தரம் 7 புவியியல் புத்தகங்கள் விஷ இரசாயனத் தாளில் அச்சடிப்பு: மீளப் பெறுமாறு வலியுறுத்தல்!

தரம் 7 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புவியியல் புத்தகம் விஷ இரசாயனத் தாளில் அச்சிடப்பட்டுள்ளதுடன், அது மாணவர்களின் சுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்கவல்லது எனவும், அவ்வாறு நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்ட தரம் 7 புவியியல் புத்தகத்தை மீளப் பெறுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு... Read more »

அதிபரின் தண்டனையால் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

கிளிநொச்சி நகரில் இயங்கி வருகின்ற பிரபல பாடசாலை அதிபர் ஒருவர் உயர்தர மாணவன் ஒருவருக்கு தண்டனை வழங்கியமையால் கை எலும்பில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கடந்த ஏழாம் திகதி குற்றச்சாட்டு ஒன்றின் பெயரில் குறித்த மாணவனை... Read more »

பாடசாலை பிள்ளைகளின் உடல் பருமனைக் குறைக்க விசேட திட்டம்

பாடசாலை பிள்ளைகளின் உடல் பருமனைக் குறைப்பதற்கு விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் இது பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெறும் மரணங்களில் 59 வீதமான மரணங்கள் தெற்றா நோய்களினால் ஏற்படுகின்றது எனவும் மாரடைப்பு, உயர் குருதியழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களினால்... Read more »

பல்கலை அனுமதிக்கான Z Score வௌியீடு

2016/2017ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான குறைந்தபட்ச வெட்டுப்புள்ளிகள் (Z-Scores) வௌியிடப்பட்டுள்ளன. www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். Read more »

தேசிய கல்வியல் கல்லூரிக்கான விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் வெளியீடு

2016ம் ஆண்டில் தேசிய கல்வியல் கல்லூரிக்கு தகுதி பெற்ற விண்ணப்பதார்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைவாக 2016ம் ஆண்டு தேசிய கல்வியல் கல்லூரிகளில் இணைந்து கொள்வதற்காக தகுதி பெற்ற விண்ணப்பதாரிகளின் பெயர்... Read more »

கருத்தமர்வு எனக்கூறி மாணவியை அழைத்துசென்ற ஆசிரியரால் பரபரப்பு!

கிளிநொச்சி கண்டாவளைக் கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தரம் கல்வி பயிலுகின்ற மாணவியை கருத்தமர்வு எனக்கூறி அப்பாடசாலையில் கணிதபாடம் கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்ற விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,... Read more »

நுவரெலியா தொழிநுட்ப கல்லூரியில் தமிழ் மொழிமூல பாடநெறிகளை ஆரம்பிக்க நடவடிக்கை

நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர் அதிகளவானோர் தொழிலுக்காக எம்மை நாடி வருகின்றனர். அத்தகைய மாணவர்கள் தொழில்சார் கல்வியை கற்றால் மாத்திரமே தொழில் வாய்ப்புகளைப் பெறமுடியும். நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஒரே தொழிநுட்ப கல்லூரியில் போதுமான இட வசதிகள் இருந்தும் சுமார் 500... Read more »

இயற்கை அனர்த்தம்: எட்டு மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு பூட்டு

நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டங்களின் சகல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை இரத்தினபுரி, கேகாலை மற்றும்... Read more »

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு ஜூன் 15 வரை விண்ணப்பிக்கலாம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக் கொள்ளும் திகதி, எதிர்வரும் ஜூன் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக் கொள்ளும் இறுதி நாள், இம்மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நாட்டில் தற்பொழுது... Read more »

பல்கலைக்கழக உள்ளீர்ப்பின் போது தகுதியான மாணவர்கள் விடுவிப்பு

“வருடாந்தம், பல்கலைக்கழக தகுதி பெறும் 2,500 மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்படுவதில்லை” என்று, கோப் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துனநெத்தி தெரிவித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழகங்களினதும் செயற்பாட்டு தொடர்பாக விசாரணை செய்த போதே, இது தொடர்பாக தெரியவந்ததாக, அவர் தெரிவித்தார். “பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் தெரிவு... Read more »

வடக்குப் பாடசாலைகளில் பிளாஸ்ரிக் பைகளைத் தவிர்ப்பதற்கான உறுதிமொழி 29ஆம் திகதி எடுக்கப்படவுள்ளது

வடக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் எல்லா வகையான பிளாஸ்ரிக் பைகளையும் ஒருநாள் பயன்படுத்திவிட்டு வீசும் பிளாஸ்ரிக் பொருட்களையும் தவிர்ப்பதற்கான உறுதிமொழி மே 29ஆம் திகதி எடுக்கப்படவுள்ளது என வடக்கு சுற்றாடல் அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சுற்றாடல் அமைச்சினால்... Read more »

வடமாகாண தனியார் வகுப்புக்கள் தொடர்பில் புதிய நியதி சட்டம்!

வடமாகாணத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய நாட்களில் மாலை ஆறு மணிக்கு பின்னரும் வகுப்புக்கள் நடத்த தடை விதித்து வடமாகாண சபையில் புதிய நியதி சட்டத்தை கல்வி அமைச்சு உருவாக்க உள்ளது. வடமாகாண சபையின் 93ஆவது அமர்வு நேற்று... Read more »

பாடசாலைகளில் பொலித்தீன் பாவனைக்குத் தடை!

பாடசாலைகளில் பொலித்தீன் பாவனையை தவிர்த்துக் கொள்ளுமாறு கல்வி அமைச்சு சகல பாடசாலை அதிபர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது. டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும், இது தொடர்பில் பெற்றோரும் மாணவர்களும் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என... Read more »

மயான பிரச்சினை காரணமாக பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோர்கள்!!

புத்தூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்புவது பாதுகாப்பு இல்லை என கூறி பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு செல்ல அனுமதிக்கவில்லை என அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தெரிய வருவதாவது, புத்தூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 09... Read more »

பாடசாலைகளில் பணம் அறவிட்டால் 1988க்கு அறிவிக்கவும்

கல்வி அமைச்சின் அனுமதியின்றி, பாடசாலை மாணவர்களிடமிருந்து, அப்பாடசாலை நிர்வாகத்தினரால் பணம் அறிவிடப்பட்டால், அது தொடர்பில், 1988 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தித் தெரிவிக்குமாறும், கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த நிலையில், உயர்தரத்துக்கான கல்வியைத் தொடர்வதற்காக, வேறு... Read more »

முறையற்ற அதிபர் நியமனங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையீடு

வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற அதிபர் நியமனங்கள் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ். மாவட்டப் பிராந்தியக் காரியாலயத்தில் நேற்று (15) முறையிடப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கவனத்திற்கு எடுத்துக்... Read more »

தென்மராட்சி கல்வி வலயத்தின் வர்த்தகத் துறைக் கண்காட்சி

தென்மராட்சி வலயக் கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் ‘தென்னவன்’ வர்த்தகத் துறைக் கண்காட்சி இம்முறை சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை (12.05.2017) ஆரம்பமாகியுள்ளது. இக்கண்காட்சியை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். மாணவர்களிடையே... Read more »

அரசியல்வாதிகளின் காலில் விழவில்லை!! ஆயரின் கருத்­துக்­களை வன்மையாகக் கண்டிக்கின்றேன் : ஆர்.விக்­னேஸ்­வ­ரன்

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் பத­வியை நான் அர­சி­யல்­வா­தி­க­ளின் காலில் வீழ்ந்­து­தான் பெற்­றுக்­கொண்­டேன் என்று யாழ். ஆயர் கூறி­யி­ருப்­பது ஆதா­ர­மில்­லாத குற்­றச்­சாட்டு என்று நிரா­க­ரித்­தி­ருக்­கி­றார் புதிய துணை­வேந்­தர் ஆர்.விக்­னேஸ்­வ­ரன். ஆய­ரின் கருத்­தைத் தான் வன்­மை­யா­கக் கண்­டிக்­கி­றார் என்­றும் அவர் தெரி­வித்­தார். புல­னாய்­வுப் பிரி­வின் அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யி­லேயே... Read more »

யாழில் வடக்கு சுற்றாடல் அமைச்சால் வலசைப் பறவைகள் பற்றி மாணவர்களுக்குக் களப்பயிற்சி

வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சால் வலசைப் பறவைகள் பற்றி மாணவர்களுக்கு அறிவூட்டும் விதமாக வதிவிடக் கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் செய்திக்குறிப்பில், பருவநிலை மாற்றங்களின் காரணமாக இடம்பெயர்ந்து வேற்றிடங்களுக்குச் சென்று... Read more »

கிளிநொச்சியில் முறையற்ற அதிபர் நியமனம்

கிளிநொச்சி வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தின் அதிபர் நியமனத்தில் எந்த வித சட்ட திட்டங்களோ நடைமுறைகளோ பின்பற்றப்படாது தகுதியானவர்கள் இருக்கின்ற போது முறையற்ற வகையில் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கல்விச் சமூகம் குற்றம் சுமத்தியுள்ளது. 1 ஏபி பாடசாலையான கிளிநொச்சி வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தில்... Read more »