தேசியப் பாடசாலைகளில் தரம்6இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை தேசியப் பாடசாலைகளில் தரம் 6இல் இணைப்பதற்கான வெட்டுப்புள்ளியை கல்வி அமைச்சு வெளியிட்டது. வடக்கில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரிக்கான வெட்டுப்புள்ளி 176 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக்... Read more »

வைத்தியசாலையில் தங்கியிருந்தபடி நோயாளர் காவு வண்டியில் சென்று பரீட்சை எழுதும் மாணவி

டெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவியொருவர், க.பொ.த. சாதாரணதர பரீட்சை எழுதிவருகிறார். குறித்த மாணவி நோயாளர் காவு வண்டியில் பரீட்சை மண்டபத்திற்கு வந்து, பரீட்சை எழுதி வருகிறார். யாழ் நகரிலுள்ள மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவியொருவர் திடீரென டெங்கு நோய்த்தொற்றிற்கு... Read more »

கல்­விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரப்பரீட்சையில் ஆள் மாறாட்டம்!!

கல்­விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரப் பரீட்­சை­யில் ஆள் மாறாட்­டம் செய்து பரீட்சை எழு­திய குற்­றச்­சாட்­டில் ஒரு­வர் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்­தால் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார். இந்­தச் சம்­ப­வம் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் துணுக்­காய் கல்வி வல­யத்­துக்கு உட்­பட்ட பாலி நகர் மகா வித்­தி­யா­ல­யத்­தில் கடந்த 4ஆம்... Read more »

விடுமுறை எடுக்காத ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா அவசியம் – ஆளுநர்

வடமாகாணத்தில் அதிக விடுமுறை எடுக்காத ஆசிரியர்களை பாராட்டுவதற்கான விழா ஒன்றினை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். மருதனார் மடம் இராமநாதன் கல்லுாரியில் வலிகாமம் வலயகல்வி அலுவலகம் நடத்திய ஆசிரியர் கௌரவிப்பு விழா கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.... Read more »

பிள்ளைகளை அரச பாடசாலைகளில் சேர்க்க நிதி கேட்கின்றார்களா? 1954க்கு உடனே அழையுங்கள்!!

பிள்ளைகளை அரச பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதற்கு நிதி மற்றும் பாலியல் ரீதியில் இலஞ்சம் கோரும் அதிபர்கள் தொடர்பில் தாமதிக்காமல் 1954 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்துங்கள். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த... Read more »

ஆளுநரின் பணிப்பின் பேரில் 46 ஆசிரியர்களுக்கு உடனடியாக இடமாற்றம்!!

யாழ்ப்­பா­ணக் கல்வி வல­யத்­துக்கு உட்­பட்ட பாட­சா­லை­க­ளில் தேவை­யான ஆள­ணிக்­கும் அதி­க­மாக இருந்த 46 ஆசி­ரி­யர்­கள் போதிய ஆசி­ரி­யர்­கள் இல்­லாத பாட­சா­லை­க­ளுக்கு இட­மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ள­னர். கடந்த வாரம் கல்வி அமைச்­சுக்குப் பய­ணம் மேற்­கொண்ட வட­மா­காண ஆளு­நர் றெஜி­னோல்ட் குரே யாழ்ப்­பா­ணக் கல்வி வல­யப் பாட­சா­லை­க­ளின் அதி­பர்­களை... Read more »

சகல அரச பாடசாலைகளும் 3 ஆம் தவணை விடுமுறைக்காக நவம்பர் 30 ஆம் திகதி மூடப்படும்!

சகல அரச பாடசாலைகளும் 3 ஆம் தவணை விடுமுறைக்காக நவம்பர் 30 ஆம் திகதி மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இப்பாடசாலைகள் மீண்டும் 1 ஆம் தவணைக்காக 2019 ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி திறக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு... Read more »

மாணவர்கள் மத்தியிலும் தாக்கத்தை செலுத்தும் அரசியல் நெருக்கடி!

கடந்த 26 ஆம் திகதி முதல் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை தற்போது மாணவர்கள் மத்தியிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நல்லாட்சி அரசாங்கத்தால் மாணவர்களுக்கான சீருடைக்கு பதில் வவுச்சர் முறை கொண்டுவரப்பட்டது. ஆனால் புதிய அரசாங்கம்... Read more »

சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஆள்பதிவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

வரும் டிசெம்பர் மாதம் இடம்பெறும் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது என்று ஆள்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்தார். விண்ணப்பித்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டை கிடைக்கப் பெறாவிட்டால் அல்லது ஏதாவது மாற்றங்கள்... Read more »

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை!

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பில் விரைவில் அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் தபாலிடும் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில்... Read more »

மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் மோதல்: வவுனியாவில் பதற்றம்

வவுனியாவில் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிலர் குழப்பம் விளைத்து மோதலில் ஈடுபட்டமையால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாடசாலைக்கு வழங்கப்படுகின்ற சத்துணவு திட்டத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக போலியான குற்றச்சாட்டை முன்வைத்தமைக்கு எதிராக வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.... Read more »

வடமாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!

“கஜா“ புயல் காரணமாக வடமாகாண பாடசாலைகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே-இன் அலுவலகத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள கஜா புயல் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கரையை கடக்கும் என எதிர்வுகூறப்பட்ட நிலையில் வடக்கின்... Read more »

இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைக்காண விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடாத்தப்படும் 2019 ஆம் ஆண்டுக்கான இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைக்காண விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இளஞ்சைவப்புலவர் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் பின்வரும் தகுதிகளில் ஒன்றினைப் பெற்றிருத்தல் வேண்டும். சைவபரிபாலனசபையால் நடாத்தப்படும் சைவசித்தாந்த பிரவேச பால பண்டிதர் பரீட்சையில் சித்தி அல்லது கல்விப்பொதுத்தராதர... Read more »

அமைச்சரின் வருகைக்காக மாணவர்களை துப்பரவு பணிக்கு ஈடுபடுத்தியமையால் பொதுமக்கள் அதிருப்தி

தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சா் மனோ கணேசனின் வருகைக்காக கிளிநொச்சி- பூநகாி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், மாணவா்களை வைத்து வீதியை துப்பரவு செய்தமை தொடா்பில் பலா் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், கடுமையான விமா்சனங்களையும் முன்வைத்துள்ளனா். பூநகரி பிரதேசத்திலுள்ள ஸ்ரீ வித்தியானந்தா வித்தியாலயத்தில் தரம் 5ஆம்... Read more »

புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வியமைச்சர் விசேட அறிவிப்பு!

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு அனைத்து மாணவர்களும் தோற்றுவது கட்டாயமானது என்ற சுற்றறிக்கையை இரத்து செய்வது தொடர்பில் அவதானம் செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நுகேகொட அநுல வித்தியாலயத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்... Read more »

வத்தளையில் தமிழ் மொழி மூல பாடசாலையை நிர்மாணிக்க அனுமதி!

கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பிரதேசத்தில் தமிழ் மொழிமூல பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. களனி கல்வி வலயத்திற்குட்பட்டதாக அருள் மாணிக்கவாசகம் இந்து பாடசாலை எனும் பெயரில் இந்த தமிழ் மொழிமூல பாடசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது. தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச மொழிகள்... Read more »

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ் மாணவர்களும் சாதனை!!

இடம்பெற்று முடிந்த 2018 ஆம் ஆண்டுக்கான 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியாக முன்னிலையிலுள்ள 3 தமிழ் மாணவர்களில் இருவர் 2 ஆம் இடத்தினையும் ஒருவர் 3 ஆம் இடத்தினையும்... Read more »

பரீட்சார்த்திகளை அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை : ஆட்பதிவுத் திணைக்களம்

இவ்வருடம் கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களில் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத பரீட்சார்த்திகளை உடனடியாக விண்ணப்பிக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தேசிய... Read more »

சாதாரண தர, உயர்த்தரப் பரீட்சைகளை டிசம்பரில் நடத்த தீர்மானம்!

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சை ஆகிய இரண்டையும் டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே... Read more »

யாழில் 33 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சிங்கள மகா வித்தியாலயம்!

யாழ்ப்பாணத்தில் கடந்த 1965ஆம் ஆண்டு திறக்கப்பட்ட சிங்கள மகா வித்தியாலயத்தினை 33 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறப்பதற்குரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியை யாழ்.சிங்கள மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது... Read more »