Ad Widget

பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்கள் நாளை முதல்!

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளுக்கான வவுச்சர்கள் நாளை முதல் டிசம்பர் 03 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். சீருடைகளுக்கான வவுச்சர்களை வழங்குவது தொடர்பில் மாகாண மட்ட கல்விப் பணிப்பாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்....

கிளிநொச்சியில் இராணுவ துணைப்படையினருக்கு முன்பள்ளி ஆசிரியர் நியமனம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத் துணைப்படையினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்பள்ளி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சபையில் கடும் எதிர்ப்பை வெளியிட்டார். முன்பள்ளி செல்லும் தமிழ்க் குழந்தைகள் இராணுவச் சின்னம் பொறித்த சீருடையுடனேயே செல்கின்றனர். இது சரியானதா எனக் கேள்வி எழுப்பியதுடன், இந்தச் செயற்பாடானது தமிழ்க்...
Ad Widget

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த மாத இறுதியில்

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த மாதம் இறுதிப் பகுதியில் வௌியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இம்முறை உயர்தரப் பரீட்சைகளுக்காக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொக்குவில் இந்துவின் முன்மாதிரியான செயற்பாடு!!

மாணவர்களின் பாடசாலை தொடர்பான செயற்பாடுகள் குறித்து பெற்றோர் வீடுகளில் இருந்தவாறே அறிந்துகொள்ளும் வகையில் தகவல் தொழில்நுட்பத்துடன் இணைந்த வகையில் முறையொன்றை கொக்குவில் இந்துக் கல்லூரி அறிமுகப்படுத்தியுள்ளது. பெற்றோருக்கு மாணவர் சார்பாக பதிவு பெயர் மற்றும் கடவுச்சொல் என்பன வழங்கப்படும். அதனைக் கொண்டு, பாடசாலையின் இணையத்தளத்துக்குச் சென்று தங்கள் பிள்ளை அன்றைய தினம் பாடசாலைக்கு சென்றுள்ளாரா? என்பதை...

வீசப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேட்டுக்கு மத்தியில் கல்வியை தொடரும் சிறார்கள்

வடமாகாண கல்வி அமைச்சரின் அலுவலகததுக்கு அருகில் உள்ள முன்பள்ளி பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் சிறார்கள் சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியிலும் தொற்று நோய் அபாயத்திற்கு மத்தியிலும் கல்வியை தொடர வேண்டிய நிலையில் உள்ளனர். யாழ். ஆடியபாதம் வீதி, கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள நல்லூர் முத்தமிழ் முன்பள்ளி பாலர் பாடசாலைக்கு அருகில் உள்ள வீதிகளில் குப்பைகள், கழிவுகள்...

யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு அமெரிக்கா உதவி

நேற்று (22) யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த அமெரிக்காவின் ஐ.நா விற்கான வதிவிட பிரதிநிதி சமந்தாபவர் யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் நிர்மானிக்கப்பட்டுவந்த விஞ்ஞான ஆய்வுகூடத்தை திறந்து வைத்தார். அமெரிக்க அரசின் 4லட்சத்து ஐம்பதாயிரம் டொலர் நிதியுதவியில் நிர்மானிக்கப்பட்டுவந்த இக்கட்டிடத்தை திறந்து வைத்த அவர் அங்கு ஏற்பாடபகியிருந்த எல்லே விளையாட்டு போட்டியையும் ஆரம்பித்து வைத்தார். கடுமையான மழைபெய்து கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாத...

மஹபொல தொகையை 4 ஆயிரமாக உயர்த்த அமைச்சரவை அனுமதி!

பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல புலமைப்பரிசிலுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் 2,500 ரூபாவை 4 ஆயிரமாக உயர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்சமயம் 7 ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்கள் மாதாந்தம் 2,500 ரூபாவைப் பெற்றுவருவதாகவும் அதை 4 ஆயிரமாக உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரம் மாணவர்கள் தற்சமயம் 5 ஆயிரம்...

புலமைப்பரிசில் பரீட்சை வேண்டுமா, வேண்டாமா?

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், கிடைக்கவேண்டிய 15ஆயிரம் பேருக்கும் கிடைக்கும் அதில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை' என்று தெரிவித்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், 'புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்காலத்தில் நடத்துவதாக இல்லையா என்பது தொடர்பில் ஆராயவேண்டும்' என்றார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து...

எக்காரணத்திற்காகவும் பரீட்சை நுழைவுச் சீட்டுக்களை அதிபர்கள் வைத்திருக்க முடியாது!

ஜீ.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கான நுழைவுச் சீட்டுக்களை அதிபர்கள் வைத்திருக்க முடியாது என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. சாதாரண தரப் பரீட்சைக்காக பாடசாலைகளின் ஊடாக தோற்றும் மாணவர்களுக்கான பரீட்சை நுழைவுச் சீட்டுக்கள் தபால் மூலம் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நுழைவுச்சீட்டுக்கள் அதிபர்களுக்குக் கிடைத்ததும் உடனடியாக அவற்றை மாணர்களிடம் வழங்க வேண்டும். எந்தக் காரணத்திற்காகவும் நுழைவுச்...

சீருடை வழங்க வவுச்சர் முறை ஏன்? கல்வி அமைச்சரின் விளக்கம்

சீருடைகளை பெற்றுக் கொள்ள மாணவர்களுக்கு வவுச்சர் வழங்க தீர்மானித்தமையானது, தரமற்ற துணிகளை அவர்களுக்கு வழங்குவதைத் தவிர்க்கவும் இடைத்தரகர்களுக்கு கமிஷன் செல்வதைத் தவிர்க்கவும் 500 மில்லியன் ரூபாய் வரை சேமித்து அவற்றை கல்வி வளர்ச்சிக்கு செலவிடவுமே என, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டில் 42 இலட்சம் பாடசாலை மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு சீருடை வழங்க...

மூன்றாம் தவணைக்காக பாடசாலை விடுமுறை டிசெ.4 இல்!

இவ்வருடத்துக்கான மூன்றாம் தவணைக்காக அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் டிசெம்பர் 04 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டுக்கான முதல் தவணைக்காக அனைத்து பாடசாலைகளும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதி திறக்கப்படுமெனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் (16) வட மாகாண பாடசாலைகளில் மூடப்பட்டமைக்குப்...

க.பொ.த உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் 27 ஆம் திகதி வெளியீடு

கடந்த ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 27ம் திகதி வெளியிடப்படும் இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 2,180 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற மேற்படி பரீட்சையில் 309,069 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். பரீட்சார்த்திகள் தமது பெறுபேறுகளை www.doenets.lk மற்றும்...

யாழில் முதல்தடவையாக மாணவர் பாராளுமன்றம்

யாழில் முதற்தடவையாக பாடசலைகளில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதற்தடவையாக இயங்கவுள்ள மாணவர் பாராளுமன்றத்திற்கான முதலாவது தேர்தல் நேற்று [11] யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது. எதிர்காலத்தில் மாணவர்களிற்கிடையே வன்முறையற்ற, ஜனநாயக முறையில் பிரச்சனைகளை அணுகுவதை ஊக்குவிப்பதை நோக்காக கொண்டு இந்த செயற்திட்டம் வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவர்...

HNDA விவகாரம்; இன்னும் வர்த்தமானி அறிவித்தல் வெளிவரவில்லை

கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா (HNDA) பாடநெறி பி.கொம் (B.Com) பட்டத்திற்கு சமனானதாக தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தும், இதுவரை வர்த்தமானி அறிவித்தல் வெளிவரவில்லை என்று அகில இலங்கை மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவிக்கின்றார். அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி பல நாட்கள் கடந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று...

கடுங்காற்றினால் பாடசாலை செயற்பாடுகள் நிறுத்தம்!!

யாழ்ப்பாணத்தில் கடுமையான காற்று வீசி வருவதால், தீவகம் கல்வி வலயத்துக்குட்பட்ட வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தின் கற்றல் செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை (09) காலை 10 மணியுடன் இடைநிறுத்தப்பட்டு, மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடும் காற்றுக்காரணமாக பாடசாலையின் கூரைகள் தூக்கி எறியப்படும் நிலையில் இருந்தமையால் மாணவர்களால் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட முடிவில்லை என்றும் இதனாலேயே...

HNDA கற்கைநெறியை பட்டப்படிப்பிற்கு சமப்படுத்த அமைச்சரவை அனுமதி

தேசிய உயர் கல்வி கணக்கியல் டிப்ளோமாவை பட்டப்படிப்பிற்கு சமப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லஷ்மன் கிரியெல்ல சமர்ப்பித்த முன்மொழிவிற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த டிப்ளோமாவை பட்டப்படிப்பிற்கு சமமற்றதாக்குவதற்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில்...

உயர் தேசிய கணக்கியல் கற்கை நெறியை மீண்டும் பட்டப்படிப்பாக உயர்த்துவதற்கு தீர்மானம்.

உயர் தேசிய கணக்கியல் கற்கை நெறியை பட்டப்படிப்பாக உயர்த்துவதற்காக வழங்கப்பட்ட பழைய சுற்றுநிருபத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி. உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு, அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.உயர்கல்வியமைச்சின் செயலாளர் டி.சி.திசாநாயக்க இந்த தகவலை வெளியிட்டார். எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் இதுபற்றி கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார். அண்மையில் உயர் தேசிய கணக்காய்வு...

புலமைப் பரிசில் மாணவர்கள் பாதிப்பு – கல்வி அமைச்சுக்கு எதிராக முறைப்பாடு

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் அநியாயம் இழைக்கப்பட்ட சிறுவர்களுக்காக, கல்வி அமைச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் தீர்மானித்துள்ளது. ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் தொகையை குறைத்தமையினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் அந்த சட்ட நடவடிக்கைக்கும் மேலாக போராட்டத்தினை மேற்கொள்ள தயாராகவுள்ளதாக, குறித்த சங்கத்தின்...

பல்கலைக்கழக அனுமதிகிடைக்காத மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்பு

நடந்து முடிந்த உயர்தர பரீட்ச்சை பெறுபேறுகளின் படி பல்கலை கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்துக்கான அனுமதிச் சான்றிதழ் அண்மையில் கிடைக்கபெற்றிருக்கும். இதன் படி தெரிவான மாணவர்களுக்கு முதற் கண் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கை பல்கலைக்கழகத்துக்கான தெரிவானது மிகவும் போட்டி மிக்கது. ஆதலால் சித்தியடைந்த அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகம் நுழைவது கடினம். இவ்வாறான மாணவர்களுக்கு அரசு,...

ஆசிரியர் இடமாற்றங்கள் சாவுக்கு வழிகோலக்கூடாது.

ஒரே பாடசாலையில் ஏழு வருடங்கள் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு அவர்களது நியாயமான காரணங்களைக் கருத்தில் எடுக்காது இடமாற்றம் என்னும் பெயரில் வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இடமாற்றங்களால் ஆசிரியர்கள் சாவடைவதும், ஓய்வுபெற வேண்டிய நிலைக்கும் தள்ளப்படவும் நேர்கிறது என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தமிழர் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-...
Loading posts...

All posts loaded

No more posts