Ad Widget

யுத்த அகதிகளாக இடம்பெயர்ந்த நாம் சூழலியல் அகதிகளாகவும் இடம்பெயர்ந்து விடக் கூடாது – பொ.ஐங்கரநேசன்

கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட யுத்தம் காரணமாக, இலட்சக்கணக்கான தமிழ்மக்கள் இந்த மண்ணை விட்டு இடம் பெயர்ந்துள்ளார்கள். யுத்த அகதிகளாகவும் அரசியல் அகதிகளாகவும் இடம்பெயர்ந்த நாம் வருங்காலத்தில் சூழலியல் அகதிகளாகவும் இடம் பெயர வேண்டிய அவலம் நேர்ந்துவிடக் கூடாது என்று வடக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு...

யாழ். மத்தியின் ‘சென்றல் நைட்’ வருடாந்த ஒன்றுகூடல்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 'சென்றல் நைட்' வருடாந்த ஒன்றுகூடலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒன்றுகூடலானது நேற்றைய தினம் (07) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது. ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின்...
Ad Widget

சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்கள் அநுராதபுரத்தில்

சர்வதேச பெண்கள் தின கொண்டாட்டங்கள் எதிர்வரும் 7, 8 ஆகிய தினங்களில் காலை 9.00 மணிக்கு அநுராதபுரம் சல்காது மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது என மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று காலை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்....

தெல்லிப்பழை தமிழ்ச் சங்கத்தின் தமிழ் விழா!

தெல்லிப்பழை தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அரிமா கழக மண்டபத்தில் தமிழ்ச் சங்கத் தலைவர் ச.சிவானந்தராசா தலைமையில் தமிழ் விழா இடம் பெற்றது. தெல்லிப்பழை காசிப்பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து விருந்தினர்கள் இடப மாடுகள் இரண்டு முன்னே வர அதனைத் தொடர்ந்து சங்கு, தப்பட்டை, பேரிகை, மேள வாத்தியங்ள் முழங்க கொடி, ஆலவட்டம் தாங்கி...

வடக்கு விவசாய அமைச்சின் உழவர் பெருவிழா கோலாகலமாக நிகழ்ந்தேறியது

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உழவர் பெருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (25.01.2015) வவுனியா நகரசபை மண்டபத்தில் கோலாகலமாக நிகழ்ந்தேறியது. வடக்கின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஆண்டுதோறும் தைப்பொங்கல் தினத்தையொட்டி உழவர் பெருவிழாவை நடாத்தி வருகிறது. கடந்தவருடம் இவ்விழா கிளிநொச்சியில் இடம்பெற்றதையடுத்து இம்முறை வவுனியாவில்...

உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் எமது இடங்களை தொலைத்தோம்

உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் தமிழ்மக்கள் தொலைத்த இடங்கள் ஏராளம். சொந்த இடங்களை விட்டு ஏங்கிய நிலையில் வாழ்கின்றோம் என யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் தெரிவித்தார். கவிஞர் கு.வீராவின் 'கண்ணடிக்கும்காலம்', 'இரண்டாவது உயிர்' எனும் கவிதை நூல்களின் வெளியீட்டுவிழா யாழ். பல்கலைக்கழக ஓய்வுநிலை தமிழ்த்துறை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தலைமையில் இணுவில் சிவகாமியம்மன் மண்டபத்தில்...

யாழ்ப்பாணத்துக்கான உணவுப்பாதுகாப்பு இரணைமடுக் குளத்திலேயே தங்கியுள்ளது – பொ.ஐங்கரநேசன்

இரணைமடுக்குளத் திட்டத்தின் நோக்கம், கிளிநொச்சி மாவட்டத்தின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது மாத்திரம் அல்ல. யாழ்ப்பாணத்துக்கான உணவுப்பாதுகாப்பும் இரணைமடுக் குளத்திலேயே தங்கியுள்ளது. இதனால்தான், இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீர் எடுத்து வரும் மத்திய அரசின் திட்டத்துக்குப் பதிலாக நாம் மாற்றுத் திட்டத்தை முன்வைக்க நேர்ந்தது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இரணைமடுக்குளத்தின் 95ஆவது...

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பொங்கல்

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்றய தினம் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் வெகுவிமர்ச்சியாக கொண்டாடபட்டது. நேற்று காலை பல்கலைக்கழக பிரதான வாயிலில் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, மாணவர்கள் பாரம்பரிய முறைப்படி வெடிகள் கொழுத்தி கொண்டாடினர். கலைப்பீட மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். கடந்த வருடத்தினைப் போன்று இந்த...

யாழ். இந்தியத் தூதரகத்தின் கற்கைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள்

யாழ். இந்திய துணைத்தூதரக கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கற்கைநெறிகளை பூர்த்தி செய்து வெளியேறிய 66 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது. கர்நாடக சங்கீதம், வயலின், ஹிந்திமொழி மற்றும் யோகா கற்கைநெறிகளை பூர்த்திசெய்தவர்களுக்கே சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. யாழ். இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற...

தெல்லிப்பழையில் சுனாமி நினைவு

மீண்டும் எழுவோம் சுனாமிப்பேரலையின் கோர நிகழ்வுகள் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று காலை துர்க்காபுரத்தில் அமைந்துள்ள சிற்பாலய கலைக் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சுனாமி சிற்பத்தின் முன்பாக வழிபாடு இடம்பெற்று சுனாமிப் பேரலையில் இறந்தவர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தப்பட்டு மறைந்த சிற்பக் கலைஞன் ஏ.வி.ஆனந்தனுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக...

இரத்தக்கறை படிந்தவர்களின் கையால் செய்யப்படும் எந்தவொரு காரியமும் நிலைக்காது ; சரவணபவன் எம்.பி –

யாழ்.விஷன் கிருஸ்ணா அறநெறிப் பாடசாலையின் இரண்டாவது ஆண்டு விழாவும், புதிய கட்டடத் திறப்பு விழாவும் இன்று காலை 11.00 மணியளவில் இடம்பெற்றது. கோணாவளை வீதி கொக்குவிலில் அமைந்துள்ள குறித்த அறநெறிப் பாடசாலைக்கென  புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தொகுதியை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நாடாவெட்டி திறந்துவைத்தார். க.சுசீந்திரன் தலைமையில் இடம்பெற்ற...

யாழில் இராணுவத்தினரின் கிறிஸ்மஸ் நிகழ்வுகள்

யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்மஸ், புத்தாண்டு தின நிகழ்வுகள் யாழ். கோட்டைக்கு அருகாமையில் விசேடமாக அமைக்கப்பட்ட இடத்தில் வெள்ளிக்கிழமை (19) இரவு இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ், மற்றும் யாழ். மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை ஆகியோர் கலந்து கொண்டு...

நாவலர் விழா!

யாழ்ப்பாணம் தமிழ் சங்கம் நடத்தும் நாவலர் விழா நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் சிறப்புரையை "நாவலரின் பன்முக ஆளுமை" என்ற தலைப்பில் உரும்பிராய் இந்துக்கல்லூரி ஆசிரியர் தி.செல்வமனோகரன் நிகழ்த்துவார். தொடர்ந்து...

வேட்பு மனுவை தாக்கல் செய்த ஜனாதிபதி சமய வழிபாடுகளில்!

2015 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் ஆசிர்வாதம் பெற்றார். முதலில் பேலியகொடை வித்தியலங்கார பிரிவினாவுக்கு சென்ற ஜனாதிபதி பிரிவினாவின் அதிபர் களனி பல்கலைக்கழக வேந்தர் வண.வெலிமிட்டியாவே குசலதம்ம நாயக்க தேரரைச்சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார். பிரிவினாவுக்கு வருகை தந்திருந்த பொதுமக்களும் ஜனாதிபதிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்....

சிறிலங்கா சுதந்திர கட்சியினால் மோட்டார் வாகன ஊர்வலம்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஸவினை ஆதரித்து இன்று காலை யாழ் மாவட்ட சிறிலங்கா சுதந்திர கட்சியினால் மோட்டார் வாகன ஊர்வலம் நடாத்தப்பட்டது. இதன் போது யாழ் மாவட்ட சுதந்திர கட்சியின் அமைப்பாளரும் வட மாகாண சபை உறுப்பினருமான இராமநாதன் அங்கஜன் கலந்து கொண்டார். இந்நிகழ்வு அக்கட்சி காரியாலயத்தில் இருந்து ஊர்வலமாக வைத்தியசாலை வீதி,வேம்படி...

யு. எல். எம். ஹால்தீன் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம்

வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய நிலையில் இயற்கை எய்திய யு. எல். எம். ஹால்தீன் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (04.12.2004) யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெற்றது. வடக்கு விவசாய அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.வரதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற...

மரணித்தவர்கள் நினைவாக நடப்படும் மரங்கள் ஒவ்வொன்றும் ஓர் உயிருள்ள நினைவாலயமே!

எமக்காகப் போராடியவர்களின் நினைவு இடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு அந்த இடங்களில் இன்று படையினர் நிலைகொண்டிருக்கின்றனர். (more…)

காரைநகரில் புதிய பொலிஸ் நிலைய அங்குராப்பணம்!

காரைநகர் பிரதான வீதியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தினை பிரதேச செயலர் திருமதி பாபு அவர்கள் நாடாவெட்டி திறந்து வைத்தார். (more…)

கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலையில் மரநடுகை மாத கொண்டாட்டம்

கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (26.11.2014) வடமாகாண மரநடுகை மாதம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது. (more…)

ஜனாதிபதியின் பிறந்த நாள் : அங்கஜன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் 69ஆவது பிறந்தநாள் மற்றும் பதவியேற்ற நாளை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களின் வாழ்வு சுபீட்சம் பெறவும் பணிகள் சிறக்கவும் (more…)
Loading posts...

All posts loaded

No more posts