதே...

“தேசம்“ அல்லது “கூட்டம்” என்பதே தற்போது மக்கள் முன்னுள்ள பெருவினாவாகும் – கஜேந்திரகுமார்

தமிழரின் தேசம் என்ற வார்த்தையை பிரயோகிப்பதா இல்லை மக்கள் கூட்டம் என்ற வார்த்தையை பிரயோகிப்பதா என்பது தொடர்பில் தமிழ்த் தலைமைகளினுள் விவாதங்கள் காணப்படுவதே தற்போதைய யதார்த்தமாகவுள்ளது. இது தொடர்பில் தமிழ் மக்களே இறுதிதீர்மானம் எடுக்கவேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்துவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ்...

சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியமில்லை – மனித உரிமைகள் ஆணையாளரிடம் தேரர்கள் கோரிக்கை!

இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியமில்லை என்று அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தனர். நான்கு நாள்கள் பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித்...

இல்ல மெய்வன்மை போட்டியில் பங்குபற்றிய மாணவி உயிரிழப்பு!

இல்ல மெய்வன்மை போட்டியில் பங்குபற்றிய போது, மயங்கி வீழ்ந்து, உயிரிழந்த மாணவி, சளிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தமையாலேயே மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்தது. அம்பன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சனிக்கிழமை(06) இடம்பெற்ற இச்சம்பவத்தில், யோகலிங்கம் அனோஜா (வயது 13) என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். இவர் முதலில் அணி நடையில் ஈடுபட்ட பின்னர், தொடர்ந்து...

சம்பந்தன் கண்ணீர் வடித்தது ஆச்சரியமே – வீ.ஆனந்தசங்கரி

“இலங்கையின் 68ஆவது சுதந்திர தின விழாவில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட AnanthaSangaree.போது, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் கண்களில் இருந்து கண்ணீர் வந்ததாக வெளியான செய்தி, அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது” என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அந்த அறிக்கையில்...

போரின் பாதிப்புக்கள் தொடர்பில் தகவல் திரட்ட தமிழ் மக்கள் பேரவை தீர்மானம்

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்கள் மற்றும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட காணிகள் பற்றிய விபரங்களை திரட்டுவதற்காக செயலணி குழுக்களை நியமிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். கடந்த 30 ஆண்டுகால போரில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான சரியான விபரங்கள் எதுவும் மதிப்பிடப்படவில்லை என்றும் அரசாங்கம் மேற்கொண்ட புள்ளிவிபரங்கள்...

கூட்டமைப்பில் உள்ள கட்சிகளை நிர்மூலமாக்குகிறது தமிழரசுக் கட்சி! – சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளை நிர்மூலமாக்கும் அடிப்படையில் தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்கள் செயற்பட்டு வருவது நாகரிகமான விடயம் அல்ல என ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கிழக்கு மாகாணசபை...

அடுத்த முறை உங்களை சொந்த இடத்தில் சந்திக்க வேண்டும் – இடம்பெயர்ந்த மக்களிடம் ஹூசைன்

நான் அடுத்த தடவை வரும் போது, உங்களை சொந்த இடத்தில் தான் சந்திக்க வேண்டுமென விரும்புகின்றேன், என்று, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், இடம்பெயர்ந்து நலன்புரி முகாமில் உள்ள வலி வடக்கு மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார். யாழிற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட அவர் வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து...

கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது சரியென ஏற்றுக்கொள்ளப்படவில்லை!

தற்போதைய காலத்தில் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது, சர்வதேச அரசாங்கம் மற்றும் சர்வதேச சமூகத்தால் அவ்வளவு சரியென ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும், சிரியாவிலும் அவ்வாறான பொதுமன்னிப்பு கொடுப்பது தவறு என தான் எடுத்துக் கூறியதாவும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்ததாக, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, இவ்வாறான...

யாழ். வராமலேயே புதுடெல்லி திரும்பினார் சுஷ்மா!

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று பிற்பகல் புதுடெல்லி திரும்பினார். நேற்று மாலை 5.30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்திலிருந்து விசேட விமானத்தின் மூலம் அவர் புதுடில்லி நோக்கி பயணமானார். இலங்கை – இந்திய ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 9வது மாநாட்டில் கலந்து கொள்வதாகற்காக நேற்று இலங்கைக்கு...

மைத்திரியின் அரசு மீது மோடி அதீத நம்பிக்கை! – ஜனாதிபதியிடம் நேரில் தெரிவித்தார் சுஷ்மா

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இந்திய அரசும் இலங்கையின் புதிய தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் கீழான அரசின் மீது அதிகம் நம்பிக்கை வைத்துள்ளது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையில் ஆரம்பிக்கப்படும் புதிய வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசு பூரண ஆதரவு வழங்கும் என்றும்...

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிற்கும் இடையில் இன்று கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்...

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு கடும் நடவடிக்கை! – அரசாங்க அதிபர்

யாழ்.குடாநாட்டில் போக்குவரத்துச் சட்டங்களை அல்லது ஒழுங்குகளை மதிக்காத சாரதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்டச் செயலர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.குடாநாட்டில் பேருந்து சாரதிகள் மிக மோசமாக போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டும் நிலையில் அதிகளவான விபத்துக்களும் இடம்பெறுகின்றன. இந்நிலையில் போக்குவரத்துச் சட்டங்களை அல்லது ஒழுங்குகளை மதிக்காத சாரதிகள் மீது கடுமையான நடவடிக்கை...

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் யாழ் விஜயத்தின் போது ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் அல் ஹுஸைனின் யாழ். விஜயத்தின் போது காணாமல் போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர். அகில் இலங்கை தமிழ் காங்கிரஸின் ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை (07) இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. யாழ். நல்லூர் ஆலய முன்றலில் காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கான...
Loading posts...

All posts loaded

No more posts