நியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே?

கேரள மாநிலம் முன்னம்பம் துறைமுகத்தில் இருந்து படகு வழியாக நியூசிலாந்தை அடையும் முயற்சியில் சென்ற தமிழர்கள் பலர் மாயமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கேரள மாநிலம் முன்னம்பம் துறைமுகத்தில் இருந்து மிகப்பெரிய நாட்டு படகு ஒன்று கடந்த 12-ந்தேதி புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. மீன்பிடி படகான... Read more »

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்: ஜனாதிபதி

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் இவ்வாரம் முதல் புதிய உத்வேகத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்த மகா வித்தியாலயத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில்... Read more »

ஜனாதிபதி வாகன தொடரணி விபத்துக்குள்ளாகியதால் முல்லைத்தீவில் பதற்றம்!!

முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாகன தொடரணி முல்லைத்தீவு – புளியங்குளம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, கோடலிக்கல்லு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவில் இடம்பெற்ற போதைப்பொருள் தொடர்பான நிகழ்வு மற்றும் பொதுமக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துகொள்ள சென்றிருந்தார்.... Read more »

மதுபான நிலையம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை – பாடசாலை அதிபர் கடிதம்

வவுனியா – ஓமந்தையில் மதுபான நிலையம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை என ஓமந்தை மத்திய கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அதிபர் கெ.தனபாலசிங்கம், கொழும்பிலுள்ள மதுவரி ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். குறித்த கடிதத்தில், ‘வேலாயுதம் சுரேந்திரனால் எமக்கு வழங்கப்பட்டுள்ள கடிதத்தின்படி,... Read more »

தைப்பொங்கல் தினத்தில் யாழில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் நேற்றையதினம் (15) வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பட்டப்பகலில் நடைபெற்ற இவ்வாள்வெட்டு சம்பவத்தில் 2 இளைஞர்கள் படு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டதுடன் அதில் ஒரு இளைஞருடைய வலது கை கட்டைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மீட்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக... Read more »

தமிழீழக் கனவோடு இருக்கக் கூடாது – எம்.ஏ.சுமந்திரன்

புதிய அரசமைப்பினூடாக, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும். தனி நாடு என்று காலத்துக்குக் காலம் கதைகள் வரும். ஒருமித்த நாட்டில் தமிழ் மக்களுக்கான தீர்வு வேண்டுமென்று தான் நாம் கேட்கிறோம். அதை விட்டு, தமிழீழக் கனவோடு இருக்கக் கூடாது. இப்படி நான் சொல்வதனால்,... Read more »

பருத்தித்துறை பகுதியில் இளைஞர் படுகொலை

பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது, இளைஞர் ஒருவரை கோடாரியால் வெட்டிக்கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் வாசுதேவன் அமல்கரன்... Read more »

வடக்கு கிழக்கு வீடமைப்பு திட்டம் தைப்பொங்கலுடன் ஆரம்பம்: ஒவ்வொரு வீடும் 10 இலட்சம் பெறுமதி!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள 10 ஆயிரம் வீடுகளில், முதற்கட்டமாக 4,750 வீடுகளை அமைக்கும் பணி தைப்பொங்கல் தினத்துடன் –நாளை- ஆரம்பமாகவுள்ளது. தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழில் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர்... Read more »

அதிபர் ஆசிரியர்களை தாக்கும் முயற்சி – மாணவர்கள் போராட்டம்!

தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்குழியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் அதிபர் மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் சிலர் தாக்க முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து பாடசாலை மாணவர்கள் ஒன்று திரண்டு ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி பாடசாலைக்கு முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.... Read more »

30 முதல் 40 ஆண்டுகளில் வடக்கு மாகாணம் அரை பாலைவனமாக மாறும்!

காலநிலை மாற்றத்தின் காரணமாக வட மாகாணமானது கடுமையான சவால்களை எதிர்நோக்குகின்றது என நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அந்தவகையில் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளில் வடக்கு மாகாணமானது அரை பாலைவனமாக மாறும் என அவர் மேலும்... Read more »

போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணையே வேண்டும்!– சபையில் சுமந்திரன் எம்.பி. திட்டவட்டம்

“இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் சர்வதேச குற்றங்களே. எனவே, இதை விசாரித்துப் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதி வழங்க சர்வதேச விசாரணையே வேண்டும்.” இவ்வாறு சபையில் இன்று வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி... Read more »

முன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தனர் என்ற குற்றத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு 185 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை... Read more »

இறுதிப்போரில் இரசாயன குண்டுகளை பயன்படுத்தவில்லை என்கிறது பாதுகாப்பு அமைச்சு!

இறுதிக்கட்டப்போரின்போது இராணுவத்தினர் இரசாயன மற்றும் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர் என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. எனவே இராணுவம் இறுதிப் போரில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகளையும் மறுப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று... Read more »

கஞ்சா கடத்திய குற்றவாளிகளை காப்பாற்றுகின்றது கூட்டமைப்பு: நாடாளுமன்றில் டக்ளஸ்

பொலிஸாரின் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளில் அரசியல்வாதிகள் அநாவசியமாக தலையீடு செய்து, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை குறிப்பாக, கஞ்சாக் கடத்தல் காரர்களை, விடுவித்தமை தொடர்பாக சபையின் அவதானத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்... Read more »

இராணுவ வாகனம் மோதி கிளிநொச்சியில் மூவர் உயிரிழப்பு

கிளிநொச்சி பளை இயக்கச்சிப் பகுதியிலநேற்றைய தினம் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இராணுவ வாகனம் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் இரண்டு பேரின் சடலங்கள் பளை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு... Read more »

விடுதலைப்புலிகளின் தலைவரின் படத்துடன் பொருத்தமற்ற தலைப்புடன் வெளியான பத்திரிகை எரிப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்துடன் பொருத்தமற்ற தலைப்புடன் வார பத்திரிக்கையில் வெளியான செய்தியால் குறித்த பத்திரிகையை பருத்தித்துறை இளைஞர்கள் எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். யாழில் இருந்து வெளியாகும் வார பத்திரிகை ஒன்றின் முகப்பு பக்கத்தில் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் மத்தியில் தலைவர் வே.பிரபாகரன்... Read more »

அடுத்த தேர்தலில் மைத்திரி – மஹிந்த கூட்டணியமைப்பது சாத்தியம்: தயாசிறி

அடுத்த தேர்தலில் மைத்திரி – மஹிந்த கூட்டணியமைப்பது சாத்தியமாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சுதந்திரக் கட்சி எப்போதும்... Read more »

மக்களின் காணியில் இராணுவத்தினரின் விவசாய பண்ணை : விடுவிக்க கோரி செட்டிகுளத்தில் போராட்டம்

வவுனியா, செட்டிகுளம், இராமியன்குளத்தில் மக்களின் காணிகளை கையகப்படுத்திய இராணுவத்தினர் விவசாயம் செய்து வருவதாகவும் அதனை உடன் விடுவிக்க கோரியும் பாரியளவிலான ஆர்ப்பாட்மொன்று இடம்பெற்றது. வவுனியா, செட்டிகுளம், ஆண்டியாபுளியங்குளம் பள்ளிவாசல் முன்பாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மதவாச்சி மன்னார் வீதியில் ஆண்டியாபுளியங்குளத்தில் மதிய நேர தொழுகையின்... Read more »

தமிழரசுக் கட்சியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களும் உள்ளனர்! – சி.வி.கே.சிவஞானம்

தமிழீழ விடுதலைப் புலிகள் ஜனநாயகத்துக்கு விரோதமாக ஒரு நாளும் இருக்கவில்லை. 30 வருடகால வரலாறு உள்ளது. அது சிலருக்குத் தெரியாது இருக்கலாம். தமிழரசுக் கட்சியில் உள்ள அனைவரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் இல்லை. எதிரானவர்களும் உள்ளனர். இவ்வாறு தமிழரசுக் கட்சியின் துணை பொதுச் செயலரும்... Read more »

ஒற்றையாட்சியை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது: சித்தார்த்தன்!

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் ஒற்றையாட்சி முறைமையை கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் அறிந்த... Read more »