உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின

2016 ஆம் வருட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன. குறித்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைத் திணைக்களத்தின் இணைய முகவரியில் பார்வையிட முடியும். இதேவேளை, அனைத்து டயலொக் வாடிக்கையாளர்களும் கையடக்க தொலைபேசி மூலம் தமது பெறுபேறுகளை அறிந்து... Read more »

பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவு

பாடசாலை மாணவ, மாணவியரின் போஷாக்கினை மேம்படுத்துவதற்காக 5,185 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதனைக் கொண்டு பகல் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மிகவும் பின்தங்கியுள்ள பாடசாலைகளுக்காக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 7911 பாடசாலைகளைச் சேர்ந்த... Read more »

பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பல்கலைக்கழகத்திற்கு 2016-2017ம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார். புதிய கற்கை நெறிகள் பல ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 50 இனால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும்... Read more »

கிளிநொச்சி மகா வித்தியாலய காணி ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்படும்

இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள கிளிநொச்சி மகா வித்தியாலய காணி, எதிர்வரும் 8 ஆம் திகதி, கையளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி நகரின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றாகக் காணப்படும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தற்போது தரம் 06 தொடக்கம் உயர்தரம் வரை சுமார்... Read more »

பாடசாலை சீருடை : இன்று கடை நாள்

பாடசாலை மாணவர்கள் இலவச சீருடைகளை பெற்று கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள கொடுப்பனவு பத்திரத்தின் காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை எதிர்வரும் 2 ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை... Read more »

விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரியின் 2017ஆம் கல்வி ஆண்டுக்கான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல், தொலைத்தொடர்பு தொழில் நுட்பவியல், நிர்மாண தொழில்நுட்பவியல், கணிய அளவையியல் தொழில்நுட்பவியல், மோட்டார் வாகன தொழில்நுட்பவியல், தேசிய கணக்கீடு, ஆங்கிலம் மற்றும் கல்வியியல் போன்ற கற்கை நெறிகளுக்கான... Read more »

வடமாகாண தெரிவு செய்யப்பட்ட தொண்டராசியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசியர்களின் நிரந்தர நியமனத்தினை உடன் வழங்குமாறு கோரி இன்று உண்ணாவிரதப் போராட்டதை முன்னெடுத்தனர். இப்போராட்டம் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. கடந்த 05 மாதம் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசியர்கள் நிரந்தர நியமனத்தினை வழங்க... Read more »

பாடசாலைகள் ஆரம்பிக்கும் நேரத்தினை வடக்கு கல்வி அமைச்சு மீளாய்வு செய்ய கோரிக்கை!

வடக்கின் பாடசாலைகளை 7.30ற்கு ஆரம்பிக்கும் நேரத்தினை வடக்கின் கல்வி அமைச்சர் அவசரமாக மீளாய்விற்கு உட்படுத்த வேண்டும் என பேரவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்தார். வடக்கு மாகாண சபையின் 2017ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் கல்வி அமைச்சிற்கான குழுநிலை விவாதத்தின்போதே மேற்கண்ட... Read more »

இல்ல விளையாட்டுப் போட்டிகள் : கல்வி அமைச்சு அறிக்கை

பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகளை எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்; வலய விளையாட்டுப் போட்டிகளை ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னரும், மாகாண ரீதியிலான போட்டிகளை ஜூன்மாதம் 22... Read more »

யாழ் பல்கலைகழக கிளிநொச்சி தொழிநுட்ப பீடம் கற்கைகள் ஆரம்பம்

யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகமான தொழிநுட்ப பீடத்தின் கற்கை நெறிகள் நேற்று 20-12-2016 ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி அறிவியல்நகாில் அமைந்துள்ள யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் ஏற்கனவே விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடம் என்பன இயங்கி வருகின்ற நிலையில் தற்போது தொழிநுட்ப பீடமும் இயங்க... Read more »

ஆசிரியர் பிரச்சனை தொடர்பாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் அக்கறையற்றவர்!

சில ஆசிரியர்கள் பத்து வருடங்களாக பின்தங்கிய பிரதேசங்களில் பணியாற்றுகின்றனர். சில ஆசிரியர்கள் கஷ்ட பிரதேசங்களில் ஒரு நாள் மட்டும் வேலை செய்து விட்டு இடமாற்றம் பெற்று செல்கின்றனர். என இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் தெரிவித்தார். இன்றய தினம் ஆனைப்பந்தியில் உள்ள... Read more »

க.பொ.த. உயர்தர பெறுபேறுகள் ஜனவரியில்

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இப்பரீட்சையின், தொழில்நுட்பப் பாடத்துக்கான செயற்முறைப் பரீட்சையின் நடவடிக்கைகளுக்கு அதிக காலம் எடுக்க வேண்டியுள்ளமையே பெறுபேறு தாமதமாக காரணம்... Read more »

பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூல்

2016 – 2017ம் ஆண்டு கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூல் அடுத்த மாத முதற்பகுதியில் வெளியிடப்படவுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவிக்கையில்: கடந்த வருடங்களிலும் பார்க்க தெளிவான வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பிரவேசத்திற்கான கைநூலை... Read more »

கர்நாடக சங்கீதம் பழக விரும்பும் யாழ். மாணவர்களுக்கு அரிய சந்தர்ப்பம்!

கர்நாடக சங்கீதம் மற்றும் நடனம் கற்க ஆர்வமுள்ள மாணவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளுமாறு இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி இந்தியத் துணைத் தூதரகத்தில் குறித்த பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்... Read more »

வடமாகாணத்தில் குறித்த திகதியில் ஆசிரிய இடமாற்றம் நிகழும்

வடமாகாண ஆசிரியர்களுக்கான வருடாந்த இடமாற்றம் எதிர்வரும் முதலாம் தவணையிலிருந்து அமுலுக்குவரும் என்று, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மீண்டும் உறுதிபட தெளிவுபடுத்தியுள்ளார். சங்கத்தின் பொதுச் செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பிலேயே, மேற்கண்ட உறுதி வழங்கப்பட்டள்ளது. அந்தச் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘16.12.2016 திகதி... Read more »

முல்லைத்தீவில் குதிரையோடியவர் கைது

முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலய பரீட்சை நிலையத்தில் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் பிறிதொரு நபருக்காக பரீட்சை எழுதிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வருடம் கணிதபாட பரீட்சையில் தோல்வியுற்ற ஒருவருக்கு பதிலாக... Read more »

விடுமுறைக் காலப்பகுதியிலும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் விநியோகம்

விடுமுறைக் காலப்பகுதியிலும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் புத்தக வெளியீட்டு ஆணையாளர் நாயகம் பத்மினி நாலிகா வெலிவத்த தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் மாணவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்களில் 91 சதவீதம் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். இந்த விடுமுறைக் காலப்பகுதியில் பரீட்சை நடைபெறும்... Read more »

வட மாகாண கல்வியமைச்சின் திட்டமிடப்படாத நடவடிக்கைக்கு கண்டனம்

வட மாகாணத்தில் 2017ம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த ஆசிரியர்களின் இடமாற்றங்களை ஏப்ரல் வரை தாமதித்து வழங்கும் அம் மாகாணக் கல்வியமைச்சின் திட்டமிடப்படாத நடவடிக்கைக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றோம் என, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்... Read more »

73 வயது மூதாட்டி பரீட்சை மண்டபத்தில்!

மாத்தறை நாந்துகலவையைச் சேர்ந்த என்.என். கல்யாணி (வயது 73) என்பவர் நேற்று நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தகவல் தொழிநுட்ப பாடத்தை எழுதியுள்ளார். மாத்தறை , இல்மா பாடசாலையில், நடைபெறும் க.பொ.த. பரீட்சை மண்டபத்தில் இந்த முதுமைப் பெண் பரீட்சை எழுதியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. Read more »

பரீட்சை மண்டபத்தில் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொண்ட பிரச்சனை தொடர்பில் உரிய நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் முள்ளிப்பொத்தானையில் கல்விப் பொது தராதர சாதாரண பரீட்சை நிலையத்துக்கு சென்ற முஸ்லிம் மாணவிகளை பர்தா, ஹிஜாப் போன்றவற்றை கழற்றிவிட்டு வருமாறு தெரிவிக்கப்பட்ட சம்பவம் குறித்து நடவடிக்கை மேற்கொள்வதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித... Read more »