தேரரின் தகனக்கிரியைக்கெதிராக தொடுக்கப்பட்ட வழக்கு தோல்வி. நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்க மறுப்பு!

யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதின் உடலை தகனம் செய்வதற்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் அனுமதிவழங்கி உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் – ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதி உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலினை யாழ்.முற்றவெளிப் பகுதியில் தகனம் செய்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதற்கு தடை விதிக்க... Read more »

வடக்கு முதல்வரின் சொற்படி செயற்படுங்கள்: அங்கஜன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டதைப் போன்று, கட்சிகளை பார்க்காமல் நல்ல மனிதர்களுக்கு வாக்களியுங்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் கோரியுள்ளார். யாழ். மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி மன்றங்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்த பின்னர்,... Read more »

ஜனாதிபதி விதித்த தடையை அவரே நீக்குவது ஏன்?: நாமல் கேள்வி

அஸ்பற்றோஸ் கூரைத்தகடுகளுக்கான தடை நீக்கம் என்பதன் மூலம் நாட்டில் சுகாதாரம் தொடர்பான அவதானம் இல்லாது போய்விட்டதா? அல்லது வெளிநாடு மற்றும் வர்த்தகம் தொடர்பான தவறான கொள்கையா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அஸ்பற்றோஸ் கூரைத்தகடுகளுக்கு... Read more »

யாழ். மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறிப்பாக இவ் உள்ளூராட்சி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் உள்ள... Read more »

வடக்கு முதலமைச்சர் ஒரு அரசியல்வாதியாக தோற்றுவிட்டார்: டிலான் பெரேரா

சிறந்த நீதியரசரான வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஒரு அரசியல்வாதியாக தோல்வியடைந்துவிட்டதாக சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசாங்கம் வழங்கும் நிதியையே சரியான முறையில் முழுமையாக பயன்படுத்தாத முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மலேஷியா வழங்கும் நிதியை என்ன... Read more »

முல்லைத்தீவில் பரவும் மர்மக் காய்ச்சல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவி வரும் ஒரு வகை மர்மக் காய்ச்சல் தொடர்பில் ஆராய விஷேட வைத்தியக் குழு ஆய்வுகளை நடாத்தியுள்ள போதும் ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்த விஷேட வைத்திய குழு கடந்த 16 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டது.... Read more »

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக வித்தியாதரன் போட்டி??

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் மூத்த ஊடகவியலாளரை என்.வித்தியாதரனை மேயர் வேட்பாளராக நிறுத்தி பொது அணி ஒன்றைக் களமிறக்கும் பேச்சுகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. இந்தப் பொது அணியில் சமூக அமைப்புகள், தமிழ் கட்சிகள் சில, வர்த்தக சங்கங்கள் ஆகியன ஒன்றிணைந்துள்ளன... Read more »

இறுதிப்போரில் சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடுங்கள்! : பிரித்தானியா

இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது படையினரிடம் சரணடைந்தவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிடுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர். தமிழர் தாயகப் பகுதியில் யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் குறித்த உண்மையை வெளிப்படுத்துமாறு... Read more »

முல்லைத்தீவில் ஒருவகை காய்ச்சல்: 9 பேர் உயிரிழப்பு

முல்லைத்தீவில் பரவி வரும் ஒருவகை காய்ச்சலால், ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 20 நாட்களுக்குள் இந்த உயிரிழப்புகள் சம்பவித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இக்காய்ச்சல் தொடர்பில் தீவிர ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு,... Read more »

கட்சிகளைப் பொருட்படுத்தாது தகுதியானவர்களுக்கு வாக்களிங்கள்: சீ.வி.விக்னேஸ்வரன்

கட்சிகளைப் பொருட்படுத்தாது தகுதியானவர்களுக்கு வாக்களிக்குமாறு, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். உங்கள் பகுதியை உள்ளன்புடன் நேசிக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். அவருக்கு இருக்கும் தகுதி நேர்மையும் திறமையுமே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், அவர் ஊழலை வெறுப்பவராகவும் மக்களை நேசிப்பவராகவும் அவர் இருக்க வேண்டும்... Read more »

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குங்கள் : ஐ.நா

இலங்கை அரசாங்கம் உடனடியாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கை குழு வலியுறுத்தியுள்ளது. தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் தொடர்பிலான ஐ.நாவின் மூவரடங்கிய தூதுக்குழு கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை... Read more »

மீண்டும் ஸ்தம்பிதம் அடையுமா இலங்கை? பெற்றோல் தொடர்பாக புதிய சிக்கல்!

பெற்றோலிய ஊழியர்கள் சங்கமானது மீண்டும் ஒரு பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பெற்றோலிய சங்கத்தின் இணைப்பாளர் பீ.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. திருகோணமலை எண்ணெய் கிடங்குகளை அரசாங்கம் இந்தியாவிற்கு கொடுக்கவுள்ளதாகவும், இச்செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே குறித்த... Read more »

வடக்கு முதல்வரின் குரல் தமிழ் தேசியத்திற்காக தொடர்ந்து ஒலிக்க வேண்டும்

நாடாளுமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியத்தை இழந்து நிற்கின்ற நிலையில், அந்த நிலை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என வடக்கு மக்கள் தெரிவித்துள்ளனர். வடமாகாண சபையின் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ்.சுகிர்தன் வடக்கு முதலமைச்சர்... Read more »

காசையும் இழந்து கண்ணையும் இழந்து உள்ளோம் : வடமாகாண சுகாதார அமைச்சர்

சில வைத்தியர்கள் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக பார்க்கின்றனர் அவர்கள் சட்டத்தில் உள்ள பலவீனங்களை பயன்படுத்தி அதில் இருந்து தப்பி கொள்வதற்காக மனிதாபிமானத்திற்கு எதிராக கூட செயற்படுகின்றார்கள் என வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஞா. குணசீலன் கவலை தெரிவித்துள்ளார். யாழ்.நொதேர்ன் தனியார் வைத்திய... Read more »

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 7 பேருக்கு 56 வருடங்கள் சிறை!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் ஏழ்வருக்கு தலா 56 வருட கடுங்காவல் தண்டனை விதித்து அனுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வில்பத்து தேசிய சரணாலயத்திற்குள் கிளைமோர் குண்டை வெடிக்கச் செய்து, மருத்துவர் உட்பட ஏழ்வரை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்... Read more »

இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலம் : இலங்கை ஏற்றுக் கொள்ளாது

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பின்படி இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலத்தை இலங்கை ஏற்றுகொள்ளாது. சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இவ்வாறு குறிப்பிட்டார். இஸ்ரேலின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெருசலத்திற்கு நாங்கள் போகமாட்டோம்.... Read more »

ஜனாதிபதியின் கோரிக்கை நிராகரிப்பு! : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கடிதம்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த பணிப்புரையை, வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நிராகரித்துள்ளனர். வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரணவை இன்று (புதன்கிழமை) சந்தித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஜனாதிபதியின் மேற்படி... Read more »

வடமாகாண சபையினர் முதலீடுகளை தடுப்பதிலேயே வல்லுநர்கள்: தவராசா

வடமாகாண சபை உறுப்பினர்கள், வடமாகாணத்தை நோக்கிவரும் வெளிநாட்டு முதலீடுகளை தடுப்பதிலேயே வல்லுநர்களாக செயற்பட்டு வருகின்றனர் என வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா குற்றஞ்சாட்டியுள்ளார். வட மாகாண சபையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற 2018ஆம் ஆண்டிற்கான பாதீட்டு ஒதுக்கீட்டிற்கான இரண்டாவது வாசிப்பு மீதான... Read more »

நிலக்கண்ணி வெடிகள் அற்ற பிரதேசமாக முகமாலை

எல்.ரீ.ரீ.ஈ அமைப்பினரால் அதிகமாக நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட கிளிநொச்சி-முகமாலை பிரதேசம் கண்ணிவெடிகளிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த பிரதேசம் மக்கள் மீள்குடியேற்றத்திற்காக நேற்று(12) பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. முகமாலை பிரதேசத்தில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் நடவடிக்கையை சர்வதேச கண்ணிவெடிகள் அகற்றும் அமைப்பு மற்றும்... Read more »

தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டிக்கிறது யாழ். ஊடக அமையம்

தமிழ் ஊடகவியலாளர்கள் சிலரின் மீது அண்மைய காலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்களைக் கண்டிப்பதாக தெரிவித்துள்ள யாழ். ஊடக அமையம், இந்நிலைமை தொடராமல் அரசாங்கம் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்துள்ளது. யாழ். ஊடக அமையம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்விடயம்... Read more »