Ad Widget

கிழக்கு கடற்பரப்பில் எண்ணெய்? ஆய்வுக்குத் பிரான்ஸ் பல்தேசிய நிறுவனம் தயார்!

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில், எண்ணெய் வள ஆய்வில் பிரான்ஸை தளமாகக்கொண்ட `Total' என்ற பல்தேசிய எண்ணெய் நிறுவனம் ஒன்று ஈடுபடவுள்ளது எனவும், இதற்கான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது எனவும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். பிரான்ஸின் பல்தேசிய நிறுவனத்துக்கும், இலங்கையின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திச் செயலகத்துக்கும் இடையில் நேற்று இது தொடர்பான கூட்டு...

மன்னார் புதைகுழிக்கு அருகில் உள்ள கிணற்றை தோண்ட உத்தரவு

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்கு அருகில், மூடப்பட்ட நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படும் கிணறு ஒன்றை தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மன்னார் நீதிமன்றம் பொலிசாருக்கு நேற்று மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த கிணறு மண் நிரப்பி மூடப்பட்டுள்ளதால், போர்க்காலத்தில் காணாமல்போனவர்களின் எலும்புக்கூடுகள் உள்ளே இருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்ட்டுள்ளது. அங்கு கிணறு ஒன்று இருந்ததை...
Ad Widget

22 ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டம் அரசியல் கைதிகள் அறிவிப்பு

இரண்டு வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலர் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். தமக்கான விடுதலையை வலியுறுத்தி இரண்டு தடவைகள் உண்ணாவிரத போராட்டத்தில் அரசியல் கைதிகள் ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசாங்கத்தின் உறுதிமொழி்க்கு அமைய அவர்கள்...

சரணடைந்தவர்களின் பெயர் பட்டியல் உள்ளதா இல்லையா என்பது குறித்து எனக்கு தெரியாது

இறுதிக்கட்டப் போரில் காணாமல் போனவர்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிமன்ற விசாரணைகளுக்கு இராணுவம் பூரணமான ஒத்துழைப்பை வழங்கும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார். இறுதிக் கட்ட யுத்ததில் இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவில் சரணடைந்து காணாமல்போனவர்கள் என தெரிவிக்கப்படும் நபர்கள் தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இராணுவப்...

மேற்கத்திய இசை கேட்ட சிறுவனுக்கு மரண தண்டனை!!

ஈராக் மற்றும் சிரியா நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ் தீவிர்வாதிகள் அதனை இஸ்லாமிய அரசாக அறிவித்து உள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள என்ற நகரில் அய்ஹாம் ஹுசைன்(வயது 15) என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்தான். சில தினங்களுக்கு முன்னால் தந்தையின் கடைக்கு சென்ற சிறுவன், மேற்கத்திய இசையை ரசித்து கேட்டுள்ளான்....

மீள்குடியேற்றத்தின் பின்னரே அபிவிருத்தி நடவடிக்கைகள்

மீள்குடியேற்றத்தின் பின்னரே சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டுமென்று ஒருமித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மீள்குடியேற்றம் மற்றும் பலாலி விமான நிலையத்தினை சர்வதேச விமான நிலையமாக்குவது குறித்து மக்களின் கருத்தறியும் கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்...

பலாலி விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்கு வடக்கு முதல்வர் எதிர்ப்பு

இந்தியாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள பலாலி விமான நிலையத்தின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பு வௌியிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார். பலாலியில் இருந்து தென்னிந்தியாவுக்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க வேண்டும்...

பக்கெட் பானங்கள் சுகாதாரத்துக்கு கேடு

பாடசாலை சிறுவர்களிடையே உள்ள புதிய உணவுப் பழக்கவழக்கங்களின் ஒன்றான, சீனி கலந்த பானங்கள், சுவையூட்டப்பட்ட குளிர்பானப் பொடிகள், சுவையூட்டப்பட்ட பால் பக்கெட்கள் போன்றவற்றின் பயன்பாடானது எதிர்காலத்தில் பல்வேறு சுகாதார பிரச்சினைகள் ஏற்படுத்தும் என்று, தேசிய வைத்தியசாலையின் நச்சியல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிளாஸ்டிக் போத்தல்களிலோ அல்லது வேறு சில பொருட்களால் செய்யப்பட்ட பக்கெட்டுகளிலோ, ஸ்ட்ரோ (உறிஞ்சும்...

கூட்டமைப்பு எதிர்வரும் காலத்தில் குழுவாக இணைந்து செயற்படும்! பங்காளிக் கட்சிகளிடம் சம்பந்தன் உறுதி!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அடுத்து வரும் காலங்களில் ஒரு குழுவாக இணைந்தே அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என்று அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதி இடம்பெறும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் பின்னர், பங்காளிக் கட்சியின் தலைவர்களிடத்தில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான விசேட சந்திப்பொன்றும் நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் மேலும் சில பகுதிகளை விடுவிக்க நடவடிக்கை!

யாழ் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் 25 வருடங்களாக இயங்காமல் இருந்த நடேஸ்வராக் கல்லூரி உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்படவுள்ளதாகவும் அதனை அண்டிய சில பகுதிகளில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டவுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவிக்கின்றது. கடந்த 1990 ஆம் ஆண்டு போர் காரணமாக வலி வடக்கு பிரதேசங்களில் இருந்து மக்கள் வெ ளியேற்றப்பட்டனர். இதன் பின்னர் போர்...

சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை 58-ம் படையணி ஒப்படைக்க வேண்டும்

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆவணத்தை இராணுவத்தின் முல்லைத்தீவு 58ம் படையணி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 58ம் இராணுவ படையணி அதிகாரிகளிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல்கள் அந்தப் படையணியின் முகாம் அலுவலகத்தில் இருப்பதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. அதனையடுத்தே, அந்த பெயர்ப் பட்டியல் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க...

சமஷ்டி தராவிடில் தமிழீழமே ஒரே வழி!

இலங்கை தமிழ்- சிங்கள இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு திட்டமே தீர்வாக அமையும், அவ்வாறான தீர்வு முன்வைக்காவிட்டால் தமிழர்கள் தனிநாட்டை கோருவதை தவிர வேறு வழி இருக்காது என அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான பொதுமக்கள் கருத்துக்களை அறியும் குழு முன்னிலையில் மக்கள் கூறியுள்ளனர். அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளும். குழு...

வேலையற்ற பட்டதாரிகள் கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்! – பொலிஸாரின் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் உட்பட பலர் காயம்!!

வேலையில்லாப் பட்டாதாரிகள் கொழும்பில் நேற்று முன்னெடுத்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரால் கண்ணீர்ப்புகைப் பிரயோகமும், தண்ணீர்ப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதும் பொலிஸார் கடும் தாக்குதல் நடத்தினர். இதனால் பெரும் பதற்றநிலை ஏற்பட்டது. தமக்கான வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக நல்லாட்சி அரசு அளித்திருந்த உறுதிமொழி இன்றுவரை நிறைவேற்றவில்லை. எனவே, தங்களது வேலைவாய்ப்பு உடன்...

இலங்கையின் மிகவும் ஏழ்மையான மாவட்டம் முல்லைத்தீவு

இலங்கையின் பல பகுதிகள் இன்னும் கடுமையான ஏழ்மை நிலையில் உள்ளன என்று உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.அதேவேளை இலங்கையில் போதிய அளவுக்கு முன்னேற்றம் காண கூடுதல் வாய்ப்புகளும் உள்ளன எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தெற்காசியாவின் மற்ற நாடுகளைக் காட்டிலும் இலங்கையில் நம்பகத்தன்மையுடன் கூடிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், வலுள்ள மனித வளமும் உள்ளன எனவும்...

யாழில் பரபரப்பு : சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற வெளிநாட்டு முதியவர்கள்!!

ஜேர்மனி நாட்டில் இருந்து யாழிற்கு சுற்றுலா விசாவில் வருகை தந்த முதியவர்கள் இருவர் மதுபோதையில் 10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்த வேளையில், சிறுமி அழுதுகொண்டு வீட்டை விட்டு தப்பியோடி வெளியே வந்த சம்பவம் யாழில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் குளப்பிட்டி பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....

மீண்டும் தலைதூக்குகின்றது வாள்வெட்டு கலாச்சாரம்!!

வாள், கோடரிகளுடன் ஆயுதக்குழு ஒன்று, வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ் தரை துரத்தித் துரத்தி தாக்கியமையால் நேற்றிரவு தாவடியில் பதற்ற நிலை காணப்பட்டது. குறித்த குடும்பஸ்தர் காயத்துடன் அந்தப் பகுதியிலுள்ள வீடொன்றின் மதில் பாய்ந்து ஓடித்தப்பித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் குறித்த வீட்டுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த அடாவடிக் குழு, அவரைத்தேடி அடாவடித்தனத்தில்...

வடக்கு அபிவிருத்திக்கு 3,00,000 கோடி ரூபா தேவை! ரணிலிடம் கோரினார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினருக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. வட மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காகவும் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவும் 3 லட்சம் கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்தும் வகையிலான மதிப்பீட்டு...

வாக்குறுதிக்கேற்ப வட மாகாணசபையுடன் இணைந்து செயற்படுவார் புதிய ஆளுநர்! – சம்பந்தன் நம்பிக்கை

"வடக்கு மாகாண புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே வழங்கியுள்ள வாக்குறுதிக்கேற்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்படுவார் என்று நாம் நம்புகின்றோம்.''- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் தான் அயராது பாடுபடுவார் என்று...

வட மாகாண புதிய ஆளுநரின் நியமனத்தைக் கூட்டமைப்பு வரவேற்கின்றது

வடக்கு மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இந்த நியமனத்தை தாம் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். குரே, முற்போக்கானவர் என்ற அடிப்படையில் அவரின் நியமனம் ஏற்றுக்கொள்ளக்கூடியது என சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனும் இந்த நியமனத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்...

யாழில் அநாயதேய சுவரொட்டி

எந்த வகை இரத்தமானாலும் மிதிபடுவது சேர்ந்தே நித்தம்' எனக் குறிப்பிடப்பட்டு சுவரொட்டியொன்று யாழில் ஒட்டப்பட்டுள்ளது. சுவரொட்டியை ஒட்டியவர்கள் யார் என்ற விபரம் அதில் குறிப்பிடப்படவில்லை.
Loading posts...

All posts loaded

No more posts